PDA

View Full Version : ஜூலை 17, ஞாயிற்றுக்கிழமை மலேசியசெய்திகள்



Mano.G.
17-07-2005, 03:35 AM
கல்வி துறையில் கைவிடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை பெற வேண்டும்
வருமை அல்லது இதர காரணங்களால் கல்வி துறையில் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியை தொடர வாய்ப்புகள் கிடைக்காமல் போனவர்களைь கண்டரிய UMNO உறுப்பினர்கள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் விவரங்களை பெறவேண்டும் என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
இப்புதிய திட்டத்தின் வழி, கல்வித்துறையில் கைவிடப்பட்ட மலாய்காரர்களின் எண்ணிக்கையை கண்டரிய முடியும் எனவும், அவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கல்வித்துறையில் கைவிடப்பட்ட பெரும்பாலான மாணவர்கள், வருமையின் காரணமாகவும், கல்வி அமைச்சில் பதிவு செய்யப்படாத பள்ளிகளில் படித்துவந்ததாகவும் அவர் Dewan Bahasa dan Pustaka-வில் நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்தபோது தெரிவித்தார்.
இதனிடையே, கல்வி ஒருவருக்கு மிக அவசியம் என்பதால், ஒவ்வோருவரும் கல்வியை கற்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
--------------------------------------------------------------
பிள்ளைகளின் உயர்கல்விக்குப் பெற்றோர்களின் சேமிப்பு அவசியம்
பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஆரம்பக் காலக்கட்டங்களிலேயே அவர்களுக்காக சேமித்து வைக்க வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டறவு துறை அமைச்சர் Datuk Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களின் உயர்கல்விக்கு பெற்றோர்கள் அரசாங்கத்தையே நம்பியிருக்காமல் பிள்ளைகளுக்கு ஆரம்பக் காலக்கட்டத்திலேயே சேமித்து வைக்க வேண்டும் என அவர் கூறினார்.
பிள்ளைகளுக்காக சேமித்து வைக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஒரு கலாச்சாரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். உயர்கல்விக் கூடங்களுக்குக் கல்வி பயில இடம் கிடைக்காத திறமை வாய்ந்த 120,000 மலாய்க்கார மாணவர்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.


அடைமழையினால் 500 வீடுகள் சேதம்
கூலிமில் சுமார் 3 மணி நேரம் பெய்த அடைமழையினால் 500 வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்ததாக அவ்வட்டார பொது போக்குவரத்து போலீஸ் அதிகாரி ASP Ismail Ayob தெரிவித்தார்.
Taman Seri Pinang, Taman Ru, Taman Angsana, Taman Selasih மற்றும் Taman Technocity ஆகிய வீடமைப்பு பகுதிகள் வெள்ளத்தில் பெருத்த சேதம் அடைந்ததாக அவர் கூறினார்.
தற்பொழுது அப்பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் துப்புரவு பணிகளைச் செய்து வருவதாகவும் அப்போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.



கடலோரங்களில் மீன் பிடிப்புத் துறை தொடர்ந்து பாதிப்பு
முறையான சட்டத் திட்டங்களை அமல்படுத்தாமல் இருப்பதால் ┐бЁ╩° கடலோரங்களில் மீன் பிடிப்புத் துறை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக மீன் வளர்ப்பு ஆணையம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
கள்ளத்தனமாக மீன் பிடிப்பில் ஈடுபடுவது மற்றும் சட்டத் திட்டங்களை மீறுவது போன்ற போக்கினால் மீன் வளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மீன் வளங்களின் பாதிப்பினால் மீன் வளர்ப்பு ஆணையம் அதன் தொடர்பில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.



விமானத்தளத்தின் பாதையில் ஏற்றபட்ட குழி
Kota Kinabalu அனைத்துலக விமானத்தளத்தின் பாதையில் நேற்று முன்தினம் குழி ஏற்பட்டநந்த் தொடர்ந்து, அச்சாலை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மூடப்பட்டது. இதனால், அங்கு விமானச் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என மலேசிய விமான பிரதேச நிர்வாகி Mohd Nazeri Abdul Karim தெரிவித்தார்.
பிற்பகல் நேரத்தில் மூடப்பட்ட இச்சாலை மாலை 3 மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டதாகவும், இதனால் 20 விமான சேவைகள் தடைப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


பொது தற்காப்புத் துறையின் புதிய திட்டங்கள்

ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ், பொது தற்காப்புத் துறை 714 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கத்திடம் ஒதுக்கீடு கோரியுள்ளது.
புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும், மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்களைத் திறப்பதற்கும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இப்பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக பொது தற்காப்புத் துறை துணைத் தலைவர் Selamat Dahalan தெரிவித்தார்.
தற்போது, இத்துறையில் 43 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகவும், மேலும் 7 ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது திரங்கானு, பினாங்கு, ஜொகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் மட்டுமே பொது தற்காப்பு துறை அலுவலகங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
--------------------------------------------------------------
டில்லி தியேட்டர் குண்டுவெடிப்பு; 2 பேர் கைது
டில்லி தியேட்டர்களில் கடந்த மே 22 திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இதற்கு முன் பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதி அனைத்துலக தீவிரவாத அமைப்பின் தலைவான சத்னம் சிங்கின் சகோதரன் என்பது போலீசார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
--------------------------------------------------------------
ஈராக்கில் 8 இடங்களில் தற்கொலை தாக்குதல்: 30 பேர் பலி
ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் ஒரே நாளில் 8 இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 30 பேருக்கு மேல் உயிரிழந்ததோடு மட்டுமின்றி சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
காரில் வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈராக் பாதுகாப்பு வீரர்களைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

லண்டன் குண்டுவெடிப்பு எகிப்து தீவிரவாதியும் கைது

லண்டன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய எகிப்து தீவிரவாதி, கெய்ரோவில் கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பிரிட்டன் தலைநகரில் கடந்த 7ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குத் தலைவன் எகிப்தைச் சேர்ந்த ரசாயனத் துறை மாணவன் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவன் தான் இதர தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துக் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவன் லண்டனில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்,பிரிட்டனை விட்டு வெளியேறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

'டிஸ்கவரி'யில் கோளாறு நீக்க விஞ்ஞானிகள் விடா முயற்சி

'டிஸ்கவரி' விண்வெளி ஓடத்தின் எரிபொருள் உணர் கருவியில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்ய, 'நாசா' விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் முயன்று வருகின்றனர்.
ஏழு விண்வெளி வீரர்களுடன், 'டிஸ்கவரி' விண்வெளி ஓடம் கடந்த 14-ஆம் திகதி ஏவப்படவிருந்தது. அதன் எரிபொருள் உணர் கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்பொழுது அதன் கோளாறை சீர் செய்யும் முயற்சியில் 'நாசா' விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
--------------------------------------------------------------
Sunderland அணியிடம் தோல்வி கண்ட British Columbia All Stars அணி
British Columbia All Stars மற்றும் Sunderland அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்தாட்டதில் Sunderland அணி 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் ritish Columbia All Stars அணியை வீழ்த்தியது.
இவ்வணியின் ஒரே கோலை 19-வயது Martin Woods புகுத்தினார். இதனிடையே, Sunderland அணி நேற்று Vancouver Whitecaps அணியை சந்தித்து ஆடியது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

рокро░роЮрпНроЪрпЛродро┐
17-07-2005, 04:40 AM
செய்திகளுக்கு நன்றி அண்ணா.