PDA

View Full Version : ஜூலை 8, மலேசியா செய்திகள்



Mano.G.
08-07-2005, 09:08 AM
London-இல் தொடர் வெடிகுண்டு தாக்குதல்

London-இல் நேற்று ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 37 மரணமுற்றதுடன் மேலும் 700- 𧼡 காயமுற்றதாக தெரியவந்துள்ளது.

இவ்வெடிப்புச் சம்பவங்கள் பேருந்துகள் மற்றும் பாதாள இரயில் பகுதிகளில் ஏற்பட்டதாகவும், இது தீவிரவதிகளின் செயலாக இருக்கலாம் என நம்புவதாகவும் பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், அங்கு மக்கள் பீதியுடன் காணப்படுவதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி London-இல் நடைபெறவுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த தலைவர், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் - பிரதமர்

முன்னால் சபா மாநில முதலமைச்சர் Datuk Seri Osu Sukam, சூதாட்டத்தில் ஏழு மில்லியன் ரிங்கிட் கடன்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு சிறந்த தலைவர் பதவியை வகிக்க தவறினார் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.

ஒரு சிறந்த தலைவர், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவும், நல்ல பழக்க வழக்கங்களை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சிறந்த தலைவர்கள், நன்னெறிக் பண்புகளுக்கு முறன்பாடான செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என அவர் கருத்து தெரிவித்தார்.

இதனிடையே, கோத்தா கினபாலு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வது தொடர்பில் தங்கள் கட்சிகாரர்களின் பதிலுக்கு காத்திருப்பதாக Ritz Hotel Casino Ltd மற்றும் R.H.C Ltd சூதாட்ட நிறுவனங்களின் சார்பில் இவ்வழக்கை நடத்தும் வழக்கறிஞரான கோலின் லாவ் கூறினார்.





800,000 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள VCD-கள் பறிமுதல்

Cheras, Taman Taynton View-ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை 3.45 மணி அளவில் மேற்கொண்ட சோதனையில் 800,000 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 160,000 கள்ள VCD-கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பதிப்புரிமை இலாகாவின் துணை இயக்குனர் Firdaus Zakaria தெரிவித்தார்.

இச்சோதனையின் போது, அவ்வீட்டில் இருந்த இரண்டு ஆடவர்கள் தப்பி ஓடிவிட்டதாக அவர் செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.

மேலும் கள்ள VCD-கள் விற்பவர்களை அரசாங்கம் கடுமையாக எச்சரிப்பதாகவும், மக்கள் கள்ள VCD-களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூரினார்.



சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணம்


Baling, Kuala Pegang-Baling-யில் கார் மற்றும் பஸ் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணமுற்றனர் என Baling மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து மற்றும் பொது அமைதி துறையின் தலைவர் Cif Insp S.Ramadas தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முந்தினம் மாலை 4.24 மணி அளவில் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அக்காரில் பயணம் செய்த 71-வயது பெண்மணி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி Baling மருத்துவமநனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, அப்பேருந்து ஓட்டுனர் அவ்விபத்து ஏற்படுவதிலிருந்து தவிர்க்க முயன்றதாகவும் ஆனால் அச்செயல் தோல்வியே அடைந்ததாகவும்லவர் கூறினார்.





1,756 கொலைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டது

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரையில் நாட்டில் நிகழ்ந்த 3,023 கொலைச் சம்பவங்களில் 1,756 கொலைச்சம்பவங்களுக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1,267 கொலைச்சம்பவங்கள் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு Ш அமைச்சர் Chia Kwang Chye தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில் நிகழ்ந்த சுமார் 2,890 ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் 547 சம்பவங்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் நிகழும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்களவையில் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு விளக்கமளித்தார்.





குண்டர் கும்பலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்

அரசியல் கட்சி உறுப்பினர்கள் சிலர் குண்டர் கும்பல்களில் ஈடுபடலாம் என நம்புவதாக உள்நாட்டு பாதுகாப்பு துணை அமைச்சர் Chia Kwang Chye தெரிவித்தார். இருப்பினும், குண்டர் கும்பல் பாதுகாப்பு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், நாட்டில் குண்டர் குல்பல் எண்ணிக்கை கட்டுப்பட்டுக்குள் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் குண்டர் கும்பல்களின் நடவடிக்கைகளை பேலிஸார் கண்காணித்து வரும் வேலையில், இது பேன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.



அதிக அந்நிய நாட்டு வாகனமோட்டிகள் சம்மன் தொகையை செலுத்தவில்லை


மலேசியாவில் இருக்கும் அந்நிய நாட்டு வாகணமோட்டிகள் பலர் கடந்த மே மாதம் வரையில் சுமார் 304,794 போக்குவரத்து சம்மன்களை செலுத்தவில்லை என போகுவரத்துத்துறை துணை அமைச்சர் Datuk Seri Tengku Azlan Sultan Abu Bakar தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு Compound மற்றும் நீதிமன்ற அபராதம் செலுத்தப்பட்ட எண்ணிக்கைகள் மட்டும் சுமார் 3.8 மில்லியன் ரிங்கிட்டை என அவர் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

இதனிடையே, சாலை குற்றங்களை புரியும் அந்நிய நாட்டு வாகணமோட்டிகளின் மேல் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இத்திட்டத்தினை உடனடியாக போக்குவரத்து இலாகாவிடம் தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.
படகு ஆற்றில் கவிழ்ந்து 30 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 4 போலீசார் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் பொது மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றி மீட்பு பணியினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துக் கொண்டு வரும் வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

பொது மக்களை ஏற்றி வந்த படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் அப்படகு ஆற்றில் கவிழ்ந்தது. அப்படகில் நான்கு போலீசார் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் உட்பட மொத்தம் 31 பேர் பேர் பயணம் செய்தனர்.

அவர்களில் ஒரே ஒரு போலீசார் மட்டும் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினார். ஆனால், மற்றவர்கள் அனைவரும் ஆற்று நீரில் மூழ்கி இறந்திருக்கூடும் என நம்பப்படுகிறது.

Ethiopia-வில் பஸ் விபத்து : 22 பேர் பலி

Ethiopia நாட்டில் உள்ள கொன்டார் என்னுமிடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 22 பேர் பலியானார்கள்.

சுமார் 56 பயணிகளுடன் கொண்டார் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென்று நிலைத் தடுமாறி பேருந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கியதி அதில் பயணம் செய்த 22 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





நேப்பாளத்துக்கு இந்தியா ராணுவ ஆயுதங்களை வழங்கியது

முதல் முறையாக அதிக ஆபத்து விளைவிக்காத ராணுவ ஆயுதங்களை நேப்பாளத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது.

நேப்பாளத்தில் ஆட்சிப் பெருப்பை மன்னரே ஏற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக நடக்கும் ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தம் இதுவகும் என அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுரவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மஹேந்திர ஜீப்கள், குண்டு துளைக்காத உடைகள், பதுங்கு குழி பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் நேப்பளத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. ராணுவ உதவி ஓரளவுக்கு வழங்கப்படும் என இந்தியா அறிவித்ததையடுத்து இந்த உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.







பணக்கார நாடுகளின் மாநாடு

G-8 என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகளில் உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளெனி கிளெஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் இத்தாலி பிரதமர் சில்வியோ, ஜெர்மன் அதிபர் ஷெர்கார்டு ஷீரோடர், ஜப்பான் பிரதமர் ஜூனிச்ரோ கொய்சுமி, கனடா பிரதமர் பால் மார்ட்டின், அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்சு அதிபர் ஜாக்குஸ்சிராக் ஆ 츢 Ӹ கலந்துக் கொண்டனர்.





விமான நிலையங்களில் பறவைகளை விரட்ட புதிய கருவி கண்டு பிடிப்பு

விமான நிலையங்களில் பறக்கும் பறவைகளை விரட்ட சீன விஞ்ஞானிகள் புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.விமான நிலையங்கள் அருகே பறக்கும் பறவைகள் விமானத்தின் கன்புற விசிறியில் சிக்கி விபத்துக்குக் காரணமாகின்றன. இதற்காகவே விமான நிலையங்கள் அருகே அதிக மரங்கள் வளர்ப்பது தடுக்கப்படுகிறது. இருப்பினும் சில காட்டுப் பறவைகள் வழி தவறி விமான நிலையத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விமானங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.

விமான நிலையத்தருகே வந்து அமரும் பறவைகளைச் சுட்டு பிடிப்பது அல்லது வெடிசத்தத்தை உருவாக்கி பறவைகளை விரட்டுவது போன்ற முறைகளை சீனா இதுவரையில் கையாண்டு வந்தது. ஆனால், இந்த முயற்சி பெரிய பலனைத் தரவில்லை.

தற்போது சீன நாட்டு பறவைகள் அபாயக்குரல் எழுப்புவதை போன்ற கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பளிச்சிடும் ஒளியை உருவாக்கி இந்த அபாய குரல் கருவியை அலற விடும் போது விமான நிலையத்தருகே சுற்றி பறந்த பறவைகள் மறுபடியும் அந்த பக்கம் தலை காட்டவில்லை. இந்த திட்டம் நல்ல பலனை அளித்துள்ளதால், அனைத்து விமான நிலையங்களிலும் இந்த கருவியைப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.
டெண்டுல்கருக்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை

இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு லண்டன் மருத்துவமனையில் இடது முழங்கையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதனால் அவரால் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டுல்கருக்கு கடந்த சில வருடங்களாகவே இடது முழங்கையில் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக அவர் பலமுறை சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் குணமடையவில்லை. இதனால் இடையிடையே விளையாட்டிலிருந்து அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் முழங்கை பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக டெண்டுல்கர் லண்டன் சென்றார். அவருடன் இந்திய கிஙூக்கெட் அணியின் உடற்பயிற்சி மருத்துவர் குளோஸ்டரும் சென்றார் என்பது குறிப்பிடத்தகது.

அறிஞர்
08-07-2005, 09:47 AM
தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். சீன விஞ்ஞானிகளின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

thempavani
08-07-2005, 10:16 AM
செய்திகள் வழங்கிய அண்ணன் மனோஜ் அவர்களுக்கு நன்றிகள்...