PDA

View Full Version : கண்ணாடிkavitha
14-07-2005, 03:23 AM
கண்ணாடி
---------

கண்ணாடி பார்த்தேன்
ஐயம் ஔவையாரோ!

கண்ணடி பார்த்தேன்
ஐயகோ ஔவையாரே!

karikaalan
14-07-2005, 08:32 AM
கவிதாஜி

நல்லாத்தான் இருக்குது. அதிகம் கண் விழித்தால் இதுபோல் ஆகுமாம். வெள்ளரிக்காயை வட்டமாக அரிந்து கண்கள் மீது வைத்து சிறிது நேரம் இருக்கவும். சில நாட்களில் சரியாகலாம்!

===கரிகாலன்

pradeepkt
14-07-2005, 08:39 AM
கொஞ்சம் அர்த்தப் படுத்திக் கொள்ளக் கடினமாக இருக்கிறது கவிதை.

gragavan
14-07-2005, 09:16 AM
முதலில் எனக்கும் புரியவில்லை. இரண்டு முறை படித்ததும் புரிகிறது.

கவிதை வழியாக உங்கள் அச்சத்தை சொல்கின்றீர்களா?
சகோதரி ஐ-காண்ட்டோர் ஜெல் பயன்படுத்துங்கள். நல்லது.

பரஞ்சோதி
14-07-2005, 09:18 AM
கண்ணாடி
---------

கண்ணாடி பார்த்தேன்
ஐயம் ஔவையாரோ!

கண்ணடி பார்த்தேன்
ஐயகோ ஔவையாரே!

வர வர சகோதரி லொள்ளு தாங்க முடியலை.

முன்பு என்னடா என்றால் 2 வரி கொடுத்து மண்டை காய விட்டாங்க.

இப்போ 4 வரி கொடுத்து தலையை பிச்சுக்க வைக்கிறாங்க.

kavitha
15-07-2005, 03:16 AM
வர வர சகோதரி லொள்ளு தாங்க முடியலை.

முன்பு என்னடா என்றால் 2 வரி கொடுத்து மண்டை காய விட்டாங்க.

இப்போ 4 வரி கொடுத்து தலையை பிச்சுக்க வைக்கிறாங்க.

இதென்ன வம்பா போச்சு.. அப்படியெல்லாம் இல்லை அண்ணா.

விளக்கம்:-

கண்ணாடி பார்த்தேன் - முகம்பார்க்கும் கண்ணாடியைப்பார்த்தேன்
ஐயம் ஒளவையாரோ! - நரை விழுந்திருந்தது... ஔவையார் போல ஆகிவிட்டேனோ என சந்தேகம்

கண்ணடி பார்த்தேன் - சில கண்ணடிகளைப் பார்த்தேன்
ஐயகோ ஔவையாரே! - ஔவையார் ஏன் அப்படி வரம் கேட்டார் எனப் புரிந்தது

இப்போது உங்களுக்குப் புரிந்ததா?

பதித்து முடித்து விட்டு மீண்டும் வாசித்தேன். ஒரு இளைஞனின் பார்வையில் இக்கவிதை எப்படி இருக்குமென...
சிரிப்பும், கேலியுமாய் இருந்தது. நிச்சயமாக ஔவையாரைக்கேலி செய்யும் எண்ணம் இல்லை. அந்த இளைஞியின் மேல் எனக்கு
அளவு கடந்த மரியாதை உண்டு.
இங்கே குறியீடு மூதாட்டி என்பது மட்டுமே! எனவே எனது கேலியையும் பொறுத்தருள்க.

pradeepkt
15-07-2005, 05:14 AM
அடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,
உங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.

gragavan
15-07-2005, 05:31 AM
அடடா! கவிதை இப்பத்தான் புரியுது.

ஔவை என்ற சொல் தமிழில் மூதாட்டி என்ற பொருளைக் குறிக்கும்.

இந்தச் சொல் இன்றைக்கு மருவி தெலுங்கில் அவ்வா என்று பாட்டியைக் குறிக்கும் சொல்லாக விளங்குகிறது.

அந்தக் காலத்தில் ஒரு ஔவையார் அல்ல. பலர் இருந்தார்கள். பல கால கட்டங்களில். வயதான பெண்பாற் புலவர்கள் எல்லாரையும் பொதுவாக ஔவையார் என்பார்கள்.

gragavan
15-07-2005, 05:32 AM
அடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,
உங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.ஹி ஹி நான் அதச் சொல்லனுமுன்னு நெனச்சேன். நீங்க சொல்லீட்டீங்க. டெலிபதி ரொம்ப வேல செய்யுது போல.

gragavan
15-07-2005, 05:33 AM
அது போல இளைஞி என்று சொல்வதும் தவறு. இளைஞர் என்பது இருபாற் பெயர்.

பாரதி
15-07-2005, 07:02 PM
நல்ல, ரசிக்கக்கூடிய கவிதை. பாராட்டுக்கள்.
ஆனால் ஒரு சந்தேகம் - இந்தக்கவிதையை எங்கோ படித்தது போல தோன்றுகிறது. வேறு எங்காவது இதை எழுதி இருக்கிறீர்களா..??

kavitha
20-07-2005, 11:03 AM
நல்ல, ரசிக்கக்கூடிய கவிதை. பாராட்டுக்கள்.
ஆனால் ஒரு சந்தேகம் - இந்தக்கவிதையை எங்கோ படித்தது போல தோன்றுகிறது. வேறு எங்காவது இதை எழுதி இருக்கிறீர்களா..??

வேறு எங்கே பார்த்தீர்கள் பாரதி...? (என்ன ஓய்! இப்படி லோகத்தில் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்! நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு!! )
நான் வேறு எங்கேயும் பதிக்கவில்லை பாரதி.. கொஞ்சம் கொஞ்சமாக என் வலைப்பூவிற்கு ஏற்றும் எண்ணம் மட்டும் உள்ளது.

சுவேதா
21-07-2005, 02:40 AM
கவிதையும் அதன் கருத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா!

kavitha
21-07-2005, 03:19 AM
"வெள்ளரிக்காயை வட்டமாக அரிந்து கண்கள் மீது வைத்து சிறிது நேரம் இருக்கவும். சில நாட்களில் சரியாகலாம்!

===கரிகாலன்"

"சகோதரி ஐ-காண்ட்டோர் ஜெல் பயன்படுத்துங்கள். நல்லது."
குறிப்பிற்கு நன்றி அண்ணா.. தலைக்கும் ஒரு யோசனை கூறுங்களேன்.அடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,
உங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.
நன்றி பிரதீப்அது போல இளைஞி என்று சொல்வதும் தவறு. இளைஞர் என்பது இருபாற் பெயர்.

எனில் ஆண்பால் பெண்பால் பெயர்கள் யாவை?
இளைஞன் என்பதுவும் தவறா அண்ணா?

kavitha
21-07-2005, 03:21 AM
கவிதையும் அதன் கருத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா! நன்றி சுவேதா. உனது கவிதைகள் எங்கே?

சுவேதா
21-07-2005, 12:45 PM
எனது கவிதைகளை இதோ தருகின்றேன் அக்கா!

பாரதி
21-07-2005, 05:18 PM
வேறு எங்கே பார்த்தீர்கள் பாரதி...? (என்ன ஓய்! இப்படி லோகத்தில் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்! நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு!! )
நான் வேறு எங்கேயும் பதிக்கவில்லை பாரதி.. கொஞ்சம் கொஞ்சமாக என் வலைப்பூவிற்கு ஏற்றும் எண்ணம் மட்டும் உள்ளது.

அன்பு கவிதா...
நிஜமாகவே நான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கவிதையை ஒரு வருடத்திற்கு முன்பே எங்கோ படித்ததாகவோ அல்லது கேட்டதாகவோ நினைவு.

கண்ணாடி பார்த்தாள்
ஒளவையோ
கண்ணாடி பார்த்தான்
ஒளவையே.

இப்படிக்கூட அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பிரசன்னா
09-09-2005, 06:13 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

மன்மதன்
10-09-2005, 05:44 AM
அன்பு கவிதா...
நிஜமாகவே நான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கவிதையை ஒரு வருடத்திற்கு முன்பே எங்கோ படித்ததாகவோ அல்லது கேட்டதாகவோ நினைவு.

கண்ணாடி பார்த்தாள்
ஒளவையோ
கண்ணாடி பார்த்தான்
ஒளவையே.

இப்படிக்கூட அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.... மனதில் எழும் கவிதை இன்னொரு வடிவில் வேறு மனதில் உதித்திருக்கலாம்..