PDA

View Full Version : ஜூலை 10, ஞாயிற்றுக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
10-07-2005, 02:44 AM
யெஸ்லாம் பின்லாடன் வருத்தம் தெரிவித்தார்

லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் தம்பி யெஸ்லாம் பின்லாடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் தம்பியும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வர்த்தகரும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பாளருமான யெஸ்லாம் பின்லாடன் லண்டனில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கேட்டு தான் மிகுந்த வருத்தம் அடைவதாகவும் அனைத்து வகையான வன்முறைகளும் முழுமையா அகற்றப்பட வேண்டும் எனவும் லண்டன் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

யெஸ்லாம் பின்லாடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெனிவாவில் வசித்து வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போதும் இவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் நிலையங்களின் மீது கடும் நடவடிக்கை
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த செவ்வாய்கிழமை வரையில் diesel எண்ணெய் விற்பனையில் மோசடி செய்ததற்காக சுமார் 72 எண்ணெய் நிலையங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சர் Datuk Shafie Apdal தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலையங்களிடமிருந்து 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள diesel எண்ணெயை பறிமுதல் செய்ததாகவும், மேலும் அந்நிலையங்களுக்கு 79,650 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எண்ணெய் நிலையங்களை காட்டிலும் தொழிற்சாலை பகுதிகளில் diesel எண்ணெய் அதிக விளையில் விற்பதால் இது போன்ற மோசடிகள் ஏற்பட முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எண்ணெய் நிலையங்களின் நிர்வாகிகள், தத்தம் எண்ணெய் நிலையங்களை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அவர் அறிவுறை கூறினார்.

கோத்தா கினாபாலுவில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கைகள்
கோத்தா கினாபாலுவில் குற்றச்செயல்களை தடுக்க நான்கு கிராமப்புரங்களில் போலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் 79 பேர்களை கைது செய்துள்ளதாக அம்மாவட்ட போலிஸ் தலைவர் ACP Azizan Abu Taat தெரிவித்தார்.

அச்சோதனைகள் Kampung Bakau, Kampung Suluk, Kampung Cenderamata மற்றும் Kampung Sembulan-இல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பலர், போதை உட்கொள்ளும் பழக்கமுடையவர்கள் மற்றும் கள்ளக்குடியேரிகள் என அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, இது போன்ற அதிரடிச் சேதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் எனவும், இதன் வழி அவ்வட்டாரங்களில் ஏற்பட்டு வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

5 கிலோகிராம் எடைக்கொண்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது
கோலாலம்பூர் Jalan Klang Lama, 2-வது மைலில் போலிஸார் மேற்கொண்ட சோதனையில் மூன்று லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஐந்து கிலோகிராம் எடைக்கொண்ட போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

இச்சமபவத்தின் தொடர்பில் போலிஸார் 30 மற்றும் 35 வயதுடையே இரண்டு ஆடவர்களை கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் போதை தடுப்பு இலாகாவின் தலைவர் ACP Othman Harun தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அனைத்து கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் விநியோகிக்க வைத்திருந்ததாக விசாரனையின் வழி தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைத்துலக போதை வினியோக கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புவதாக அவர் செய்தியார்களிடம் கூறினார்.

Datuk Seri Syed Razak Syed Zain umno பொது கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது
மோசமான உடல்நிலை காரணமாக அடுத்த வாரம் நடைப்பெறவிருக்கும் umno பொது கூட்டத்தில் Kedah Menteri Besar Datuk Seri Syed Razak Syed Zain கலந்துக் கொள்ள முடியாதது ஏற்கத்தக்கதாகும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.

Kedah Menteri Besar Datuk Seri Syed Razak Syed Zain-ரின் உடல்நிலை தேறும்வரை,தகுந்த ஒருவர் அவரது அரசு பணிகளை மேற்கொள்வார் எனவும் Syed Razak உயர் இரத்தக் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண், பெண் பாகுபாடு இல்லாத கல்வி தேவை
ஆண், பெண் பாகுபாடு இல்லாத கல்வி ஆகியவை நாகரிகம் அடைந்த எந்த சமுதாயத்துக்கும் தேவை. இந்தியாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி எடுத்துள்ளது.

கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூட கல்விக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.தொடக்க மற்றும் உயர்நிலை அளவிலேயே கல்வியைத் தரமுள்ளதாக வழங்க வேண்டும் என்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது.

தரமுள்ளதாக மட்டுமல்லாமல், சிறுவர் சிறுமி பாகுபாடு இல்லாமல் கல்வி வழங்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கல்வித் துறையில் ஆண், பெண் வேறுபாட்டை முற்றிலும் ஒழிக்காமல், எந்த நாடும் மேம்பாடு அடைய முடியாது எனவும் அக்கூட்டணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன
தொடர் குண்டுவெடிப்பு பீதியிலிருந்து லண்டன் மக்கள் இன்னும் விலகவில்லை.எனினும்,வர்த்தக நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன.ஊழியர்கள் அதிகளவில் பணிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஹெலிகாப்டரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.லண்டனில் நேற்று முன்தினம் காலை 4 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடந்தது.

பணிக்குச் சென்று கொண்டிருந்த பலர் பலியாயினர்.700-க்கும் மேற்பட்டோ ர் படுகாயம் அடைந்தனர்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில்,தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

பிலிப்பைன்ஸ் அதிபர் GLORIA-வை பதவி விளக்க போராட்டம்
பிலிப்பைன்ஸ் அதிபர் GLORIA கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை பதவி விளக்கக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

அவரது மந்திரிகள் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டது.நெருக்கடியை சமாளிக்க தனது மந்திரிகள் அனைவரையும் ராஜினாமா செய்ய அதிபர் GLORIA உத்தரவிட்டார்.
அதன்படி இதுவரை 10 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.அந்த மந்திரிகள் GLORIA-விற்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 1 நாள் தொடரின் முதல் போட்டியில் கிடைத்த படுதோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ளார் Australia Kapten Rikky Panding.
AUSTRALIA KRIKET அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்துள்ளது.அவர்களுக்கு இங்கு கிடைக்கும் முடிவுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை.
தொடர்ச்சியாக வென்றுக் கொண்டிருந்த அந்த அணிக்கு இங்கிலாந்து மண்ணில் நிறையத் தோல்விகள் ஏற்பட்டன.முத்தரப்பு 1 நாள் தொடர் இறுதிப் போட்டியில்கூட, இங்கிலாந்துடன் இணைந்து கோப்பையைப் பகிர்ந்து கொள்ளத்தான் முடிந்ததே தவிர ஜெயிக்க இயலவில்லை.

தமிழக வீரர் HEMANG PATHANI கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்
இந்திய kriket வீரர்களுக்கான பயிற்சி முகாம் BANGLORE-இல் நடக்கிறது.
இலங்கையில் நடக்கவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான உத்தேச அணி வீரர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். தமிழக வீரர் HEMANG PATHANI-யும் தீவிரமாக பயிற்சி செய்கிறார்.
இருப்பினும்,இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் இதுவரை இல்லை.

AFRIKA மற்றும் ASIA லெவன் அணிகளுக்கு இடையிலான KRIKET போட்டி
AFRIKA மற்றும் ASIA லெவன் அணிகளுக்கு இடையிலான 1 நாள் தொடருக்கு சர்வதேச KRIKET COUNCIL அங்கீகாரம் வழங்கியது.விளையாட்டு உணர்வுகளை வளர்க்கும் வகையில் AFRIKA மற்றும் ASIA கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டன.
இதன் அடுத்தகட்டமாக,இவ்விரு கண்டங்களில் உள்ள KRIKET அணிகளுக்கு இடையே போட்டி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

நன்றி வணக்கம் மலேசிய.காம்

மனோ.ஜி

pradeepkt
10-07-2005, 04:59 PM
பின்லாடனின் தம்பியை மட்டும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களா?
அவர் தீவிரவாதத்திற்கு எதிரான நிலை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
பூமிப் பந்தின் வாழ்நாளைக் குறைக்கும் தீவிரவாதம் எந்த நிலையிலும் எதிர்த்து அழிக்கப் படவேண்டியது.