PDA

View Full Version : ஜூலை 15, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
15-07-2005, 03:33 AM
திறமையான மாணவர்களை அரசாங்கம் புறக்கணிக்காது
அரசாங்க உயர்கல்வி கூடங்களில் பயில இடம் கிடைக்காத ╛в╚и┴┬б╔ மாணவர்களை அரசாங்கம் ஒருபோதும் புறக்காணிக்காது என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
சிறப்பாகத் தேரிய மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காவிட்டால் அம்மாணவர்கள் வேறு வழிகளில் தங்களின் கல்வியைத் தொடர உயர்கல்வி அமைச்சு அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
மருத்துவமனைகளில் முதியவர்க தனி சிகிச்சைப் பிரிவு
முதியவர்களின் வசதிக்காக நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் "wad geriatrik" எனப்படும் முதியவர்களுக்கான சிகிச்சை பிரிவைத் தயார்படுத்த மகளிர், குடும்பம், சமூக நல மேம்பாட்டு அமைச்சு சுகாதார அமைச்சுடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.
கோலாலம்பூர், சிரம்பான், மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் மட்டுமே இதுவரையில் முதியவர்களுக்கான ╛╔в சிகிச்சை பிரிவு வசதி இருந்ததாகவும் இவ்வசதி அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதன் தொடர்பில் சுகாதார அமைச்சர் Datuk Chua Soi Lek அவர்களுடன் விரைவில் பேச்சு வார்த்தையில் தாம் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் Shahrizat தெரிவித்துள்ளார்.



நாட்டில் போதை பித்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது...
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையில் நாட்டில் சுமார் 12,563 போதை பித்தர்கள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது எனவும் ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில், நாட்டில் சுமார் 23,717 போதை பித்தர்கள் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
போதைபித்தர்களின் எண்ணிக்கை குறைந்த போதும், அவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் சரிவர கணக்கிடப்படவில்லை என உள்நாட்டு பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் Datuk Noh Omar செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், நாட்டில் இன்னும் அதிகமான போதை பித்தர்கள் உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மாணவர்கள், பள்ளி புறப்பாட கழகங்களில் பங்கு பெற வேண்டும்
பள்ளி மாணவர்கள் தீய செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், அவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவும், அவர்கள் பள்ளி புறப்பாட கழகங்களில் பங்கு பெற வேண்டும் என பெர்லிஸ் Menteri Besar Datuk Seri Shahidan Kassim கேட்டுக் கொண்டார்.
பள்ளியில் செயல்படும் கழகங்களில் பங்குபெறும் பொழுது, அவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுகொள்வதுடன், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள முடியும் என அவர் கருத்து தெரிவித்தார்.
அண்மைய காலங்களில் நாட்டில், பள்ளி மணவர்கள் சிலர் தீய பழக்கங்களிலும், ஒழுக்கத்துக்கு முரண்பாடாக நடந்து கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, பள்ளிகளில் நடைபெறும் தற்காப்பு வகுப்புகளிலும் மாணவர்கள் பங்கு பெற்று அவர்களின் தற்காப்பு கலைகளை கற்றுக் கொ√╟─бї என அவர் கருத்து தெரிவித்தார்.


தேசிய கலைக்கூடத்தின் புதிய பயிலரங்குகள்
தற்போது,நாட்டில் நிலவிவரும் கலை நிபுணர்கள் பற்றாக்குறையை நீக்க தேசிய கலைக்கூடம் அல்லது National Arts Academy முக்கிய பயிலரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுவரை,அறிவியல் தொடர்பான விஷயங்களே பாடத்திட்டங்களில் புகுத்தப்பட்டு வந்தன;இனி,கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென з┐№று கோலாலம்பூரில் International Photography 2005 கண்காட்சியை தொடக்கி வைத்தபோது கலை,கலாச்சாரத் துறை அமைச்சர் Datuk Seri Rais Yatim தெரிவித்தார்.
புகைப்படம் எடுத்தல்,சினிமா அல்லது நாடக தயாரிப்பு,தொல்பொருட்காட்சி சாலை நிர்மாணிப்பு தொடர்பான பயிலரங்குகளை தேசிய கலைக்கூடம் நடத்துமென தகவல்கள் தெரிவிக்கின்றன.


லஞ்சம் ஒரு சமூக சீர்கேடு-Nazrin Shah
லஞ்சம் ஒரு சமூக சீர்கேடு எனவும் லஞ்சம் நாட்டின் பொருளாதாரத்தையும் அமைதியையும் சீர்குலைக்க வல்லது எனவும் தற்காலிக பேராக் அரசர் Raja Dr Nazrin Shah தெரிவித்துள்ளார்.
DBP கட்டிடத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
லஞ்ச நடவடிக்கைகள் சமுதாயத்தில் ஊடுருவினால்,அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்; அனைத்து அரசு,அரசு சார்பற்ற மற்றும் வாணிப நடவடிக்கைகள் லஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட தொடங்கும்.
ஆகவே,லஞ்சத்தை ஓர் சமூகவிரோதியாக கருதி அதை அடியோடு ஒழிக்க அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
காஷ்மீரில் அதிரடித் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர் குருஸ் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபொழுது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களால் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் இரண்டு நாட்களாக கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
மலைப்பகுதியான அப்பகுதியில் ராணுவ நடமாட்டம் அதிகம் இல்லாததை தெரிந்துக் கொண்ட தீவிரவாதிகள் அங்கு ஊடுருவ முயன்றனர்.
தீவிரவாதிகளின் திட்டத்தை அறிந்துக் கொண்ட ராணுவ படையினர் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நி╕ழ்ந்ததாக பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
அமெரிக்காவின் டிஸ்கவரி ராக்கெட் பயணம் ரத்து
அமெரிக்காவின் டிஸ்கவரி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 17-ஆம் திகதி அதனை விண்ணில் செலுத்த தற்பொழுது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக 'டிஸ்கவரி' என்ற புதிய ராக்கெட்டை விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் ஆய்வுக் கூடத்துக்காக அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை நிபுணர்கள் கண்டு பிடித்தனர்.
எனவே, ராக்கெட்டை அனுப்பும் திகதி தள்ளி வைக்கப்பட்டது. தற்பொழுது ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியில் உள்ள கசிவையும் கோளாறையும் சரி செய்யும் முயற்சியில் 'நாசா' விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


வங்கி கடனை அடைக்க மோசடி; மைக்கல் ஜாக்சன் மீது புதிய வழக்கு
சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரபல போப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நிதி நிறுவனம் தற்பொழுது அவர் மீது ஒரு புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளது.
வங்கிக் கடனை அடைக்க ஜாக்சன் செய்த பல மோசடி வேலைகள் இந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கின் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக ஜாக்சனின் வழக்கறிஞர் பிரைன் ஆக்ஸ்மேன் தெரிவித்தார்.


சுரங்க ரயில்களில் தீவிர சோதனை
லண்டன் நகரில் சுரங்க ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. கல்கத்தா நகரில் உள்ள சுரங்க ரயில் ஒன்றில் போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------------------------
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் Sania
உலக தர வரிசைப் பட்டியலில் தனது நிலையை உயர்த்திக் கொள்ளும் விதமாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று அமெரிக்கா சென்றார் இந்தியாவின் நட்சத்திர Tennis வீராங்கனை Sania Mirza.
அண்மையில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் 70-வது இடத்தை பிடித்துள்ள Sania, 50-வது இடத்துக்குள் வருவதே அடுத்த இலக்கு என சமீபத்தில் கூறியிருந்தார்.
எதிர்வரும் 18-ம் திகதி நடைபெறும் போட்டியில் பிரதானச் சுற்றில் அவர் கலந்து கொள்கிறார். அது முதல் 4 போட்டிகளில் பங்கேற்ற பின்னர், ஆகஸ்டு 29-ம் திகதி தொடங்கும் U.S Open Grandslam போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
அது முடிவடைந்த பின்னர், இந்தோனேஷியாவில் நடைபெறும் ஒரு போட்டியில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி