PDA

View Full Version : பெண்மை நிலவு



simsonpeter
12-07-2005, 05:57 PM
பெண்மை நிலவென்பர் கவிஞர் - வெளி
வெண்மையும் தன்மையும் கருதி
இதயம் கல்லென்பதாலே - நானும்
இயம்பினேன் பெண்னென்று கேளீர்

(இதயம் = நிலவின் உட்பகுதி)

Mano.G.
13-07-2005, 12:47 AM
ஆகா அருமை அருமை
மேல் பூச்சை கண்டு அழகு அமைதி என நினைத்தால்
உள்ளுக்குள் கடும் பாறைகள் அல்லவா இருக்கின்றன
அங்கே ஈரத்திற்கு இடமேது.


மனோ.ஜி

பிரியன்
13-07-2005, 05:06 AM
பாறையில்தானே ஈரம் இருக்கும். நதிகளின் மூலமே கல்லுக்குள் உள்ள ஈரம்தானே. அதே போலத்தான் பெண்மையும். இதயம் கல் போன்று தெரிந்தாலும் அதில் வற்றா ஈரம் இருந்து கொண்டே இருக்கிறது. அது பொய் என்றால் இந்த உலகம் இயங்க முடியாது.

pradeepkt
13-07-2005, 06:13 AM
பலாப்பழத்தைப் போலும் பெண்களும் உள்ளனர் என்கிறார் பிரியன்.

அறிஞர்
13-07-2005, 07:07 AM
நிலவை போன்ற பெண்கள்.. பலாப்பழத்தை போல சில பெண்கள்..

அருமை அன்பர்களே. வெளித்தோற்றம், உட்புற தோற்றத்தில் எத்தனை மாறுதல்கள்

kavitha
14-07-2005, 03:53 AM
வித்தியாச கண்ணோட்டம். பாராட்டுகள் சிம்சன்

தகிக்கும் வெப்பத்தை உள்வாங்கி
தணிக்கும் தண்மையைத் தருவதை அறிவோரோ!

gragavan
14-07-2005, 08:15 AM
நல்ல வித்தியாசமான கருத்து. நல்ல கவிதை.

simsonpeter
15-07-2005, 09:48 AM
பிரியன் அவர்களே! நான் பெண்னை உவமித்தது பூமியாக அல்ல, நிலவாக. பூமியில் நீர் இருக்கும். நிலவில்?

சுவேதா
29-07-2005, 01:52 AM
மிகவும் அருமையான கவிதை சிம்சன் அண்ணா வாழ்த்துக்கள்!

சாம்பவி
01-11-2007, 09:09 PM
பெண்ணவள்.....
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழியும் நிலவு போலும் ...
துக்கம் தின்று புன்னகை வீசும் பெருமை கொண்டவள்... !
அவள் வெண்ணிலவாகிப் போனதும் அதனாலோ.... !

மனம் கல்லாகிப் போனதனால் ஆண் ........
அவனும் சந்திரன் ஆனானோ.... ... !

கஜினி
02-11-2007, 05:31 AM
கவிதை அருமையான கருத்தை சுமந்துகொண்டிருக்கிறது.

அக்னி
02-11-2007, 01:01 PM
முழுமையாக
பெண் - நிலவு
என்றானால்,
இலகுவில் எட்டவும் முடியாது...
எட்டினால் இயல்பாய் வாழவும் முடியாது...

அழகிய கவிதை...
ஆனால், அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக கூற இயலவில்லை.
அழகு, தளிர்மை போன்றவற்றிற்கான ஒப்பீடாக, பெண்ணுக்கு நிலவை ஏற்றுக்கொள்ளலாம்.
குணாதிசய ஒப்பீடு என்ற வகையில், நிலவுடனானால்,
பெண்மை கல்லாகிவிடும், பிரதிபலிப்பாகிவிடும்.
100% பெண்கள் நிலவானால், பெண்மை பொய்யாகிடும்...

பாராட்டுக்கள் சிம்சோன் அவர்களே...

அக்னி
02-11-2007, 01:06 PM
பெண்ணவள்.....
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழியும் நிலவு போலும் ...
துக்கம் தின்று புன்னகை வீசும் பெருமை கொண்டவள்... !
அவள் வெண்ணிலவாகிப் போனதும் அதனாலோ.... !

மனம் கல்லாகிப் போனதனால் ஆண் ........
அவனும் சந்திரன் ஆனானோ.... ... !
ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

வெயில் கருக்குகையிலா,
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழிகிறது நிலவு..?
இல்லையே...
வெயில் தணிந்தபின் அன்றோ,
வெளிவருகிறது நிலா...
அதுவும்,
பகலவன் கதிர்களை வாங்கியே பகட்டாய் ஒளிர்கிறது.
ஆக, பெண்ணவளும் இப்படியோ..?

அழகான, பின்னூட்டத்திற்கு பாராட்டுக்கள்...

யவனிகா
02-11-2007, 01:24 PM
பெண்ணவள்.....
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழியும் நிலவு போலும் ...
துக்கம் தின்று புன்னகை வீசும் பெருமை கொண்டவள்... !
அவள் வெண்ணிலவாகிப் போனதும் அதனாலோ.... !

மனம் கல்லாகிப் போனதனால் ஆண் ........
அவனும் சந்திரன் ஆனானோ.... ... !

நல்ல பின்னூட்டக் கவிதை.பாராட்டுகள் தோழி. நெஞ்சம் கல்லாய் கிடந்ததால் தானே ஆண்கள் எனும் உளியை சமாளிக்க முடியும்...என்ன உளி பட்டு சிற்பமான பெண்களைக் காட்டிலும் சிதிலமான பெண்கள் அதிகம்.

யவனிகா
02-11-2007, 01:29 PM
முழுமையாக
பெண் - நிலவு
என்றானால்,
இலகுவில் எட்டவும் முடியாது...
எட்டினால் இயல்பாய் வாழவும் முடியாது...


உண்மைதான் அக்னி அவர்களே!கவிதைக்கு அழகே உவமைகள் தானே!இயல்பு மீறலும்,அதிகப்படுத்துதலும் சிலநேரங்களில் கவிதைக்கு அணி சேர்க்கிறதோ இல்லையோ...காதல் தோல்வியில் பெண்களைச் சாடுபவருக்கு உதவிக்கு வருகின்றன,இருப்பினும் கவிஞரின் கற்பனை நன்றாகத்தானே இருக்கிறது.

அக்னி
02-11-2007, 01:40 PM
நல்ல பின்னூட்டக் கவிதை.பாராட்டுகள் தோழி. நெஞ்சம் கல்லாய் கிடந்ததால் தானே ஆண்கள் எனும் உளியை சமாளிக்க முடியும்...என்ன உளி பட்டு சிற்பமான பெண்களைக் காட்டிலும் சிதிலமான பெண்கள் அதிகம்.
செதுக்கப்பட்ட கல், சிற்பமாய் புகழ் கொண்டதும்,
நெருங்க விடுவதில்லை உளியை...
பெண்மை, மென்மை...
மென்மைக்குத் தேவையில்லை வன்மை...

உண்மைதான் அக்னி அவர்களே!கவிதைக்கு அழகே உவமைகள் தானே!இயல்பு மீறலும்,அதிகப்படுத்துதலும் சிலநேரங்களில் கவிதைக்கு அணி சேர்க்கிறதோ இல்லையோ...காதல் தோல்வியில் பெண்களைச் சாடுபவருக்கு உதவிக்கு வருகின்றன,இருப்பினும் கவிஞரின் கற்பனை நன்றாகத்தானே இருக்கிறது.
கவிஞரின் கற்பனை நன்று...
ஆனால், எல்லாப் பெண்களும் கற்களுமல்ல... எல்லா ஆண்களும் உளிகளுமல்ல...
கல்மலைகளும், சிதைக்கும் வெடிகளும் உலகு முழுதும் இல்லை...

பூமகள்
02-11-2007, 03:14 PM
பெண்மை நிலவென்பர் கவிஞர் - வெளி
வெண்மையும் தன்மையும் கருதி
இதயம் கல்லென்பதாலே - நானும்
இயம்பினேன் பெண்னென்று கேளீர்
நல்ல கவிதை..!!

உள்ளே கல்லானாலும்
உணர்வுகள் கல்லாகவில்லையே...!
விரைவில் சம்மதம் சொல்வாள் - அன்று
வியந்து மாற்றுவீர் கவிதையையே...!!
வாழ்த்துகள் சகோதரர் பீட்டர்.

ஓவியன்
02-11-2007, 04:32 PM
பெண்மை நிலவென்பர் கவிஞர் - வெளி
வெண்மையும் தன்மையும் கருதி
இதயம் கல்லென்பதாலே - நானும்
இயம்பினேன் பெண்னென்று கேளீர்
ஓ கல்லிலே செதுக்கிய சிற்பம் போல்
பெண் இதயத்தில் செதுக்கிய காதலும்
காலத்தால் அழியாததால் கல் என்றீரோ...??

அமரன்
02-11-2007, 05:27 PM
பெண்ணவள்.....
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழியும் நிலவு போலும் ...
துக்கம் தின்று புன்னகை வீசும் பெருமை கொண்டவள்... !
அவள் வெண்ணிலவாகிப் போனதும் அதனாலோ.... !

மனம் கல்லாகிப் போனதனால் ஆண் ........
அவனும் சந்திரன் ஆனானோ.... ... !


ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பால் போல் வெள்ளை
என்று செப்பும் சொற்றொடரால்
திரவமானதோ வெள்ளை ?

கொக்குப் போல வெண்மை
சொக்க வைத்த வெண்மை
திடப்பொருளானதோ......!

நிறத்தின் குணத்தை
நிறுத்திப் பாருங்கள்...!

சாம்பவி
02-11-2007, 09:10 PM
ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

வெயில் கருக்குகையிலா,
வெப்பம் உண்டு வெளிச்சம் பொழிகிறது நிலவு..?
இல்லையே...
வெயில் தணிந்தபின் அன்றோ,
வெளிவருகிறது நிலா...
அதுவும்,
பகலவன் கதிர்களை வாங்கியே பகட்டாய் ஒளிர்கிறது.
ஆக, பெண்ணவளும் இப்படியோ..?

.

பகல் முழுவதும் பகலவனின்
வெப்பக் கதிர்களையே உட்கொண்டாலும்... இரவில்
உமிழ்வதென்னவோ தண்ணிலவைத் தானே ...!

உறவுகள் உக்கிரமாய் கொட்டினாலும்
துக்கத்தை தன்னுள் விழுங்கி
அக்கறைக் காட்டுபவள் பெண் தானே
அதனாலேயே அவள் வெண்ணிலா.... !

உதாரணத்திற்கு... : http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13100


இதயம் கல் என்பதாலேயே
ஆசிரியருக்கு .....
பெண் நிலவாகிப் போனாளாம்... !!!
நல்லா இருக்கே கதை... . !!!

கல்லாய்ப் போனது
சந்திரர்கள் தானே அன்றி...
வெண்ணிலாக்கள் அல்லர்... !

இதையே...
கோனார் நோட்ஸ் போட்டு உடைத்து சொல்லனும்னா....
நிலவின்
மென்மை பெண்மைக்கும்.,
வன்மை ஆணுக்கும் உடைத்து... !

அக்னி
03-11-2007, 12:46 AM
பகல் முழுவதும் பகலவனின்
வெப்பக் கதிர்களையே உட்கொண்டாலும்... இரவில்
உமிழ்வதென்னவோ தண்ணிலவைத் தானே ...!
எரிக்கும் பொழுதில்,
தராத தண்மைதான்...
பெண்மையோ..?


உறவுகள் உக்கிரமாய் கொட்டினாலும்
துக்கத்தை தன்னுள் விழுங்கி
அக்கறைக் காட்டுபவள் பெண் தானே
அதனாலேயே அவள் வெண்ணிலா.... !
வளர், தேய் பிறைகளாய்
வருவதும் போவதும்
பெண்ணவள் அக்கறையோ..?
ஒரு நாள் மட்டும் முழுதாய் ஒளிர,
ஒரு மாதம் கண்ணாமூச்சி...
அதனாலேயே இவன் மண்ணிலே...


கல்லாய்ப் போனது
சந்திரர்கள் தானே அன்றி...
வெண்ணிலாக்கள் அல்லர்... !

சந்திரர்களில்
சந்திரனும் உண்டு..,
சந்திராவும் உண்டு...


பெண்மை மென்மைதான்...
ஆனால், பெண்கள் முழுவரும் மென்மையாளர்களல்ல...
ஆண்மை வன்மைதான்...
ஆனால், ஆண்கள் முழுவரும் வன்மையாளர்களல்ல...