PDA

View Full Version : மொழி பெயர்ப்புக் கவிதைகள் - 1kavitha
04-07-2005, 05:54 AM
சீனாவின் சிறந்த தத்துவ ஞானியாகத் திகழ்ந்த "லா வோத் சூ" வின் கவிதைகளில் ரசித்துப் படித்தவற்றை இங்கே தரலாம் என்றுள்ளேன். ஆசிரியர் குறிப்பு வேறொரு சமயம் பதிக்கிறேன். வேறு மொழிபெயர்ப்புக் கவிதைகள் இருந்தாலும் நண்பர்களை இங்கே தொகுக்க வேண்டுகிறேன். கவிதைகள் குறித்த விளக்கங்களும், கருத்துக்களும் ஆவலுடன் வரவேற்கப்படுகின்றன.


தௌ த ஜிங் - ஞானமும் நல்வாழ்க்கையும்

முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்.
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு.

மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு.

சுவரில் சுவரல்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையின் பயன்பாடு.

எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்படுவதாகிறது.

-"லா வோத் சூ"
என்றும் அன்புடன்,
கவிதா


.

kavitha
04-07-2005, 06:00 AM
ஞானத்தைத் துடைத்தெறியும் போதே
கருணையும் நீதியும்.

விவேகமும், எச்சரிக்கையும் தோன்றும் போதே
பாசாங்குதான்.

குடும்ப உறவுகள் லயம் தப்பிப் போகும் போதே
மக்களின் பாசமும் தந்தையரின் அக்கறையும்.

நாடும் இனமும் ஒழுங்கற்றுச் சிதையும் போதே
விசுவாசமும் அபிமானமும்.

kavitha
04-07-2005, 06:01 AM
பிறரைத் தெரிந்து வைத்திருப்பவன் சாமர்த்தியசாலி
தன்னையே தெரிந்து வைத்திருப்பவன் ஞானி

பிறரை வெல்பவன் பலவான்.
தன்னையே வெல்பவன் வல்லவன்.

திருப்தியைத் தெரிந்து வைத்திருப்பவன் செல்வந்தன்.
ஆற்றலோடு ஒதுங்கி விடுபவன் மனத்திட்பம் கொண்டவன்.

தன் இயல்பிடத்தை இழக்காதவன் நின்று நிலவுகிறான்.

இறந்துபடுவான்
ஆனால்
மறைந்துவிட மாட்டான்
அவன் வாழ்வு நித்தியம்.

kavitha
04-07-2005, 06:02 AM
இயல்பிடம் நோக்கியே ஞானம் நகர்கிறது
பலவீனமே ஞானத்தைச் செலுத்துகிறது
இருத்தலில் இருந்து இருக்க வருவதே
விண்ணும் மண்ணும் பல்லாயிரமும்.
ஆனால் இருத்தல் வந்ததோ இல்லாததில் இருந்தே.

kavitha
04-07-2005, 06:03 AM
"பெயரா ஆளா, எது மிக நெருங்கியது?
ஆளா சொத்தா, எது மிக மதிப்புடையது?
லாபமா நட்டமா, எது மிக கறைப்பட்டது?

"அதீதப் பிரீதி ஊதாரித்தனத்துக்குப் பாதை.
குவித்த செல்வம் கொள்ளைக்கு ஊக்கம்."

"திருப்தியுடையவனுக்குத் தலைகுனிவில்லை"

நின்றுவிடுவது எப்போதெனத்
தெரிந்தவனுக்கு இழிவில்லை
அவன் வாழ்வு நிலைத்தது.

kavitha
04-07-2005, 06:04 AM
தன் உயர்வில் பெருமிதம் இல்லையெனில்
பொறாமையைத் தடுத்தாயிற்று.
அரிய பொக்கிஷங்கள் உயர்வெனக்
கொள்ளாவிடில்
திருட்டைத் தடுத்தாயிற்று.
ஆசையைத் தூண்டுவதை நினைத்துப்
பார்க்காவிடில்
உள்ளத்தின் குழப்பத்தைப் போக்கியாயிற்று.

....
....
....

எதையும் வற்புறுத்தாது செயற்படும்போது
ஆளப்படாதது எதுவும் இல்லாமல் போகிறது.

பிரியன்
04-07-2005, 06:36 AM
நல்ல முயற்சி கவிதா. ஆனால் ஒரு சிறு விண்ணப்பம். இது போன்ற மொழி பெயர்ப்புகவிதைகளை ஒரு முறைக்கு ஒன்று என்று கொடுத்து அதைப்பற்றி விவாதித்து அடுத்த கவிதைகளுக்கு நகர்வதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். மொத்தமாக பதிக்கையில் இது போன்ற விவாதங்கள் குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

kavitha
04-07-2005, 07:35 AM
நல்லது பிரியன். இனி அவ்வாறே தருகிறேன். எனக்கு நேரம் கிடைப்பது குறைவு என்பதால் நேற்றைய விடுமுறை தினத்தை பயன்படுத்தி இதைத் தட்டச்சு செய்ய முடிந்தது. மீண்டும் இதுபோல் தட்டச்சு செய்ய ஒரு வாரம் ஆகிவிடும். அதனாலே அவ்வாறு பதிக்கும்படி ஆகிவிட்டது. இனி கவனத்தில் கொள்கிறேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. :)

பிரியன்
04-07-2005, 08:05 AM
நன்றி கவிதா. விரைவில் கருத்துகளை பதிக்கிறேன்...

thempavani
04-07-2005, 09:44 AM
தன் இயல்பிடத்தை இழக்காதவன் நின்று நிலவுகிறான்.

இறந்துபடுவான்
ஆனால்
மறைந்துவிட மாட்டான்
அவன் வாழ்வு நித்தியம்.

நல்ல வரிகள் கவி...

kavitha
14-07-2005, 03:44 AM
நன்றி கவிதா. விரைவில் கருத்துகளை பதிக்கிறேன்...
__________________
அன்பின்
பிரியன்

ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பிரியன். நன்றி


-------------

Quote:
Originally Posted by kavitha
தன் இயல்பிடத்தை இழக்காதவன் நின்று நிலவுகிறான்.

இறந்துபடுவான்
ஆனால்
மறைந்துவிட மாட்டான்
அவன் வாழ்வு நித்தியம்.

நல்ல வரிகள் கவி...
__________________
என்றென்றும்,
உங்கள் தேம்பா.

நன்றி தேம்பா.

pradeepkt
14-07-2005, 05:22 AM
முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்.
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு.

மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு.

சுவரில் சுவரல்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையின் பயன்பாடு.

எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்படுவதாகிறது.

-"லா வோத் சூ"
என்றும் அன்புடன்,
கவிதா
அடேயப்பா சிலிர்த்துப் போனேன் இதைப் படித்து.
மகிழ்ச்சிக்கு மதிப்பே உலகில் சோகம் இருப்பதால்தானே.
இல்லாததின் பயன்பாட்டைப் பற்றி என்ன ஒரு ஆழமான கருத்துக் கோர்வை!!!

இருப்பதை உடம்பால் உணரலாம்
இல்லாததை உணர்வால் உணர... ச்சே... இல்லாதாது என்பதே உணர்வுதானே... எழுதும்போதே இன்னும் நிறைய நிறைய சிந்திக்கத் தூண்டும் வரிகள்....

gragavan
14-07-2005, 07:51 AM
அருமையான கவிதை கவிதா.

எனக்கு ஆண்டவனைப் பாடும் ஒரு தமிழ்ச் செய்யுள் நினைவிற்கு வருகிறது.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" என்று தொடங்கும் செய்யுள். அதற்கு இன்றைக்குத்தான் முழுப் பொருளும் புரிந்தது.

பாரதி
15-07-2005, 07:31 PM
அன்பு கவிதா,
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

nandabalan
18-04-2009, 04:33 PM
லத்தீன் அமெரிக்க சிறு கதைகள் தளத்தில் கிடைக்குமா அதே போல் கவிதைகளும்?