PDA

View Full Version : ஒரு கணணியின் திரையில் இருக்கும்

jasmin
09-07-2005, 10:13 AM
எனது ஆபிசில் அனைத்து கணணியையும் network (Local Area Connection) மூலம் இனைத்துயிருக்கிறார்கள்.அதில் ஒரு கணணியின் திரையில் இருக்கும் + தற்போது வேலைசெய்யும் அனைத்தும் எனது கணணியில் தெரிய (திரையில் ) என்ன செய்யவேண்டும். அனைத்து கனிணியும் OS XP.

அறிஞர்
09-07-2005, 10:30 AM
ஜாஸ்மின் தங்கள் டைப்பிங்கை சரிபாருங்கள்... திஸ்கியில் அடிக்கிறீர்கள்.. யுனிகோடிற்கு மாறுங்கள்...

baranee
09-07-2005, 01:59 PM
ஜாஸ்மின் , உங்கள் கேள்வியை கொஞ்சம் தெளிவாக கேட்டால் பதில் கூற எளிதாக இருக்கும்.

அன்புடன்
பரணீ

jasmin
11-07-2005, 04:08 AM
தற்போது நான் எழுதியிருப்பது தெரிகிறதா?
1 - எனது அபிசில் சுமார் 10 கணணி இருக்கிறது. அனைத்து கணணியும் இனைத்து இருக்கிறார்கள் (Local Area Connection) அதனால் மற்ற கணணியி Sharing செய்து இருக்கும் file - லை மட்டும் தான் பார்க்க முடியும்.
2 - எனது கணணியின் மூலம் (உதா: தற்போது டைபிஸ்ட் என்ன செய்கிறார், கணணியில் படம் பார்க்கிறாற? அல்லது வலையில் அலைகிறார என்பதை கன்காணிக்க) அவர் திரையில் அனைத்தும் அதே நேரத்தில் நமது திரையிலும் தெரிய வேண்டும்.
தற்போது எனக்கு என்ன தேவை என்பது தெரிகிறாத நண்பா !
அன்புடன்
ஜாஸ்மின்

pradeepkt
11-07-2005, 04:23 AM
அதற்கென்றே நெட் மீட்டிங் போன்ற மென்பொருள்கள் இருக்கின்றன.
நீங்கள் நேரடியாகவும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். அல்லது சும்மா ஒரு திரை வழியாக அவர் என்ன செய்கிறார் என்பதை மட்டும் பார்க்கலாம். ஆனால் அது மற்றவருக்குத் தெரியாமல் செய்ய இயலாது. ஏனென்றால் ரிமோட் கண்ட்ரோல் கீழே சிஸ்டம் டிரேயில் தெரியும்.

baranee
11-07-2005, 01:20 PM
ஜாஸ்மின், உங்கள் அலுவலக கணணிகளுக்கு நீங்கள்தான் நிர்வாகியா ?

சுவேதா
11-07-2005, 02:07 PM
எனக்கு நெற் மீற்றிங் பற்றி கொஞ்சம் சொல்லித் தருவீர்களா கொஞ்சம் அது பற்றி தெரியும் யாரும் கூப்பிட்டால் போவேன் ஆனால் இன்னொருவரை எனக்கு அழைக்க தெரியவில்லை அதோடு அந்த நெற் மீற்றிங் ப்ரோகிராமும் எனக்கு வேண்டும் சொல்லித் தருவிங்களா??

baranee
18-07-2005, 02:13 PM
சுவேதா என்ன மென்பொருள் (software) உபயோகிக்கிறீங்க ?

சுவேதா
18-07-2005, 11:13 PM
xp அண்ணா!

rajasi13
21-09-2005, 12:52 PM
REAL VNC என்று ஒரு மென்பொருள் உள்ளது அதில் நீங்கள் தேடும் வசதி கிடைகிறது.

pradeepkt
21-09-2005, 01:02 PM
வாருங்கள் ராஜசி (உங்கள் பெயரைக் கொலை செய்வதற்காக மன்னிக்கவும்)
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.

gragavan
21-09-2005, 01:11 PM
வாருங்கள் ராஜசி (உங்கள் பெயரைக் கொலை செய்வதற்காக மன்னிக்கவும்)
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.அவரு ராஜா.சி ன்னு நினைக்கிறேன். சரியா ராஜா.சி?

pradeepkt
21-09-2005, 01:29 PM
சரி அவரு பேரை அவராச் சொல்லுற வரைக்கும் நம்மளே வாயிக்குக் கைக்கு வந்ததைச் சொல்லிக் கூப்பிட வேண்டியதுதான் :D

rajasi13
21-09-2005, 01:30 PM
ஐயய்யோ என் பெயர் ராஜா எனது மனைவியின் பெயர் ஜாஸ்மின் அதனால் ராஜாஸி என வைத்துக்கொண்டேன். இப்போதே அறிமுகம் பகுதிக்கு போகிறேன்.

பிரியன்
21-09-2005, 01:34 PM
வாழ்த்துகள் நண்பரே.... ஆரம்பமே உங்களுக்கு அமர்க்களமான வரவேற்பு கிடைத்திருக்கிறது

pradeepkt
21-09-2005, 01:39 PM
நல்ல வேளை பேரைச் சொன்னீங்களே.
அங்க நம்ம நண்பர்கள் நிறையப் பேர் இருக்காங்க.
உங்களுக்கு நம்ம மன்றம் ரொம்பப் பிடிச்சுப் போகும் பாருங்க.

ravi_apn
02-08-2006, 07:27 PM
எனக்கு நெற் மீற்றிங் பற்றி கொஞ்சம் சொல்லித் தருவீர்களா கொஞ்சம் அது பற்றி தெரியும் யாரும் கூப்பிட்டால் போவேன் ஆனால் இன்னொருவரை எனக்கு அழைக்க தெரியவில்லை அதோடு அந்த நெற் மீற்றிங் ப்ரோகிராமும் எனக்கு வேண்டும் சொல்லித் தருவிங்களா??

i am ready if you willing call me in online in same link or ravi_apn@yahoo.om

kad
21-11-2006, 03:49 AM
இந்த ஸாப்ட்வேரை யூஸ் செய்து பாருங்கள்.
http://www.personal-inspector.com/

ssanthabai
21-11-2006, 08:59 AM
how install tamil font in my system

Gurudev
19-01-2007, 12:02 PM
வலையதளத்திலிருந்து Font பைலை டவுண்லோட் பண்ணி, ஒரு புதிய போல்டரை உருவாக்கி அதில் இடுங்கள். பெரும்பாலும் அது Zip பைலாகவே காணப்படும். அந்த பைலை வலதுகிளிக் பண்ண வரும் மெனுவில் "Extract Here" என்பதை தேர்வு செய்ய ஒரு புதிய பைல் Decompress பண்ணப்பட்டு அதே இடத்தில் உருவாக்கப்படும். வலது கிளிக்கில் "Extract Here" காணப்படாவிடின் WinZip கொண்டு Unzip பண்ணுங்கள்.

கிடைக்கும் பைலை Drag & Drop முறை மூலம் அல்லது Copy பண்ணி Font பைலை திறந்து Paste பண்ணி விடுங்கள். உருவாக்கப்பட்ட போல்டரையும் டவுண்லோட் பண்ணிய Zip பைலையும் அழித்துவிடலாம்.

Start-->Settings-->Control Panel க்கு போய் Fonts என்ற Icon ஐ கிளிக் பண்ண Font File திறக்கும். மேலதிக விபரங்களுக்கு இன்கே சொடுக்கவும்.

http://www.eknp.com/installfonts.php

மனோஜ்
19-01-2007, 01:20 PM
fonts சை அப்டியெ paste செய்து வராவிட்டால்
file manu -- instal fontல் முயற்சிக்கவும்

Gurudev
19-01-2007, 04:47 PM
fonts சை அப்டியெ paste செய்து வராவிட்டால்
file manu -- instal fontல் முயற்சிக்கவும்

நீங்கள் கூறுவது Fonts file Window வின் File Menu என நினைக்கின்றேன். இதில் உள்ள Install New Font என்பதை கிளிக்பண்ணினால் வரும் பெட்டியில் Desktop மற்றும் MY Documents போன்ற போல்டர்கள் தென்படுவதில்லை, Windows போல்டர் மாத்திரம் தென்படும். Download பண்ணும்போது இதை கவனத்தில் கொள்ளாவிட்டால் Install New Font (Add Fonts) பெட்டியில் "No Fonts Found" எனத்தான் காண்பிக்கும்.

எனவே கொப்பி அண்ட் பேஸ்ற் அல்லது டிறாக் அண்ட் டிறொப் முறை மேலானது

விகடன்
04-02-2007, 02:37 AM
Remote Administrator என்றொரு மென்பொருளும் இருக்கிறது கணிணிகளை மேற்பார்வை செய்வதற்கு. இலவசமாக பெறமுடியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

சுபன்
04-02-2007, 04:20 AM
நீங்கள் கூறுவது Fonts file Window வின் File Menu என நினைக்கின்றேன். இதில் உள்ள Install New Font என்பதை கிளிக்பண்ணினால் வரும் பெட்டியில் Desktop மற்றும் MY Documents போன்ற போல்டர்கள் தென்படுவதில்லை, Windows போல்டர் மாத்திரம் தென்படும். Download பண்ணும்போது இதை கவனத்தில் கொள்ளாவிட்டால் Install New Font (Add Fonts) பெட்டியில் "No Fonts Found" எனத்தான் காண்பிக்கும்.

எனவே கொப்பி அண்ட் பேஸ்ற் அல்லது டிறாக் அண்ட் டிறொப் முறை மேலானது

ஆனால் எனக்கு c:\ ட்ரைவில் இருக்கும் அனைத்து போல்டரும் தெரியுதே!! :confused: c:\ ட்ரைவின் மேல் double click செய்ய எனக்கு எல்லா போல்டரையும் காட்டுது!!

மதுரகன்
08-02-2007, 05:17 PM
Network Monitor என்று ஒரு மென்பொருள் உள்ளது முகவரி சரியாகத்தெரியாது கூகிளில் தேடிப்பாருங்கள்..
30 நாள் Trial Version கிடைக்கும் ஆனால் பிரச்சினையின்றி 30 நாள் பயன்படுத்தலாம்..
எமது கணினி நிறுவனமொன்று பயன்படுத்துகின்றது..
மற்ற யூசர்களின் மொனிட்டர் அப்படியே தெரியும்...

குறும்புக்காரன்
30-04-2007, 07:14 PM
தற்போது நான் எழுதியிருப்பது தெரிகிறதா?
1 - எனது அபிசில் சுமார் 10 கணணி இருக்கிறது. அனைத்து கணணியும் இனைத்து இருக்கிறார்கள் (Local Area Connection) அதனால் மற்ற கணணியி Sharing செய்து இருக்கும் file - லை மட்டும் தான் பார்க்க முடியும்.
2 - எனது கணணியின் மூலம் (உதா: தற்போது டைபிஸ்ட் என்ன செய்கிறார், கணணியில் படம் பார்க்கிறாற? அல்லது வலையில் அலைகிறார என்பதை கன்காணிக்க) அவர் திரையில் அனைத்தும் அதே நேரத்தில் நமது திரையிலும் தெரிய வேண்டும்.
தற்போது எனக்கு என்ன தேவை என்பது தெரிகிறாத நண்பா !
அன்புடன்
ஜாஸ்மின்

நீங்கள் உங்கள் கணிணியிலும் மற்ற அனைத்துக் கணிணிகளிலும் Remote Administrator எனற மென்பொருளை Instal செய்து விட்டு அந்தந்த கணிணியின் IP அட்ரஸைக் கொண்டு அவற்றை நீங்கள் காணலாம். ஆனால் கவனிக்கப்படும் கணிணியை இயக்குபவருக்கு, தான் கவனிக்கப்படுவது தெரியும். Task Bar-ல் R என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் காணப்படும். மற்ற நேரங்களில் அது ஊதா நிறத்தில் இருக்கும்.