PDA

View Full Version : நன்றாக யோசனை செய்



sumathi
17-07-2005, 01:09 PM
அப்படி யோசிக்கறதுதான் நமக்கு சாதகமானதா அமையும். அதுக்கு ஒரு நிஜக்கதையே இருக்கு. ராமநாதபுரத்தை மன்னர் சேதுபதி ஆண்ட காலத்துல நடந்த ஒரு சம்பவம்.

ஒரு தடவ, மன்னர் சுற்றுலா பயணமா தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல பயணப் பட்டுட்டிருந்தார். ஒருநாள், கமுதிங்கற ஊர் அருகே கூடாரம் அடித்து, மன்னர் தங்கியிருந்தார்.

அந்த ஊர்ல ஒரு பிரபல ஜோதிடர் இருப்பதாகவும், அவரது ஜோதிடத்தில் மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதாகவம், மன்னருக்கு சேதி கிட்ட,

உடனே, ஜோதிடரை மன்னர் வரவழைச்சாரு. மன்னராச்சே...

ஒரு குறுகுறுப்பான புன்னகையோட, உம்மைப் பற்றி இந்த வட்டாரத்தில் பிரபலமாக சொல்லப்படுகிறது. உமது ஜோதிடத் திறமையை சோதித்தறிய விரும்புகிறேன்னாரு.

ஜோதிடருக்கு வியர்த்துச்சு.

தொடர்ந்து மன்னர், இந்தக் கூடாரத்தில் முன்பக்க வாசல் பின்பக்க வாசல் இரண்டு மட்டுமே உள்ளது. நாளைக் காலை நான் எந்த வாசல் வழியாக வெளியேறுவேன் என்று உங்கள் ஜோதிடத்தில் கணித்து எழுதி சீல் வைத்து விடுங்கள். நான் நாளைக் காலை வெளியே வந்த பின் நீங்கள் எழுதி வைத்ததை பார்ப்பேன். சரியாக இருந்தால், பெரிய பரிசு தருகிறேன். தவறாக இருந்தால், தண்டனை உறுதின்னுட்டாரு.

ஜோதிடர் பயந்துட்டே, தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை செய்து தன்னோட கணிப்பை எழுதி சீலை வச்சு குடுத்துட்டுப் போனாரு.

மறுநாள் காலை மன்னர் எழுந்து, சிறிது நேரம் யோசித்தார். முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தவிர்த்துவிட்டு, தன்னோட வாளாலே கூடாரத்தின் தடுப்புப் பகுதியை கிழித்து வெளியேறினாரு.

பிறகு... ஜோதிடரின் கணிப்பு அடங்கி மடலை பிரித்துப் பார்த்தார். அதிர்ச்சி.

அதுல, மன்னரே! நீர் முன்பக்க வாசல், பின்பக்க வாசல் இரண்டையும் தவிர்த்து, குறுக்கு வழியாக வெளியேறுவீர்ன்னு இருந்தது.

மன்னருக்கு ஆச்சர்யம்.

ஜோதிடரை பாராட்டி பரிசு கொடுத்திட்டு, எப்படி இவ்வளவு சரியாக கணித்தீர்?னு கேட்க,

ஜோதிடர், மன்னா! சோதிப்பது என்று நீங்கள் தீர்மானித்த பின், நேர்வழியை விட்டு என்னை மடக்குவதற்கு குறுக்கு வழியை நேர்ந்தெடுப்பீர்கள்னு எதிராளியான உங்க மனோதத்துவ ரீதியாக முடிவு செய்தேன்னு சொன்னாரம்.

karikaalan
17-07-2005, 01:24 PM
pgk53-ஜியோட புதிர் மாதிரி இருக்குதேன்னு பார்த்தேன்..... ஜோதிடருடைய முடிவு நல்லாத்தான் இருக்குது சுமாஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

சுவேதா
17-07-2005, 01:44 PM
ஹி..ஹி மிகவும் புத்திசாலியான ஜோதிடர். நல்ல கதை வாழ்த்துக்கள் சுமா அக்கா!

aren
17-07-2005, 02:07 PM
ஜோதிடர் நம் தமிழ்மன்றம் உறுப்பினர் மாதிரி தெரிகிறதே. நல்ல திறமைசாலிதான்.

gragavan
18-07-2005, 11:40 AM
ஜோதிடர் பலே ஆள்தான். பெரும்பாலான ஜோதிடர்கள், மக்களின் நாடியை வைத்தே விடை சொல்வார்கள். இவரும் அப்படித்தான் போல. எனக்கு ஜோதிடத்தின் மேல் நம்பிக்கையில்லை.

pradeepkt
18-07-2005, 11:48 AM
எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு...
எனக்கு நன்மையான பலன்களைச் சொல்லும்போது மட்டும் :D

பரஞ்சோதி
18-07-2005, 12:10 PM
அட புத்திசாலியாக இருக்கிறாரே!

நன்றி சகோதரி.

பாரதி
18-07-2005, 05:47 PM
ஆஹா... மீண்டும் உங்களது அருமையான தொகுப்பை ஆரம்பித்து விட்டீர்களா..? நன்றாக இருக்கிறது சுமா. தொடர்ந்து நல்ல கதைகளைத் தரவேண்டும். இதை நீங்கள் சுவையான சம்பவங்கள், நீதிக்கதைகளில் பதிக்கலாமே..? பாராட்டுக்கள்.

sumathi
19-07-2005, 12:41 AM
அனைவர்க்கும் நன்றி

Nanban
25-07-2005, 05:40 PM
இந்தப் பகுதி படைப்பாளிகளுக்குச் சொந்தமான பக்கங்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எல்லோருமே உபன்யாசங்களைப் பற்றி இங்கு எழுதுவதை விட வேறெங்காவது எழுதலாமே?

விகடன்
05-08-2008, 01:51 PM
புத்திசாதூர்யமாக தப்பித்துக்கொண்டார் சோதிடர்.
கதையின் படி சோதிடரிற்கு தன் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றுமட்டும் புலனாகிறது. :D
இல்லாவிட்டால் மன்னர் கேட்ட கேள்வியை வைத்துத்தான் அவரின் பாதை அமைவதை தீர்மானித்தேன் என்று எதற்காக சொல்வான்? :D

யோசனைசெய்து பதிலளிக்கவேண்டும் என்பதற்கு நல்லதோர் கதை. பாராட்டுக்கள்

arun
07-08-2008, 09:22 PM
நிச்சயம் ஜோசியர் புத்திசாலி தான்...:icon_b: