PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

gragavan
25-07-2005, 07:49 AM
பிரதீபா ஃபோனுல கூப்புட்டா ஏய்யா கட் பண்ணுறீரு.....ரொம்ப பிசியோ!

பரஞ்சோதி
25-07-2005, 07:50 AM
தலை, ஈட்டிங், மீட்டிங் எல்லாம் முடிச்சாச்சா?

பரஞ்சோதி
25-07-2005, 07:57 AM
என்ன யாரும் கேள்வி கேட்கலையா...

வாங்க அறிஞர், என்னுடைய விடை கிடைத்ததா?

அது தலையின் கேள்விகளுக்கான விடை.

மற்றவர்கள் என்றால் வேறு விடை அனுப்பி வைக்கிறேன்.

பரஞ்சோதி
25-07-2005, 07:58 AM
ஜீவா வேறு வந்திருக்கிறார்?

மீண்டும் ஒருமுறை போட்டியிடுங்க ஜீவா.

mania
25-07-2005, 08:25 AM
வாங்க அறிஞர், என்னுடைய விடை கிடைத்ததா?

அது தலையின் கேள்விகளுக்கான விடை.

மற்றவர்கள் என்றால் வேறு விடை அனுப்பி வைக்கிறேன்.

:angry: அது என்னாப்பா எனக்கு மட்டும் தனி வடை.....வெங்காயம் போட்ட மசாலா....வடையா.....இல்லை என்னை என்ன சின்னபையன்னு நினைச்சியா....?:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:

அறிஞர்
25-07-2005, 08:27 AM
:angry: அது என்னாப்பா எனக்கு மட்டும் தனி வடை.....வெங்காயம் போட்ட மசாலா....வடையா.....இல்லை என்னை என்ன சின்னபையன்னு நினைச்சியா....?:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:இல்லை.. சுட்டிபையன், குட்டிபையன் என நினைத்தேன்.......

கேள்வியை ஆரம்பிங்க....

mania
25-07-2005, 08:28 AM
கொஞ்சம் இரு ஈட்டிட்டு வந்திடறேன்....:D
அன்புடன்
மணியா....

gragavan
25-07-2005, 09:02 AM
:angry: அது என்னாப்பா எனக்கு மட்டும் தனி வடை.....வெங்காயம் போட்ட மசாலா....வடையா.....இல்லை என்னை என்ன சின்னபையன்னு நினைச்சியா....?:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:அதான கூட கெட்டித் துவையலும் வெச்சுக்குடு பரஞ்சோதி.

pradeepkt
25-07-2005, 09:16 AM
பிரதீபா ஃபோனுல கூப்புட்டா ஏய்யா கட் பண்ணுறீரு.....ரொம்ப பிசியோ!
எப்படிய்யா, ஆபீசிலதான் என் போனு எடுக்காதே....
நான் எப்படி வெட்ட முடியும்? நானே சாயங்காலம் கூப்பிடுறேன்.

pradeepkt
25-07-2005, 09:17 AM
கொஞ்சம் இரு ஈட்டிட்டு வந்திடறேன்....:D
அன்புடன்
மணியா....
ஏற்கனவே எக்கச்சக்க நல்ல பேரை ஈட்டி இருக்கீங்க.
ரொம்ப ஈட்டாதீங்க... அண்ணா கடுப்பில ஈட்டியோட காத்திருக்காரு.

gragavan
25-07-2005, 09:21 AM
எப்படிய்யா, ஆபீசிலதான் என் போனு எடுக்காதே....
நான் எப்படி வெட்ட முடியும்? நானே சாயங்காலம் கூப்பிடுறேன்.ஓ எட்டாதுல்லா.......அதத்தான வெட்டுதுன்னு நெனச்சேன்....

பரஞ்சோதி
25-07-2005, 09:33 AM
தலை மீட்டிங்கை 30 நிமிடத்தில் முடித்து விடுகிறார், ஈட்டிங்கை 3 மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

mania
25-07-2005, 09:36 AM
தலை மீட்டிங்கை 30 நிமிடத்தில் முடித்து விடுகிறார், ஈட்டிங்கை 3 மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

:angry: :angry: :angry: :angry:
அன்புடன்
மணியா....:D

mania
25-07-2005, 09:41 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 1.........
உயிருடன் இருக்கிறார்......?

அறிஞர்
25-07-2005, 09:41 AM
உண்மையா சொன்னா.. மணியாவுக்கு ஏன் இத்தனை கோபம்...

மணியா ஆரம்பிச்சுட்டார்.... களை கட்டுகிறது....

பரஞ்சோதி
25-07-2005, 09:48 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 1.........
உயிருடன் இருக்கிறார்......?

ஆமாம்

(ரத்த களரியாக போகிறது என்பதை தலை சிவப்பு நிறத்தோடு சுட்டிக் காட்டுகிறார்)

பரஞ்சோதி
25-07-2005, 09:55 AM
இப்போ நான் ஈட்டிங்க், 15 நிமிடத்தில் வருகிறேன்.

mania
25-07-2005, 10:05 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 2.....
ஆண்......?

பரஞ்சோதி
25-07-2005, 10:14 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 2.....
ஆண்......?

ஆமாம்

mania
25-07-2005, 10:20 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 3....
அரசியல் , விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா.....???

பரஞ்சோதி
25-07-2005, 10:21 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 3....
அரசியல் , விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா.....???

ஆமாம்

mania
25-07-2005, 10:29 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 4
கிரிக்கெட் , டென்னிஸ் , செஸ் , ரேஸிங்கில் சம்பந்தப்பட்டவர்.....?

mania
25-07-2005, 10:31 AM
மூன்று முறை ஆமாம் என்று சொன்னதால் பரம்ஸ் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார்...????
சந்தேகத்துடன்
மணியா...

pradeepkt
25-07-2005, 10:33 AM
தலை என்ன ஒரேயடியாத் தாவுறீங்க.

அறிஞர்
25-07-2005, 10:33 AM
மூன்று முறை ஆமாம் என்று சொன்னதால் பரம்ஸ் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார்...????
சந்தேகத்துடன்
மணியா...நீங்க சரியா பாயிண்ட்டை புடித்து கேட்கிறீர்கள் என பெருமை பட வேண்டியதுதான்....

பரஞ்சோதி
25-07-2005, 10:37 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 4
கிரிக்கெட் , டென்னிஸ் , செஸ் , ரேஸிங்கில் சம்பந்தப்பட்டவர்.....?

ஆமாம்

பரஞ்சோதி
25-07-2005, 10:39 AM
மீண்டும் ஆமாம், மேலும் ஒரு முறை விலக்கப்படுகிறேனா?

அறிஞர்
25-07-2005, 10:39 AM
4 வது முறை ஆம்... மணியா கலக்குறீங்க.... வாழ்த்துக்கள்

pradeepkt
25-07-2005, 10:41 AM
மீண்டும் ஆமாம், மேலும் ஒரு முறை விலக்கப்படுகிறேனா?
அண்ணா, தலைக்குத் தனிமடல் ??? :rolleyes:

பரஞ்சோதி
25-07-2005, 10:43 AM
அண்ணா, தலைக்குத் தனிமடல் ??? :rolleyes:

:D :D தம்பீஈஈஈஈஈஇ

mania
25-07-2005, 10:45 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 5
உலக தர பட்டியலில் 15 இடங்களுக்குள் இருக்கிறார்.

பரஞ்சோதி
25-07-2005, 10:47 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 5
உலக தர பட்டியலில் 15 இடங்களுக்குள் இருக்கிறார்.

இல்லை

அறிஞர்
25-07-2005, 10:51 AM
ஆஹா இப்படி புலி மாதிரி பாயுறாரே.. மணியா....

mania
25-07-2005, 10:54 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 6
இப்போதும் இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்....

pradeepkt
25-07-2005, 10:57 AM
:D :D தம்பீஈஈஈஈஈஇ
கோவிச்சுக்காதீங்க அண்ணா.... நீங்க சொன்ன மாதிரி வாயில ஈ போற அளவு திறந்து வைச்சுத் தலையின் திறமையைப் பார்க்கிறேன் :D

pradeepkt
25-07-2005, 10:58 AM
ஆஹா இப்படி புலி மாதிரி பாயுறாரே.. மணியா....
போற போக்குல தலை இன்னும் ரெண்டொரு கேள்வியில நடுவருக்குத் தனிமடல் அனுப்பிருவாரு. நானு?

mania
25-07-2005, 10:58 AM
ஆஹா இப்படி புலி மாதிரி பாயுறாரே.. மணியா....

:rolleyes: இதில் கோந்து இருக்கிறதா....???:D ஆம், இல்லை போதும்....:D
அன்புடன்
மணியா (அறிஞரின் அபிமானி )....:)

பரஞ்சோதி
25-07-2005, 11:14 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 6
இப்போதும் இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்....

இல்லை

பரஞ்சோதி
25-07-2005, 11:16 AM
:rolleyes: இதில் கோந்து இருக்கிறதா....???:D ஆம், இல்லை போதும்....:D
அன்புடன்
மணியா (அறிஞரின் அபிமானி )....:)

ஆம் இல்லை

தலை, அறிஞர் உங்க எதிரணி நினைவில் இருக்கட்டும், ஆமாம்.

gragavan
25-07-2005, 11:17 AM
ஆஹா இப்படி புலி மாதிரி பாயுறாரே.. மணியா....அறிஞரே.....இது கோந்தா? எனக்கு புரிஞ்சி போச்சி....தெரிஞ்சி போச்சி

mania
25-07-2005, 11:25 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 7
இடது கை ஆட்டக்காரர்

பரஞ்சோதி
25-07-2005, 11:28 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 7
இடது கை ஆட்டக்காரர்

இல்லை

pradeepkt
25-07-2005, 11:28 AM
தலை ஏதோ முடிவு பண்ணிட்டுக் கேக்கிற மாதிரியில்ல இருக்கு....

mania
25-07-2005, 11:37 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 8
உலக சாதனையாளர்கள் பட்டியலில் இருக்கிறார்.

gragavan
25-07-2005, 11:40 AM
தலை ஏதோ முடிவு பண்ணிட்டுக் கேக்கிற மாதிரியில்ல இருக்கு....ஆனா தப்பான வழியில போறாரோன்னு எனக்கு ஒரு ஐயம். தல கொஞ்சம் பாத்துக் கேளுங்க. என்னோட சந்தேகத்தை தனிமடலில் அனுப்பவா?

பரஞ்சோதி
25-07-2005, 11:41 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 8
உலக சாதனையாளர்கள் பட்டியலில் இருக்கிறார்.

ஆமாம்

பரஞ்சோதி
25-07-2005, 11:43 AM
ஆனா தப்பான வழியில போறாரோன்னு எனக்கு ஒரு ஐயம். தல கொஞ்சம் பாத்துக் கேளுங்க. என்னோட சந்தேகத்தை தனிமடலில் அனுப்பவா?

அண்ணா, இது தனிப்பட்டவர்களின் திறமையை காணும் போட்டி, இப்படி மாற்றி மாற்றி தனிமடல் அனுப்பினால் ஒருவரது திறமையை வெளியே கொண்டு வரமுடியாது, குழப்பம் தான் வரும்.

தலை சரியான விடை காண்பார், கவலை வேண்டாம். :D

pradeepkt
25-07-2005, 11:45 AM
அண்ணா, இது தனிப்பட்டவர்களின் திறமையை காணும் போட்டி, இப்படி மாற்றி மாற்றி தனிமடல் அனுப்பினால் ஒருவரது திறமையை வெளியே கொண்டு வரமுடியாது, குழப்பம் தான் வரும்.

தலை சரியான விடை காண்பார், கவலை வேண்டாம். :D
அப்ப நானு?????
எனக்கும் தனிமடல் வேணும் :D

gragavan
25-07-2005, 11:49 AM
யாருக்கும் தனிமடல் இல்லை. சிறுத்தொண்டர் சொல்லி விட்டார்.

mania
25-07-2005, 11:50 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் மும்பையை சேர்ந்தவர்

பரஞ்சோதி
25-07-2005, 11:53 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் மும்பையை சேர்ந்தவர்

ஆமாம்

mania
25-07-2005, 12:04 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 10
இவரது மகனும் இப்போது அதே விளையாட்டில் முக்கியமான இளம் ஆட்டக்காரராக இருக்கிறார்.

பரஞ்சோதி
25-07-2005, 12:11 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 10
இவரது மகனும் இப்போது அதே விளையாட்டில் முக்கியமான இளம் ஆட்டக்காரராக இருக்கிறார்.

இல்லை

pradeepkt
25-07-2005, 12:11 PM
தலை நெருங்கறார் நெருங்கறார்.
தர்மக் கேள்வி நிறைய கேளுங்க தலை.

பரஞ்சோதி
25-07-2005, 12:15 PM
தலை தர்ம கேள்விகள் கேட்டு மற்றவர்களுக்கு பாயிண்ட் கிடைத்தால், நீங்க எப்போ முதலிடம் பெறுவது, ஆக யோசித்து கேளுங்கள்.

- பாயிண்ட் பரம்ஸ்

mania
25-07-2005, 12:17 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 11
இவரது பெயரில் ஒரு தமிழ் சினிமா பெயரும் ஒரு தமிழ் நாட்டு கிரிக்கெட் ஆட்டக்காரர் பெயரும் அடங்கியிருக்கும்...

gragavan
25-07-2005, 12:19 PM
இதற்கு தம்பி இல்லை என்று விடை சொன்னால் என்ன செய்வீர்கள்? தர்மக் கேள்வி அதர்மக் கேள்வியாகுமா?

பரஞ்சோதி
25-07-2005, 12:20 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 11
இவரது பெயரில் ஒரு தமிழ் சினிமா பெயரும் ஒரு தமிழ் நாட்டு கிரிக்கெட் ஆட்டக்காரர் பெயரும் அடங்கியிருக்கும்...

இல்லை

(இப்பகுதியில் கேட்கப்பட்ட மிகப்பெரிய கேள்வி இதுவாகத் தான் இருக்கும்)

pradeepkt
25-07-2005, 12:20 PM
ஏற்கனவே எனக்கும் விளையாட்டுக்கும் ஏரோப்ளேன் தூரம், அதனால் தலை கேட்டாலும் டவுட்டுதான்.

gragavan
25-07-2005, 12:21 PM
இல்லை

(இப்பகுதியில் கேட்கப்பட்ட மிகப்பெரிய கேள்வி இதுவாகத் தான் இருக்கும்)கருநாக்கு ராகவா கருநாக்கு ராகவா....இல்லையில்லை. அருள்வாக்கு ராகவா அருள்வாக்கு ராகவா

பரஞ்சோதி
25-07-2005, 12:21 PM
இதற்கு தம்பி இல்லை என்று விடை சொன்னால் என்ன செய்வீர்கள்? தர்மக் கேள்வி அதர்மக் கேள்வியாகுமா?

அண்ணனுக்கு ஏற்ற தம்பி. :D

- தம்பிரான் பரம்ஸ்

gragavan
25-07-2005, 12:30 PM
அண்ணனுக்கு ஏற்ற தம்பி. :D

- தம்பிரான் பரம்ஸ்உரிமைக்குரல், அண்ணன் ஒரு கோயில், தம்பிக்கு ஒரு தாலாட்டு, அண்ணா என் தெய்வம்....

mania
25-07-2005, 12:31 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 12
இவர் கிரிக்கெட் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்....

பரஞ்சோதி
25-07-2005, 12:33 PM
நீரும் நெருப்பும், உரிமைக்குரல், அண்ணன் ஒரு கோயில், தம்பிக்கு ஒரு தாலாட்டு, அண்ணா என் தெய்வம்....

அண்ணா, நீரும், நெருப்பும் மட்டும் வேண்டாமண்ணா. :angry:

pradeepkt
25-07-2005, 12:33 PM
எப்ப கேக்குறாரு பாருங்க இந்தக் கேள்விய... :D

பரஞ்சோதி
25-07-2005, 12:35 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 12
இவர் கிரிக்கெட் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்....

ஆமாம்

gragavan
25-07-2005, 12:36 PM
அண்ணா, XXXXXXXX மட்டும் வேண்டாமண்ணா. :angry:வேண்டாம். நான் எடுத்து விட்டேன். நீயும் எடுத்து விடு.

பரஞ்சோதி
25-07-2005, 12:36 PM
எப்ப கேக்குறாரு பாருங்க இந்தக் கேள்விய... :D

ஏலே பிரதீப்பு என்னலே தலையை போட்டு வாங்குற, சிரிப்பு தாங்க முடியலையப்பு. :D :D :D

பரஞ்சோதி
25-07-2005, 12:38 PM
ஜீவா விடை கண்டுபிடித்தால் அறிஞருக்கு தனிமடலில் அனுப்புங்க, பாயிண்ட் கிடைக்கும்.

mania
25-07-2005, 12:47 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 13
இப்போது நேர்முக வர்ணனையாளராக இருக்கிறார்..

பரஞ்சோதி
25-07-2005, 12:53 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 13
இப்போது நேர்முக வர்ணனையாளராக இருக்கிறார்..

ஆமாம்

mania
25-07-2005, 12:56 PM
என் கேள்விகள் முடிந்தன...விடையை அறிஞருக்கு அனுப்புகிறேன். மற்றவர்களூம் அனுப்பலாம்...
அன்புடன்
மணியா.....

பரஞ்சோதி
25-07-2005, 12:59 PM
நன்றி அண்ணா.

ஆட்டம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

mania
25-07-2005, 01:15 PM
நன்றி அண்ணா.

ஆட்டம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

:) நன்றி பரம்ஸ்.....ஹி...ஹி...ஹி:D (படுத்திட்டாண்டா பரம்சிவம் .....மனசுக்குள்ளே):mad: :mad:
அன்புடன்
மணியா....:D

mania
25-07-2005, 01:18 PM
:D அடுத்த போட்டிக்கு பரம்ஸை கேள்வி கேக்க ப்ரதீப்பை அன்போடு அழைக்கிறேன்....:D .(வா மவனே ).....:mad: :mad:

gragavan
25-07-2005, 02:02 PM
ஹலோ விடையை யாருக்கு அனுப்பவும்

அறிஞர்
25-07-2005, 02:52 PM
இராகவன், பிரதீப் விடைகள் தவறு. தாங்கள் சொன்னவர் மும்பையை சேர்ந்தவர் அல்லவே.. (அது என்ன இரண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கறீங்க)...

மணியாவின் விடை சரியானது....

நாளை மதியம் வரை காத்திருப்போம்.. தேம்பா வந்து விடை கண்டுபிடிக்கிறாரா எனப்பார்ப்போம்

pradeepkt
25-07-2005, 03:03 PM
அப்ப எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கிடையாதா?

pradeepkt
25-07-2005, 03:04 PM
:D அடுத்த போட்டிக்கு பரம்ஸை கேள்வி கேக்க ப்ரதீப்பை அன்போடு அழைக்கிறேன்....:D .(வா மவனே ).....:mad: :mad:
ஏன் தலை இப்படி ஒரு நல்ல எண்ணம் :D

அறிஞர்
25-07-2005, 03:09 PM
அப்ப எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கிடையாதா?ஒருவருக்கு ஒரு சான்ஸ்தான்..
மணியாவின் கேள்விகள் தெளிவாக தானே இருந்தது....

தாங்கள் சொன்னவர் மிகப்பெரிய வர்ணனையாளரும் இல்லை...

தாங்கள் கேள்வி கேளுங்கள்...

pradeepkt
25-07-2005, 03:11 PM
யாருக்குத் தெரியும் சும்மா அடிச்சு விட்டேன்.
ஆமா அண்ணா இன்னும் இருக்கிறாரா? நான் கேள்வி கேட்கலாமா?

அறிஞர்
25-07-2005, 03:30 PM
யாருக்குத் தெரியும் சும்மா அடிச்சு விட்டேன்.
ஆமா அண்ணா இன்னும் இருக்கிறாரா? நான் கேள்வி கேட்கலாமா?அண்ணா சக்தியோட விளையாடுவார்.. அன்பரே...

நாளை தொடருங்கள்..
--
தங்களின் இரண்டாம் விடை சரி.... புள்ளி கிடையாது....
-----

சுவேதா
26-07-2005, 02:19 AM
சகோதரி சிரிக்கிறதைப் பார்த்தால் நான் சொன்னது உண்மை தான் போலிருக்குது.

என்ன போட்டியை மீண்டும் முதலில் இருந்து தொடங்கலாமா?

அதிக முறை போட்டியிட்டு முடிவு வராத சாதனையை நம்ம சுவேதா சகோதரி செய்ய போகிறார். :confused:

அண்ணா நான் மறக்கவில்லை வேணும் என்றால் முதலில் இருந்து ஆரம்பிப்ப்து என்றாலும் நான் தயார் ஆனால் 10 வினாவை நெருங்கிவிட்டோமே அதனால் அதை தொகுத்து அதிலிருந்து தொடர்வம் என்ன சொல்கிறிர்கள் அண்ணா?

சுவேதா
26-07-2005, 02:25 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 1)

சினிமாவை சேர்ந்தவர் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 2)

பெண் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 3)

உயிரோடு இல்லை ?
ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 4)

இவரது மரணம் இயற்கையான மரணம் அல்ல ?
ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 5)

இவருக்கு கருங்குரங்கு இரத்தம் மிகவும் பிடிக்கும் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 6)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் ?

ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 8)

அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ?
ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 9)

தென் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்தவர் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தார் இவர் இறந்த பின்பு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்?
இல்லை!

பரஞ்சோதி
26-07-2005, 05:16 AM
இராகவன், பிரதீப் விடைகள் தவறு. தாங்கள் சொன்னவர் மும்பையை சேர்ந்தவர் அல்லவே.. (அது என்ன இரண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கறீங்க)...

மணியாவின் விடை சரியானது....

நாளை மதியம் வரை காத்திருப்போம்.. தேம்பா வந்து விடை கண்டுபிடிக்கிறாரா எனப்பார்ப்போம்

எல்லாம் தனிமடல் மாயம் என்று அறிஞர் சொல்லாமல் சொல்கிறாரா என்ன? :D

பாராட்டுகள் தலை.

பாம்பேவை சேர்ந்தவர் என்று நச்சென்று ஒரு பாயிண்டை பிடித்து விடை கண்டு விட்டீர்கள்

பரஞ்சோதி
26-07-2005, 05:17 AM
சகோதரி சுவேதா, இன்றைக்கு உங்களுடன் போட்டி இருக்கிறது, மீதி கேள்வியை கேட்கிறேன், அதிலிருந்தே தொடரலாம்.

pradeepkt
26-07-2005, 06:13 AM
சரி, அப்ப நான் நாளைக்கா?

gragavan
26-07-2005, 06:38 AM
எல்லாம் தனிமடல் மாயம் என்று அறிஞர் சொல்லாமல் சொல்கிறாரா என்ன? :D

பாராட்டுகள் தலை.

பாம்பேவை சேர்ந்தவர் என்று நச்சென்று ஒரு பாயிண்டை பிடித்து விடை கண்டு விட்டீர்கள்மடலாவது மெடலாவது? அவனவன் கொடல் கெறங்கி வெட சொன்னா தப்பூன்னுட்டீரே......

சேசன் தமிழ்நாட்டுக்காரர் ஆன மாதிரி நாங்க விடை சொன்னவரும் பம்பாய்க்காரர் ஆயிருக்கலாமுல்ல. அந்த ஊருலதான இருக்காரு.

thempavani
26-07-2005, 06:46 AM
என்னப்பா.... கேள்வி சரியில்லை..

(விடை தெரியாத சோகத்தில்..)

thempavani
26-07-2005, 06:49 AM
தலை கேள்விகள் கேட்டபோது கிரிக்கெட் சம்பந்தமான விடைகளை மனதில் நினைத்த பரம்ஸ் அண்ணாவோடு டூ....

(அது எப்படி தலை மட்டும் மார்க் வாங்கலாம் என்ற நல்லெண்ணம்தான்)

thempavani
26-07-2005, 06:50 AM
ஒருவருக்கு ஒரு சான்ஸ்தான்..
மணியாவின் கேள்விகள் தெளிவாக தானே இருந்தது....

தாங்கள் சொன்னவர் மிகப்பெரிய வர்ணனையாளரும் இல்லை...

தாங்கள் கேள்வி கேளுங்கள்...

:mad: அறிஞரே..ரெம்ப விரைப்பா இருக்கிறீங்க...:mad:

(உங்க தனிமடல் படித்த பின்..)

pradeepkt
26-07-2005, 06:51 AM
இந்தக் கூத்துல எனக்கு ஒரே ஒரு சான்ஸ்தான் கெடச்சுது:mad:

thempavani
26-07-2005, 06:51 AM
அது போதும்பா...

gragavan
26-07-2005, 06:51 AM
எனக்கும் கிரிக்கெட்டும் ரொம்பத் தூரம்.....நான் மதிப்பெண் வாங்கக்கூடாதுன்னு பரம்ஸ் செஞ்ச சதி. இதெல்லாம் விதி.

mania
26-07-2005, 06:52 AM
என்னப்பா.... கேள்வி சரியில்லை..

(விடை தெரியாத சோகத்தில்..)

:D எந்த கேள்விம்மா சரியா இல்லை.....(மாத்திக்கலாமே ):rolleyes:
மதிப்பெண் கிடைத்த மமதையுடன்
மணியா....:D

mania
26-07-2005, 06:55 AM
எனக்கும் கிரிக்கெட்டும் ரொம்பத் தூரம்.....நான் மதிப்பெண் வாங்கக்கூடாதுன்னு பரம்ஸ் செஞ்ச சதி. இதெல்லாம் விதி.

:D :D அதை கவனிச்சியா.....எனக்குன்னாத்தான் அந்த பதிலாம்.....இல்லேன்னா வேற பதிலாம்....:D .அப்போவே முடிவு பண்ணிட்டேன் நான்....(எனக்கு கிரிக்கெட்டை தவிற வேறொன்றும் தெரியாதுன்னு பரம்ஸுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் ):rolleyes:
அன்புடன்
மணியா...:D

thempavani
26-07-2005, 06:58 AM
எல்லாம் தனிமடல்ல பேசினது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சீங்களா தலை...சரி..சரி பொழைச்சுப் போங்க..

(சீ..ச்சீ..இந்த பழம் புளிக்கும்,)

thempavani
26-07-2005, 06:58 AM
:D எந்த கேள்விம்மா சரியா இல்லை.....(மாத்திக்கலாமே ):rolleyes:
மதிப்பெண் கிடைத்த மமதையுடன்
மணியா....:D

எல்லாமே ராங்கா பூச்சுங்கோ...

pradeepkt
26-07-2005, 06:59 AM
:D :D அதை கவனிச்சியா.....எனக்குன்னாத்தான் அந்த பதிலாம்.....இல்லேன்னா வேற பதிலாம்....:D .அப்போவே முடிவு பண்ணிட்டேன் நான்....(எனக்கு கிரிக்கெட்டை தவிற வேறொன்றும் தெரியாதுன்னு பரம்ஸுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் ):rolleyes:
அன்புடன்
மணியா...:D
எத்தனை தெரியும் இங்கே....
ஹ்ம்ம்ம்.. .இருக்கட்டும்... எனக்கும் விளையாட்டுக்குமே ஏரோப்ளேன் தூரம். அதையும் மனதில் வைத்து அண்ணா பழிவாங்கி விட்டார் :angry:
ஆனாலும் நான் ரெண்டாவது தடவை சரியாச் சொன்னேன்... ஒரு பாதி மதிப்பெண்ணாவது கொடுத்திருக்கலாம் :mad:

mania
26-07-2005, 07:06 AM
:D என்னை அந்த ஓட்டு ஓட்டலேன்னா ஏதாவது ரெகமெண்டேஷன் பண்ணியிருப்பேன்......:D
அன்புடன்
மணியா....:D

mania
26-07-2005, 07:09 AM
எத்தனை தெரியும் இங்கே....
ஹ்ம்ம்ம்.. .இருக்கட்டும்... எனக்கும் விளையாட்டுக்குமே ஏரோப்ளேன் தூரம். அதையும் மனதில் வைத்து அண்ணா பழிவாங்கி விட்டார் :angry:
ஆனாலும் நான் ரெண்டாவது தடவை சரியாச் சொன்னேன்... ஒரு பாதி மதிப்பெண்ணாவது கொடுத்திருக்கலாம் :mad:

:confused: உனக்கு ஏரோப்ளேனே கையெட்டும் தூரத்திலே தானே இருக்கு.....???:rolleyes:
சந்தேகத்துடன்
பைலட் மணியா.....:D :D

அறிஞர்
26-07-2005, 07:13 AM
பரம்ஸின் பதில் ரவி சாஸ்திரி.

சரியான விடை கூறியோர் மணியா, தேம்பா..

தவறான விடை (கபில்தேவ்) கூறியோர் பிரதீப், இராகவன்
------
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
மணியா - 6
தேம்பா - 5
இராகவன் - 5
பிரதீப் - 3
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
ஜீவா - 0

pradeepkt
26-07-2005, 07:13 AM
:D என்னை அந்த ஓட்டு ஓட்டலேன்னா ஏதாவது ரெகமெண்டேஷன் பண்ணியிருப்பேன்......:D
அன்புடன்
மணியா....:D
நீங்க ரெகமெண்டேஷன் பண்ணுவேன்னு சொல்லியிருந்தா நான் அந்த ஓட்டு ஓட்டியிருப்பேனா??? :D

பரஞ்சோதி
26-07-2005, 07:14 AM
அடுத்த போட்டிக்கு தம்பி பிரதீப் தயாரா?

அறிஞர்
26-07-2005, 07:14 AM
:mad: அறிஞரே..ரெம்ப விரைப்பா இருக்கிறீங்க...:mad:

(உங்க தனிமடல் படித்த பின்..)இப்படி இருந்ததான்.. எல்லாம் சரியா நடக்கும்...
உங்கள் பதில் சரியானது...

pradeepkt
26-07-2005, 07:17 AM
சரி, அடுத்த போட்டிக்கு நான் தயார்... இதுவும் விளையாட்டு சம்பந்தமா இருந்திரப் போவுது

அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு சம்பந்தப்பட்டவர்?

mania
26-07-2005, 07:18 AM
இப்படி இருந்ததான்.. எல்லாம் சரியா நடக்கும்...
உங்கள் பதில் சரியானது...

:D சபாஷ் தேம்பா....பாராட்டுகள்....:D
அன்புடன்
மணியா.....(என் தனிமடலுக்கு நன்றி சொல்லி பதில் மடல் வரலையே இன்னும் ):rolleyes: :rolleyes: :D

அறிஞர்
26-07-2005, 07:20 AM
சரி, அடுத்த போட்டிக்கு நான் தயார்... இதுவும் விளையாட்டு சம்பந்தமா இருந்திரப் போவுது

அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு சம்பந்தப்பட்டவர்?
அண்ணா என்றால் அறிஞர் அண்ணாத்துரையா....

பதில் எங்கே பரம்ஸ்...

thempavani
26-07-2005, 07:24 AM
இப்படி இருந்ததான்.. எல்லாம் சரியா நடக்கும்...
உங்கள் பதில் சரியானது...

நன்றி அறிஞரே..

pradeepkt
26-07-2005, 07:25 AM
ஐயோ தலை ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பழிவாங்கலை...
அண்ணா அரசியல் சினிமான்னு கேட்டா அப்புறம் நான் தர்மக் கேள்வி கேட்க மாட்டேன் ஆமா...

அறிஞர்
26-07-2005, 07:25 AM
பதில் கிடைத்தது பரம்ஸ்.

இவரை.. உம்முடன் நான் கேட்க நினைத்திருந்தேன்..

thempavani
26-07-2005, 07:25 AM
:D சபாஷ் தேம்பா....பாராட்டுகள்....:D
அன்புடன்
மணியா.....(என் தனிமடலுக்கு நன்றி சொல்லி பதில் மடல் வரலையே இன்னும் ):rolleyes: :rolleyes: :D

அட போங்கய்யா...நீங்களும் உங்க தனிமடலும்..

(:mad: தலை பழி வாங்காதீங்க...கிரிக் இன்போ இணைய தளம் முழுதும் தேடியிருக்கேன்..)

gragavan
26-07-2005, 07:26 AM
பரம்ஸின் பதில் ரவி சாஸ்திரி.

சரியான விடை கூறியோர் மணியா, தேம்பா..

தவறான விடை (கபில்தேவ்) கூறியோர் பிரதீப், இராகவன்
இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வேன்....முழு கர்நாடகாக் காரனை மும்பைக்காரனா ஆக்கீட்டீங்களே.....இதெல்லாம் நியாயமா? இந்தப் போட்டியே செல்லாது. எல்லார் கிட்டயும் ஒரு மார்க்கு திரும்ப வாங்குங்க.....ஒவ்வொரு போட்டிலயும் இப்படி நடக்க விட மாட்டேன். தர்ணா தர்ணா

pradeepkt
26-07-2005, 07:27 AM
ஐயையோ எனக்கு கிரிக்கெட் தெரியாதுன்னு இப்படி ஒரு அநியாயமா?
அண்ணா என் கேள்விக்கென்ன பதில்? அடுத்து பாட்டுப் பாட வேண்டியதுதான்.

thempavani
26-07-2005, 07:28 AM
ஐயோ தலை ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பழிவாங்கலை...
அண்ணா அரசியல் சினிமான்னு கேட்டா அப்புறம் நான் தர்மக் கேள்வி கேட்க மாட்டேன் ஆமா...

எப்பா ஏம்பா உனக்கு இந்த நல்லெண்ணம்...நிறைய தர்மக் கேள்வி கேளுப்பா...நல்ல பிள்ளைல்ல...

pradeepkt
26-07-2005, 07:30 AM
எங்க பதில் சொல்ல வேண்டியவரையே காணோம்...

பரஞ்சோதி
26-07-2005, 07:30 AM
சரி, அடுத்த போட்டிக்கு நான் தயார்... இதுவும் விளையாட்டு சம்பந்தமா இருந்திரப் போவுது

அண்ணாவுடன் கேள்வி 1)
அரசியல் சினிமா விளையாட்டு சம்பந்தப்பட்டவர்?

ஆமாம்

thempavani
26-07-2005, 07:32 AM
இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வேன்....முழு கர்நாடகாக் காரனை மும்பைக்காரனா ஆக்கீட்டீங்களே.....இதெல்லாம் நியாயமா? இந்தப் போட்டியே செல்லாது. எல்லார் கிட்டயும் ஒரு மார்க்கு திரும்ப வாங்குங்க.....ஒவ்வொரு போட்டிலயும் இப்படி நடக்க விட மாட்டேன். தர்ணா தர்ணா

தா + அண்ணா = தர்ணா

pradeepkt
26-07-2005, 07:32 AM
அண்ணாவுடன் கேள்வி 2)
அரசியல்வாதி?

thempavani
26-07-2005, 07:35 AM
நல்ல கேள்வி...இதுபோல் தொடரவும்...

mania
26-07-2005, 07:36 AM
ஐயோ தலை ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பழிவாங்கலை...
அண்ணா அரசியல் சினிமான்னு கேட்டா அப்புறம் நான் தர்மக் கேள்வி கேட்க மாட்டேன் ஆமா...

:confused: :confused: ப்ரதீப்பு தப்பு தப்பா சொல்றயேப்பாஆஆஆஆஆஆ....:rolleyes: .நான் இன்னும் ஆரம்பிக்கலையேஏஏஏஏஏ....:rolleyes: கொடுத்து அறிஞர்.....:D .கொடுத்த பொருள் கோந்து....:D வாங்கியது நீ....ஒட்டுவதும் ஒட்டாமல் இருப்பதும் உன் இஷ்ட்டம்...ஹி....ஹி...ஹி...:D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
26-07-2005, 07:42 AM
அண்ணாவுடன் கேள்வி 2)
அரசியல்வாதி?

ஆமாம்

pradeepkt
26-07-2005, 07:44 AM
அண்ணாவுடன் கேள்வி 3)
ஆண்?

பரஞ்சோதி
26-07-2005, 07:46 AM
அண்ணாவுடன் கேள்வி 3)
ஆண்?

இல்லை

pradeepkt
26-07-2005, 07:47 AM
அண்ணாவுடன் கேள்வி 4)
உயிருடன் இருக்கிறார்?

பரஞ்சோதி
26-07-2005, 07:49 AM
அண்ணாவுடன் கேள்வி 4)
உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்

mania
26-07-2005, 07:51 AM
அண்ணாவுடன் கேள்வி 4)
உயிருடன் இருக்கிறார்?

:D இது அழுகுணி ஆட்டம்....நான் வரலை....எத்தினிவாட்டிப்பா மூணாவது கேள்வி கேப்ப...???/இல்லை இது 3A வா....????
அன்புடன்
மணியா...:rolleyes:
(நான் பதிவதற்குள் 4 என்று மாற்றிவிட்டார் நண்பர்....):D

pradeepkt
26-07-2005, 07:51 AM
அண்ணாவுடன் கேள்வி 5)
தமிழ்நாட்டிலிருந்து எம்.எல்.ஏ, எம்.பி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்? (முன்போ அல்லது இப்போதோ)

pradeepkt
26-07-2005, 07:52 AM
:D இது அழுகுணி ஆட்டம்....நான் வரலை....எத்தினிவாட்டிப்பா மூணாவது கேள்வி கேப்ப...???/இல்லை இது 3A வா....????
அன்புடன்
மணியா...:rolleyes:
(நான் பதிவதற்குள் 4 என்று மாற்றிவிட்டார் நண்பர்....):D
அதான் மாத்திட்டேன்ல... நீங்க இவ்வளவு உஷாரா இருப்பீங்கன்னு யாரு கண்டது?

பரஞ்சோதி
26-07-2005, 07:53 AM
:D இது அழுகுணி ஆட்டம்....நான் வரலை....எத்தினிவாட்டிப்பா மூணாவது கேள்வி கேப்ப...???/இல்லை இது 3A வா....????
அன்புடன்
மணியா...:rolleyes:
(நான் பதிவதற்குள் 4 என்று மாற்றிவிட்டார் நண்பர்....):D

இந்த தில்லுமுல்லு கூட நடக்குதா/:D :D :D

பரஞ்சோதி
26-07-2005, 07:55 AM
அண்ணாவுடன் கேள்வி 5)
தமிழ்நாட்டிலிருந்து எம்.எல்.ஏ, எம்.பி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்? (முன்போ அல்லது இப்போதோ)

இல்லை

mania
26-07-2005, 07:55 AM
அதான் மாத்திட்டேன்ல... நீங்க இவ்வளவு உஷாரா இருப்பீங்கன்னு யாரு கண்டது?

:D :D கண்ணிலே எண்ணையையில்ல விட்டுட்டு உக்கார்ந்திருக்கிறேன்....!!!!!:D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
26-07-2005, 07:57 AM
:D :D கண்ணிலே எண்ணையையில்ல விட்டுட்டு உக்கார்ந்திருக்கிறேன்....!!!!!:D
அன்புடன்
மணியா....

தலை, முதலிடம் நோக்கி - பாராட்டுகள்.

mania
26-07-2005, 07:57 AM
இல்லை

:D :D அட்ரா சக்கை.....அட்ரா சக்கை.....:D
அன்புடன்
மணியா....:D

gragavan
26-07-2005, 08:11 AM
சரி. நான் கொஞ்சம் கடுமையாகவே சொல்கிறேன். விளையாட்டில் அளவிற்கு அதிகமாகவே தவறான தகவல்களை ஒத்துக் கொள்கிறோம். இனிமேல் அப்படி நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

pradeepkt
26-07-2005, 08:16 AM
அண்ணாவுடன் கேள்வி 6)
காங்கிரஸ் அல்லது பாஜகவைச் சேர்ந்திருக்கிறார்?

பரஞ்சோதி
26-07-2005, 08:18 AM
சரி. நான் கொஞ்சம் கடுமையாகவே சொல்கிறேன். விளையாட்டில் அளவிற்கு அதிகமாகவே தவறான தகவல்களை ஒத்துக் கொள்கிறோம். இனிமேல் அப்படி நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

Full name Ravishankar Jayadritha Shastri
Born May 27, 1962, Bombay (now Mumbai), Maharashtra
Current age 43 years 60 days
Major teams India, Glamorgan, Mumbai
Batting style Right-hand bat
Bowling style Slow left-arm orthodox
Other Commentator

அண்ணா, ரவிசாஸ்திரி மும்பைக்காரர்.

6 பந்தில் 6 சிக்ஸர் அடித்தவர் என்ற வகையிலும், ஒரு காலத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற வகையிலும் உலகசாதனை பட்டியலில் இருக்கிறார்.

பரஞ்சோதி
26-07-2005, 08:18 AM
அண்ணாவுடன் கேள்வி 6)
காங்கிரஸ் அல்லது பாஜகவைச் சேர்ந்திருக்கிறார்?

ஆமாம்

pradeepkt
26-07-2005, 08:20 AM
அண்ணாவுடன் கேள்வி 7)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்திருக்கிறார்?

mania
26-07-2005, 08:20 AM
சரி. நான் கொஞ்சம் கடுமையாகவே சொல்கிறேன். விளையாட்டில் அளவிற்கு அதிகமாகவே தவறான தகவல்களை ஒத்துக் கொள்கிறோம். இனிமேல் அப்படி நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

:) முக்கிய பொறுப்பு நடுவருக்கே....அவரின் முடிவே முடிவானதும் கூட...(சரியோ தவறோ ).நமக்கெல்லாம் கடைசியில்தானே தெரியும்.....???:rolleyes:
அன்புடன்
மணியா:)

பரஞ்சோதி
26-07-2005, 08:28 AM
அண்ணாவுடன் கேள்வி 7)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்திருக்கிறார்?

இல்லை

பரஞ்சோதி
26-07-2005, 08:33 AM
ஆரென் அண்ணா விளையாட வருகிறீங்களா?

pradeepkt
26-07-2005, 08:35 AM
அண்ணாவுடன் கேள்வி 8)
எம்.எல்.ஏ, அல்லது எம்.பி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்?

aren
26-07-2005, 08:38 AM
கேரளாவைச் சேர்ந்த ஷைனி அப்ரகாம் அல்லது பிடி உஷா மாதிரி யாராவது இருக்கலாம்.

aren
26-07-2005, 08:40 AM
ஆரென் அண்ணா விளையாட வருகிறீங்களா?

கேள்வியைப் பார்த்தல் பதில் கண்டுபிடிப்பதற்குள் ஒரு ஐந்து பக்கம் வீணாக்கவேண்டும் போலிருக்கிறது.

நேரடியாக கேள்வி கேட்டு அதற்கு சில குளூக்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும். பதில் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும்.

பரஞ்சோதி
26-07-2005, 08:40 AM
அண்ணாவுடன் கேள்வி 8)
எம்.எல்.ஏ, அல்லது எம்.பி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்?

ஆமாம்

mania
26-07-2005, 08:42 AM
உணவருந்த செல்கிறேன். ஒரு மணி நேரம் ஆனாலும் ஆகலாம் :D (பரம்ஸ் கவனிக்க )... அடுத்த கேள்வி எண்.9....10....11.....12....(ப்ரதீப், பரம்ஸ் கவனிக்கவும் ):D
அன்புடன்
வாத்தி மணியா...:D

பரஞ்சோதி
26-07-2005, 08:43 AM
கேள்வியைப் பார்த்தல் பதில் கண்டுபிடிப்பதற்குள் ஒரு ஐந்து பக்கம் வீணாக்கவேண்டும் போலிருக்கிறது.

நேரடியாக கேள்வி கேட்டு அதற்கு சில குளூக்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும். பதில் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும்.

நீங்க சொல்வதும் சரி தான், ஆனால் இது சரியாக மண்டை காய வைக்கும், நிறைய யோசிக்கவே இந்த போட்டி. இதுவரை தவறான பதில் சொன்னவர்கள் மிக மிக குறைவே.

விளையாடி பாருங்க...

pradeepkt
26-07-2005, 08:46 AM
அண்ணாவுடன் கேள்வி 9)
மாநில முதல்வர் அல்லது மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்/இருக்கிறார்?

gragavan
26-07-2005, 08:47 AM
சரி. சரி. நடக்கட்டும். நடக்கட்டும்.

பரஞ்சோதி
26-07-2005, 08:50 AM
அண்ணாவுடன் கேள்வி 9)
மாநில முதல்வர் அல்லது மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்/இருக்கிறார்?

இல்லை

pradeepkt
26-07-2005, 08:57 AM
அண்ணாவுடன் கேள்வி 10)
கணவரை இழந்தவர்?

பரஞ்சோதி
26-07-2005, 09:09 AM
அண்ணாவுடன் கேள்வி 10)
கணவரை இழந்தவர்?

இல்லை

pradeepkt
26-07-2005, 09:21 AM
அண்ணாவுடன் கேள்வி 11)
தற்போது எம் பியாக இருக்கிறார்?

பரஞ்சோதி
26-07-2005, 09:22 AM
அண்ணாவுடன் கேள்வி 11)
தற்போது எம் பியாக இருக்கிறார்?

ஆமாம்

பரஞ்சோதி
26-07-2005, 09:34 AM
தம்பியை காணவில்லை, சாப்பிட சென்ற தலையை காணவில்லை.

என்ன தொலைபேசி வேலை செய்கிறதா?

mania
26-07-2005, 09:37 AM
தம்பியை காணவில்லை, சாப்பிட சென்ற தலையை காணவில்லை.

என்ன தொலைபேசி வேலை செய்கிறதா?

:angry: :angry: :angry:
கடுப்புடன்
மணியா....:angry:

pradeepkt
26-07-2005, 09:37 AM
அண்ணாவுடன் கேள்வி 12)
ராஜஸ்தானிலிருந்து தற்போது எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்?

pradeepkt
26-07-2005, 09:38 AM
தம்பியை காணவில்லை, சாப்பிட சென்ற தலையை காணவில்லை.

என்ன தொலைபேசி வேலை செய்கிறதா?
அதான் வந்திட்டனே.... பதில் சொல்லுங்க.

aren
26-07-2005, 09:39 AM
ஜெயப்ரதா - முன்னாள் நடிகை, இன்றைய எம்.பி. அவர்கள் விளையாட்டிலும் இருந்தாரா? தெரியவில்லை

pradeepkt
26-07-2005, 09:41 AM
ஆரென் உங்கள் பதில்களை நடுவர் அறிஞருக்குத் தனிமடலில் அனுப்பி வையுங்கள்.

பரஞ்சோதி
26-07-2005, 09:45 AM
ஜெயப்ரதா - முன்னாள் நடிகை, இன்றைய எம்.பி. அவர்கள் விளையாட்டிலும் இருந்தாரா? தெரியவில்லை

ஆரென் அண்ணா, விடை தெரிந்தால் நடுவர் அறிஞர் அவர்களுக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும், இங்கே சொன்னால் மற்றவர்களும் அதை சொல்லி புள்ளி (??) பெற்று விடுவார்கள். - இது ஆட்ட விதிமுறை

மொத்தம் 15 கேள்விகள்.

pradeepkt
26-07-2005, 09:49 AM
அண்ணா,
எங்கே தீவிரமா விடை தேடப் போயிட்டீங்களா?

பரஞ்சோதி
26-07-2005, 09:50 AM
அண்ணாவுடன் கேள்வி 12)
ராஜஸ்தானிலிருந்து தற்போது எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்?

ஆமாம்

pradeepkt
26-07-2005, 09:52 AM
அண்ணாவுடன் கேள்வி 13)
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்?

pradeepkt
26-07-2005, 10:01 AM
எங்கே எங்கே எங்கள் அண்ணா!
இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் இல்லை என்றால் புள்ளி உங்களுக்கு!!!

பரஞ்சோதி
26-07-2005, 10:18 AM
அண்ணாவுடன் கேள்வி 13)
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்?

ஆமாம் :D

பரஞ்சோதி
26-07-2005, 10:19 AM
என்ன விடையை அறிஞருக்கு அனுப்பியாச்சா?

தர்ம கேள்விக்காக நம்ம சகோதரி தேம்பா காத்திருக்கிறார்.

pradeepkt
26-07-2005, 10:20 AM
தர்மக்கேள்வி கேக்கட்டா
அண்ணாவுடன் கேள்வி 14)
சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இவர் தனது முப்பத்தெட்டாவது திருமண நாளைக் கொண்டாடினார்?

pradeepkt
26-07-2005, 10:21 AM
எப்படியும் நான் இன்னொரு தர்மக் கேள்வி கேக்கலாமில்ல?
பதினைந்து கேள்விகள் ஆனப்புறம் அறிஞருக்குத் தனிமடல் அனுப்புகிறேன்.

பரஞ்சோதி
26-07-2005, 10:22 AM
தர்மக்கேள்வி கேக்கட்டா
அண்ணாவுடன் கேள்வி 14)
சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இவர் தனது முப்பத்தெட்டாவது திருமண நாளைக் கொண்டாடினார்?

ஆமாம்:D

(தர்ம சாப்பாடு கிடைத்ததா?)

pradeepkt
26-07-2005, 10:24 AM
மக்களுக்காக அடுத்த தர்மக் கேள்வி. அறிஞருக்கு உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

அண்ணாவுடன் கேள்வி 15)
இவருக்கு இதயத்தின் உட்பகுதியைப் படிப்பதென்றால் உயிர்?

பரஞ்சோதி
26-07-2005, 10:32 AM
மக்களுக்காக அடுத்த தர்மக் கேள்வி. அறிஞருக்கு உங்கள் விடைகளை அனுப்பி வையுங்கள்.

அண்ணாவுடன் கேள்வி 15)
இவருக்கு இதயத்தின் உட்பகுதியைப் படிப்பதென்றால் உயிர்?

ஆமாம்

(இது என்ன தர்ம கேள்வியா? தர்ம அடி கிடைக்கும் கேள்வி)

தேம்பா தேறுவது கடினம் தான்.

பாராட்டுகள் தம்பி, இவரது விபரங்களை சரியான பக்கம் உங்களுக்கு கிடைத்திருக்குது, அதான் இந்த ஆட்டம் ஆடுறீங்க.

அடுத்த முறை கவனித்துக் கொள்கிறேன்.

thempavani
26-07-2005, 10:32 AM
நல்லா கேள்வி கேட்டாய் பிரதீப்பு..http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

pradeepkt
26-07-2005, 10:36 AM

எனக்குத் தெரிஞ்சதே ஒண்ணு ரெண்டு பிரிவு பிரபலங்கள்தான்... அதை உபயோகப் படுத்திக்கலைன்னா எப்படி? ஆனால் இதற்கு முந்தி நான் கேட்ட கேள்விகள் எல்லாமே தர்மக் கேள்வி 1-11 வரை உள்ள கேள்விகளை வைத்து மட்டுமே இதற்குப் பதில் சொல்லலாமா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.

போன தடவை என்னைப் பழிவாங்கினாங்க இல்ல... அதான்... ஹா ஹா ஹா...
பிரதீப்பப்பா :D

pradeepkt
26-07-2005, 10:36 AM
நல்லா கேள்வி கேட்டாய் பிரதீப்பு..http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif
நன்றி. விடையை அறிஞருக்கு அனுப்பிட்டீங்களா சகோதரி :D

பரஞ்சோதி
26-07-2005, 10:36 AM
ஆரென் அண்ணாவுக்கு விடை தெரியும் என்று நினைக்கிறேன், அறிஞருக்கு தனிமடலில் அனுப்பி வையுங்க.

அடுத்து, நீங்க ஒருவரை மனதில் நினையுங்கள், அவர் இந்திய அளவில் பிரபலமானவராக இருக்க வேண்டும், நான் கேள்விகள் கேட்கிறேன், ஆம், இல்லை என்று சொல்லுங்க. அல்லது நீங்க கண்டுபிடியுங்கள்.

விளையாட வாங்க அண்ணா.

அறிஞர்
26-07-2005, 10:41 AM
பிரதீப் மட்டுமே விடை அனுப்பியுள்ளார்..

சரியான விடை வாழ்த்துக்கள்.. அன்பரே.
---
மற்றவர்கள் அனுப்புங்கள்...

அறிஞர்
26-07-2005, 10:45 AM
மணியாவின் விடை தவறு
-------
தேம்பா.. சரியாக பதில் கூற முயலுங்கள்.... மணியாவை புள்ளியில் சமன் செய்து விடலாம்...

mania
26-07-2005, 10:49 AM
மணியாவின் விடை தவறு
-------
தேம்பா.. சரியாக பதில் கூற முயலுங்கள்.... மணியாவை புள்ளியில் சமன் செய்து விடலாம்...

:confused: பாவி....ப்ரதீப்....கொக்கு நரி கதை மாதிரி ஆயிடுச்சே.....:D .
அன்புடன்
மணியா....:D

thempavani
26-07-2005, 10:50 AM
நன்றி. விடையை அறிஞருக்கு அனுப்பிட்டீங்களா சகோதரி :D

தேடிக் கொண்டிருக்கிறேன் அண்ணா...இன்னும் சற்று நேரத்தில்...

அறிஞர்
26-07-2005, 10:51 AM
சரியான பதில் கூறி... கரிகாலன்ஜி முதன் முதலாக ஒரு புள்ளி பெறுகிறார்

thempavani
26-07-2005, 10:51 AM
[quote=அறிஞர்]மணியாவின் விடை தவறு
-------
quote]

:D :D :D :D :D நன்றி அறிஞரே..

பரஞ்சோதி
26-07-2005, 10:51 AM
கரிகாலன் அண்ணாவுக்கும் தெரிந்தவர் தான், விடையை அறிஞருக்கு அனுப்புங்க அண்ணா.

அறிஞர்
26-07-2005, 10:51 AM
தேடிக் கொண்டிருக்கிறேன் அண்ணா...இன்னும் சற்று நேரத்தில்... ஆஹா இதுக்கு போய் ஆராய்ச்சியா...

பரஞ்சோதி
26-07-2005, 10:52 AM
சரியான பதில் கூறி... கரிகாலன்ஜி முதன் முதலாக ஒரு புள்ளி பெறுகிறார்

பாராட்டுகள் அண்ணா. அதிக புள்ளிகள் பெற வேண்டும் என்றால் என்னை கேள்வி கேளுங்க, அல்லது நான் கேள்விகள் கேட்க வேண்டும். :D

pradeepkt
26-07-2005, 10:53 AM
:confused: பாவி....ப்ரதீப்....கொக்கு நரி கதை மாதிரி ஆயிடுச்சே.....:D .
அன்புடன்
மணியா....:D
அதென்ன அன்போட திட்டுறீங்க... கவலைப் படாதீங்க தலை... வரும் போட்டியிலிருந்தே நமது தனிமடல் ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது :D

mania
26-07-2005, 10:53 AM
தேடிக் கொண்டிருக்கிறேன் அண்ணா...இன்னும் சற்று நேரத்தில்...

:mad: இதெல்லாம் ஒத்துக்க முடியாது.....கொஞ்ச நேரத்தில் மணியடிக்க கிளம்பிடுவா....:D நாளைக்கு பதில்னு சொல்லுவா...:mad: .அவங்க அறிஞரும் சரியென்று சொல்வார்....:mad: .அழுகுணி ஆட்டை.....:D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
26-07-2005, 10:53 AM
தேடிக் கொண்டிருக்கிறேன் அண்ணா...இன்னும் சற்று நேரத்தில்...

தனிமடலைக்கூட தேடும் படியாகி விட்டதா? உதவியாளருக்கே இந்த நிலையா? :D

pradeepkt
26-07-2005, 10:54 AM
தேடிக் கொண்டிருக்கிறேன் அண்ணா...இன்னும் சற்று நேரத்தில்...
கேள்வி கேட்டது நான்... நீங்க அண்ணாவுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கீங்க...
என்னா ஆராய்ச்சி.

pradeepkt
26-07-2005, 10:55 AM
சரியான பதில் கூறி... கரிகாலன்ஜி முதன் முதலாக ஒரு புள்ளி பெறுகிறார்
வாழ்த்துகள் கரிகாலன் அண்ணா!

mania
26-07-2005, 10:55 AM
[quote=அறிஞர்]மணியாவின் விடை தவறு
-------
quote]

:D :D :D :D :D நன்றி அறிஞரே..

:angry: பாருங்கைய்யா சந்தோஷத்தை.....!!!!:angry:
அன்புடன்
மணியா.....:D

pradeepkt
26-07-2005, 10:56 AM
மணியாவின் விடை தவறு
-------

:D :D :D :D :D நன்றி அறிஞரே..
என்னா நல்லெண்ணம்....

அறிஞர்
26-07-2005, 10:56 AM
:mad: இதெல்லாம் ஒத்துக்க முடியாது.....கொஞ்ச நேரத்தில் மணியடிக்க கிளம்பிடுவா....:D நாளைக்கு பதில்னு சொல்லுவா...:mad: .அவங்க அறிஞரும் சரியென்று சொல்வார்....:mad: .அழுகுணி ஆட்டை.....:D
அன்புடன்
மணியா....பொதுவாக நான் பதிலை அடுத்த நாள் தான் சொல்வேன். வெளி நாடுகளில் இருக்கும் அன்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம் அல்லவா....

ஒரு பதில் தப்பா சொன்னதுக்கு ஏன் இந்த ஆர்பாட்டம்... தேம்பா மணியாவை கொஞ்சம் கவனி...

mania
26-07-2005, 10:57 AM
வாழ்த்துகள் கரிகாலன் அண்ணா!

:) பாராட்டுகள் கரிகாலன்....:)
அன்புடன்
மணியா....

pradeepkt
26-07-2005, 10:58 AM
:mad: இதெல்லாம் ஒத்துக்க முடியாது.....கொஞ்ச நேரத்தில் மணியடிக்க கிளம்பிடுவா....:D நாளைக்கு பதில்னு சொல்லுவா...:mad: .அவங்க அறிஞரும் சரியென்று சொல்வார்....:mad: .அழுகுணி ஆட்டை.....:D
அன்புடன்
மணியா....
ஆமா ஆமா, அழுகுணி ஆட்டை கண்டிக்கப் பட வேண்டியது...
அதற்கு பார் போற்றும் ஐவரணி சார்பாக நானும் என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர்
26-07-2005, 10:58 AM
அடுத்த போட்டியில்.. கரிகாலன்ஜி யாரையாவது நினைத்துக்கொள்ளுங்கள். (பதிலை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்).

தங்களிடம் பரம்ஸ் கேள்விகளை கேட்பார்.

mania
26-07-2005, 11:00 AM
என்னா நல்லெண்ணம்....

:rolleyes: சித்தே இருன்றாளே.....இதயம் நல்லெண்ணை சித்ராவோ.....:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes: :D

பரஞ்சோதி
26-07-2005, 11:01 AM
:rolleyes: சித்தே இருன்றாளே.....இதயம் நல்லெண்ணை சித்ராவோ.....:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes: :D

கணவருக்காக சித்ராவா, தேம்பா அவ்வளவு குண்டா? வேண்டாம் தலை, கண்டனக்கணைகள் பாயும்.

pradeepkt
26-07-2005, 11:01 AM
:rolleyes: சித்தே இருன்றாளே.....இதயம் நல்லெண்ணை சித்ராவோ.....:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes: :D
இப்ப சித்ரா போயி ஜோதிகா வந்தாச்சு.
இப்ப இதுக்கு நீங்க சகோதரியை ஏதாச்சும் கிண்டல் அடிச்சா, நான் பொறுப்பில்லை.:D

mania
26-07-2005, 11:02 AM
:angry: "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் "........ஆமாம் உடனே விடை தெரியணும்.....:D
கண்டிப்புடன்
மணியா....:D

pradeepkt
26-07-2005, 11:03 AM
கணவருக்காக சித்ராவா, தேம்பா அவ்வளவு குண்டா? வேண்டாம் தலை, கண்டனக்கணைகள் பாயும்.
நல்லெண்ணெய் சித்ரா, இப்பக் கணவருக்காக சித்ராவா ஆயாச்சா... வெளங்கினாப்புலதான்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி "பொண்டாட்டி ராஜ்யம்" அப்படின்னு ஒரு படம். அதில சித்ரா அடிக்கடி ரஞ்சிதாவை "பாரதி! கொஞ்சம் உள்ள வாயேன்" என்று கூப்பிட்டுக் கணவனுக்கு எதிராகச் செய்யும் உபதேசங்கள் பிரசித்தம்.

mania
26-07-2005, 11:05 AM
கணவருக்காக சித்ராவா, தேம்பா அவ்வளவு குண்டா? வேண்டாம் தலை, கண்டனக்கணைகள் பாயும்.

:D :D இல்லை பரம்ஸ்......தேம்பாவை கம்பேர் பண்ணும்போது சித்ரா ஒல்லி என்றார் சேரன்.....!!!!!:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
26-07-2005, 11:05 AM
மன்றத்தில் இருந்தால் அதிகபட்டம் 5 நிமிடங்களில் விடை காண வேண்டும்.

(ஆமாம் 5 நிமிடத்தில் தனிமடல் திறக்கும் தானே..)

அறிஞர்
26-07-2005, 11:05 AM
:angry: "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் "........ஆமாம் உடனே விடை தெரியணும்.....:D
கண்டிப்புடன்
மணியா....:Dதனிமடலில் அனுப்புகிறேன்

pradeepkt
26-07-2005, 11:06 AM
தனிமடலில் அனுப்புகிறேன்
ஆ... இங்கேயும் தனிமடலா?

அறிஞர்
26-07-2005, 11:09 AM
ஆ... இங்கேயும் தனிமடலா?வேறு என்ன பண்ணுவது... பறக்கிறாரே.. மணியா..

--------
இராகவன் விடை சரியானது

pradeepkt
26-07-2005, 11:11 AM
வேறு என்ன பண்ணுவது... பறக்கிறாரே.. மணியா..

--------
இராகவன் விடை சரியானது
ராகவனும் விடை அனுப்பி இருக்காரா...
நல்ல வேளை தனிமடல் வேலை செஞ்சது... இல்லன்னா என்ன ஆயிருக்கும்... :D

mania
26-07-2005, 11:17 AM
ராகவனும் விடை அனுப்பி இருக்காரா...
நல்ல வேளை தனிமடல் வேலை செஞ்சது... இல்லன்னா என்ன ஆயிருக்கும்... :D

:mad: எப்போவும் ஒரே விடை சொல்ற அப்பு, குப்புதானே நீங்க.....:mad:
அன்புடன்
மணியா...:D

gragavan
26-07-2005, 11:18 AM
ராகவனும் விடை அனுப்பி இருக்காரா...
நல்ல வேளை தனிமடல் வேலை செஞ்சது... இல்லன்னா என்ன ஆயிருக்கும்... :Dஏய்யா! இப்படி ரெண்டையும் ஒண்ணா சொல்றீங்க....தனித்தனி போஸ்டிங்குல போட வேண்டியதுதானே......

pradeepkt
26-07-2005, 11:19 AM
:mad: எப்போவும் ஒரே விடை சொல்ற அப்பு, குப்புதானே நீங்க.....:mad:
அன்புடன்
மணியா...:D
தலை திறமையே திறமை.
என்ன அருமையாகக் கண்டு புடிச்சிருக்கீங்க...???
:D

அறிஞர்
26-07-2005, 11:20 AM
அடுத்த போட்டிக்கான விடையை பரம்ஸ் அனுப்பியுள்ளார்... கேள்வி கேட்க போவது யாரு? தேம்பாவா...

pradeepkt
26-07-2005, 11:20 AM
ஏய்யா! இப்படி ரெண்டையும் ஒண்ணா சொல்றீங்க....தனித்தனி போஸ்டிங்குல போட வேண்டியதுதானே......
ஆமாய்யா.. தப்புப் பண்ணிப்புட்டேன்... ஒழுங்கா ரெண்டையும் தனித்தனியாப் போட்டிருந்தா தலை கண்டு புடிச்சிருக்க மாட்டாரே...

gragavan
26-07-2005, 11:20 AM
:mad: எப்போவும் ஒரே விடை சொல்ற அப்பு, குப்புதானே நீங்க.....:mad:
அன்புடன்
மணியா...:Dயாரு அப்பு? யாரு குப்பு?
நாழி உப்பும் நாழி அப்பும் நாழி அப்பே! அப்பேன்!

pradeepkt
26-07-2005, 11:21 AM
அண்ணா யாரு கேள்வி கேக்குறதுக்காக இப்போ அறிஞருக்கு அனுப்பி இருக்கீங்க... ஆரென் அண்ணா, கரிகாலன் அண்ணா, சகோதரி தேம்பா?

பரஞ்சோதி
26-07-2005, 11:24 AM
யாரு அப்பு? யாரு குப்பு?
நாழி உப்பும் நாழி அப்பும் நாழி அப்பே! அப்பேன்!

ஏற்கனவே தலை, உங்க பாஷை புரியலை என்று சொல்வார், நீங்க இப்படி சொன்னால் எப்படி புரியும். :D

தேம்பா எஸ்கேப்பூ....

பரஞ்சோதி
26-07-2005, 11:26 AM
சரி, இராகவன் அண்ணாவே கேட்கட்டும்.

thempavani
26-07-2005, 11:27 AM
அறிஞரே பதில் அனுப்பி நாளியாச்சே...சரியா என்னோட பதில்..

(தலையை முந்தணும்...)

thempavani
26-07-2005, 11:27 AM
இருங்க இருங்க..பொறுமையா வாசிச்சு பதில் சொல்றேன்...

thempavani
26-07-2005, 11:29 AM
நன்றி. விடையை அறிஞருக்கு அனுப்பிட்டீங்களா சகோதரி :D

கோபத்தில் சொன்னது அண்ணா எனது வார்த்தைகள்...பின்னே பிரதீப்பு தம்பியாச்சே..திட்டமுடியுமா என்ன..

thempavani
26-07-2005, 11:30 AM
:confused: பாவி....ப்ரதீப்....கொக்கு நரி கதை மாதிரி ஆயிடுச்சே.....:D .
அன்புடன்
மணியா....:D

:D டண்டக்க..டண்டக்க...;) ;)

pradeepkt
26-07-2005, 11:30 AM
இருங்க இருங்க..பொறுமையா வாசிச்சு பதில் சொல்றேன்...
என்னத்தை வாசிச்சு...
தனிமடல்???

thempavani
26-07-2005, 11:32 AM
ஆஹா இதுக்கு போய் ஆராய்ச்சியா...

தலையே தவறான பதில் சொல்லிட்டாரே..அதான் பல பக்கங்கள் தேடி...தேர்தல் ஆணையத்தின் இணையத்தை புரட்டி பதில் கண்டுபிடித்தேன்

பரஞ்சோதி
26-07-2005, 11:32 AM
தேம்பா சகோதரி, கேள்விகள் நீங்க கேட்கிறீங்களா? அல்லது நான் கேட்கட்டுமா?

thempavani
26-07-2005, 11:33 AM
என்னத்தை வாசிச்சு...
தனிமடல்???

குசும்பு உனக்கு...உங்க தலைக்கு இந்த முறை தனிமடல் அனுப்பலியா

thempavani
26-07-2005, 11:33 AM
தேம்பா சகோதரி, கேள்விகள் நீங்க கேட்கிறீங்களா? அல்லது நான் கேட்கட்டுமா?

அண்ணா இன்று நான் செய்திகள் தயாரிக்க வேண்டும்...ரெக்கார்டிங் உள்ளது..மன்னித்துக் கொள்ளூங்கள்...

gragavan
26-07-2005, 11:34 AM
ஏற்கனவே தலை, உங்க பாஷை புரியலை என்று சொல்வார், நீங்க இப்படி சொன்னால் எப்படி புரியும். :D

தேம்பா எஸ்கேப்பூ....உப்பு புளின்னு தமிழ்ளதான சொல்லீருக்கேன். அப்புறமென்ன...சரி வெளக்குறேன்.

நாழி உப்பை நாழி அப்பில் (தண்ணீரில்) கலந்தால் இரண்டு நாழி தண்ணீர் கிடைக்காது. நாழி அப்புதான் கிடைக்கும். அப்பேன் என்று தலையை மரியாதையாக அழைத்தேன்.

mania
26-07-2005, 11:34 AM
என்னத்தை வாசிச்சு...
தனிமடல்???

:rolleyes: அதான் மேட்டரு......:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:

அறிஞர்
26-07-2005, 11:35 AM
அறிஞரே பதில் அனுப்பி நாளியாச்சே...சரியா என்னோட பதில்..

(தலையை முந்தணும்...)எங்க முந்தறது.. உம் பதில் தவறு... ஆதாரம் கொடுத்தாலும் பரம்ஸ் நினைத்தவர் வேறு. பிரபலமானவர்.

thempavani
26-07-2005, 11:35 AM
:rolleyes: அதான் மேட்டரு......:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:

ஆமா உங்க மேட்டரு...

pradeepkt
26-07-2005, 11:35 AM
தேம்பா சகோதரி, கேள்விகள் நீங்க கேட்கிறீங்களா? அல்லது நான் கேட்கட்டுமா?
அண்ணா திருவிளையாடல் சிவாஜி மாதிரி கேக்குறார் பாருங்க...
அக்காவுக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்னு நினைக்காதீங்க. இந்த விளையாட்டில அவங்களுக்குப் பதில் சொல்லவும் தெரியும்

thempavani
26-07-2005, 11:36 AM
எங்க முந்தறது.. உம் பதில் தவறு... ஆதாரம் கொடுத்தாலும் பரம்ஸ் நினைத்தவர் வேறு. பிரபலமானவர்.

:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ராஜஸ்தானில் இரு பெண்கள்தானே லோக்சபாவில் உள்ளனர்...

mania
26-07-2005, 11:37 AM
அண்ணா இன்று நான் செய்திகள் தயாரிக்க வேண்டும்...ரெக்கார்டிங் உள்ளது..மன்னித்துக் கொள்ளூங்கள்...

:rolleyes: :confused: செய்திகளை சேகரி தாயே......தயாரிக்காதே....????:D
அன்புடன்
மணியா....:D

thempavani
26-07-2005, 11:37 AM
:mad: :mad: சரி சரி..அறிஞரே பதிலைச் சொல்லுங்க...:mad:

(தலை சந்தோசமா?????????)

pradeepkt
26-07-2005, 11:37 AM
எங்க முந்தறது.. உம் பதில் தவறு... ஆதாரம் கொடுத்தாலும் பரம்ஸ் நினைத்தவர் வேறு. பிரபலமானவர்.
அப்படியே சரியாச் சொல்லி இருந்தாலும் தலையைச் சமன் வேணாப் பண்ணி இருக்கலாம்.
முந்துறதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்...

thempavani
26-07-2005, 11:38 AM
:rolleyes: :confused: செய்திகளை சேகரி தாயே......தயாரிக்காதே....????:D
அன்புடன்
மணியா....:D

ரெம்ப சிரிக்காதீங்க ...:mad: :mad:

pradeepkt
26-07-2005, 11:38 AM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ராஜஸ்தானில் இரு பெண்கள்தானே லோக்சபாவில் உள்ளனர்...
இதுக்குத்தானே அந்த கேள்வி கேட்டது.
கொஞ்சம் லேட்டரல் திங்கிங் வேணும்க்கா... :D

தேம்பா: பிரதீப்பு... கொஞ்சம் ஓவராத் தெரியலை:mad:

பரஞ்சோதி
26-07-2005, 11:38 AM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ராஜஸ்தானில் இரு பெண்கள்தானே லோக்சபாவில் உள்ளனர்...

தேர்தல் கமிஷனின் தேடும் போதே எனக்குத் தெரியும் தேம்பாவுக்கு முட்டை தான் என்று, தலை வாழ்க.

mania
26-07-2005, 11:40 AM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ராஜஸ்தானில் இரு பெண்கள்தானே லோக்சபாவில் உள்ளனர்...

:D :D :D :D ரண்டக்க.....ரண்டக்க.....லகலகலகலகலக.......
ஆனந்தத்துடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
26-07-2005, 11:41 AM
:D :D :D :D ரண்டக்க.....ரண்டக்க.....லகலகலகலகலக.......
ஆனந்தத்துடன்
மணியா...:D :D

இரட்டை சந்தோசமா?

அந்தியனையும், சந்திரமுகியையும் ஜோடி சேர்த்துவிட்டீங்க :D

thempavani
26-07-2005, 11:42 AM
மொத்த அணியும் எனக்கு எதிராக சதி செய்துவிட்டது...நாளைக்கு நான் போட்டிக்கு வருகிறேன்..அப்போ பார்ப்போம்...

thempavani
26-07-2005, 11:44 AM
:rolleyes: :confused: செய்திகளை சேகரி தாயே......தயாரிக்காதே....????:D
அன்புடன்
மணியா....:D

தலை செய்தியை அப்படியே சேகரித்து வாசிப்பதல்ல எங்கள் பணி..அதனை எங்கள் பாணிக்கு(style) ஏற்ப மாற்றவேண்டும்..அதனால்தான் செய்தி தயாரிக்க வேண்டும் என்றேன்...

pradeepkt
26-07-2005, 11:44 AM
அப்ப இன்னைக்கு யாரு...

gragavan
26-07-2005, 11:46 AM
மொத்த அணியும் எனக்கு எதிராக சதி செய்துவிட்டது...நாளைக்கு நான் போட்டிக்கு வருகிறேன்..அப்போ பார்ப்போம்...சதிலீலாவதியா?

பரஞ்சோதி
26-07-2005, 11:47 AM
இராகவன் அண்ணா,கேள்வியை தொடங்குங்கள்.

gragavan
26-07-2005, 11:47 AM
அப்ப இன்னைக்கு யாரு...நானில்லை.........சாந்தரம் பிரியனப் பாக்கப் போகனும்...

gragavan
26-07-2005, 11:47 AM
இராகவன் அண்ணா,கேள்வியை தொடங்குங்கள்.யாரக் கேக்க...சொல்லுங்க...கேக்குறேன். நடுவர் யாரு?

pradeepkt
26-07-2005, 11:54 AM
நானில்லை.........சாந்தரம் பிரியனப் பாக்கப் போகனும்...
அட கேள்விகளை முடிந்த அளவு கேட்டுட்டுப் பிரியனப் பாக்கப் போங்களேன்...
பரம்ஸ் அண்ணா ஏற்கனவே விடையை அனுப்பிட்டார்.
அதனால இப்ப கேள்விகள்தான் பாக்கி

gragavan
26-07-2005, 11:55 AM
சரி சரி. கேக்குறேன்.

பரஞ்சோதி - கேள்வி - 1

அரசியல் அல்லது விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
26-07-2005, 11:56 AM
சரி சரி. கேக்குறேன்.

பரஞ்சோதி - கேள்வி - 1

அரசியல் அல்லது விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

இல்லை