PDA

View Full Version : இந்தியா - அன்றும்... இன்றும்...anithanhitler
07-07-2005, 02:45 PM
அன்று
அந்நியரிடம் இருந்து
சுதந்திரம் வாங்கி
இன்று
சொந்த வீட்டில்
அடகு வைத்தோம்...

அன்று
அரசியல் செய்து
ஊழல் செய்தார்கள்.
இன்று
ஊழல் செய்து
அரசியல் செய்கிறார்கள்...

அன்று
நம் வீட்டில் பிடுங்கி
சொந்த நாட்டில் செல்வம் சேர்த்தார்கள்.
இன்று
சொந்த நாட்டில் பிடுங்கி
அவர்கள் வீட்டில் செல்வம் சேர்க்கிறார்கள்...

அன்று
இரத்தம் சிந்தி
அனைத்தையும் இழந்து
பெறுவதற்க்கு
சுதந்திரம் இருந்தது.
இன்று ???...

அறிஞர்
08-07-2005, 02:30 AM
அன்று
இரத்தம் சிந்தி
அனைத்தையும் இழந்து
பெறுவதற்க்கு
சுதந்திரம் இருந்தது.
இன்று ???...சுதந்திரம் பெற்றோம்
என்று சொல்லியும்
உண்மையான
சுதந்திரத்தை
எப்போது
காண்போம்........

அழகாய் இன்றைய இந்தியாவை வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அன்பரே

kavitha
08-07-2005, 11:06 AM
உங்கள் கேள்விக்கு பதில்:-

நம்மை நாமே
ஒருவரை ஒருவர்
தாழ்த்திக்கொள்வதற்கு
சுதந்திரம் இருக்கிறது


முன்னேறுபவனும் என்னைப்போல் ஒரு இந்தியன்.
நானும் அவனைப்போல் முன்னேறுவேன். என்று ஒருவருக்கொருவர்
தோள் கொடுத்தால் போதும்.
தேள் கொட்டினால் என்னாவது?
ஒற்றுமையின்மை தான் மிகப்பெரிய பலவீனம்.
நீயா, நானா என்பதுவே யாரையும் முன்னேற விடாமல் தடுக்கிறது.
ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி அவர்கள் எழும்பி விடுகிறார்கள். தட்டிய பந்து போல.
மட்டமாய் போனதே நாடு என்று அழ யாருமில்லை.. நாட்டைத்தவிர.

நல்ல தேசியச்சிந்தனையுள்ள கவிதை. இதுபோன்ற கவிதைகள் நிறைய எழுதுங்கள் அனிதன்.
நம் மக்களுக்கு இரத்தம் சூடேறட்டும்.

anithanhitler
08-07-2005, 02:30 PM
முன்னேறுபவனும் என்னைப்போல் ஒரு இந்தியன்.
நானும் அவனைப்போல் முன்னேறுவேன். என்று ஒருவருக்கொருவர்
தோள் கொடுத்தால் போதும்.
தேள் கொட்டினால் என்னாவது?
ஒற்றுமையின்மை தான் மிகப்பெரிய பலவீனம்.
நீயா, நானா என்பதுவே யாரையும் முன்னேற விடாமல் தடுக்கிறது.
ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி அவர்கள் எழும்பி விடுகிறார்கள். தட்டிய பந்து போல.
மட்டமாய் போனதே நாடு என்று அழ யாருமில்லை.. நாட்டைத்தவிர.

நல்ல தேசியச்சிந்தனையுள்ள கவிதை. இதுபோன்ற கவிதைகள் நிறைய எழுதுங்கள் அனிதன்.
நம் மக்களுக்கு இரத்தம் சூடேறட்டும்.
பசி இல்லாதவன்
எப்படி போராட வருவான் என்று
அம்பேத்கார் கூறினார்...

வளரும் மத்திய தர நாடான
இந்தியாவின் சாபக்கேடு இது.

ஒரளவு உணவு, பொழுது போக்கு நிகழ்சிகள்,
சினிமா அரங்கங்கள், வசதியான ஒட்டல்கல்
கடற்கரை சந்திப்புக்கள்...
இவை நடுத்தர மனிதனிடம்
போராடும் எண்ணத்தையே அழித்து விட்டது...

இதில் மனதை மயக்கும் காதல் கொஞ்சம்.
நாட்டைப் பற்றி நினைக்க நேரம் ஏது???

Iniyan
08-07-2005, 03:50 PM
பசி இல்லாதவன்
எப்படி போராட வருவான் என்று
அம்பேத்கார் கூறினார்...

வளரும் மத்திய தர நாடான
இந்தியாவின் சாபக்கேடு இது.

ஒரளவு உணவு, பொழுது போக்கு நிகழ்சிகள்,
சினிமா அரங்கங்கள், வசதியான ஒட்டல்கல்
கடற்கரை சந்திப்புக்கள்...
இவை நடுத்தர மனிதனிடம்
போராடும் எண்ணத்தையே அழித்து விட்டது...

இதில் மனதை மயக்கும் காதல் கொஞ்சம்.
நாட்டைப் பற்றி நினைக்க நேரம் ஏது???

என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை?

வெந்ததி தின்று விதி வந்தால் மாயும் வேடிக்கை மனிதரால் ஒரு நாடே கீழ் நோக்கி இழுக்கப்படுவதை இதை விட தெளிவாய்ச் சொல்ல முடியுமா என்றால் சந்தேகம் தான்.

பரஞ்சோதி
09-07-2005, 07:23 AM
அனிதன், இந்த கவிதையை எங்கே படித்திருக்கிறேன்.

நீங்கள் எழுதியதா?

அனிதன், இந்தியாவின் நிலைமை அன்றும், இன்றும் தான் இப்படி இருக்கும், எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு கண்டிப்பாக வரும்.

பசி எடுத்தால் தான் போராட்டம், உண்மையான கருத்து, வருங்கால இளைஞர்கள் தேடும் ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள், மேலே சொன்னது எல்லாம் மாறும்.

anithanhitler
11-07-2005, 02:44 PM
அனிதன், இந்த கவிதையை எங்கே படித்திருக்கிறேன்.

நீங்கள் எழுதியதா?

அனிதன், இந்தியாவின் நிலைமை அன்றும், இன்றும் தான் இப்படி இருக்கும், எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு கண்டிப்பாக வரும்.

பசி எடுத்தால் தான் போராட்டம், உண்மையான கருத்து, வருங்கால இளைஞர்கள் தேடும் ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள், மேலே சொன்னது எல்லாம் மாறும்.


உங்களின் அபார நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்...

நேற்றைய எதிர்காலம் தான் இன்று
என்பதை மறந்து விடவேண்டாம்.

இன்று நலமாய் இருந்தால் மாத்திரமே
நாளை வளமாய் இருக்கும்.

கலாமைப் போல்
கனவு கானுங்கள், எல்லோரும் படிங்கள் வல்லரசாகலாம்
என்பதெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகள்...

இந்திய அரசை தற்போது
வழி நடத்தும்
2 கோடி அரசு அதிகாரிகளும் படித்தவர்கள்
என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏன் நாளைய வல்லரசை உருவாக்கும்
இன்றைய கல்வி
நேற்றைய
பண்புள்ள படித்தவரை உருவாக்கவில்லை???....

பரஞ்சோதி
12-07-2005, 04:27 AM
அனிதன், நீங்க எதிர்மறையான கருத்துகளை அதிகம் பார்க்கிறீங்க என்று நினைக்கிறேன், அதுவும் நல்லது தான்.

ஒரு பழமொழி உண்டு தெரியும் தானே, ரோம் நகரம் என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டது அல்ல.

வேற்று தேசத்திடம் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்ட நாடு உடனே முன்னேறிவிட முடியாது, பல இனம், பல மொழி, பல மதங்களை கொண்ட நாடும், பரந்த பிரதேசமுமாகிய பாரதம் முன்னை விட எத்தனையோ மடங்கு முன்னேறி இருக்குது, கண்டிப்பாக முன்னேறும், அதை யாராலும் தடுக்க முடியாது.

gragavan
12-07-2005, 06:15 AM
சகோதரி அனிதா, சுதந்திரம் எங்கும் போய் விடவில்லை. நம்மிடம் பிரச்சனைகள் பல உள்ளன. ஆனாலும் முடிந்த வரையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இருட்டென்று வருந்துவதை விட மெழுகுவர்த்தி ஏற்றுவதே முறைமை. முன்னேற்றமும் ஒரு நாளில் வராது. சிறுதுளி பெருவெள்ளம். நாம் அனைவரும் பாடு படுவோம். நாட்டை முன்னேற்றுவோம்.

மேலும் பெரு வெக்கையுண்டானால் மழை வரும். அது போல நல்லவைகளுக்கு வாழ்வே இல்லையென்ற நிலை வருகையில் புரட்சி புதுவெள்ளமாக வந்து அடித்துக் கொண்டு போய் விடும்.

அன்புடன்,
கோ.இராகவன்

திருவாசக இளையராஜாங்கம் - முன்னுரை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5294&page=2
அன்னைக்குப் பெயர் வைத்த முறை
http://www.tamilmantram.com/vb/showt...525#post111525 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111525#post111525)
என் கொங்கை நின்
http://www.tamilmantram.com/vb/showt...319#post111319 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=111319#post111319)

பிரசன்னா
10-09-2005, 02:55 PM
அழகாய் இன்றைய இந்தியாவை வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அன்பரே