PDA

View Full Version : ஜூலை 11, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
11-07-2005, 12:52 AM
Meru-NKVE அடுக்குமாடி பாலம் சரிந்தது
Shah Alam, Bukit Raja அருகே கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த Meru-NKVE அடுக்குமாடி நெடுஞ்சாலை பாலம் சரிந்து விழுந்ததில் பத்து பணியாளர்கள் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று மதியம் 1.40 மணி அளவில் ஏற்பட்டதாகவும், காயமுற்றவர்கள் அனைவரும் இந்தோநிசிய மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என Shah Alam போலிஸ் தலைவர் ACP Abdul Wahab Embong தெரிவித்தார்.
மேலும் இப்பாலம் சரிந்து, கீழே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது விழுந்ததாகவும், ஆனால் அவ்வாகனமோட்டி அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமுமின்றி உயிர் தப்பினார் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது அப்பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், இதனால் Bukit Raja மற்றும் Shah Alam toll சாவடிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.

எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம்
உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் அதிகரித்து வருவதை தொடந்து, கூடிய விரைவில் மலேசியாவிலும் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என பிரதமர் துறையின் அமைச்சர் Datuk Mustapa Mohamed செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் இன்னும் அதிகரிப்பு கண்டால், அரசங்கம் உடனடியாக இதனை ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இவ்விலை ஏற்றத்தை தொடர்ந்து, அரசாங்கம் தொடர்ந்து எண்ணெய் மான்யம் வழங்காது என அறிவித்துள்ளது.

இதனிடையே, Petronas நிறுவனத்தின் வழி நாட்டிற்கு சுமார் 25 விழுக்காடு லாபம் ஏற்படுவதாகவும், அவற்றை அரசாங்கம் எண்ணெய் மான்யத்துக்கு பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு ank Wanita எனும் புதியதிட்டம்
நாட்டில் சமூகம், குடும்பம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையின் அமைச்சு, Bank Wanita எனும் புதியதிட்டத்தை உறுவாக்க உள்ளதாகவும், இத்திட்டம் குறித்த மனுக்களை பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-யிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இப்புதிய திட்டத்தினை, அடுத்த வாரம் பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அத்துறையின் அமைச்சர் Datuk Seri Shahrizat Abdul Jalil, புத்ரா உலக வாணிப மையதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூன்று நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து நாடுகளிளிருந்தும் சுமார் 400 பேராளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Securiforce ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
கடந்த திங்கள்கிழமை Baling-இல் சாலை விபத்தில் மரணமுற்ற இரண்டு Securiforce காவல் நிறுவனத்தின் ஊழியர்களின் குடும்பத்தினர்களுக்கும், மேலும் அச்சம்பவத்தில் காயமுற்ற இரண்டும் காவல் ஊழியர்களின் குடும்பத்தினர்களுக்கும் Securiforce நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Datuk Maznah Hamid இழப்பீடு கொடுத்தார்.
மரணமுற்ற அவ்விரு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு Securiforce காப்புறுதி பணமாக தலா 30,000 அயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வழங்கப்பட்ட இவ்விழப்பீடு பணத்தின் தொகை சிறிய அளவில் இருந்தாலும், அது அவர்களின் குடும்பத்தினர்களுக்கு பேருதவியாக அமையும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, Securiforce காவல் நிறுவனத்தின் சார்பில் அவர் அவ்விரு குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
அடுக்குமாடி வீட்டில் தீ
பினாங்கு Taman Free அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 30 வயது ஆடவர் ஒருவர் மரணமுற்றார் என Jalan Perak தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி Idris Abdullah தெரிவித்தார்.
இத்தீச்சம்பவம் ஏற்படும் பொழுது அவ்வீட்டில் அவ்வாடவர் மட்டும் தனியாக இருந்தார் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, ஐந்து தீயணைப்பு வண்டிகளும். முப்பது தீயணைப்பு வீரர்களும் அவ்விடத்துக்கு விரைந்த்தாக அவர் கூறினார்.

சில நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் கிண்ண GOLF போட்டியில் பிரதமர்
பிரதமர் கிண்ண GOLF போட்டியில் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi நேற்று கலந்துக் கொண்டார்.
Bukit Kiaraவில், மலேசிய GOLF கழக பொது சேவை மையத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் தேசிய தலைமை செயலாளர், Tan Sri Samsudin Osman, தேசிய அமைச்சுகளின் செயலாளர்கள், அரசு இலாகாக்களின் நிர்வாகிகள், தொழிற்துறை நிர்வாகிகள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
சமூக சேவை மையத்திற்கு நிதி திரட்டவும், அரசு மற்றும் தனியார் துறையினரிடையே நல்லுறவை வளர்க்கும் இப்போட்டி நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் புதிய ரக ஷேவர்
இந்தியாவில் குறைந்த வருவாய் பிரிவினரை கவர்வதற்கான நடவடிக்கையில் பூல்லட் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, "ட்வின் பிளேடு ரெடி ஷேவர்' என்ற புதிய வகை ஷேவரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஷேவிங் பொருட்களின் மார்க்கெட் குறித்து பூல்லட் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில், 70 சதவீதம் பேர் தங்களது ஷேவிங் ரேசர்களின் தரத்தை உயர்த்த நினைக்கின்றனர்.
ஆனால், அவற்றின் விலை காரணமாக சாதாரண ரேசர்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால், குறைந்த வருவாய் பிரிவினரை கவர்வதற்கான நடவடிக்கையில் தற்போது இறங்கி உள்ளோம். இதற்காக "ட்வின் பிளேடு ரெடி ஷேவர்' என்ற புதிய வகை ஷேவரை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இப்புதிய ஷேவர் "வில்கிங்சன் ஸ்வார்டு' பிராண்ட் பெயரில் விற்கப்படும்.

தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
லண்டனில் குண்டு வைத்து 52 பேரை பலிவாங்கிய தீவிரவாதிகளை உலகம் முழுவதும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
லண்டன் குண்டு வெடிப்பிற்கு அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு நேற்று மூன்றாவதாக இணைய தளத்தில் பொறுப்பேற்றது.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 பேர் பலியாயினர். அவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்தன. காயமடைந்த ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்
இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் மற்ற நாடுகளையும் தாக்குவோம் என தீவிரவாதிகள் இணையம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில், லண்டனுக்கு அடுத்த பெரிய நகரம் BIRMINGHAM ஆகும். இந்நகரிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக SCOTLAND போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதை தொடர்ந்து,அந்நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
142 சந்தேகத்திற்குரிய நபர்களை இத்தாலி அரசு கைது செய்தது
லண்டனில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் விழித்துக்கொண்ட உலக நாடுகளில் இத்தாலியும் விதிவிலக்கல்ல.
142 சந்தேகத்திற்குரிய நபர்களை இத்தாலி அரசு கைது செய்துள்ளது. 2 நாள் அதிரடி சோதனை நடவடிக்கை நடத்திய இத்தாலி போலீசார் கைது செய்த அந்நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோ ர் சட்டவிரோத குடியேறிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டது.பொது போக்குவரத்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்தி போராட்டம்
நேபாளத்தில் MAOIST தீவிரவாதிகள் மன்னராட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.தீவிரவாதிகளுக்கும் நேபாள இராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில்,நேபாளத்தின் MAOIST தீவிரவாதிகளுக்கு இலங்கையின் விடுதலைப்புலிகள் ரகசிய பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில், பீகார் மாநிலத்திலும் இந்த ரகசிய பயிற்சி முகாம்கள் இருப்பதாக WASHINGTON-லிருந்து வெளியாகும் ஒரு நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

FORMULA 1 கார் பந்தயத்தில் நரேன் கார்த்திகேயன்
FORMULA 1 கார் பந்தயத்தின் பதினோறாவது சுற்றுப் போட்டி பிரிட்டனில் நேற்று நடைபெற்றது. இதில் அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கினார் தமிழக வீரர் நரேன் கார்த்திகேயன்.
FORMULA 1 கார் ரேசில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரான நரேன், ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்சில் துவங்கி பத்து ரேஸ்களை முடித்து விட்டார்.
நேற்று சில்வர் ஸ்டோ ன் சர்கியூட்டில் நடக்கும் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் ரேசில் தனது பதினேறாவது சவாலை சந்திக்க இருக்கிறார்.இதுவரை நடந்த ரேஸ்களில் அமெரிக்க கிராண்ட் பிரிக்சில் மட்டுமே நரேன் அதிகபட்சமாக நான்காவது இடம் பெற்றுள்ளார்.
இம்முறை இவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பயிற்சிப் போட்டியில் இவர் போட்டி தூரத்தை 1 நிமிடம் 24.581 வினாடிகளில் கடந்து 17வது இடம் பெற்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்.

மனோ.ஜி

அறிஞர்
11-07-2005, 02:19 AM
நரேன் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்...
நன்றி மனோஜி

pradeepkt
11-07-2005, 04:17 AM
செய்திகளுக்கு நன்றி மனோ. ஜி.