PDA

View Full Version : மொழி பெயர்ப்புக் கவிதைகள் - 2.



kavitha
14-07-2005, 03:39 AM
ஞானமும் நல்வாழ்க்கையும்
----------------------------------

உயிருள்ள வரை மனிதன் மென்மையானவன்
இறக்கும்போது விறைத்துப் போகிறான்.


புல்லிலிருந்து மரம் வரைக்கும் பல்லாயிரமும்
வாழும்போது மென்மையானதும்
நெகிழ்வானதும்தான்.
இறக்கும்போது விறைத்துச் சருகாகின்றன.

இப்படியாக
திண்மையானதும் வலியதும்
இறப்புக்குத் தோழர்கள்.
நயமானதும் மென்மையானதும்
வாழ்வுக்குத் தோழர்கள்.
எனவே
ஆயுத பலமுடையவன் வெல்வதில்லை.

நன்கு வளர்ந்த மரம்
அழியத்தான் போகிறது.

வலிமையானதும் பெரியதும் கீழே தங்கிவிடு.
நயமானதும் மெல்லியதும் மேலே நிலைக்கும்.


- லா வோத் சூ


.

pradeepkt
14-07-2005, 05:14 AM
அருமையான கவிதை சகோதரி,
ஆற்றுப் படுகை நாணலும், புள்ளிறங்கும் புல்வெளியும் காலமெல்லாம் சொல்லும் கதை இது.
வறட்டுப் பிடிவாதமும் வெட்டி கௌரவமும்தான் வாழ்க்கை என்றெண்ணிச் சிலர் வீணடிப்பது வேதனை. அவர்களுக்கு இக்கவிதைதான் போதனை.
நன்றி

kavitha
21-07-2005, 03:24 AM
நன்றி பிரதீப்