PDA

View Full Version : தமிழே! வணக்கம்



simsonpeter
05-07-2005, 06:10 PM
தமிழே! வணக்கம், தமிழ் மன்றத்திற்கு வணக்கம்.
நான் சிம்சோன். பெல்ஜியத்தில் வசிக்கிறேன்.

சுவேதா
05-07-2005, 06:24 PM
வாருங்கள் வாருங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களையும் அள்ளித்தாருங்கள்.
உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

பிரியன்
05-07-2005, 09:54 PM
வாருங்கள் சிம்சோன்.தமிழ்மன்றத்தில் இணைந்துள்ள தாங்கள் படைப்புகளை படித்து- படைத்து பயன்பெற அன்புடன் வாழ்த்துகிறேன்

அறிஞர்
06-07-2005, 02:51 AM
வாருங்கள் சிம்சோன்... பல நாட்டிலுள்ள தமிழர்களை.. இங்கு காண்பது மகிழ்ச்சியை தருகிறது.... தங்கள் வரவு நல்வரவாகட்டும்

பரஞ்சோதி
06-07-2005, 05:35 AM
வருக வருக சிம்சோன்,

உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களால் பெல்ஜியம் நாட்டையும், தமிழர்களையும் பற்றிதெரிந்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.

நீங்க தமிழீலத்தை சேர்ந்தவரா?

gragavan
06-07-2005, 06:56 AM
வணக்கம் சிம்சோன். உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

பெல்ஜியம் நாடு அழகும் வனப்பும் மிகுந்தது. நான்காண்டுகளுக்கு முன்பு அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆண்ட்வெர்ப் நகரில் தங்கியிருந்தேன். அங்கேயிருந்த ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம்தான் என்னுடைய பொழுது போக்கிற்கு தமிழ்ப்பட காசெட்டுகளை மிகவும் குறைந்த வாடகைக்குத் தந்து உதவினார்கள். பெல்ஜியத்தில் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?

pradeepkt
06-07-2005, 07:25 AM
வணக்கம் சிம்சோன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மன்மதன்
06-07-2005, 07:39 AM
பெல்ஜியத்திலிருந்து மன்றத்திற்கு வருகை தரும் சிம்சோன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் ..
அன்புடன்
மன்மதன்

kavitha
06-07-2005, 11:52 AM
சிம்சன் பீட்டர் அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி :) வருக;
நல்ல பதிவுகளைத் தருக.

simsonpeter
06-07-2005, 06:56 PM
அடடா வரவேற்பு அமர்க்களமாக இருக்கிறதே.
வணக்கம் ராகவன். நான் அன்ட்வேர்பனில் தான் இருக்கிறேன். சொந்த இடம் யாழ்ப்பாணம். நீங்கள் குறிப்பிட்ட நபரை எனக்குத் தெரியும்.

இராசகுமாரன்
09-07-2005, 07:25 AM
வாருங்கள் சைமன்பீட்டர் அவர்களே..

நம் நண்பர்களுடன் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து மகிழுங்கள்.