PDA

View Full Version : ஜூலை 07, மலேசிய செய்திகள்



Mano.G.
07-07-2005, 12:22 PM
12 அரசாங்க மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் தாமதம்

நாட்டில் தற்போது 12 அரசாங்க மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் காலவரையறையின் படி தாமதமாக செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிய வந்துள்ளது.

தாமதம் அடைந்து வரும் இக்கட்டுமானப்பணிகளை சுகாதார அமைச்சு பொதுபணித் துறையுடன் இணைந்து கண்டறிந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் Lee Kah Choon தெரிவித்தார்.

இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து, எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களின் கட்டுமானத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் காலவரையறையின்படி முடிவு பெறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும், அதனைத் தவிர்க்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
_________________________________________________________________________
மின்சார திருட்டுச்சம்பவங்களினால் TNB நிறுவனத்திற்கு பெரும் இழப்பு

நாட்டில்,கடந்த ஈராயிரம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரையில் சுமார் 7,433 மின்சார திருட்டுச்சம்பவங்கள் ஏற்பட்டதாகவும், இதன்மூலம், TNB நிறுவனத்திற்கு 22.95 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக தொலைத்தொடர்பு, நீர் மற்றும் எரிசக்தி துறை துணை அமைச்சர் Datuk Shaziman Abu Mansor தெரிவித்தார்.

மாநில ரீதியிலான ஆய்வறிக்கையின்படி, பேராக்கில் 5.55 மில்லியன், சிலாங்கூரில் 3.462 மில்லியன், ஜோகூரில் 3.07 மில்லியன், பினாங்கில் 3.0007 மில்லியன், மலாக்கவில் 2.225 மில்லியன், கூட்டரசு பிரதேசத்தில் 1.989 மில்லியன், பஹாங்கில் 1.649 மில்லியன், கெடாவில் 850,000 ஆயிரம், நெகிரி செம்பிலானில் 615,000 ஆயிரம், கிளந்தானில் 357,000 ஆயிரம், திரங்கானுவில் 121,000 ஆயிரம் மற்றும் பெர்லிஸில் 52,000 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



இதனிடையே, நாட்டிலுள்ள கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்த சுமார் 331 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.





அடுத்த ஆண்டு முதல் பள்ளி நாட்களில் புறப்பாடநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

புறப்பாட நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு முதல் பள்ளி நாட்களில் மேற்கொள்ள NUTP எனப்படும் தேசிய ஆசிரியர்கள் சேவைக் கூட்டமைப்பு பள்ளித் தரப்பினரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வருடம் முழுவதும் பள்ளி புறப்பாட நடவடிக்கைகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதால் சில தரப்பினர் சிரமத்தை எதிர்நோக்காமல் இருக்க அத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என அக்கழகத்தின் செயலாளர் Lok Yim Pheng தெரிவித்தார்.

இம்மாதம் 1ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட ஐந்து நாட்கள் வேலை நேரத்தையொட்டி அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கும் ஐந்து நாட்களே வேலை நேரம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

எனவே, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கான புறப்பாடநடவடிக்கைகள் பள்ளி நாட்களிலே மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.









Mines Resort City-இல் Cheng Ho தளபதியின் கண்காட்சி

பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi, Seri Kembangan Mines Resort City-இல் நேற்று முன்தினம் Cheng Ho தளபதியின் கடல் பயணம் பற்றிய 600-வது ஆண்டு கண்காட்சியை தொடக்கி வைத்தார்.

சுமார் இரண்டு மாதங்கள் வரையில் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியின் மூலம் மலேசிய மக்களுக்கு, 1405-ம் ஆண்டு Cheng Ho மலாக்கா மாநிலத்திற்கு வருகை புரிந்ததை நினைவுகூர வாய்ப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், சீனா மற்றும் மலாயாவின் இடையே ஏற்பட்ட நல்லுறவை பற்றியும் அவர்கள் தெரிந்துக் கொள்ளமுடியும் என பிரதமர் தமதுரையில் தெரிவித்தார்.



போலந்தில் மலேசிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயில பரிசீலனை


மலேசிய மாணவர்கள், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் மேற்படிப்பை தொடர மலேசியா, அவர்களை Poland நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்த எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளும் கல்வி துறையில் சில ஒப்பந்தங்களை கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, தற்போது இவ்விவகாரம் குறித்து பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-யும், Poland நாட்டின் Prof Marek Belka-வும் நேற்று பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இத்திட்டம் குறித்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதை செயலாக்கத்திற்கு கொண்டுவர சில கால அவகாசம் தேவைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க தூதரகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர்


பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு மலேசியா அரசாங்கத்தை பிரதிநிதித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமெரிக்காவின் 229-வது சுதந்திர தினவிழவில் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சி, மலேசியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றதாகவும், இதில் 200-க்கும் மேற்பட்ட அரசியல் தரப்பினர்களும், உள்ளூரிலுள்ள அமெரிக்கர்களும் கலந்து சிறப்பித்தகாக தெரியவந்துள்ளது.
__________________________________________________________________________
மின்னணு தகவல் பரிமாற்றத்திற்குப் பாதுகாப்பு சட்டம்

சென்னையில்,கணினி மூலம் அனுப்பும் தகவல் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் போய் சேருவதை உறுதி செய்வதற்கான மென்பொருளை மின்னணு தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு சட்டம் உருவாக்கியுள்ளது.

வங்கிக் கணக்குகள்,பெரிய நிறுவனங்களின் முக்கிய தகவல்களை, கணிணி மூலம் அனுப்பும்போது, இடையில், வேறு தரப்பினர் அவற்றை பதிவு செய்துக் கொள்ளும் அபாயம் உள்ளது.

இதர மென்பொருட்கள் அதிகப்பட்சமாக, விநாடிக்கு, 2 MP வேகத்தில் செயல்படும். இந்திய நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளின் குறைந்தப்பட்ச வேகமே, விநாடிக்கு 2 MP ஆகும். விநாடிக்கு ,134 MP வேகத்தில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தையும் இதன்மூலம் பாதுகாப்பாக செய்துக்கொள்ள முடியும்.


_________________________________________________________________________

சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனிசியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் நேற்று காலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலநடுக்கத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி அலைகளும் உருவாகவில்லை. ஆனாலும் சுனாமி பீதியில் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

சுனாமி வரும் என்ற பீதியில் அப்பகுதியிலுள்ள மக்கள் வீட்டிற்கு திரும்பாமலேயே உள்ளனர். இந்த வாரத்தில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 2-வது நிலநடுக்கம் இதுவாகும்.





அமெரிக்க பாதுகாப்பிற்கு பலம் பொருந்திய ஆயுதப் படை

IRAG போரை எதிர்கொள்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல் என்ற 2 சிக்கலான செயல்களை ஒரே நேரத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி அமெரிக்க பாதுகாப்பு படையினரிடையே எழுந்துள்ளது.

இது தொடர்பாக, இன்னும் பல வருடங்களுக்கு அமெரிக்க பாதுகாப்பிற்கு பலம் பொருந்திய ஆயுதப் படையை உருவாக்கவும் தயார்படுத்தவும் Pentagon-இல் உள்ள QDR, புதிய செயலாக்க திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு விபரங்களை அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கும்.

இதனிடையே, போதுமான படை பலம், மற்றும் நவீன போர் கருவிகளின் பற்றாக்குறையினாலேயே IRAG-கில் நடந்த போரில் 1,700 இராணுவ வீரர்கள் பலியாகினர் என அமெரிக்க இராணுவப்படை தரப்பினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.



சீனாவில் அடைக்கலம் புகுந்த ஜப்பானியர்களுக்கு இழப்பீடு ரத்து


2-ஆம் உலகப் போருக்குப்பின்,சீனாவில் அடைக்கலமான ஜப்பானியர்கள் சீன அரசிடமிருந்து இழப்பீடு கோர முடியாது என சீன அரசு அறிவித்துள்ளது.

போரில், பெற்றோரை இழந்த ஜப்பானிய சிறுவர்களை சீன குடும்பங்கள் அரவணைத்துக் கொண்டதாலும், ஜப்பானிய வாழ்க்கை முறையில் ஒன்றித்துப் போனதாலும் தற்போது வளர்ந்து பெரியவர்களான அந்த ஜப்பானியர்கள் மீண்டும் ஜப்பானுக்கு சென்றாலும்,மொழி பிரச்சனையால் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்நோக்குகின்றனர்.

இதுவரை அந்நிலைக்கு ஆளான 2000 பேர் 295,000 அமெரிக்க DOLAR-கள் நஷ்ட ஈடு கோரி சீனாவின் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.



Siem Reap விமான நிலையம் மூடப்பட்டது


உலக புகழ் வாய்ந்த Cambodia-வின் Angkor Wat கோயில்களின் நுழைவாயிலில் அமைந்துள்ள Siem Reap விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

Vietnam Airlines Airbus 320 என்ற விமானம், விமான தடத்திலுள்ள சேற்றில் சிக்கிக் கொண்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான, விமானம் தொடர்பான பிரச்னைகளைக் களைய Cambodia-வில் நிபுணர்கள் இல்லையென்றும், தற்போது ஏற்பட்டுள்ள இச்சிக்கலைக் களைய, Cambodia அழைத்திருந்த வெளிநாட்டு நிபுணர்கள் உடனே வர வேண்டியது அவசியம் எனவும் Cambodia விமான நிலையத்தின் துணை இயக்குனர் Mao Sopheap தெரிவித்தார்.

(http://www.vanakkammalaysia.com/webpage_email.php?pg=tamil-070705-ind-cnt)__________________________________________________________________________
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறுகிறது

கோடிக்கணக்கான மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டி 2012ல் லண்டனில் நடக்கவிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த 5 நகரங்கள் போட்டி போட்டன. ஆனால் அவற்றில் லண்டனுக்கே இறுதியில் வெற்றி கிடைத்தது.

பிரிட்டன் முழுவதும் தற்பொழுது விழாக்கோலம் தொடங்கியுள்ளது. 2008-இல் சீன தலைநகர் Beijing-கில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

அதையடுத்து, 2012இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்தவே PARIS, LONDON,MASCOW, MADRID, NEW YORK ஆகிய நகரங்கள் போட்டி போட்டன. ஆனால் இறுதியில் லண்டனுக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது.


நன்றி மலேசியா.காம்


மனோ.ஜி