PDA

View Full Version : கவிதை போட்டி



anithanhitler
30-06-2005, 01:01 PM
கவிதை போட்டிக்கு
ஒரு கவிதை எழுத
நினைத்து
அணுகின ஒருவரை...
கடவுள், பெண்
இரன்டையும் எழுதாதே
என்றார்...

ம்ம் என்றேன்.

எல்லார் மட்டிலும்
சமமான மகிழ்சி
தராத இயற்கையை
மறந்து விடு என்றார்...

ஒன்றுமே இல்லை என்றேன்
எழுதுவதற்கு...

மெதுவாக சொன்னார்
" சக மனிதனை
மகிழ்ச்சி படுத்து
அதுதான் கவிதை " என்றார்...

அறிஞர்
01-07-2005, 06:29 AM
அருமையாய் உள்ளது.. சக மனிதரை மகிழ்ச்சி படுத்தும்.. பொருளாகி போனது கவிதைகள்....

kavitha
01-07-2005, 11:15 AM
சிந்திக்கவைப்பதுவும் கவிதையின் செயல்தான் ஐயா. விழிப்புணர்ச்சி ஊட்டிய பாரதி போன்றோரின் கவிதைகள் எடுத்துக்காட்டு!

anithanhitler
02-07-2005, 04:24 AM
நன்றி, அறிஞர்,kavitha அவர்களே

நான் ஐயா இல்லை, இளஞர் தான்....

பரஞ்சோதி
02-07-2005, 04:32 AM
வாருங்கள் நண்பரே!

உங்கள் அறிமுகம் கொடுங்களேன்.

நல்ல கவிதை கொடுத்திருக்கீங்க, பாராட்டுகள்.

அடுத்தவர்களை மரணபயம் காட்டியவரை உங்கள் பெயரில் காண்கிறேனே, ஏன் இந்த முரண்பாடு.

பிரியன்
02-07-2005, 04:39 AM
நல்ல கவிதை நண்பரே...
வாழும் மனிதர்களைப் பற்றி படைக்காமல் காவியங்கள் படைப்பதில் எந்தவித உபயோகமும் இல்லை. எது புதுக்கவிதை எனும் நூலில் பேராசிரியர் சுபாசு மனிதர்களுக்காக படைக்கப் படுவதே கவிதை என்று கூறியிருந்தார். தங்களின் கவிதை அதை உறுதி செய்திருக்கிறது.
தங்களிடம் இருந்து தொடர்ச்சியாக இதுபோன்ற நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்(ம் ).

வாழ்த்துக்கள் அனிதன்

kavitha
02-07-2005, 09:43 AM
kavitha அவர்களே

நான் ஐயா இல்லை, இளஞர் தான்....

-அனிதன்

ஐயா என்பது மரியாதையைக்குறிக்கும் அடைமொழி அனிதன் :). அது உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் இனி அனிதன் என்றே அழைக்கிறேன். உங்களைப்பற்றிய அறிமுகம் தந்துவிடுங்கள். மேலும் எழுத வாழ்த்துகள்.

anithanhitler
05-07-2005, 01:44 PM
Kavitha மற்றும் பிரியன் அவர்களே,

நான் அலை கடல் தாலாட்டும் உவரி என்னும் அழகிய கடற்கரை கிராமத்தில் பிறந்தவன்.
வரலாறு எனக்கு பிடித்தது.
கவிதை நான் நெசிப்பது .
அரசிய்ல் நான் சுவாசிப்பது.
ஆனால் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சாபத்தால் software company ல் வேலை பார்க்கிறென் ( TCS).

ஆனால் நிச்சயம் ஒரு நாள் வருவேன் நான்
விரும்பிய துறைக்கு...

அதுவரை காத்திருக்கும்
அனிதன் Hitler..

anithanhitler
05-07-2005, 01:53 PM
வாருங்கள் நண்பரே!

உங்கள் அறிமுகம் கொடுங்களேன்.

நல்ல கவிதை கொடுத்திருக்கீங்க, பாராட்டுகள்.

அடுத்தவர்களை மரணபயம் காட்டியவரை உங்கள் பெயரில் காண்கிறேனே, ஏன் இந்த முரண்பாடு.



நன்றி பரஞ்சோதி நண்பரே .
அறிமுகம் தந்துள்ளேன்...
எனக்கும் Hitler ஐ நிரம்ப பிடிக்கும்...

Iniyan
05-07-2005, 03:54 PM
ஹிட்லரை ரொம்ப பிடிக்குமா? எந்த விதத்தில் என நான் தெரிந்து கொள்ளலாமா?

சுவேதா
28-07-2005, 03:03 AM
சூப்பர் மனிதனை மகிழ்ச்சி படுத்துவது கவிதையாக இருக்கும் போது அதை விட கவிதை எதுவுமே கிடையாதுதான்
வாழ்த்துக்கள் அண்ணா!

thempavani
28-07-2005, 03:50 AM
Kavitha மற்றும் பிரியன் அவர்களே,

நான் அலை கடல் தாலாட்டும் உவரி என்னும் அழகிய கடற்கரை கிராமத்தில் பிறந்தவன்.
வரலாறு எனக்கு பிடித்தது.
கவிதை நான் நெசிப்பது .
அரசிய்ல் நான் சுவாசிப்பது.
ஆனால் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சாபத்தால் software company ல் வேலை பார்க்கிறென் ( TCS).

ஆனால் நிச்சயம் ஒரு நாள் வருவேன் நான்
விரும்பிய துறைக்கு...

அதுவரை காத்திருக்கும்
அனிதன் Hitler..

பரம்ஸ் அண்ணா கேட்டீர்களா..அனிதனின் ஊர் உவரியாம்...

gragavan
28-07-2005, 05:09 AM
உவரிக்காரரா அனிதன். வாங்க. வாங்க. நாந் தூத்துக்குடிதான். நலமா?

thempavani
28-07-2005, 05:49 AM
அண்ணா எங்க ஊருக்கு உவரியில இருந்து 30 நிமிட பேருந்து பயணம் தான்..

pradeepkt
28-07-2005, 05:50 AM
அண்ணா எங்க ஊருக்கு உவரியில இருந்து 30 நிமிட பேருந்து பயணம் தான்..
ஆனால் பேருந்து மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் போக வேண்டும்.. அவ்வளவுதான் :D

thempavani
28-07-2005, 05:52 AM
எங்க ஊரு பக்கம் ஏதப்பா 800 கிமீ வேகம்...வெறும் 8 கிமீ வேகம் தான்

anithanhitler
03-08-2005, 05:09 AM
ஆனால் பேருந்து மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் போக வேண்டும்.. அவ்வளவுதான் :D



Pradeep ,


Still I didnt see the writing box ....
What I have to do ya?
I am not able to send any reply.....
YARAVATHU, ETHAVATHU PANNUNGAPPA....

pradeepkt
03-08-2005, 05:20 AM
அனிதன் உங்களுக்கு என்ன பிரச்சினை?
நீங்கள் இகலப்பை உபயோகிப்பதில்லையா? என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருக்கிறீர்கள்?
கீழே யூனிகோடு கன்வர்ட்டர் இல்லாததுதான் பிரச்சினை என்றால், இன்னும் சில நாட்களில் வந்துவிடும். அது வரை நீங்கள் கீழ்க்கண்ட தளத்துக்குச் சென்று தட்டச்சு செய்து, வெட்டி ஒட்டுங்கள்.
http://www.suratha.com/reader.htm
வேறெதுவும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள்.

anithanhitler
03-08-2005, 01:55 PM
பரம்ஸ் அண்ணா கேட்டீர்களா..அனிதனின் ஊர் உவரியாம்...



தேம்பா, பரம்ஷ்

உங்களுக்கு எந்த ஊரு....

pradeepkt
03-08-2005, 02:22 PM
என்னய்யா அனிதன், ஒரு வழியா உங்க பிரச்சினை தீர்ந்ததா?