PDA

View Full Version : சிறு மாற்றங்கள்..

இராசகுமாரன்
09-07-2005, 01:27 PM
நண்பர்களுக்கு தற்போது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் "ஸ்மைலி" பிரச்சனையை தீர்க்க நாளை அல்லது நாளை மறுநாள், நமது மன்ற மென்பொருளை புதுப்பிக்கிறேன். அதனால் சில நிமிடங்கள் அல்லது அதிக பட்சம் 1 மணி நேரம் இயங்காமல் போகலாம் அல்லது தடங்கல்கள் வரலாம். அதை நண்பர்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி..

இராசகுமாரன்
10-07-2005, 04:05 PM
நண்பர்களே... வேலை முடிந்து விட்டது.

இனி எங்கும் ஸ்மைலி பாப்பாவை தேவையில்லாமல் காண மாட்டீர்கள் என நம்புகிறேன்.

வேறு ஏதாவது தடங்கல்கள் வந்தால் தெரிவிக்கவும் நன்றி

சுவேதா
10-07-2005, 05:15 PM
நன்றி அண்ணா!

aren
11-07-2005, 12:38 AM
ஸ்மைலி தேவையில்லாமல் வந்து தொந்திரவு கொடுத்துக்கொண்டிருந்தது. இனிமேல் அந்த பிரச்சனையில்லை.நன்றி வணக்கம்ஆரென்

அறிஞர்
11-07-2005, 01:52 AM
ஸ்மைலிஸ் பிரச்சனை தீர்க்கப்பட்டது குறித்து சந்தோசம்.
எடிட் பகுதி புதிதாக இருப்பது குறித்து சந்தோசம்.

பிரியன்
11-07-2005, 03:57 AM
நன்றி ராசகுமாரன்..

pradeepkt
11-07-2005, 04:21 AM
மிக்க நன்றி இராசகுமாரன்.
இப்போது நாங்கள் பிராக்கெட்டை இடைவெளி இல்லாமல் போடலாமா? (பிராக்கெட்டு)

gragavan
11-07-2005, 06:39 AM
ஆனா நம்ம பதியும் பொழுது new lineக்கு enter தட்டுனா வர மாட்டேங்குது. தொடர்ந்து இடவெளியில்லாம வருது.முதல் வரிஇரண்டாம் வரிமூன்றாம் வரி

இராசகுமாரன்
11-07-2005, 06:56 AM
அப்படியா?
அப்படி ஒன்றும் தெரியவில்லையே?
எனக்கு சரியாக வருகிறது. மேலே உள்ளவர்களும் சரியாக இரண்டாவது வரிக்கு வந்துள்ளார்களே!

பழைய செட்டிங் மாறாவிட்டால் ஏதும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு, Ctrl+F5 செய்யுங்கள், அல்லது Cache + cookies clear செய்து பாருங்கள்.

ஆனா நம்ம பதியும் பொழுது new lineக்கு enter தட்டுனா வர மாட்டேங்குது. தொடர்ந்து இடவெளியில்லாம வருது.முதல் வரிஇரண்டாம் வரிமூன்றாம் வரி

பிரியன்
11-07-2005, 07:02 AM
கமா போட முடியவில்லை. அது மிகவும் தொந்தரவாய் இருக்கிறது

gragavan
11-07-2005, 07:45 AM
அப்படியா?
அப்படி ஒன்றும் தெரியவில்லையே?
எனக்கு சரியாக வருகிறது. மேலே உள்ளவர்களும் சரியாக இரண்டாவது வரிக்கு வந்துள்ளார்களே!

பழைய செட்டிங் மாறாவிட்டால் ஏதும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு, Ctrl+F5 செய்யுங்கள், அல்லது Cache + cookies clear செய்து பாருங்கள்.
நீங்கள் சொன்னதைச் செய்து விட்டேன். இப்பொழுது வருகிறதா என்று பார்க்கலாம்.முதல் வரிஇரண்டாம் வரி

gragavan
11-07-2005, 07:46 AM
இல்லை இராசகுமாரன். நீங்கள் சொன்னதும் பலிக்க வில்லை. இனிமேல் என்னுடைய படைப்புகளை நான் போட முடியாது போல.

pradeepkt
11-07-2005, 08:05 AM
இல்லை இராசகுமாரன். நீங்கள் சொன்னதும் பலிக்க வில்லை. இனிமேல் என்னுடைய படைப்புகளை நான் போட முடியாது போல.
ஏன்யா இப்படி அபசகுனமா பேசுறீங்க? :D
ரெண்டு ரெண்டு எண்டர் தட்டிப் பாருங்க. வரும்.

gragavan
11-07-2005, 08:13 AM
ஏன்யா இப்படி அபசகுனமா பேசுறீங்க? :D
ரெண்டு ரெண்டு எண்டர் தட்டிப் பாருங்க. வரும்.
வேற என்ன செய்யன்னு தெரியலை. அதனால சொன்னேன். ரெண்டு என்ன மூணு வாட்டி கூட தட்டிப் பாத்துட்டேன். வரலையே!

இராசகுமாரன்
12-07-2005, 04:44 AM
இல்லை இராசகுமாரன். நீங்கள் சொன்னதும் பலிக்க வில்லை. இனிமேல் என்னுடைய படைப்புகளை நான் போட முடியாது போல.

உங்களைப் போல நல்ல பங்காளரை நாங்கள் இழக்க முடியுமா? நிச்சயமாக உங்களுக்கு தீர்வு விரைவில் கிடைக்கும்.

என்ன Operating System,
என்ன Browser (with version) உபயோகிக்கிறீர்கள்
என கூறமுடியுமா?

gragavan
12-07-2005, 09:09 AM
உங்களைப் போல நல்ல பங்காளரை நாங்கள் இழக்க முடியுமா? நிச்சயமாக உங்களுக்கு தீர்வு விரைவில் கிடைக்கும்.

என்ன Operating System,
என்ன Browser (with version) உபயோகிக்கிறீர்கள்
என கூறமுடியுமா?நன்றி இராசகுமாரன். இன்றைக்கு எல்லாம் ஒழுங்காய் வேலை செய்கிறது. கணிணியை மறுதொடக்கம் செய்ததால் இருக்குமோ!

பிரியன்
12-07-2005, 10:53 AM
காற்புள்ளி (கமா) போட முடியவில்லை. என்ன செய்வது. பல இடங்களில் இது மிகவும் தொந்தரவாய் இருக்கிறது.

இராசகுமாரன்
13-07-2005, 04:37 AM
கமா போட முடியவில்லை. அது மிகவும் தொந்தரவாய் இருக்கிறது

இப்போது சரியாகி இருக்குமே!
முடிந்தால்,,,,, விடுமுறையில் போகுமுன்,,,, பரிசோதித்துவிட்டு செல்லுங்கள்.
பயணம் இனிதாக வாழ்த்துக்கள்,.,.,.

பிரியன்
13-07-2005, 06:05 AM
இப்போது சரியாகி இருக்குமே!
முடிந்தால்,,,,, விடுமுறையில் போகுமுன்,,,, பரிசோதித்துவிட்டு செல்லுங்கள்.
பயணம் இனிதாக வாழ்த்துக்கள்,.,.,.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ராசகுமாரன்,,,,,, இல்லையே. மறுபடியும் முற்றுப்புள்ளிதானே வருகிறது

gragavan
13-07-2005, 10:18 AM
தங்கள் வாழ்த்துக்கு நன்றி ராசகுமாரன்,,,,,, இல்லையே. மறுபடியும் முற்றுப்புள்ளிதானே வருகிறதுபிரியன் உங்கள் பதிவில் நான் காற்புள்ளிகளைப் பார்க்கிறேன். ராசகுமாரனுக்கு அடுத்து ஆறு காற்புள்ளிகள் போட்டிருக்கின்றீர்கள். சரிதானெ!

பிரியன்
13-07-2005, 10:55 AM
அப்ப எனக்கு மட்டும் ஏன் முற்றுப்புள்ளியாகத் தெரிகிறது.

gragavan
13-07-2005, 01:15 PM
அப்ப எனக்கு மட்டும் ஏன் முற்றுப்புள்ளியாகத் தெரிகிறது.ஒருவேளை நீங்கள் எழுத்துரு அளவைக் கூட்டிப் பாருங்கள். தெரிந்தாலும் தெரியலாம்.

மன்மதன்
13-07-2005, 01:39 PM
ஸ்மைலீ பிரச்சனைக்கு தீர்வு கண்டதற்கு நன்றி நண்பரே..
அன்புடன்
மன்மதன்