PDA

View Full Version : நானும் தமிழ்மன்றமும்



பிரியன்
09-07-2005, 03:47 AM
இது எனது ஆயிரமாவது படைப்பு. தமிழ்மன்றத்திற்கு சமர்ப்பணம்...


தாய்மொழியில் படைப்புகள் தருவது என்பது தமிழனின் ஆழ்மனதின் ஆசைகளுல் ஒன்று. முந்தைய கால கட்டங்களில் அதற்கு ஏராளமான தடைகள் இருந்தன். ஆனால் இணையத்தில் தமிழ் பரவ ஆரம்பித்தவுடன் எண்ணற்ற படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை தயக்கமின்றி வெளியிட்டனர். தங்கள் எழுத்துக்கள் மீதான விமர்சனங்களை பாராட்டுகளை உடனுக்குடன் பெற்றது அவர்களுக்கு உற்சாகத்தையும் தந்தது..

நம் தமிழ்மன்றமும் எண்ணற்ற சிறந்த படைப்பாளிகளை கொண்டுள்ளது. பல சிறந்த படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுத்துள்ளது. இது மன்றத்தின் தொடக்க கால பதிவுகளைப் பார்த்தால் புரியும். ஆனால் இன்றூ ஒருவிதமான இறுக்கமான வறட்சி நிலவுவதையும் மறுக்க முடியாது.

இந்தத் திரியில் தமிழ்மன்றத்தின் மூத்த படைப்பாளிகள் தங்கள் எழுத்து வாழ்வில் தமிழ்மன்றம் எத்தகைய இடம் பெற்றிருக்கிறது, பெற்றிருந்தது என்பதைப்பற்றிச் சொல்ல அழைக்கிறேன். மிகத் தீவிரமாக இயங்கிய பல நண்பர்கள் தொடராமல் விலக ஏதேனும் காரணங்கள் இருந்தால் அதையும் பதிவு செய்தால்- நம் முரண்கலை களைந்து நம்மை புதுப்பித்து கொள்ள இயலும். ஆகையால் முடிந்தவரை நமது பழைய நண்பர்களின் முகவரிகளை பெற்று அவர்களையும் இந்தத்திரியில் தங்களது உணர்வுகளை பதிவு செய்ய அழைக்கிறேன்.

மன்றத்தின் தொடக்க கால நண்பர்களில் யாரேனும் ஒருவர் இந்தத் திரியில் தனது ஞாபக பக்கங்களைப் புரட்டி ஆரம்பித்து வைத்தால் மகிழ்வேன்...


இது தொடர்பாக மன்றத்து நண்பர்களின் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

pradeepkt
09-07-2005, 03:56 AM
ஆகா அருமை.
பிரியன், உங்கள் பங்களிப்பு மகத்தானது.
ஆயிரம் கண்ட உங்களுக்குப் பாயிரம் பாடினாலும் தகும்.
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தாருங்கள்.
வாழ்வில் மன்றத்தில் மென்மேலும் ஏறுங்கள்.

அன்புடன்,
பிரதீப்

இராசகுமாரன்
09-07-2005, 06:33 AM
பட்டாம்பூச்சி கவிதையில் ஆரம்பித்தவர் இன்று சிட்டாக பறந்து மன்றத்தை மணம் கமழச் செய்வதை காண மிக மகிழ்ச்சியாக உள்ளது.

வாழ்த்துக்கள் பிரியன்.

பிரியன்
09-07-2005, 06:34 AM
நன்றி ராசகுமாரன் தங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

பிரியன்
21-08-2005, 06:46 AM
இந்தத் திரியை யாரும் பார்க்கவில்லையா... மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் தொடங்கி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். என்ன சொல்றீங்க...

சுவேதா
21-08-2005, 03:16 PM
பிரியன் அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள் ஆயிரம் படைப்புப்போல் பல்லாயிரம் படைப்புக்கள் படைக்க என் வாழ்த்துக்கள்!

gragavan
22-08-2005, 05:46 AM
நல்ல நடையில் வந்தாலும் நான் இடையில் வந்தவன். முதலில் வந்தவர் சொன்னால் அதற்குக் கருத்துகளிடலாம்.

பிரியன்
22-08-2005, 05:50 AM
மூத்த உறுப்பினர்களான கரிகாலன், இக்பால் அண்ணா, பாரதி,நண்பன், பரஞ்சோதி சுமா என யாரேனும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்

kavitha
23-08-2005, 06:24 AM
தங்களது ஆயிரமாவது படைப்பிற்கு எனது தாமத வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் பிரியன்.
மூத்தவர்களுக்காக நானும் காத்திருக்கிறேன். அதன் பின்னர் தொடர்கிறேன். நன்றி.

பிரியன்
23-08-2005, 06:44 AM
தங்களது ஆயிரமாவது படைப்பிற்கு எனது தாமத வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் பிரியன்.
மூத்தவர்களுக்காக நானும் காத்திருக்கிறேன். அதன் பின்னர் தொடர்கிறேன். நன்றி.

யாரும் இந்த பதிவை கண்டுக்கவே மாட்டேன்றாங்க என்ன செய்றது. மூத்த உறுப்பினர்களை ராசகுமாரன் முன்மொழிந்தால் நன்றாக இருக்கும்.

இக்பால்
24-08-2005, 04:04 PM
மன்ற உறவுகளுக்கு வணக்கம்... எல்லோரும் நலம்தானே?

பூ தம்பியும், பூவிதா தங்கமும் கூட நலம்தானே?

எல்லோருக்குமே ஒத்துப் போகக் கூடியதாக, எல்லோருமே எழுதக் கூடியதாக ஒரு தலைப்பை
பிரியன் தம்பி கொடுத்து இருக்கிறார். :)

நான் மன்றத்திற்குள் புதியதாக வந்தபொழுது ஏற்கனவே நல்ல படைப்பாளிகளையும்,
ஊக்குவிப்பாளர்களையும் கொண்டதாகவும், எல்லா அம்சங்களும் கொண்டதொரு தளமாகவும்
இருந்ததால் எனக்கு இன்னும் கூட இடையில் வந்தவனாகவே...
புதிய உறுப்பினர் என்ற எண்ணம்தான் இருக்கிறது.

எனக்கு இங்கே கிடைத்த சொந்தங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது சொந்தம்... என்னுடனே பிறந்தது முதல் இருந்தது போன்ற உணர்வைக் கொடுக்கக்
கூடிய என்னை நன்கு புரிந்துக் கொண்டவர்கள்.
(இந்த சொந்தம்தான் நிறைய கிடைத்து இருக்கிறது. :D
சுத்திப் போடுங்க தங்கைகளே.)

இரண்டாவது...என்னைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டும் ஏதோ காரணங்களைச்
சொல்லி விலகிக் கொண்டவர்கள்.
(இவர்களைத்தான் மனசு அதிகம் நினைத்துக் கொள்ளும். கவலைப் படும்.:angry:
அதனால் இப்படி செய்தார்களோ!:confused: )

மூன்றாவது... அவர்கள் புனைப்பெயர்கள், பதிவுகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட
சொல்லி விட முடியும். அந்த அளவுக்கு நல்ல பதிவுகள் கொடுக்கும் திறமைசாலிகள். நம் மனதைக்
கொள்ளை கொண்டவர்கள். ஆனால் நிழல் மனிதர்கள்.
(நல்லவேளை...இந்தப் பட்டியலில் ஓரிருவர்தான் இருக்கிறார்கள் என சந்தோசப்படுவதா...
இல்லை...கவலைப்படுவதா என ஒரு குழப்பம்.:eek: )

என்னை விட்டால் நானே பேசிக் கொண்டே இருப்பேன் போல இருக்கிறதே...

பின்னே...இருக்காதா... தலைப்பு நானும் தமிழ்மன்றமும் இல்லையா?B)

என்றும் அன்புடன் உங்கள் இக்பால்.:)

பிரியன்
24-08-2005, 07:05 PM
பேசுங்கள் அண்ணா. நீங்கள் வந்து துவக்க வேண்டும் என்றே என் உள்மனம் விரும்பியது. அது நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

மன்மதன்
25-08-2005, 04:22 AM
நன்றி அண்ணா.. நீங்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்தான்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
25-08-2005, 05:13 AM
இக்பால் அண்ணா, அருமையாக சொன்னீங்க.

தமிழ் மன்றத்தில் ஏன் இணையத்தில் எனக்கு கிடைத்த முதல் சொந்தம் நீங்க தான்.

எனக்கு முன்பே மன்மதன் தமிழ் மன்றத்தில் உறுப்பினர், அவர் சொன்னப் பின்பு நானும் தமிழ்மன்றமும் சொல்கிறேன்.

பிரியன்
25-08-2005, 05:24 AM
நன்றி நண்பர்களே. இந்த அருமையான தருணத்திற்காகத்தான் இவ்வளவு நாள் பொறுமையாக காத்திருந்தேன்.. மீண்டும் எனது நன்றி.

kavitha
25-08-2005, 10:25 AM
முதலாவது சொந்தம்... என்னுடனே பிறந்தது முதல் இருந்தது போன்ற உணர்வைக் கொடுக்கக்
கூடிய என்னை நன்கு புரிந்துக் கொண்டவர்கள்.
(இந்த சொந்தம்தான் நிறைய கிடைத்து இருக்கிறது.
சுத்திப் போடுங்க தங்கைகளே.)

பெரிய பூசணிக்கா எடுத்து சுத்தணும் அண்ணா.... மன்மதா சீக்கிரம் வா... :D

gragavan
26-08-2005, 10:39 AM
பெரிய பூசணிக்கா எடுத்து சுத்தணும் அண்ணா.... மன்மதா சீக்கிரம் வா... :Dகவிதா, இக்பாலண்ணா தங்களைத்தான் குறிப்பிட்டார். மன்மதனை அழைக்கக் காரணம்? :rolleyes:

gragavan
26-08-2005, 10:44 AM
இக்பாலண்ணா, எல்லாரும் என்னை அண்ணா என்றழைக்கும் வேளையில் நான் அண்ணா என்று அழைத்த முதல்வர். பிறகு பாரதியண்ணாவும் சகோதரக் கூட்டணியில் சேர்ந்து கொண்டார். பரஞ்சோதி என்று ஒரு தம்பி வேறு கிடைத்தாகி விட்டது. தலைவராக தலை கிடைத்தாகி விட்டது. மேலும் எத்தனை நண்பர்கள். பட்டியல்தான் போட வேண்டும்.

மேலும் மன்றத்தில் அனைவரும் உறவினர்கள்தான். தமிழுணர்வு என்னும் உணர்வுள்ள தமிழக விலாஸ் என்று சொல்லலாம். (பாரத விலாஸ் மாதிரி).

எண்ணங்கள் வேறு. கருத்துகள் வேறு. ஆசைகள் வேறு. அச்சங்கள் வேறு. இருந்தும் நாமெல்லாம் ஒன்றாகக் கூடி தேரிழுக்க முடிகின்றதென்றால் அது நமக்கெல்லாம் பெருமை. அதைச் சொல்வதிலும் ஒரு இனிமை. மன்றத்திற்கு வந்தால் ஓடிப்போகும் தனிமை.

thempavani
26-08-2005, 10:51 AM
எப்பா மகளிர் அணி எல்லாரும் வாங்க..நம்ம இக்பால் அண்ணாவுக்கு சுத்திப் போடணும்...அண்ணா சூப்பர்...உண்மையில் ரெம்ப நல்லா இருந்தது..எனக்கும் இப்பவே எழுதணும்னு கை பறபறங்குது...கொஞ்சம் பொறுமை காத்துக் கொள்கிறேன்...தலை, மனமதன், பரம்ஸ் அண்ணா, கவி,மைது எல்லாரும் பதியட்டும்..அப்புறம் பார்க்கலாம்..

மன்மதன்
27-08-2005, 04:31 AM
எனக்கு முன்பே மன்மதன் தமிழ் மன்றத்தில் உறுப்பினர், அவர் சொன்னப் பின்பு நானும் தமிழ்மன்றமும் சொல்கிறேன்.

பிரியன் கொடுத்த லிஸ்டில் என் பெயர் இல்லை.. உன் பெயர் இருக்கு பாரு நண்பா.. நீதான் முதலில் கொடுக்கணும்..;) ;)



மூத்த உறுப்பினர்களான கரிகாலன், இக்பால் அண்ணா, பாரதி,நண்பன், பரஞ்சோதி சுமா என யாரேனும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்

பரஞ்சோதி
27-08-2005, 05:13 AM
பிரியன் கொடுத்த லிஸ்டில் என் பெயர் இல்லை.. உன் பெயர் இருக்கு பாரு நண்பா.. நீதான் முதலில் கொடுக்கணும்..;) ;)



பிரியன் அவருக்கு பிரியமானவங்க பெயரை சொல்லியிருக்கார், அதுக்காக நீ என்னை விட மூத்தவன் என்பது இல்லாமல் போய் விடுமா என்ன? :D

- மன்மதன்னாவின் தம்பி பரம்ஸ்

மன்மதன்
27-08-2005, 05:32 AM
யப்பா.. ஆளானப்பட்ட பிரதீப்பே உன்னை அண்ணா என்றழைக்கும் போது நான் எம்மாத்திரம் அண்ணன்னா....;) ;)
தம்பிம்பி...
மன்மதன்

pradeepkt
27-08-2005, 06:37 AM
யப்பா.. ஆளானப்பட்ட பிரதீப்பே உன்னை அண்ணா என்றழைக்கும் போது நான் எம்மாத்திரம் அண்ணன்னா....;) ;)
தம்பிம்பி...
மன்மதன்
ஏந்தலைய ஏம்ப்பு உருட்டுற...
தலை சுத்துது ;)

பிரியன்
29-08-2005, 01:55 PM
பாரதி உங்கள் அனுபவத்தை பதிக்கலாமே

kavitha
31-08-2005, 06:55 AM
கவிதா, இக்பாலண்ணா தங்களைத்தான் குறிப்பிட்டார். மன்மதனை அழைக்கக் காரணம்? :rolleyes:
சுத்திப்போட வெண்பூசணி வேண்டுமல்லவா? அதற்குத்தான். :)

kavitha
31-08-2005, 06:56 AM
பாரதி உங்கள் அனுபவத்தை பதிக்கலாமே
மன்றத்தில் மூத்தவர் என்கின்ற முறையில் பாரதி விரைவில் பதிப்பார் என்று நம்புகிறேன்.

இக்பால்
31-08-2005, 07:39 AM
சுத்திப்போட வெண்பூசணி வேண்டுமல்லவா? அதற்குத்தான். :)

ச்சே...இனி உடந்து கிடக்கும் வெண்பூசணி எல்லாம் பார்க்கும்பொழுது மன்மதன் தம்பியைப் பார்ப்பது போல் அல்லவா இருக்கும்.:angry:

மன்மதன்
31-08-2005, 12:04 PM
ச்சே...இனி உடந்து கிடக்கும் வெண்பூசணி எல்லாம் பார்க்கும்பொழுது மன்மதன் தம்பியைப் பார்ப்பது போல் அல்லவா இருக்கும்.:angry:

நற நற..:mad: :mad:

இக்பால்
31-08-2005, 12:18 PM
நற நற..:mad: :mad:

கவிதா தங்கை...இங்கே பாருங்கள்...மன்மதன் தம்பி உங்களைப் பார்த்து பல்லை நற நற வென கடிக்கிறார்.:rolleyes:

பாரதி
31-08-2005, 02:18 PM
பாரதி உங்கள் அனுபவத்தை பதிக்கலாமே.


மன்றத்தில் மூத்தவர் என்கின்ற முறையில் பாரதி விரைவில் பதிப்பார் என்று நம்புகிறேன்.

நேரமும் வாய்ப்பும் வரும் போது கண்டிப்பாக சொல்வேன். மற்றபடி மன்றத்தில் மூத்தவர் இளையவர் என்றெல்லாம் பாகுபாடு எல்லாம் இல்லை. விரும்பியவர்கள் சொல்லலாம்.

மன்மதன்
31-08-2005, 02:39 PM
நேரமும் வாய்ப்பும் வரும் போது கண்டிப்பாக சொல்வேன். மற்றபடி மன்றத்தில் மூத்தவர் இளையவர் என்றெல்லாம் பாகுபாடு எல்லாம் இல்லை. விரும்பியவர்கள் சொல்லலாம்.

அப்ப நீங்க சொல்லலாமே..;) ;)

பாரதி
31-08-2005, 02:50 PM
அப்ப நீங்க சொல்லலாமே..;) ;)

நேரமும் வாய்ப்பும் வரும் போது கண்டிப்பாக சொல்வேன்.

poo
01-09-2005, 04:51 AM
எல்லோரும் விரும்பும் பாரதி சொல்லட்டுமே என்கிறார் மன்மதன்...
பாரதி அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டால் நிச்சயமாக எல்லோருக்குள்ளும்
நினைவுகள் மலரத் தொடங்கிவிடும்!

சேரன்கயல்
21-11-2005, 07:47 AM
சீக்கிரம் யாராச்சும் சொல்லுங்கப்பா...
(தலை, பூ...வாங்க எஸ்கேப்)

pradeepkt
21-11-2005, 08:49 AM
என்னய்யா... நீங்க எல்லாம் ஒதுங்கிட்டாச் சின்னப் புள்ளைய எப்படிப் போடுவாங்க???

தாமரை
24-03-2006, 11:44 AM
டிசம்பர் 28, 2006, பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா வலைப்பூவில் கை சும்மாயிருக்க வாளாமல் சுட்டியைத் தட்டி எட்டிப் பார்த்தேன்.. எத்தனைப் பதிவுகள்.. எத்தனை வண்ணங்கள், எத்தனை கலாய்ப்புகள்.. இவை எல்லாம் எத்தனை எத்தனை எனப் பாடி எத்தனை(எந்தனை) இழுத்தன. முதலாய் ஒரு பதிவிட்டேன்..

மெல்ல மெல்ல பதிவுகளுக்கு பதில் சொல்லி, கவிதை எழிதி யார் என்ன வென அறிய முயன்றபோது "ஒரு மாலை தலையுடன் நேரம்" பதிவு கண்ணில் பட்டது.

புதிய நண்பர்கள அறி(ரி)யும் ஆவல் உந்தித் தள்ள முதல் சந்திப்பு, இரண்டாம் சந்திப்பென மூன்று மாதங்களில் ஆலமரம் போல் பெங்களூர் மன்றம் கிளைபரப்ப ஆரம்பித்தது..

ஆயிரம் பதிவுகள் எப்படிக் கடந்தது தெரியாது. ஆனால் மனதில் எழும் எண்ணங்களை எழுத எழுத இறைக்க இறைக்க ஊறும் மணற்கேணியைப் போல் எண்ணங்கள் வளர்கின்றன. எனது தமிழுக்கு ஒரு தாலாட்டை ஒட்டி என் நெஞ்சில் ஒரு தங்கப் பதக்கம் பெற்ற பூரிப்பை தந்தது மன்றம்.
மன்றத்து உறவுகளுடன் என் மகனும் கலந்தலாவி சொந்தமாக்கினான்.

இன்று உறவுகள் உலகெங்கும் இருந்து பெங்களூர் நோக்கி வரவேண்டும், சந்திக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது உண்டாகும் மகிழ்சிக்கு அளவில்லை.

மகளிரணி நான் வந்த நேரம் காணவில்லை. ஐவரணி பனிமூட்டத்தில். ராகவனும், பிரதீப்பும், பென்ஸூம் கை கொடுக்க என் எழுத்துகளை
இங்கே பார்வைக்கு வைத்து வருகிறேன்.

இன்னும் 1 வருடம்.. அதன் பின் சில தொடர்கள், கவிதை கொத்துக்கள் எழுதும் எண்ணமுண்டு.. தேசத்தை பற்றி .. உணைர்வுகளைப் பற்றி..யாரும் பார்க்க யோசித்திராத சில கோணங்களில்.

நான் படைக்கின்ற இவை அனைத்தும் மன்றத்தின் சொத்து.. எனக்கு? மன்றத்தின் சொந்தங்கள் போதும்..

தலை மணியா அவர்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். மன்றத்து மக்களின் அன்பைப் பெரிதும் பெற்ற அவர் அனைவர் மனதிலும் தனி இடம் பெற்றவர்.

இன்று பல்லாயிரக்கணக்கில் பதிவுகள் பெற்ற ஒரு பெருமன்றமாய் இருக்கும் தமிழ் மன்றத்தில் இணைந்ததில் பெருமகிழ்வடைகிறேன்

அன்புடன்

மதி
26-03-2006, 12:29 AM
சத்தியமாகவே புல்லரிச்சுடுச்சு..செல்வன்..
நானும் எழுதறேன்..சில நாள் கழித்து..

இளசு
09-04-2006, 08:19 AM
பிரியன் ஆரம்பித்த நல்ல திரி இது.

மனஓவியம் என ஒவ்வொருவராய் பார்க்க ஒரு வகைப்பதிவுகள்..
(நண்பனைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடரவேண்டும்.)

நிழற்படங்கள் என மாதம் மாதமாய் ஒரு பார்வைக்கோர்வை..


ஒட்டுமொத்தமாய் திரும்பிப்பார்க்க இந்தத்திரி..

நண்பர்கள் பார்வைகள் அருமை.. செல்வன் - பாராட்டுகள்..


பாரதியின் பதிவுக்கு நானும் எதிர்பார்ப்பில்....

arul5318
18-06-2006, 06:46 AM
நல்ல படைப்பாளர்கள் நீடூளி வாழவேண்டும் தமிழ் மன்றத்தில்

இனியவன்
18-06-2006, 08:27 AM
2003 ன் இறுதியில் துபையில் இருந்தபோது தமிழ் மன்றம் பற்றி அறிந்தேன். அவ்வப்போது சில பதிவுகள். பின்னர் தமிழகத்தில் இருந்தவேளைகளில் ஒரு தொய்வு. இப்போது கொஞ்சம் நேரம் கிடைக்கிறது மன்றத்தில் உலவ. அப்போது தெரிந்த முகங்களில் இக்பால் அண்ணா உள்ளிட்ட சிலரை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவர்களுடைய பதிவுகள் அத்தி பூத்தாற்போலத்தான் காணக்கிடைக்கின்றன. பூக்களை எப்போது பார்த்தாலும் மனம் மகிழ்ச்சி அடையும் தானே. அந்த நிலையில் தான் நானும்,,,,,,,, நன்றி.