PDA

View Full Version : லிஃப்ட்



sumathi
17-07-2005, 02:00 PM
லிஃப்ட் வந்த காலத்தில் சொன்ன ஜோக் ஒண்ணு.

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்.
நன்றி பாக்யா

karikaalan
17-07-2005, 02:15 PM
கொஞ்சம் அரதப் பழசுன்னாலும், கொடுத்ததுக்கு நன்றிகள் சுமாஜி!

சுவேதா
17-07-2005, 02:35 PM
:D:D:D:D நன்றி சுமா!

aren
17-07-2005, 03:03 PM
ரொம்ப ரொம்ப பழையது, இருந்தாலும் பரவாயில்லை, ரசிக்கலாம். நன்றி.

gragavan
18-07-2005, 08:42 AM
லிஃப்ட பத்தி இன்னோரு ஜோக். என்னுடைய தாத்தாவின் தம்பியை எதற்கோ மதுரைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அவரது அறை இரண்டாவதோ மூன்றாவதோ மாடியில். லிஃப்டில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதே போல மருத்துவமனையை விட்டு கிளம்பும் பொழுது லிஃப்டில் கீழே இறக்கியிருக்கிறார்கள்.

பட்டிக்காட்டிற்கு வந்ததும் அவரது தோழர்கள் தோழிகள் எல்லாம் மதுரை அனுபவத்தைக் கேட்டிருக்கிறார்கள். எல்லாம் வெவராமகச் சொல்லி விட்டு கடைசியாக சொன்னாராம். "போனதும் எட பாத்தாங்க. அதே மாதிரி விட்டு வரும்போது எட பாத்துத்தான் அனுப்புனாங்க. நல்லபடியாவே பாத்துக்கிட்டாங்க".

இது எங்கள் குடும்ப நகைச்சுவை.

பரஞ்சோதி
18-07-2005, 08:49 AM
:D:D:D:D நன்றி சுமா!

சுவேதா சகோதரி, சுமாவை அக்கா என்று தான் சொல்ல வேண்டும், சரியா?.

- அண்ணன் பரம்ஸ்

பரஞ்சோதி
18-07-2005, 08:51 AM
சுமா சகோதரி நகைச்சுவையுடன், இராகவன் அண்ணா சொன்ன நகைச்சுவையும் அருமை.

நமக்கு லிப்ட்டில் மாட்டி விழித்த கதை தான் இருக்குது.

aren
18-07-2005, 09:21 AM
எடை குறைந்திருந்ததா அல்லது கூடியிருந்ததா என்று தாத்தா சொல்லவில்லையே. நல்ல ஜோக்.
குடும்ப பாட்டு மாதிரி இது குடும்ப ஜோக்கா?

gragavan
18-07-2005, 09:35 AM
அந்த விவரம் தெரியவில்லை ஆரென். பின்னாளில் சொல்லிச் சொல்லி சிரித்த நிகழ்ச்சி அது.

sumathi
19-07-2005, 01:45 AM
பரம்ஸ் லிப்டு கதை கேட்க ஆவலை இருக்கிறம்.

சுவேதா
19-07-2005, 02:52 AM
சுவேதா சகோதரி, சுமாவை அக்கா என்று தான் சொல்ல வேண்டும், சரியா?.

- அண்ணன் பரம்ஸ்

உங்கள் ஆனைப்டடியே!

அண்ணன் சொல்லைத்தட்டாத
தங்கை
சுவேதா.

அறிஞர்
23-07-2005, 08:04 AM
சுமா, இராகவன் சிரிப்புக்கள் அருமை.... மீண்டும் சிரிக்க தூண்டிய சிரிப்புக்கள்

pradeepkt
23-07-2005, 02:51 PM
பரம்ஸ் அண்ணா,எங்கே உங்கள் லிஃப்ட் அனுபவம்?

மன்மதன்
09-08-2005, 07:29 AM
பரம்ஸ் அண்ணா,எங்கே உங்கள் லிஃப்ட் அனுபவம்?

வேணாம்.. விட்டிடுங்க.. அதை இங்கே எல்லாம் சொல்ல முடியாது.. சத்யம் சிவம் சுந்தரம்..:rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

உதயா
16-08-2005, 06:34 AM
அப்படி ஒரு லிப்ட் இருந்தால் எப்படி இருக்கும்.

உமாமீனா
15-02-2011, 10:14 AM
நல்ல நகைச்சுவை -:lachen001::lachen001::lachen001::lachen001: