PDA

View Full Version : சுவேதாவின் (சுட்ட) நகைச்சுவை துணுக்குகள்.

சுவேதா
05-07-2005, 01:00 AM
* கனவன் : என் அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?

மனைவி :அவங்கதாங்க இனிமே நான் வாயே திறக்கப் போறதில்லைனு சொன்னாங்க!

* பஸ் ஸ்டாண்டில் கணவனும் மனைவியும்...

மனைவி : வீட்டு வேலை எல்லாத்தையும் என்னால பார்க்க முடியலங்க. ஒரு வேலைக்காரி வெச்சுக்கட்டுமா?

கனவன் : (கிண்டலாக ) ??தாராளமா வெச்சுக்கோ... வேலைக்காரியை நீ வெச்சுக்கிட்டா தப்பு இல்ல. நான் வெச்சுக்கிட்டாதான் தப்பு.

மனைவி : உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு. ஆடிஅடங்குன அம்பது வயசுக்காரியா பார்த்து வெச்சுக்கறேன், அப்பதான் சேஃப்டியா இருக்கும்!

பரஞ்சோதி
05-07-2005, 05:03 AM
சகோதரி வேலைக்காரி சிரிப்பு அருமை.

மேலும் கொடுங்கள்.

மன்மதன்
05-07-2005, 05:55 AM
முதல் சுட்ட தோசை அருமை. அடுத்த வந்தது கெட்ட தோசை ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

சுவேதா
05-07-2005, 02:44 PM
குப்புசாமி : சுந்தரத்தானின் மனுசிக்கு கழுத்து வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் "வெயிற்றை" குறைக்கச்சொல்லி சொல்லுகிறாராம்

ராமசாமி : சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்?

குப்புசாமி : டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம்

ராமசாமி : அப்ப எதையாம் ?

குப்புசாமி : சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம்.

ராமசாமி : ???!!!...

சுவேதா
05-07-2005, 02:48 PM
சகோதரி வேலைக்காரி சிரிப்பு அருமை.

மேலும் கொடுங்கள்.

:):):)

அறிஞர்
06-07-2005, 02:02 AM
முதல் இரண்டு ஜோக்குகளும் அருமை... வேலைக்காரிக்கு 50 வயசுன்னா... அவருக்கு வேலை செய்ய ஆள் தேவைப்படுமே....

மூன்றாம் ஜோக்.. சிங்களத்தமிழ் சிரிப்பாக.. ரசிக்கமுடிந்தது...

mythili
06-07-2005, 04:47 AM
மூன்று ஜோக்குகளுமே அருமை சுவேதா!!!...

தொடர்ந்து ஜோக்குகளை வீசு :)

அன்புடன்,
மைத்து

சுவேதா
06-07-2005, 11:41 AM
பரம்ஸ்,மன்மதன்,அறிஞர் அண்ணன்மாருக்கும்,அக்கா மைதிலிக்கும் நன்றி.

சுவேதா
07-07-2005, 02:55 AM
குப்புசாமி : எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பியூட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு, திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண...

ராமசாமி : பிள்ளையாரிட்டதானே 'மவுஸ் (எலி )" இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம் பண்ணப் போறான் போல கிடக்கு.

குப்புசாமி : ???!!!...

அறிஞர்
07-07-2005, 03:01 AM
சிங்களத்தமிழில் அடுத்த கம்புயூட்டர்.. மவுஸ் சிரிப்பு அருமை..

பரஞ்சோதி
07-07-2005, 04:42 AM
கலக்குங்க சகோதரி, கலக்குங்க.

thempavani
07-07-2005, 10:08 AM
நல்ல சிரிப்பு சுவேதா...தொடந்து கொடு..சிரித்து மகிழ்கிறோம்..

சுவேதா
07-07-2005, 11:40 AM
தங்கள் ஆணைப்படி அப்படியே ஆகட்டும்.....

pradeepkt
07-07-2005, 11:42 AM
தங்கள் ஆனைப்படி அப்படியே ஆகட்டும்.....
யக்கோவ், உங்கள் ஆனை எங்க இருக்கு? :D

சுவேதா
07-07-2005, 11:48 AM
தொழுவத்தில கட்டி இருக்கு வேணுமா??

சுவேதா
10-07-2005, 12:28 PM
குப்புசாமி : உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள்.

ராமசாமி : என்ன பண்பாடு?

குப்புசாமி : "ரீ" "யூஸ்" குடிக்கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே...

சுவேதா
10-07-2005, 12:34 PM
ராமசாமி : ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம்.

குப்புசாமி : ஏன்! எங்கட ஆட்களும் வருசா வருசம் ஐரோப்பாவில வெள்ளோட்டம் விடுகினம் தானே!

ராமசாமி : என்னத்தை விடுகினம்?

குப்புசாமி : 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே.

ராமசாமி : ????!!!...

pradeepkt
10-07-2005, 05:17 PM
குப்புசாமி : உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள்.
ராமசாமி : என்ன பண்பாடு?
குப்புசாமி : "ரீ" "யூஸ்" குடிக்கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே...
இதைப் படித்துக் கொண்டிருந்த
பிரதீப்: :confused:

சுவேதா
10-07-2005, 05:31 PM
:):):):)

சுவேதா
14-07-2005, 02:32 AM
சுப்பன் : நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது!
அப்பன் : ஏன்?
சுப்பன் : நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்...

சுவேதா
14-07-2005, 02:34 AM
சுப்பன் : ஐரோப்பிய நாட்டில் வாழும் எங்கட பெண்டுகள் இப்ப தங்கட இனத்தவரை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினமாம்.

அப்பன் : தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம் எண்டு சொல்லுங்கோ !

சுப்பன் : கலாச்சாரம் கிலாச்சாரம் கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம்.

pradeepkt
14-07-2005, 05:07 AM
சுப்பன் : நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது!
அப்பன் : ஏன்?
சுப்பன் : நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்...
அப்பன்: சுப்பா, உங்கட மனைவி பேர் என்ன?
சுப்பன்: சுவேதா!

(பி.கு: இது எதிர்காலத்தில் நடந்தது)

gragavan
14-07-2005, 05:23 AM
சுட்ட நகைச்சுவையிலேயே இட்ட நகைச்சுவை பிரதீப்போடது. ம்ம்ம்ம்ம். சுவேதா பாவம்.

pradeepkt
14-07-2005, 05:33 AM
சுட்ட நகைச்சுவையிலேயே இட்ட நகைச்சுவை பிரதீப்போடது. ம்ம்ம்ம்ம். சுவேதா பாவம்.
சுவேதாவா பாவம்...?? அது சரி.

சுசி
14-07-2005, 11:39 AM
மிகவும் அருமை. ரசிக்கும்படி இருந்தது. பாராட்டுக்கள். ஜமாயுங்கள்.

சுவேதா
14-07-2005, 01:47 PM
அப்பன்: சுப்பா, உங்கட மனைவி பேர் என்ன?
சுப்பன்: சுவேதா!

(பி.கு: இது எதிர்காலத்தில் நடந்தது)

அண்ணா....:confused: :confused: :confused: :eek: :eek: :eek: :mad: :mad: :mad: :eek: :eek: :eek:

pradeepkt
14-07-2005, 01:55 PM
அண்ணா....:confused: :confused: :confused: :eek: :eek: :eek: :mad: :mad: :mad: :eek: :eek: :eek:
சரி சரி சரி கோவப்படாத... இனிமே உன்னைப் பத்தி உண்மை பேசினா என்னை என்னன்னு கேளு, ஓகே>?

சுவேதா
14-07-2005, 02:00 PM
சரி சரி சரி கோவப்படாத... இனிமே உன்னைப் பத்தி உண்மை பேசினா என்னை என்னன்னு கேளு, ஓகே>?

அண்ணா வேனா.... :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

சுவேதா
16-07-2005, 01:49 AM
அப்பு : (கொஞ்சம் பெருமையாக) பாருங்கோவன் என்னுடைய பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து வரப்போறதால நானிந்த வயதிலை இங்கிலீஸ் படிக்க ஓடித்திரியிறன்.

சுப்பு : (மிகவும் பெருமையாக) உங்களுக்குப்பரவாயில்லை. நான் பிரெஞ்சு, டொச்சு, இங்கிலீசு என மூன்று பாசையெல்ல படிக்க வேண்டியிருக்கு. என்ர மூன்று பேரப்பிள்ளைகளும் மூன்று நாட்டிலேயெல்லே இருக்குதுகள்.

அப்பு : :rolleyes: :rolleyes:!!!!!!

pradeepkt
16-07-2005, 06:41 AM
தமிழ் நாட்டில் யாரும் இல்லையா என்ன?

சுவேதா
16-07-2005, 01:20 PM
அவங்கள தான் கேக்கனும்!

சுவேதா
17-07-2005, 11:50 PM
நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?

சிஸ்டர் : ஆமா,

நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?

சிஸ்டர் : போட்டாச்சு

நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும்.

அறிஞர்
23-07-2005, 07:10 AM
நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும்.யாரந்த அறிவாளி நோயாளி..... இராகவனின் நண்பனோ.....

பரஞ்சோதி
23-07-2005, 09:21 AM
யாரந்த அறிவாளி நோயாளி..... இராகவனின் நண்பனோ.....

அது இருக்கட்டும், டாக்டர் யார் தெரியுமா, நம்ம அறிஞர், அதான் சந்தேகத்தில் கேட்கிறார்.

அறிஞர்
23-07-2005, 09:38 AM
அது இருக்கட்டும், டாக்டர் யார் தெரியுமா, நம்ம அறிஞர், அதான் சந்தேகத்தில் கேட்கிறார்.அது சரி.. நோயாளிக்கும், நர்ஸுக்கும் இடையே பேச்சு.. அதில் டாக்டர் எங்கு வந்தார்...

பரஞ்சோதி
23-07-2005, 10:25 AM
தையலை யார் போட்டிருப்பாங்க? டாக்டர் தானே, அந்த டாக்டர் அறிஞர் தானே.

suma
23-07-2005, 01:10 PM
பரம்ஸ் நல்ல காலம் டாக்டரை பத்தி சொன்னீங்க நான் சில சந்தேகம் கேட்க இருந்தேன்.. தப்பிச்சேன்..

suma
23-07-2005, 01:14 PM
சுவேதா நல்லா சுட்டு போடறீங்க நல்லா இருக்கு இன்னும் நிறைய சுட்டும் சுடாமலும் போட வாழ்த்துக்கள்

சுவேதா
23-07-2005, 01:35 PM
நன்றி அக்கா!

சுவேதா
23-07-2005, 01:36 PM
யாரந்த அறிவாளி நோயாளி..... இராகவனின் நண்பனோ.....

இருக்கலாம் அண்ணா!

pradeepkt
23-07-2005, 02:18 PM
யாரந்த அறிவாளி நோயாளி..... இராகவனின் நண்பனோ..... எதிரணியில் இருந்தாலும் ராகவனின் நண்பர்கள் என்பதை அறிஞர் எவ்வளவு அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறார்?
சரியாகச் சொன்னீர்... எதிரணிக்காரர்கள் அனைவரும் ராகவனின் நண்பர்கள்தான்.

pradeepkt
23-07-2005, 02:19 PM
அது சரி.. நோயாளிக்கும், நர்ஸுக்கும் இடையே பேச்சு.. அதில் டாக்டர் எங்கு வந்தார்...
நர்ஸ் வேலைக்குத்தான் உங்க அணியில் நிறைய பேர் இருக்கிறார்களே...

சுவேதா
23-07-2005, 02:25 PM
நர்ஸ் வேலைக்குத்தான் உங்க அணியில் நிறைய பேர் இருக்கிறார்களே...

அண்ணா வாட் போய்க்கு இடம் இருக்கு நீங்க வாரிங்களா??:D

pradeepkt
23-07-2005, 02:30 PM
அண்ணா வாட் போய்க்கு இடம் இருக்கு நீங்க வாரிங்களா??:D
அட அதுக்குத்தான் உங்க அணியில் புதுசா ஒருத்தர் சேர்ந்திருக்காரே... :D

சுவேதா
23-07-2005, 02:33 PM
சீச்சீ... அந்த வேலை எல்லாம் அவருக்கு சரிப்பட்டு வராது அதனால்தான் உங்களிடம் கேட்கின்றேன்...

pradeepkt
24-07-2005, 07:10 AM
சீச்சீ... அந்த வேலை எல்லாம் அவருக்கு சரிப்பட்டு வராது அதனால்தான் உங்களிடம் கேட்கின்றேன்...
அந்த வேலை கூட அவருக்குச் சரிப்பட்டு வராது என்று சுவேதா கூறுவதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
போ.கு.
பிரதீப்

பரஞ்சோதி
24-07-2005, 07:30 AM
பரம்ஸ் நல்ல காலம் டாக்டரை பத்தி சொன்னீங்க நான் சில சந்தேகம் கேட்க இருந்தேன்.. தப்பிச்சேன்..

:) :D :D :)

நீங்க புத்திசாலி சகோதரி, ஆனா இன்னமும் சுவேதா மாதிரி ஏமாளிகள் இருக்கிறதை நினைத்தால் கஷ்டமாக இருக்குது.

suma
24-07-2005, 12:59 PM
சுவேதாவின் சுட்ட துணுக்கு வில் துக்கு என எனக்கு தெரியுது. யாரே துணுக்குல இருந்த "ணு" வை சுட்டுப்புட்டாங்கய்யா.............

pradeepkt
25-07-2005, 05:31 AM
அக்கா,
உலகத்துக்கே அப்படித்தான் தெரியுது. நீங்க என்ன விதிவிலக்கு :D

சுவேதா
26-07-2005, 01:01 AM
சுவேதாவின் சுட்ட துணுக்கு வில் துக்கு என எனக்கு தெரியுது. யாரே துணுக்குல இருந்த "ணு" வை சுட்டுப்புட்டாங்கய்யா.............

அதையும் உங்க அணிகாரர்கள்தான் திருடியிருப்பாங்க அவங்கல விசாரிச்சா தெரியும்!

சுவேதா
26-07-2005, 01:03 AM
அக்கா,
உலகத்துக்கே அப்படித்தான் தெரியுது. நீங்க என்ன விதிவிலக்கு :D

அட திருடிப் போட்டு விதிவிலக்கென்று வேற சொல்கிறிங்களா???:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
26-07-2005, 04:31 AM
அதையும் உங்க அணிகாரர்கள்தான் திருடியிருப்பாங்க அவங்கல விசாரிச்சா தெரியும்!

அப்போ, சுமா சகோதரியை எங்க அணி என்று அடித்து சொல்லுறீங்க.

pradeepkt
26-07-2005, 05:14 AM
அப்போ, சுமா சகோதரியை எங்க அணி என்று அடித்து சொல்லுறீங்க.
சரி சரி, ஒரு தடவை உண்மையைச் சொல்லிட்டுப் போகட்டுமே...
சுவேதா ஆனது ஆச்சு, தலைப்பை மாத்த வேண்டியதுதானே...

சுவேதா
26-07-2005, 01:02 PM
அப்போ, சுமா சகோதரியை எங்க அணி என்று அடித்து சொல்லுறீங்க.

அய்யோ அண்ணா சுமா அக்கா எந்த அணி குழப்புதே???? எனக்கு அவர் எந்த அணி என்று தெரியாத்தால் வந்த குழப்பம் இது!

thempavani
26-07-2005, 01:07 PM
சரி சரி, ஒரு தடவை உண்மையைச் சொல்லிட்டுப் போகட்டுமே...
சுவேதா ஆனது ஆச்சு, தலைப்பை மாத்த வேண்டியதுதானே...

எப்பு மாத்தியாச்சு...

சுவேதா
26-07-2005, 01:24 PM
நன்றி அக்கா!

aren
26-07-2005, 02:36 PM
சுப்பன் : நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது!
அப்பன் : ஏன்?
சுப்பன் : நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்...

இது உண்மைதானே. நம் மக்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

aren
26-07-2005, 02:37 PM
அப்பு : (கொஞ்சம் பெருமையாக) பாருங்கோவன் என்னுடைய பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து வரப்போறதால நானிந்த வயதிலை இங்கிலீஸ் படிக்க ஓடித்திரியிறன்.

சுப்பு : (மிகவும் பெருமையாக) உங்களுக்குப்பரவாயில்லை. நான் பிரெஞ்சு, டொச்சு, இங்கிலீசு என மூன்று பாசையெல்ல படிக்க வேண்டியிருக்கு. என்ர மூன்று பேரப்பிள்ளைகளும் மூன்று நாட்டிலேயெல்லே இருக்குதுகள்.

அப்பு : :rolleyes: :rolleyes:!!!!!!

இதுக்கு பேருதான் செம்ம அடி என்பது. நல்ல சிரிப்பு. தொடருங்கள்.

aren
26-07-2005, 02:38 PM
நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?

சிஸ்டர் : ஆமா,

நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?

சிஸ்டர் : போட்டாச்சு

நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும்.

நிச்சயம் ஒழுகும், ஆனால் கொஞ்ச நேரமாகவேண்டும்.

aren
26-07-2005, 02:40 PM
அதையும் உங்க அணிகாரர்கள்தான் திருடியிருப்பாங்க அவங்கல விசாரிச்சா தெரியும்!

எதையெல்லாம் திருடுகிறார்கள், பாருங்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.

சுவேதா
27-07-2005, 02:47 AM
பிரதீப் : நானும் புதுவருடத்தில் இருந்து புது திடசங்கற்பம் எடுக்கப்போறன்.
இராகவன் : என்ன திடசங்கற்ப்பம்?
பிரதீப் : வாங்கின கடணை திருப்பி கொடுப்பதில்லை எண்டு.
இராகவன் : ???!!!...

thempavani
27-07-2005, 04:57 AM
ராகவன்: எங்க அணியில யாருக்குமே அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சுவேதாவுக்கு தெரியலையே...

(500 ரூவா மறக்குமா...)

பரஞ்சோதி
27-07-2005, 05:35 AM
ராகவன்: எங்க அணியில யாருக்குமே அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சுவேதாவுக்கு தெரியலையே...

(500 ரூவா மறக்குமா...)

500 இன்னமும் மறக்கலையா?

அது என்ன கடனா என்ன, அது அன்பு தான் காரணம்.

thempavani
27-07-2005, 06:19 AM
ராகவன் அண்ணா: எங்கஷ்டம் எனக்குதான சாமி தெரியும்...

சுவேதா
27-07-2005, 03:22 PM
ராகவன்: எங்க அணியில யாருக்குமே அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சுவேதாவுக்கு தெரியலையே...

(500 ரூவா மறக்குமா...)

அது என்ன 500 ரூ????
யார் கடன் வாங்கினது???
யார் இடம் இருந்து??
யார் திருப்பி கொடுக்கவில்லை???:rolleyes: :rolleyes:

புரியாது கேட்கும்
சுவேதா

சுவேதா
28-07-2005, 01:17 AM
விமானப் பயணி : நீங்க சொன்ன மாதிரியே கண்ணுக்கு ஜனங்கள் எல்லோரும் எறும்பு எறும்பாகத்தான் தெரியராங்க இந்த உயரத்திலே..

விமானி : நீ ஒண்ணு. இன்னும் விமானம் புறப்படவே இல்லை. தரையிலேதான் இருக்குது. உன் கண்ணுக்குத் தெரிவது நிஜமான எறும்புகள்தான்.

சுவேதா
29-07-2005, 12:22 PM
ஆமா அந்த 500 என்ன சொல்லவே இல்லையே.....

pradeepkt
29-07-2005, 12:31 PM
அது ஒரு பெரிய கதை, நீ பழைய மன்றத்தில படிக்கலாம்.
மக்கா, யாராவது அதைத் தூசிதட்டிப் புது மன்றத்தில போடுங்களேன்

சுவேதா
29-07-2005, 12:48 PM
ஓ பழைய மன்றத்தில என்ன பகுதியில இருக்கு??

gragavan
29-07-2005, 12:55 PM
ராகவன்: எங்க அணியில யாருக்குமே அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சுவேதாவுக்கு தெரியலையே...

(500 ரூவா மறக்குமா...)ஐநூறைக் கண்டவுடன் ஐ நூறு எனக் குதித்து வருவார்கள் எனச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்வதைப் பற்றி நினைத்து ஒரு முடிவிற்கு வருவதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் யாரும் முழித்துக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று யார் கூறுவார்கள் என எதிர் நோக்குகின்றீர்கள்?

சுவேதா
29-07-2005, 12:58 PM
என்ன அண்ணா ஒன்னும் புரியலையே.....

pradeepkt
29-07-2005, 01:13 PM
உங்க அண்ணா என்னைக்கும்மா புரியுற மாதிரி பேசியிருக்காரு....????
செய்யுள் எழுதுற மாதிரியே பேசிக்கிட்டு இருக்காரு..?

சுவேதா
29-07-2005, 01:15 PM
:):):):)

சுவேதா
29-07-2005, 02:08 PM
பாண்டி : " நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?

கோபால்: "குட்டி இளவரசரிடம் 'நீ குட்'பாயா...'பேட்'பாயா?'ன்னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்னு பதில் சொன்னாராம்!

பரஞ்சோதி
30-07-2005, 05:11 AM
ஓ பழைய மன்றத்தில என்ன பகுதியில இருக்கு??

அய்யோ! அதை கொடுத்தால் நீங்க எங்க தலையை போட்டு வாங்குவீங்களே! :D

சரி தேடி தருகிறேன்.

பரஞ்சோதி
30-07-2005, 05:18 AM
சுவேதா சகோதரிக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4456

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467)

மேலே இருப்பதை பார்த்து, படித்து கருத்துகள் சொல்லவும்.

pradeepkt
30-07-2005, 10:38 AM
கருத்து வேறயா...
சொல்லீருவாளே

சுவேதா
30-07-2005, 01:15 PM
அய்யோ! அதை கொடுத்தால் நீங்க எங்க தலையை போட்டு வாங்குவீங்களே! :D

சரி தேடி தருகிறேன்.
அப்படி என்ன போட்டுவாங்குகின்ற விஷயம் .சரி சரி பார்த்துவிட்டு வாரேன்!

சுவேதா
30-07-2005, 01:17 PM
சுவேதா சகோதரிக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4456

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467)

மேலே இருப்பதை பார்த்து, படித்து கருத்துகள் சொல்லவும்.

நன்றி அண்ணா தேடித் தந்ததற்கு. படித்து சொல்லத்தானே இருக்கின்றேன் நிச்சயமாக சொல்வேன்!

சுவேதா
30-07-2005, 01:19 PM
கருத்து வேறயா...
சொல்லீருவாளே

ஆமாம் கருத்துதான் நிச்சயமாக சொல்லுவேனே.....:D :D

சுவேதா
31-07-2005, 02:46 AM
ஆகா... என்ன அண்ணா இது ஒரு 500 ரூபாய்க்கு இந்த பாடா:D:D:D:D

ஆனாலும் கலக்கல் தான் முதலில் எனக்கு அதை படிக்கும் போது எதுவும் புரியவில்லை. பின்பு 1 தரத்திற்கு 2 தரம் வாசித்தேன். அதுவும் பொண்ட் வேலை செய்யவில்லை பின்பு ஒவ்வொண்டாக காப்பி பேஸ்ட் பண்ணித்தான் படித்தேன்
ஆமா எங்க போனாலும் அந்த போண்டாவ விடமாட்டிர்களா???

பாவம் சேரன் அண்ணா கரிகாலன் அண்ணா! :) பின் முதுகு காட்டிட்டு ரிவேசில போகினம். :) நான் வாசிக்கும் போதே நினைத்தேன் அறிஞர் அண்ணாதான் மேனேஜர் என்று. ஹி..ஹி... ஆமா மன்மதன் எங்கு சென்றாலும் அவருக்கு போண்டாதானா???
பரம்ஸ் அண்ணா இராகவன் அண்ணா சொல்கின்றார் அவர் ஊர் காரங்களோட பழகக் கூடாதாம் என்று அப்பா சொன்னாராம். பாத்திங்களா அத கண்ணால சொல்கின்றார்!

டீ கடை சூப்பர் அது சரி தாத்தாவுக்கும் வேலை கிடைக்கலயா?? இராகவன் அண்ணா புதிர் மாதிரி எல்லா கேள்விகளும் கேட்டாரே... அவருக்கு வேலை உண்டா இருந்தாலும் அதற்கு மேனேஜர் அறிஞர் அண்ணாதானே....

இன்னும் இப்படி எழுதலாமே வாசிக்க நன்றாக இருக்கிறது ஒவ்வொருவருடைய கருத்தும் படித்து சிரித்து களைத்து விட்டேன்!

வாழ்த்துக்கள் அண்ணா!

gragavan
31-07-2005, 06:26 AM
எல்லாம் பரஞ்சோதியின் எழுத்துத் திறமை. என்னவோ இப்பொழுது எழுதுவதில்லை. நீயாவது ஊக்குவித்துப் பார்.

aren
31-07-2005, 12:41 PM
ஆகா... என்ன அண்ணா இது ஒரு 500 ரூபாய்க்கு இந்த பாடா:D:D:D:D

:) நான் வாசிக்கும் போதே நினைத்தேன் அறிஞர் அண்ணாதான் மேனேஜர் என்று. ஹி..ஹி... ஆமா மன்மதன் எங்கு சென்றாலும் அவருக்கு போண்டாதானா???
!

நீங்கள் எந்த அறிஞர் அண்ணாவை சொல்கிறீர்கள்.

சுவேதா
31-07-2005, 02:32 PM
நீங்கள் எந்த அறிஞர் அண்ணாவை சொல்கிறீர்கள்.

நான் எங்கள் அறிஞர் அண்ணாவைத்தான் கூறினேன்!

சுவேதா
31-07-2005, 02:34 PM
எல்லாம் பரஞ்சோதியின் எழுத்துத் திறமை. என்னவோ இப்பொழுது எழுதுவதில்லை. நீயாவது ஊக்குவித்துப் பார்.

:):):) சரி.

சுவேதா
31-07-2005, 11:54 PM
ஆமா பரம்ஸ் அண்ணா ஏன் இப்பொழுது கதை எழுதுவதில்லை நேரம் இல்லையா?? இல்லை எழுத பஞ்சியா?? உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனக்காக ஒரு கதை எழுதுங்களேன் படிக்க நன்றாக இருக்கிறது. உங்கள் அடுத்த கதைக்காக காத்திருக்கும்

உங்கள் தங்கை
உங்கள் எழுத்தின்
ரசிகை!

சுவேதா
05-08-2005, 02:06 AM
நோயாளி : (டாக்டரிடம்) அடிக்கடி என் கனவிலே யானை வருது டாக்டர் பயமா இருக்குது.

டாக்டர் : ஒரு மாத்திரை தர்றேன் சாப்பிடுங்க. கூடவே யானை பாகனும் வருவான். பிறகு பயமே இருக்காது

pradeepkt
05-08-2005, 03:57 AM
நோயாளி : (டாக்டரிடம்) அடிக்கடி என் கனவிலே யானை வருது டாக்டர் பயமா இருக்குது.

டாக்டர் : ஒரு மாத்திரை தர்றேன் சாப்பிடுங்க. கூடவே யானை பாகனும் வருவான். பிறகு பயமே இருக்காது

நோயாளி: டாக்டர் உங்க பேர் சுவேதாவா?
டாக்டர்: அட எப்படிக் கண்டு பிடிச்சீங்க..??
:) :) :)

சுவேதா
12-08-2005, 01:58 AM
நோயாளி: டாக்டர் உங்க பேர் சுவேதாவா?
டாக்டர்: அட எப்படிக் கண்டு பிடிச்சீங்க..??
:) :) :)

நோயாளி : இல்ல உங்க அறிவு திறன பார்க்கும் போதே தெரியுது நீங்க ஒரு நல்ல டாக்டர் சுவேதா என்று!

சுவேதா : ஓ அப்படியா!

சுவேதா
14-08-2005, 01:43 AM
அப்பு : ''இந்த ஊர்லயே எங்க கிளினிக் தான் சகல வசதிகளும் நிறைஞ்ச கிளினிக்.''

சுப்பு: ''எப்படிச் சொல்றீங்க?''

அப்பு : ''நீங்களே பாருங்களேன். பக்கத்திலேயே தந்தி ஆபீஸ் இருக்கு. எதிரிலேயே புரோகிதர் வீடு இருக்கு. இவ்வளவு ஏன் சுடுகாடு கூட நடக்கிற தூரத்துலதான் இருக்கு!''

சுப்பு: !!!!!

thempavani
14-08-2005, 03:14 AM
ஆனால் அந்த மருத்துவமனையில் ஆட்கள்(நோயாளிகள்) இருக்க மாட்டார்களாமே சுவேதா....உண்மையில் நன்றாக சிரிக்கவைக்கிறாய்

சுவேதா
14-08-2005, 03:44 AM
:):):)நன்றி அக்கா

pradeepkt
14-08-2005, 06:13 AM
எங்கிருந்துதான் இதெல்லம் சுடறியோ தெரியலை... :)

சுவேதா
14-08-2005, 01:02 PM
:D:D:D:D:D..உங்க வீட்டிலான்..

சுவேதா
18-08-2005, 01:44 AM
"குரங்கை மையமாக வைத்து படம் பண்ணப்போறேன்...... டைட்டில் சொல்லு...!"

"சொறிந்தும் சொறியாமலும்!''

சுவேதா
18-08-2005, 01:49 AM
''உன்னுடைய ஆபரேஷனுக்கு டாக்டர் 3 லட்சம் கேட்டாரே, கடைசியா எப்படி இலவசமாக செஞ்சாரு?''

''ஆபரேஷன் தியேட்டருக்குள்ள அவர் கத்தியை எடுத்தாரு. நான் முதுகுப் பக்கத்தில் இருந்து அரிவாளை எடுத்தேன். அவ்வளவு தான்!''

சுவேதா
22-08-2005, 03:44 AM
இதை யாரும் பாக்கல???

பரஞ்சோதி
22-08-2005, 04:28 AM
சகோதரி, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

என்னமோ போங்க, நீங்க உண்மையில் ஒரு டாக்டர் தான், அடிக்கடி சிரிப்பு மருந்து கொடுக்கிறீங்க தானே.

பரஞ்சோதி
22-08-2005, 04:33 AM
ஆமா பரம்ஸ் அண்ணா ஏன் இப்பொழுது கதை எழுதுவதில்லை நேரம் இல்லையா?? இல்லை எழுத பஞ்சியா?? உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனக்காக ஒரு கதை எழுதுங்களேன் படிக்க நன்றாக இருக்கிறது. உங்கள் அடுத்த கதைக்காக காத்திருக்கும்

உங்கள் தங்கை
உங்கள் எழுத்தின்
ரசிகை!

கண்டிப்பாக எழுதுகிறேன் சகோதரி, நீங்க தானே முக்கிய கதாபாத்திரம்.

ஆமாம் பஞ்சியா என்றால் சோம்பேறித்தனமா?

ஏன்னா, நம்ம பிரதீப் ரொம்ப பஞ்சியா இருக்கிறார்.

மன்மதன்
22-08-2005, 04:44 AM
சமீபத்தில் விகடனில் வெளியான உன் (குரங்கு ) ஜோக்ஸ் 'சொறிந்தும் சொறியாமலும்' ரசிக்கும் படி இருந்தது சுவேதா .. :D
அன்புடன்
மன்மதன்

suma
22-08-2005, 11:43 PM
"சின்ன வயசுலே சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்!"
"அப்புறம் என்ன செய்தீங்க?"
''டிபனா தின்று காலம் தள்ளினேன்.''

suma
22-08-2005, 11:46 PM
''ஆபீஸ்ல எனக்கு மாத சம்பளத்துக்கு பதிலா தினக்கூலி தந்தா நல்லாயிருக்கும்!''
''எதுக்கு?''
''என் மனைவிகிட்ட எனக்கு ஒண்ணாந்தேதி மட்டும்தான் மதிப்பு இருக்கு!''
-மலர்சூர்யா (பாக்யா)

pradeepkt
23-08-2005, 02:59 PM
சுவேதா: டாக்டர், விபத்துக்கப்புறம் என் தலைய ஸ்கேன் பண்ணிப் பாத்தீங்களே, பயப்படுற மாதிரி ஏதாவது இருக்கா?
டாக்டர் பிரதீப்: கவலைப் படாதே சுவேதா! உன் தலையில ஒண்ணுமே இல்லை...

மன்மதன்
24-08-2005, 04:37 AM
டாக்டர் சாப்.. அபப்டியே தேம்பா, கவிதாவுக்கு ஸ்கேன் பண்ணித்தான் பார்த்திடுங்களேன் :D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
24-08-2005, 08:08 AM
அதைத்தான் ஸ்கேன் பண்ணாமலே சொல்லாலாமே...

டாக்டர் பிரதீப்

Mathu
24-08-2005, 02:29 PM
ஆஹா சுமா மீண்டும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார், டாட்டர் பிரதீப்பிடம் போகவேண்டி வரலாம்.....:)
நண்பர்களே போங்கள் ஆனால் ஸ்கேன் மட்டும் எடுக்க ஒத்துக்கொள்ளாதீர்கள். ;)

பிரதீப், சுமா அசத்துங்க....

பரஞ்சோதி
25-08-2005, 04:34 AM
மது நீங்க மட்டும் அடிக்கடி வந்தீங்கன்னா, சொல்ல வேண்டாம்.

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

சுவேதா
25-08-2005, 11:07 PM
சகோதரி, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

என்னமோ போங்க, நீங்க உண்மையில் ஒரு டாக்டர் தான், அடிக்கடி சிரிப்பு மருந்து கொடுக்கிறீங்க தானே.

:):):) நன்றி அண்ணா!

சுவேதா
25-08-2005, 11:10 PM
கண்டிப்பாக எழுதுகிறேன் சகோதரி, நீங்க தானே முக்கிய கதாபாத்திரம்.

ஆமாம் பஞ்சியா என்றால் சோம்பேறித்தனமா?

ஏன்னா, நம்ம பிரதீப் ரொம்ப பஞ்சியா இருக்கிறார்.

நீங்கள் எழுதுகிறேன் என்றதுக்கு நன்றிகள் பல. ஆமா நானா காதாப்பாத்திரம்?? ஆமாம் அண்ணா பஞ்சி என்றால் சோம்பேறித்தனம்தான்!:)

சுவேதா
25-08-2005, 11:13 PM
சமீபத்தில் விகடனில் வெளியான உன் (குரங்கு ) ஜோக்ஸ் 'சொறிந்தும் சொறியாமலும்' ரசிக்கும் படி இருந்தது சுவேதா .. :D
அன்புடன்
மன்மதன்

ம்ம் அருமையான ஜோக்ஸ்தான் நானும் படித்து சிரித்துதான் உங்களையும் சிரிக்க வைக்க போட்டேன்!

சுவேதா
25-08-2005, 11:19 PM
சுவேதா: டாக்டர், விபத்துக்கப்புறம் என் தலைய ஸ்கேன் பண்ணிப் பாத்தீங்களே, பயப்படுற மாதிரி ஏதாவது இருக்கா?
டாக்டர் பிரதீப்: கவலைப் படாதே சுவேதா! உன் தலையில ஒண்ணுமே இல்லை...

சுவேதா : ஆமா டாக்டர் நீங்க படிச்சு பாஸ்பண்ணி வந்திங்களா? இல்லை பணம் கொடுத்து பாஸ்பண்ணி வந்திங்களா??

டாக்டர் பிரதீப் :(மனதினுள்) இவளுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்:rolleyes: :rolleyes:

சுவேதா : ஹலோ! டாக்டர்

டாக்டர் பிரதீப் : ஏன் அப்படி கேக்கிறிங்க??

சுவேதா : இல்லை ஸ்கான் பண்ணிப் பார்த்தும் எதுவும் இல்லை என்றால் உங்களுக்கு கண்ணில் கோளாரு இருக்கனும் இல்லை உங்களுக்கு அதை பற்றி தெரியாதா?? அதுதான் கேட்டேன்!

டாக்டர் பிரதீப் : :eek: :eek:

pradeepkt
26-08-2005, 05:17 AM
:D :D :D

மன்மதன்
27-08-2005, 04:26 AM
ஹாஹ்ஹா.. எப்படி சுவேதா இதெல்லாம் :D :D

பரஞ்சோதி
27-08-2005, 05:17 AM
ஹாஹ்ஹா.. எப்படி சுவேதா இதெல்லாம் :D :D

அப்போ அப்போ இப்படி தான். :D

சுவேதா
30-08-2005, 05:43 PM
:):):)

mukilan
30-08-2005, 06:00 PM
:):):)
வந்தாச்சா! புது வீடு எல்லாம் எப்படி இருக்கிறது? சரி தலை கூறிய படி ஏன் அவ்வாறு வாயைத் திறந்து கொண்டு ட்யூப் லைட் அடியில் நின்றாய்?

சுவேதா
30-08-2005, 06:07 PM
வந்தாச்சா! புது வீடு எல்லாம் எப்படி இருக்கிறது? சரி தலை கூறிய படி ஏன் அவ்வாறு வாயைத் திறந்து கொண்டு ட்யூப் லைட் அடியில் நின்றாய்?

ஆமாம் புதுவீட்டுக்கு வந்தாச்சு இன்னும் கேபிள் வரல நாளைதான் வரும் இப்போ மச்சாள் வீடுக்கு வந்தேன் அப்படியே மன்றமும் வந்தேன். டியூப் லைட் பார்த்தது ஏன் என்றால் தாத்தா சொன்னார் பிரதீப் அண்ணா ஒரு டியூப் லைட் என்றார் அதுதான் பார்த்தேன் ஏன் அவர் அப்படி சொன்னார் என்று!:cool:

mukilan
30-08-2005, 06:10 PM
ஆமாம் புதுவீட்டுக்கு வந்தாச்சு இன்னும் கேபிள் வரல நாளைதான் வரும் இப்போ மச்சாள் வீடுக்கு வந்தேன் அப்படியே மன்றமும் வந்தேன். டியூப் லைட் பார்த்தது ஏன் என்றால் தாத்தா சொன்னார் பிரதீப் அண்ணா ஒரு டியூப் லைட் என்றார் அதுதான் பார்த்தேன் ஏன் அவர் அப்படி சொன்னார் என்று!:cool:

அடேங்கப்பா பிரதீப்பு, இப்போ அடப்பாவமே பிரதீப்பு.

பரஞ்சோதி
30-08-2005, 08:41 PM
ஆமாம் புதுவீட்டுக்கு வந்தாச்சு இன்னும் கேபிள் வரல நாளைதான் வரும் இப்போ மச்சாள் வீடுக்கு வந்தேன் அப்படியே மன்றமும் வந்தேன். டியூப் லைட் பார்த்தது ஏன் என்றால் தாத்தா சொன்னார் பிரதீப் அண்ணா ஒரு டியூப் லைட் என்றார் அதுதான் பார்த்தேன் ஏன் அவர் அப்படி சொன்னார் என்று!:cool:

ஹா ஹா!

சூப்பர் சகோதரி. :D

சுவேதா
02-09-2005, 01:21 AM
:):):) நன்றி அண்ணா!

பரஞ்சோதி
03-09-2005, 09:40 AM
சகோதரி, எங்கே நகைச்சுவைகள்?

அப்படியே நம்மவர்களை தாக்கும் நகைச்சுவைகளையும் கொடுங்க.

சுவேதா
03-09-2005, 12:49 PM
ம்...ம் கொடுக்கிறேன் அண்ணா! அது கொடுக்காமலா என்ன?

சுவேதா
03-09-2005, 08:35 PM
பரம்ஸ் : எங்க ஆபீஸ்ல பிரச்சனை ஏற்பட்டா ஒரு குரூப் பிரச்சினையை அலசும், இன்னொரு குரூப் தீர்வுகள அலசும், இன்னொரு குரூப் செஞ்சு முடிச்சுடும்.

தாத்தா : அப்படி என்ன பிரச்சினையை தீர்த்திங்க சமீபமா?

பரம்ஸ் : ஒரு டேபிளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாத்தினோம்.

மன்மதன்
04-09-2005, 04:09 AM
ஹாஹ்ஹா.. டேபிளை அலசிட்டு நகர்த்தியிருக்காய்ங்க...:D :D

சுவேதா
04-09-2005, 01:07 PM
:D:D:D:D

சுவேதா
10-09-2005, 09:19 PM
என்ன? மாப்பிள்ளைக்கு ஷேவிங் செட், பவுடர், சென்ட் கொடுக்கறதுக்குப் பதிலா விம் பவுடர், பிரஷ், தொடப்பம் இதெல்லாம் தர்றீங்க?

கல்யாணம் முடிஞ்சதும் அவர் என்ன செய்யணும்ங்கறத முன் கூட்டியே தெரியப்படுத்ததான்.

பரஞ்சோதி
11-09-2005, 05:04 AM
அப்பாடா, எனக்கு இந்த மாதிரி எல்லாம் தரவில்லை, இனிமேல் கல்யாணம் செய்ய இருக்கும், பிரதீப், மன்மதனுக்கு இது தேவைப்படலாம்.

சுவேதா
11-09-2005, 11:26 AM
ஓ... அப்படியா
வாழ்த்துக்கள் மன்மதன் , பிரதீப் அண்ணா!

சுவேதா
16-09-2005, 01:41 AM
''இப்ப வந்துட்டுப் போற பையனோடு என்ன தகராறு?''

''ஏழெட்டு வருஷமா மெகா சீரியல்ல என் பையனா நடிச்சிட்டிருக்கானாம். அதனால சொத்தில பங்கு கேட்க வந்துட்டான்.''

சுவேதா
27-09-2005, 02:03 AM
புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.
வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?
"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர் மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.
"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.
"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.

பரஞ்சோதி
27-09-2005, 04:36 AM
நல்ல சிரிப்புகள், நன்றி சகோதரி.

மன்மதன்
27-09-2005, 06:03 AM
நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு நீச்சல்குளமாஆஆஆஆஆஆஆஆஆஆஅ :D :D

pradeepkt
27-09-2005, 06:09 AM
ஏம்ப்பு நீயும் இந்த மாதிரி சிலப் பல விஷயங்களை அவுத்து விடறதுதானே...
அதை விட்டுட்டு சுவேதா மாதிரியே கத்திக் காமிக்கிற?

சுவேதா
15-10-2005, 12:34 AM
நேஸ் : ''இன்னிக்கு நீங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போகப் போறீங்க.. உடம்பைப் பார்த்துக்கங்க!''

நோயாளி : ''சரி! காட்டுங்க!''

அறிஞர்
15-10-2005, 04:16 AM
அம்மிணி சிரிப்பு கொஞ்சம் ஓவரால்ல தெரியுது.....

pradeepkt
15-10-2005, 11:32 AM
அதானே, பண்பட்டவர் பதிவுக்கு மாத்துங்கப்பா...

சுவேதா
15-10-2005, 01:57 PM
ஆமாம் அண்ணா!

சுவேதா
15-10-2005, 01:58 PM
இதை அழிச்சுவிடவா???

அறிஞர்
15-10-2005, 03:05 PM
இதை அழிச்சுவிடவா??? வேணாம் விட்டுடு....

அடுத்த முறை பதியும் போது படித்து புரிந்து... போடும்மா...

சுவேதா
15-10-2005, 09:30 PM
சரி அண்ணா!

மன்மதன்
16-10-2005, 05:41 AM
நல்லவேளை 'நோயாளி' என்று மட்டும் போட்டிருக்கா.. பேரை போடலை....:D :D

பிரியன்
16-10-2005, 06:20 AM
நல்லவேளை 'நோயாளி' என்று மட்டும் போட்டிருக்கா.. பேரை போடலை....:D :D

எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி இருக்கே:) :)

அறிஞர்
17-10-2005, 03:53 AM
இந்த மாதிரி குசும்பு வேலைகளை வேற யாரு செய்வாங்க......

மன்மதன்
18-10-2005, 08:21 AM
நோயாளி : "டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல..."

டாக்டர் முன்னா பாய் M.B.B.S : "இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!"

சுவேதா
18-10-2005, 11:43 AM
:):):)

அறிஞர்
18-10-2005, 02:03 PM
அருமை.... நோயாளி யாரு நீங்களா மன்மதா.....

சுவேதா
18-10-2005, 04:45 PM
இருக்கும் இருக்கும்...

pradeepkt
19-10-2005, 05:19 AM
அப்ப டாக்டர் சுவேதாபாய் எம் பி பி எஸ்

சுவேதா
19-10-2005, 11:33 AM
நானா???????? நோ சான்ஸ்

Narathar
19-10-2005, 12:43 PM
அப்ப டாக்டர் சுவேதாபாய் எம் பி பி எஸ்

என்ன பிரதீப் நோயாளிகள் எப்படி டாக்டராவாங்க?:D
(விபரங்களுக்கு ஐவரணியின் அட்டகாசங்கள் பதிப்பை பார்க்கவும்)

pradeepkt
19-10-2005, 01:20 PM
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியாஆஆஆஆஆஆஆஆஆ :D :D :D
இது சுவேதா ஸ்டைலு

சுவேதா
19-10-2005, 02:51 PM
என்ன????

சுவேதா
19-10-2005, 02:52 PM
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியாஆஆஆஆஆஆஆஆஆ :D :D :D
இது சுவேதா ஸ்டைலு

அண்ணாஆஆ

சுவேதா
24-10-2005, 01:13 AM
''வானம் மழை பொழியலையேன்னு புலம்பிகிட்டே போறாரே, அவரு விவசாயியா?''
''இல்ல, பால்காரரு''.

kiruba_priya
22-11-2005, 10:05 AM
ஒருமுறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது கடுமையான வயிற்றுவலி.

அவசரத்திற்கு பக்கத்திலுள்ள டாக்டரிடம் சென்றேன்.

டெஸ்ட் பண்ணிவிட்டு, மருந்து எழுதிக் கொடுத்தவர் 25 ரூபாய் ஃபீஸ் கேட்டார். எனக்கு ஆச்சரியம்.

‘என்ன சார்... எல்லா டாக்டர்களும் 250 ரூபாய் ஃபீஸ் கேட்கிறார்கள். நீங்கள் மட்டும் 25 ரூபாய் ஃபீஸ் வாங்குகிறீர்களே’ என்று டாக்டரிடம் கேட்டேன்.

‘அவங்களெல்லாம் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு அந்த ஃபீஸ் வாங்கறாங்க! நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சவன்தானே’னு அவர் போட்டாரே ஒரு போடு.

அப்பதான் புரிந்தது நான் போலி டாக்டரிடம் வந்திருக்கேன் என்று.

_கடந்தவாரம் சென்னை மியூசிக் அகாடமியில் டாக்டர். சிவகடாட்சம் நடத்திய இதய நோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் வெடித்த தமாஷ் சரவெடி. (குமுதம் இதழ், 16.11.05)

kiruba_priya
22-11-2005, 10:07 AM
ஒரு நோயாளி டாக்டரிடம் வந்தார்.

‘நீங்கள் எழுதிக் கொடுத்த எல்லா மருந்தும் கிடைத்துவிட்டது. மேலே எழுதியிருக்கும் மருந்து மட்டும் கிடைக்கவில்லை சார்! எல்லா மெடிக்கல்லேயும் கேட்டுட்டேன்.’

அதற்கு டாக்டர் சொன்னார். ‘யோவ்... பேனா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்தேன்ய்யா. அதுதான் மேலே இருந்தது’னு சொன்னார்...’’

_கடந்தவாரம் சென்னை மியூசிக் அகாடமியில் டாக்டர். சிவகடாட்சம் நடத்திய இதய நோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் வெடித்த தமாஷ் சரவெடி. (குமுதம் இதழ், 16.11.05)

சுவேதா
22-11-2005, 06:34 PM
:D:D:D:D சூப்பர்!

kiruba_priya
23-11-2005, 05:37 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி.....

rajasi13
24-11-2005, 07:49 AM
கலக்கறீங்க கிருபா. வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்க.