PDA

View Full Version : என் கொங்கை நின் அன்பர்gragavan
11-07-2005, 07:07 AM
கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன்.

பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!


வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?


வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.


திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.


எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.


சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.


ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது. உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார்.


எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!


இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள்.வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.


நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.


உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.


நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.


எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க


இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?


சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு. "எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம்.


வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?


சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.


அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.


பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?நேராகப் பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான். எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.


அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.


வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.


புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.


சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.


"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.


அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.


பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!


அன்புடன்,கோ.இராகவன்

gragavan
11-07-2005, 07:10 AM
அடக்கொடுமையே....இதுக்கு யாராவது செய்யுங்களேன்.

mania
11-07-2005, 07:17 AM
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே......!!!!:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D :D

பரஞ்சோதி
11-07-2005, 07:24 AM
அண்ணா, காப்பி, பேஸ்ட் செய்யும் போது இது மாதிரி ஆகிறது.

பத்தி பத்தியாக இருந்தாலே ஒழுங்காக படிக்க வராது, இப்படி மொத்தமாக கொடுத்தால் என்ன ஆவது.

gragavan
11-07-2005, 07:41 AM
தம்பி நான் பத்தி பத்தியாகத்தான் எழுதியிருந்தேன். போஸ்ட் செய்யும் பொழுது இப்படி ஆகி விட்டது. நான் என்ன செய்ய முடியும்? பேசாமல் அழித்து விடுகிறேன்.

பரஞ்சோதி
11-07-2005, 07:43 AM
தம்பி நான் பத்தி பத்தியாகத்தான் எழுதியிருந்தேன். போஸ்ட் செய்யும் பொழுது இப்படி ஆகி விட்டது. நான் என்ன செய்ய முடியும்? பேசாமல் அழித்து விடுகிறேன்.

எடிட் செய்து, போஸ்ட் செய்யுங்க அண்ணா.

பத்திகள் உருவாக்குங்கள்.

gragavan
11-07-2005, 07:57 AM
எதில் எடிட் செய்யச் சொல்கிறாய்? இங்கே இட்ட பிறகா? போஸ்ட் பட்டனை அமுக்கும் வரை ஒழுங்காக வருகிறது. அமுக்கிய பிறகுதான் இப்படிக் கோலம். இன்னொரு முறை முயல்கிறேன்.

thempavani
11-07-2005, 08:00 AM
என்னப்பா பேசுறீங்க...ஒண்ணுமே புரியலையே.....

gragavan
11-07-2005, 08:03 AM
அட என்னால முடியலை.

pradeepkt
11-07-2005, 08:03 AM
வேணுமின்னா ரெண்டு ரெண்டு வரி இடைவெளி விட்டுப் பாருங்கள்.
அல்லது நோட் பேடில் திருத்தி இங்கே ஒட்டுங்கள்.
எனக்கு இந்த மாதிரி பல தடவை ஆயிருச்சு.

thempavani
11-07-2005, 08:08 AM
நானும் தங்கள் படைப்பில் இடைவெளி கொடுக்க முயற்சி செய்தேன் ராகவன் அண்ணா... ஆனால் முடியலையே...

gragavan
11-07-2005, 08:11 AM
நானும் ரெண்டு மூணு வாட்டி பார்த்தேன். முடியலை. பிரதீப் சொன்ன மாதிரி...வோர்டுல எழுதியும் ரெண்டு எண்டர் தட்டியும் போட்டேன். ஒன்னும் நடக்கலை.....ஏதாவது பெர்சனல் செட்டிங்ஸ் மாத்தனுமா?

pradeepkt
11-07-2005, 08:45 AM
அப்பன்னா, உதவியாளராலயே முடியலைன்னா...
இதற்குக் காரணம் வெளிநாட்டு சதியா இருக்குமோ?

Iniyan
11-07-2005, 08:52 AM
ராகவன் எடிட் செய்து தேவையான இடங்களில் எண்டர் அடித்து பத்தி உருவாக்கலாமே? நான் இப்போது அதைத் தான் செய்துள்ளேன்.

gragavan
11-07-2005, 09:40 AM
ராகவன் எடிட் செய்து தேவையான இடங்களில் எண்டர் அடித்து பத்தி உருவாக்கலாமே? நான் இப்போது அதைத் தான் செய்துள்ளேன்.
இனியன் நீங்கள் எடிட் செய்த பிறகு நானும் எடிட் செய்து தேவையான இடத்தில் எண்டர் செய்தேன். ஒன்றும் ஆகவில்லை. ஆகையால் கையாலேயே கோட்டுக்குள் பி போட்டு பத்தி செய்ய வேண்டியதுதான். இன்று மாலை செய்கிறேன்.

mania
11-07-2005, 10:01 AM
இந்த கலாட்டாவில் கதை கொஞ்சம் மாறியிருக்கிறதே.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:rolleyes:

gragavan
11-07-2005, 10:08 AM
இந்த கலாட்டாவில் கதை கொஞ்சம் மாறியிருக்கிறதே.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:rolleyes:
அடக் கடவுளே! என்ன மாறியிருக்குன்னு சொல்லீட்டா......சரி பண்ணீர்ரேன்.

mania
11-07-2005, 10:15 AM
அடக் கடவுளே! என்ன மாறியிருக்குன்னு சொல்லீட்டா......சரி பண்ணீர்ரேன்.

;) இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

gragavan
11-07-2005, 10:19 AM
;) இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D
ஓ அதுவா! அது மொதல்ல தப்பா போட்டுட்டேன். அப்புறம் மாத்தீட்டேன். அதான். இப்ப இருக்குறது சரி. ஆனா பத்திகளாப் பிரிக்கனும். மாலைல பிரிக்கிறேன். அப்புறம் படிச்சுட்டு சொல்லுங்க.

thempavani
11-07-2005, 10:19 AM
;) இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

குசும்பு..........

mania
11-07-2005, 10:34 AM
குசும்பு..........

:mad: என்ன குசும்பு.......????? அவனே ஒத்துக்கொள்கிறான்....பிறகென்ன....?:D
அன்புடன்
மணியா....:D

karikaalan
13-07-2005, 07:57 AM
இந்தப் பதிவுக் களேபரத்தில், கதையைப் பற்றிய விமர்சனங்களைக் காணோமே!!;)

எது வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்? வரதனின் கைராசி அல்லது காதலின் வெற்றி? வரதனுக்கு நளபாகம் கைவராமல் இருந்தால் வீரசைவர்கள் ஒப்புக்கொண்டிருப்பார்களா?

பல கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டியிருக்கும் கதை கொடுத்த ராகவன்ஜி, வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

gragavan
13-07-2005, 09:04 AM
கரிகாலன் நல்ல விவாதத்தைப் பிடித்தீர்கள்.

உண்மையில் எதனால் அவர் வைணவராக இருந்தும் சைவராக மதம் மாறிக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டார் என்ற தகவல் இல்லை. இவர் கேட்டார். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்ற மட்டும்தான் தெரியும். கைமண விஷயம் என் கைமணம். ஹி ஹி

வரதன் என்ற பெயர் பெருமாளுக்கும் ஆகும். முருகனுக்கும் ஆகும். ஆகையால் அவர் பெயர் மாற்றமும் செய்ய வேண்டியிருக்கவில்லை.

gragavan
13-07-2005, 09:05 AM
மேலும் இங்கே காதல் வெற்றி பெறுவதற்காக மனிதம் தோற்று விட்டது என்று சொல்ல வேண்டும். காரணம். மதம் மாற வேண்டும் என்று நினைத்ததிலேயே தவறு என்று நான் நினைக்கிறேன். ஏன் வைணவன் சைவப் பெண்ணை மணக்கக் கூடாதா? எப்படியோ எல்லாரும் சந்தோசமாக இருந்தார்கள்.

pradeepkt
13-07-2005, 09:11 AM
எப்படியோ சுபம் போட்டு விட்டீர்கள்.
எதிர்மறையான முடிவுகள் பெரும்பான்மையோரின் ஆதரவை வழக்கமாகப் பெறாது.

mania
13-07-2005, 09:36 AM
;) கதை மாதிரியே தெரியவில்லை எனக்கு......ஏதோ கேள்விப்பட்ட (நானும் அந்த ஏரியால 36 வருடங்கள் இருந்தவன் ) உண்மை சம்பவம் போலவே தோன்றியது......பாராட்டுக்கள் ராகவன்....:)
அன்புடன்
மணியா...:)

gragavan
13-07-2005, 10:04 AM
பாராட்டுகளுக்கு நன்றி மணியா.

kavitha
14-07-2005, 04:01 AM
நகைச்சுவை நெய் ததும்ப படைத்த விருந்து. ஒரு சிறிய ஐயம் அண்ணா.
ஆண்டாள் வைணவப்பெண் இல்லையா? அவள் கண்ணனைத்தானே தரிசித்தாள்?
எனது கூற்று தவறாக இருந்தால், தயவு செய்து விளக்குங்கள்

gragavan
14-07-2005, 04:55 AM
நகைச்சுவை நெய் ததும்ப படைத்த விருந்து. ஒரு சிறிய ஐயம் அண்ணா.
ஆண்டாள் வைணவப்பெண் இல்லையா? அவள் கண்ணனைத்தானே தரிசித்தாள்?
எனது கூற்று தவறாக இருந்தால், தயவு செய்து விளக்குங்கள்கவிதா, ஆண்டாள் வைணவப் பெண்தான். ஆனால் நான் அவரைப் பற்றி எழுதவில்லையே. இது காளமேகப் புலவர் கதை. அவர் மோகனா என்ற பெண்ணை விரும்பினார். மோகனாவோ சைவப் பெண்.

திருவெம்பாவை என்பது மார்கழி மாதத்தில் சிவாலயங்களில் பாடப்படும் பக்திப் பாடல்கள். திருப்பாவை ஆண்டாள் எழுதியது. அவை பெருமாள் கோயில்களில் மார்கழியில் பாடப்படும்.

பாரதி
15-07-2005, 07:25 PM
அன்பு இராகவன்,

உங்களது நடை சிறப்பாக இருக்கிறது. பழைய காலத்தை கண் முன்னர் நிறுத்துகிறது. பாராட்டுக்கள்.

ஆனால் தலைப்பை நீங்கள் இவ்விதம் தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

gragavan
16-07-2005, 04:45 AM
பாரதி, இந்தக் கதையின் மையமே "என் கொங்கை நின் அன்பர் அல்லால்" என்ற திருவெம்பாவை வரிகள்தான். அந்த வரி மோகனாவிற்கு உறுத்தியிருக்கவில்லையென்றால் இத்தனை பிரச்சனையில்லையே. வரதன் சைவமாயிருக்க மாட்டான். பின்னர் காளமேகமும் ஆகியிருக்க மாட்டான். ஆகையால் அதுவே பொருந்தும் என்று எனக்குத் தோன்றியது. உங்களுக்கு வேறு தலைப்பு தோன்றினால் சொல்லுங்களேன்.

பாரதி
16-07-2005, 09:59 AM
கதையை படைப்பவர்களுக்குத்தான் கதைக்கு பெயர் வைக்கும் உரிமையும் சேரும். இந்தக்கதையை படித்ததும் எனக்கு உறுத்தலாக தோன்றியதால் அப்படி சொன்னேன். உண்மையிலேயே வேறு பெயர்கள் எதுவும் தோன்றவில்லையா என்ன...??

Nanban
25-07-2005, 05:38 PM
கொங்கை என்றால் உறுத்தலகாவா இருக்கிறது? இதைவிட வெளிப்படையாகவே இப்போதெல்லாம் பேசுகிறார்கள்.

வரலாறு நன்றாக இருக்கிறது.

புதிதாக தெரிந்து கொண்டேன் - நன்றி,

மன்மதன்
21-08-2005, 05:53 AM
மாம்ஸ்.. தலை சொன்னது மாதிரிதான்.. நன்னா எழுதியுருக்கே... ஏன் இன்னும் எழுதக்கூடாது..
அன்புடன்
மன்மதன்

kiruba_priya
18-11-2005, 11:04 AM
நல்ல கதை!

ஆனா பாருங்கோ... புள்ளையாண்டானும்தான் உருகி உருகி 'நாராயணன' சேவிச்சான். ஆனா புள்ளையாண்டா அத மறந்துட்டானோ? அதெப்படி ம்மனாட்டி குலம் மாற மாட்டா.. ஆம்படா மட்டும் மாற... பெருமாள் கோவிச்சின்டிட மாட்டாரோ?

ஏன்னா நீங்களே பதில் சொல்லுங்க...

gragavan
21-11-2005, 10:33 AM
கிருபா....அப்படியில்லை. பையன் மாறினாலும் மறக்கவில்லை. அவன் அனைத்தும் ஒன்றே என்று அறிந்த அறிவாளி. பின்னாளில் காளமேகமானபின் கந்தனையும், கண்ணனையும் பாடத்தான் செய்தான். பரமனுக்கும் பரந்தாமனுக்கும் வேறுபாடு பார்க்கவில்லை அவன்.

Narathar
12-12-2005, 12:17 AM
நாராயணா!!!!!
இக்கதயில் வம்பிழுக்க நான் தயார் இல்லை
ரகவனுக்கு பாராட்டுக்கள்

gragavan
12-12-2005, 03:52 AM
என்ன நாரதரே! இத்தனை நாட்கள் கழித்து பஜனை பாடுகின்றீர்கள்!

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

red_block
23-04-2006, 06:27 PM
எதை எழுதனும் சொன்னீங்கன்னா தேவலை

gragavan
24-04-2006, 04:50 PM
என்ன கேக்குறீங்க ரெட் பிளாக்? புரியலையே.....

மயூ
10-05-2006, 04:10 AM
கதையை வாசிக்கும்போது பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவன் சிவனையும் பிரமாவையும் சமமா என அறிய விரலரல் அளந்து பார்த்ததாக சொல்வார் அதுதான் ஞாபகம் வருகின்றது.:D

gragavan
10-05-2006, 04:40 AM
ஆமாம் மயூரேசன். எனக்கும் நீங்கள் சொன்னதும் நினைவிற்கு வருகிறது.

vckannan
31-07-2006, 12:09 PM
கவிகாளமேகத்தின் கதைய ? மோகனா நாட்டியமும் அறிந்தவள் என்று கேள்வி.

நல்ல கதை சொற்திறன் உங்களுக்கு ..வாழ்த்துக்கள்

செல்வா
05-02-2008, 09:09 PM
அண்ணன் இராகவன் தனது நடையில் எழுதி கலக்கிய கவி.காளமேகத்தின் கதையை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது ..... அவரது கதை சொல்லும் திறமைக்கு..... நான் அடிமை.... எல்லோரும் வாசிக்கும் படி மேலெழுப்புகிறேன்...

இளஞ்சூரியன்
08-02-2008, 02:05 PM
செல்வாவிற்கு மிக்க நன்றிகள். இனிய ஒரு சம்பவத்தை கட்டுக் குலையாமல் அழகு தமிழில் படைத்த graghavanக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

prady
19-02-2008, 01:16 AM
பொதுவாக யுனிகோடில் இப்படியான ஸ்பேஸ் பிரச்சனைகள் வருவதுண்டு. shift கீயுடன் என்டர் விசையை தட்டிப்பாருங்கள்.

அக்னி
19-02-2008, 01:35 AM
பொதுவாக யுனிகோடில் இப்படியான ஸ்பேஸ் பிரச்சனைகள் வருவதுண்டு. shift கீயுடன் என்டர் விசையை தட்டிப்பாருங்கள்.
நண்பரே...
நீண்ட காலத்திற்கு முன்னர் நடந்த பிரச்சினைக்கு இப்போது தீர்வு கூறுகின்றீர்களே.
ஒருவேளை இப்போதும் உங்களுக்கு இந்தப் பதிவு சாதாரணமாகத் தெரியவில்லையா?
அப்படியானால், குறிப்பிடுங்கள்.
நண்பர்கள் உதவிடுவார்கள்.

யவனிகா
19-02-2008, 04:58 AM
செல்வா...உங்களைத்தான் பாராட்ட வேண்டும்...மேலெப்பியதற்கு...

அருமையான நடை...வார்த்தைப் பிரயோகம் தூள்...கருவும் அற்புதம்.முடிவில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க்கலாம். நாமெல்லாம் மன்றம் வரும் சமயம் ராகவன் போன்ற எழுத்தாளர்கள் எங்கே மறைந்து போயினர் என்று தெரியவில்லை. ஆகக் கூடி இழப்பு நமக்குத்தான்.

இன்னும் நல்ல கதைத்திரிகள் மேலெழும்பினால் நன்றாக இருக்கும்.

இளசு
19-02-2008, 07:05 AM
வரதனின் கைமணமா? ராகவனின் கைமணமா?

எது வென்றது என விவாதிக்கலாம் போல...

ஒவ்வொரு வரியிலும் தமிழ் சிந்து விளையாட..
காளமேகம் வாசித்தால் உளம் பூரிப்பார்!

மெலெழுப்பிய செல்வாவுக்கு நன்றி..

யவனிகா, ராகவன் அவ்வப்போது வந்து கதைகள் படைக்கிறார்.
(இன்னும் அவரின் சில தொடர்களை வாசிக்க சரியான நேரம் அமையாமல் தள்ளிப்போட்டபடி நான்..

நொறுக்குத்தீனி, துரித உணவுகளை நின்றபடி சுவைக்கும் பழக்கம்..
இதுபோன்ற விருந்தை ஆர அமர அருந்த - அவகாசம் அதிகம் இருக்கும் பொழுதுகள் தேவை... ஆனால் அரிதாய்...

ஈர விறகாய் மனம்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14530 )

சாம்பவி
19-02-2008, 09:26 AM
தலைப்பு
தொக்கி நிற்பதால்
அர்த்தமே
அனர்த்தமாகி
நல்லதொரு கதையை
படிக்கவொண்ணாது
இத்தனை நாள்
தடுத்ததே.. !

மேற்பார்வையாளர்கள் உதவலாமே.. !

அக்னி
19-02-2008, 04:29 PM
மேற்பார்வையாளர்கள் உதவலாமே.. !
எப்படி என்று சொன்னால், உரிமையாளரின் அனுமதியோடு மாற்றியமைக்கலாம்.

இளசு
19-02-2008, 08:23 PM
அக்னி, சாம்பவி

இதற்கு முடிவு சொல்ல ராகவன் வரவேண்டும்.

இத்தலைப்பைப்பற்றி பாரதி, ராகவன்,நண்பன் மேலே கருத்தாடியிருக்கிறார்கள்..

தலைப்பு வைப்பது ஆசிரியர் உரிமை.
(எனக்குத் தனிப்பட்ட முறையில் இத்தலைப்பு ரசிக்கவில்லை என்பது வேறு..)

சாம்பவி சொல்லும்படி தலைப்பை நீட்டினால்... எதுவரை நீட்டுவது?

.என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க...- இதுவரையா?

ராகவன் கருத்தே இதில் முக்கியம்.. காத்திருக்க என் ஆலோசனை..

( என் விருப்பம் - நின் அன்பர் அல்லார் தோள் சேர?!)