PDA

View Full Version : ஜூலை 9, சனிக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
09-07-2005, 12:19 AM
லண்டனில் மீண்டும் தாக்குதல்கள் நடக்குமா?

லண்டனில் நேற்று முந்தினம் அடுத்தடுத்து ஏழு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் ஐம்பது பேர் பலியாயினார்கள் மேலும் 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

மூன்று சுரங்கப்பாதை இரயில் மற்றும் ஒரு மாடி பஸ்சில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதல் லண்டன் நகர மக்களை பீதியில் உறைய வைத்தது. இத்தொடர் குண்டுவெடிப்புக்கு Al-Qaeda-வுடன் இணைந்து செயல்படும் ஒரு இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

குண்டுகள் வெடித்ததும் லண்டன் முழுக்க பஸ்-இரயில் உற்பட அனைத்து போக்குவரத்தும் உடனடியாக நிறுத்த்ப்பட்டது.

இருப்பினும், அன்றிரவே பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதையில் இரயில் போக்குவரத்து இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மேலும் முக்கிய இடங்களில் போடப்பட்ட தடைகளையும் போலிஸார் நேற்று விலக்கினார்கள். தற்போது மக்களிடையே மீண்டும் சகஜ வாழ்க்கை திரும்பி உள்ளது.


நச்சுத் தன்மை வாய்ந்த உணவை உட்கொண்ட 88 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஈப்போவில் அமைந்துள்ள Methodist Tanjung Rambutan தேசிய மாதிரி ஆரம்பப்பள்ளியில் நச்சு தன்மை வாய்ந்த உணவை உட்கொண்ட 88 மாணவர்கள் ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு நேரத்தின் போது பள்ளிச் சிற்றுண்டிச் சாலையின் உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல் நலமில்லாமல் போனதாக சுகாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகி Datuk Tan Chin Meng தெரிவித்தார்.

நேற்று காலை 10 மணியளவில் மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றல் என ஆசிரியர்களிடம் புகார் செய்ய ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் Tanjung Rambutan-இல் உள்ள கிளினிக் ஒன்றில் ஆசிரியர்களால் சேர்க்கப்பட்ட பிறகு ஈப்போ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அப்பள்ளியின் சிற்றுண்டி சாலையில் Nasi Ayam Sup-ஐ உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல் நலமில்லாமல் போனதாக மருத்துவ சிகிச்சையின் மூலம் தெரிய வந்துள்ளது.

லண்டன் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு மலேசியா கடும் எதிர்ப்பு - பிரதமர்

லண்டனில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு சம்பவத்தை மலேசிய கடுமையாக எதிர்ப்பதாக பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார். மலேசியா தீவிரவாதத்தை முற்றிலும் எதிர்ப்பதாகவும், அச்செயல் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் அளிக்கப்போவதில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இத்தொடர் வெடிகுண்டு சம்பவம், தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என லண்டன் பிரதமர் Tony Blair நம்புவதாகவும், இதில் 37 பேருக்கு மேற்பட்டோ ர் மரணமடைந்ததுடன் மேலும் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனிடையே, லண்டன் தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் மரணமுற்ற குடும்ப அங்கத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் லண்டனில் இருக்கும் மலேசியர்கள்
ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

லண்டனில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் தீவிரவாதிகளைப் பிடிக்க மலேசியா உதவும்

நேற்று முன்தினம் லண்டனில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பங்களுக்குக் காரணமான தீவிரவாதிகளைப் பிரிட்டன் கட்டாயம் கைது செய்யும் என தாம் நம்புவதாக துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.

லண்டனில் பாதாள ரயில் பாதைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உட்பட 7 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த தீவிரவாதிகளைப் பிடிக்க பிரிட்டனுக்கு உதவி செய்ய மலேசியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.இதுபோன்ற வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளைப் பிடிக்க பல நாடுகளின் உதவி தேவைப்படுவதால் அவ்வாறான உதவியை மலேசிய கட்டாயம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

புயல் காற்றினால் 23 வீடுகள் சேதம்குவாந்தானில் Felda Bukit Goh-வில் ஏற்பட்ட பலத்த புயல் காற்றினால் அங்குள்ள 23 வீடுகள் சேதமுற்றன.

நேற்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இப்புயல் காற்றில் அங்குள்ளவர்களின் இல்லங்களின் கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக Felda குடியிருப்பின் நிர்வாகி Sabran Mohd Ali தெரிவித்தார்.இருப்பினும் இச்சம்பவத்தில் அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்

நாடு துரித வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இயற்கை வளங்களுக்கும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.

அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் உட்பட, அனைத்து தப்பினரும் இயற்கை வளங்களை மறுசீரமைப்பு செய்ய முன் வர வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது நாட்டின் மேம்பாட்டுக்காக அதிகமான இயற்கைவளங்களை அழித்து வருவதால், இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், இயற்கைவளங்கள் இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் எனவும், நாம் அதனைப் பேனிக் காக்க வேண்டும் என அவர் கருத்து
தெரிவித்தார்.மருத்துவர்கள் பற்றாற்குறை

கோலாலம்பூர் மருத்துவமனையின் Obstetrik மற்றும் Gineakologi மருந்தகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் காத்துக் கொண்டிருக்கும் சூல்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 பெண்மணிகள் அம்மருந்தகத்தில் சிகிச்சைக்காக வருவதாகவும் ஆனால் அங்கு 15 மற்றும் 20 மருத்துவர்களே உள்ளதால், அவர்களின் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், சிகிச்சைக்கு வருபவர்கள் சிலர் தங்களின் சிகிச்சை நேர எண்களைப் பெறுவதற்கு காலை ஏழு மணி அளவில் வருவதாகவும், ஆனால் அவர்களும் சிகிச்சைக்காக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நாகர்கோவில் சந்தையில் தீ விபத்து; 6 பலி - 300 கடைகள் சேதம்

நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வியாபாரிகள் பலியானார்கள்.

மேலும் பலர் இவ்விபத்தில் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இத்தீவிபத்திற்கான காரணம் இன்னும் கணடறியப்படாவிட்டாலும் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இத்தீவிபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் கூறினர்.
லண்டன் தொடர் குண்டு வெடிப்புக்கு Al-Qaeda இயக்கம் பொறுப்பு ஏற்றது

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து ராணுவத்தினர் செய்த படுகொலைகளுக்கு பழி வாங்கும் வகையில் அரபு தேச தீவிரவாதிகள் இந்த பதிலடி தாக்குதலை நடத்தியதாக அந்த இயக்கம் தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து இத்தாலி மற்றும் டென்மார்க் அரசுகளும் தங்கள் படைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையேல் அந்நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த செய்தியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவிலும் இந்தோனிசியா, கென்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் Al-Qaeda தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையும் அங்கு கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் வைத்து பார்க்கும் போது லண்டனில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது Al-Qaeda இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளாகத்தான் இருக்கக்கூடும் என்று இங்கிலாந்து பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ

பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பலில் நேற்று திடீரென தீ பிடித்தது. ஆனால், அக்கப்பலில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 108 பயணிகள் 109 ஊழியர்கள் ஐந்து பாதுகாவலர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஜாம்போயன்கா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் இலோய்லா தீவு அருகே வந்து கொண்டிருந்த வேளையில் நேற்று திடீரென தீப்பிடித்தது.

இதே பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் உதவியுடன் அக்கப்பலில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மழை நீரில் மூழ்கியது ரயில் தண்டவாளம்: வடமாநிலங்களில் பல ரயில்கள் நிறுத்தம்


இந்தியாவின் வடமாநிலங்களில் பெய்து வய்து வரும் கனத்த மழையினால் அங்குள்ள ரயில் தண்டாவாளங்களும் வெள்ளதில் மூழ்கியுள்ளன. இதனால் அரியானா வழியாக டில்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்லும் ரயில்களின் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். ரேவாரி & புலேரா & ஆமதாபாத் வழித்தடத்தில் ஹர்சோலி ரயில் நிலையத்திற்கு அருகில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்களை மாற்று வழியில் இயக்குவதற்கான முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2012 ஆண்டின் Olympic போட்டியில் Baseball மற்றும் softball விளையாட்டுகள் இடம்பெறாது

லண்டனில் நடைபெறவிருக்கும் 2012 ஆண்டு Olympics போட்டியில் Baseball மற்றும் softball விளையாட்டுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விரு விளையாட்டுக்கு பதிலாக, rugby, squash, golf, karate மற்றும் roller skating பேன்ற விளையாட்டுகளை நடத்த அனைத்துலக Olympics சங்கம் திட்டமிட்டுள்ளதாக.

2008- ஆண்டின் Olympics விளையாட்டு போட்டியில் இவ்விரு விளையாட்டுகளை நடத்த அதிக ஆதரவு இல்லாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்.


மனோ.ஜி

பரஞ்சோதி
09-07-2005, 06:19 AM
செய்திகளுக்கு நன்றி அண்ணா.

தீவிரவாதம் எப்படி எல்லாம் மக்களை சீரழிக்கிறது என்பதை பார்த்தாலே புரியும்.

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள் மக்களை பாதிக்கிறது.