PDA

View Full Version : பேசும் காற்று.



RRaja
09-07-2005, 11:16 AM
அருவியின் அலசலில்
நீரோடையின் சலசலப்பில்
வாய்க்கால் நாணல்களில்
வாரிப்போடும் மணலில்
மிதமாகவோ
மதமாகவோ
தெரியாமல் பேசும்
காற்று...
என்னைப் போலவே!

.....

karikaalan
09-07-2005, 11:21 AM
ராஜா ஜி

காற்றுக்கவிதை நல்லாவே இருக்குது. காற்றுக்கும் மதம் பிடிக்குமோ! அப்படிப்பிடித்தால், பிறகு எவ்வாறு அது உங்களைப்போல்!!

===கரிகாலன்

பிரியன்
09-07-2005, 11:30 AM
அட்டகாசமான கவிதை மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். தேர்ந்த நடை கவிதையில் தெரிகிறது. தொடர்ந்து கவிதைகளைத் தாருங்கள்

பரஞ்சோதி
09-07-2005, 12:14 PM
அருமையான கவிதை, பாராட்டுகள்.

இனி கவிமழை பொழியும் என்ற நம்பிக்கையில் பரம்ஸ்

pradeepkt
09-07-2005, 02:19 PM
நல்ல அறிமுகம்.
மிதம், மதம் என்று விளையாடி இருக்கிறீர்கள்.
இன்னும் நிறைய எழுதுங்கள்.

அறிஞர்
11-07-2005, 02:10 AM
வாழ்த்துக்கள் ராஜா.. நல்ல கவிதை...
இன்னும் எழுதுங்கள்...

vinmeenj
11-07-2005, 07:59 AM
அருமையான கவிதை ராஜா... பாராட்டுக்கள்

Mano.G.
13-07-2005, 10:32 AM
காற்றோடு பேசிய கவிஞரே
உங்கள் கவிதை அருமை
மேலும் பல கவிதைகள்
படைக்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி

gragavan
13-07-2005, 12:53 PM
ராஜா கவிராஜா. அருமை. அருமை.

காற்று மெல்லப் பேசும் போதுதான் உங்களைப் போல.

கரிகாலன் சொல்லியது போல காற்று வீசித் தள்ளினால்?

அது மதமில்லை கரிகாலன். அது அதம். அழிவு.

சுவேதா
28-07-2005, 02:56 AM
ராஜா அண்ணா கவிதை சூப்பர்!
வாழ்த்துக்கள்!

பிரசன்னா
09-09-2005, 06:26 PM
அட்டகாசமான கவிதை

மன்மதன்
10-09-2005, 05:48 AM
நல்ல கவிதை...