PDA

View Full Version : ஜூலை 12, செவ்வாய்க்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
12-07-2005, 12:56 AM
அரசாங்க நிறுவன திட்டங்களைக் கண்காணிப்பீர் - பிரதமர் வலியுறுத்து
அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் தாமதமடையாமலும் கைவிடப்படாமலும் இருப்பதை உறுதி செய்ய அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் நன்கு கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள் மேற்கொண்ட எந்தவொரு திட்டமும் சரியான முறையில் இல்லை என்ற பிரச்சனை ஒருபோதும் எழக்கூடாது என்று தனது அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் அவ்வாறு உரையாற்றினார்.
பிரச்சனைகள் எழக்கூடிய திட்டங்களை முடிந்த வரையில் விரைவாக கையாள வேண்டும் எனவும் அவர் கூறினார். கட்டிட அமைப்பு பணிகள், அரசாங்க அலுவலகங்கள் நிர்மாணிப்பு போன்ற தாமதப்படுத்தப்படும் அரசாங்கத் திட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை விளைவிக்க கூடியது என்பதால் அதனைச் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்களைக் காக்க NAM அமைப்பு உதவி செய்யும்
பாலஸ்தீன மக்களின் நலன் காக்கவும்,அவர்கள் தங்களது அடிப்படை உரிமை தொடர்பான விழிப்புணர்வு பெற உதவவும் NAM எனப்படும் அணிசேரா நாடுகளின் அமைப்பு தனது பங்கையாற்றும் NAM மையத்தின் மலேசிய பிரதிநிதி Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.
வறுமை,அடிமைத்தனம்,இஸ்ரேலிய அரசின் கொடுங்கோல் ஆட்சி,அடிப்படை வசதிகள் மற்றும் போதிய உணவு இல்லாமை ஆகியவற்றால் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்ற பாலஸ்தீன மக்களுக்கு NAM உதவிக்கரம் நீட்டுவது அவசியமென் அவர் மேலும் தெரிவித்தார்.
பாலஸ்தீன வட்டாரத்தில்,தென் Baitulmuqadis-இல் எழுப்பட்ட சுவர் இடித்துத் தள்ளப்பட வேண்டுமெனவும்,4-வது Geneva மாநாட்டின் விதிகளை அது மீறுவதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சூதாட்ட மோசடி தொடர்பில் நடவடிக்கை
7.14 லட்ச ரிங்கிட் அளவிலான சூதாட்ட மோசடி தொடர்பாக தான் UMNO Bahagian Papar பிரிவின் தலைவர் Datuk Osu Sukam-ஐ சந்திக்கவுள்ளதாக Datuk Seri Musa Aman தெரிவித்தார்.
உண்மை நிலவரத்தை அறிந்துக் கொள்ளவும் அது தொடர்பாக UMNO தலைவரும் பிரதமருமான Datuk Seri Abdullah Ahmad Badawi தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இந்நடவடிக்கையை தாம் மேற்கொள்ள போவதாக MUSA தெரிவித்தார்.
பணி நிமித்தம் 4 நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு Kota Kinabalu விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
லண்டனில் வசிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
United Kingdom-இல் குறிப்பாக லண்டனில் வசிக்கும் மலேசியர்கள் அங்கு காவல் துறையினரால் புதிதாக பிரப்பிக்கப்படும் ஆணையின்படி நடந்துக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று லண்டனில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பதட்ட நிலை நிலவுவதால் அங்கு வசித்து வரும் மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது சுமார் 11,000 மலேசியர்கள் United Kingdom-இல் வசித்து வருகின்றனர் என்றும் அவர்கள் தங்களது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சின் சிறந்த ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.


9வது மலேசியத் திட்டத்தின் கீழ் பெர்லிஸ் மாநிலத்தில் மேம்பாட்டு பணிகள்
9வது மலேசியத் திட்டத்தின் கீழ் JPS எனப்படும் வடிக்கால் நீர் பாசன இலாகா பெர்லிஸ் மாநிலத்தில் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறது.
8வது மலேசியத் திட்டத்தின் கீழ் அம்மாநிலத்தில் சுமார் 30 லட்சம் செலவில் மேம்பாடு பணிகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும் இம்முறை இந்த மேம்பாட்டு பணிகளுக்காக 270 லட்சம் ரிங்கிட் செலவு செய்யப்படவிருப்பதாகவும் அவ்விலாகாவின் தலைமை இயக்குனர் Datuk Keizrul Abdullah தெரிவித்தார்.
Timah Tasoh எனப்படும் அணைக்கட்டின் மேம்பாட்டு பணிகள், வெள்ளம் வருவதைத் தடுப்பதற்கான பணிகள் உட்பட இதர பணிகளும் இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் கூறினார்.அண்டை நாட்டிலிருந்து பொருட்களைக் கடத்திய கடத்தல்காரர்கள் பிடிப்பட்டனர்
லங்காவியில் Sungai Kisap பகுதியில் சுமார் 999 சிகரெட் பொட்டலங்களையும் 50,000 ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்களையும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் கடற்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அண்டை நாட்டிலிருந்து கடத்தப்படும் பொருட்களைக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இயந்திர படகையும் போலீசார் இந்நடவடிக்கையின் போது கைப்பற்றியதாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த Kedah மற்றும் Perlis மாநில கடற்படை போலீஸ் அதிகாரி Mohamed Salleh Mat Jani தெரிவித்தார்.
கடத்தப்பட்ட பொருட்களை இறக்கி கொண்டிருக்கும் வேளையில் கடத்தல்காரர்களில் இருவர் கடற்படை போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடத்த பொருட்கள் அனைத்தும் மேல் விசாரணைக்காக குடிநுழைவு இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
______________________________________________________________________
ரயிலைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்
அண்மையில் அயோத்தி ராமர் கோவிலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து லண்டனில் சுரங்க ரயில் பாதைகளிலும் பேருந்துகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த இரு சம்பவங்களும் உலக நாடுகளை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தற்பொழுது விழிப்பு நிலையில் உள்ளன.
லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ரயிலை தாக்க கூடும் என்ற அச்சம் தற்பொழுது நிலவி வருகிறது.
இதன் தொடர்பில் பாதுகாப்பு குறித்து ஆராய அங்கு 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
_______________________________________________________________________
சீனாவில் மழைக்கு 65 பேர் பலி
சீனாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழையில் 65 பேர் பலியானார்கள். இன்னும் 30 பே காணவில்லை. சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களை மூழ்கடித்து விட்டன. அங்குள்ள முக்கிய அணைகளும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நிலச்சரிவுகளும் ஆங்காங்கு நிகழ்ந்த வண்ணமாகவே உள்ளது. சுமார் 90 லட்சம் பேர் வீடுகளை இழந்து பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.


பயங்கரவாதத்தை எதிர்த்து அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும்
பயங்கரவாதத்தை எதிர்த்து உலக நாடுகள் இணைந்து போராட வேண்டுமென மன்மோகன் சிங் கூறினார்.பயங்கரவாதம் என்பது ஓர் உலக நடப்பு என்பதை லண்டன் தொடர் குண்டு வெடிப்பு காட்டுகிறது எனவும் கடந்த 20 - 25 ஆண்டுகளாக இக்கொடுமையால் உலக மக்கள் துன்பப் பட்டு கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உலகை விடுவிக்க அனைத்து நாடுகளும் சேர்ந்து ஒரு கூட்டி திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே,சர்வதேச வர்த்தக முறையில் சீர்திருத்தம் செய்தல்,வளரும் நாடுகளுக்கு வளங்களை வழங்குதல்,தொழில்நுட்பங்களை செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆகிய கோரிக்கைகளுக்கு ஜி-4 நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டதாக மன்மோகன் சிங் கூறினார்.

ஈராக்கில் வெடித் தாக்குதல்; 35 பேர் பலி - 39 பேர் காயம்

ஈராக்கில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 35 பேர் பலியாயினர்.ஈராக்கில் சதாம் ஆதரவாளர்கள் கார் குண்டு வெடிப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
பாக்தாத்தில் பழைய விமான நிலையத்தில் இயங்கி வரும் ராணுவ ஆள் சேர்ப்பு மையத்தில் நேற்று, தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்ததில் அங்கிருந்த 32 இளைஞர்கள் உடல் சிதறி பலியாயினர். 39 பேர் படுகாயமடைந்தனர்.
கிர்குக் நகரில் நேற்று கார் குண்டு வெடித்ததில் அப்பாவி மக்கள் மூன்று பேர் பலியாயினர். 10 பேர் படுகாயமடைந்தனர். மேற்கண்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.
____________________________________________________________________
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள்

கடந்த வாரம் லண்டனில் கூடிய சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஒரு நாள் போட்டிகளில் புதிய விதிமுறைகளை பரீட்சார்த்த முறையில் அமல்படுத்த முடிவு செய்தது.அதன்படி, காற்பந்து,ஹாக்கி விலையாட்டுகளைப் போல் கிரிக்கெட்டில் மாற்று ஆட்டக்காரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும்,முதல் 15 ஓவர்களில் 2 வீரர்களை மட்டுமே அரைவட்ட எல்லைக்கு வெளியே நிறுத்துவது என்ற முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு,20 ஓவர்கள் என அதிகரிக்கப்பட்டது.
முதல் 10 ஓவர்கள் பழைய முறையிலும்,2-வது 10 ஓவர்கள் 5 ஓவர்களாக பிரித்து பந்து வீசும் அணி காப்டன் விரும்பும் நேரத்தில் அமல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.இம்முறை 'பவர் ப்ளே' என்று அழைக்கப்பட்டது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி