PDA

View Full Version : 'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி வழங்கும்...ஜீவா
30-06-2005, 01:51 PM
'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி அவர்கள் வழங்கும் சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

http://i7.photobucket.com/albums/y295/mugil_siva/rasicircleright.jpg
மேஷ ராசி மக்களே!எப்பா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு சனி பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போயும் ஒளிஞ்சிக்கோங்க!
மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது.
பேசுனா உங்க நாக்குல சனி நாற்காலி போட்டு உட்காந்துக்கும்.
பரிகாரம்: ராமராஜனை உங்க காஸ்ட்யூம் ட்சைனரா நியமிச்சு, அவரு சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. முக்கியமா
நடக்கறப்போ உங்க வலது காலும், இடது காலும் உரசவே கூடாது. அப்படி நடக்காட்டி என்ன ஆகும்னு கேக்கறீகளா,
நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.

மிதுன ராசி மக்களே!எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்க செல்லை கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. சனி எட்டாம் பாதத்துலயிருந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தெறிச்சு ஓடுறது நலம்.
இல்லாட்டி சனி ரிங்டோ னா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.
பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி மக்களே!மெட்டி ஒலிக்கும், கெட்டிமேளத்துக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, 'பச்ச' & 'மஞ்ச' கலரைப் பாக்கக்கூடாதுங்கோ. 'கருப்பு-வெள்ளை' டி.வி. பாக்கலாமான்னு கருமம் புடிச்சாப்ல
கேட்காதீக. பாக்கலாம். ஆனா 'ஒப்பாரி' சவுண்டைக் கேட்கக் கூடாது. அரசியல்வாதிகளைப் பாக்கக் கூடாது. ஏன்னா,
இவ்வளவு நாள் உங்க வீட்டு டேபிள்ல இருந்த சனி இப்போ உங்க வீட்டு கேபிளுக்கு பெயர்ச்சி ஆயிருக்கு.
பரிகாரம்: உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!

சிம்ம ராசி மக்களே!சனியும், ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'google' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. இதுல எதையாவது
மீறினா, சனி அனுப்புற வைரஸால உங்க சிஸ்டம் புட்டுக்கும்.
பரிகாரம்: 'ஸ்ரீபில்கேட்ஸ் ஜெயம்'னு டெய்லி நோட்பேட்ல 100kb டைப் பண்ணுறது உத்தமம். (cut copy paste ..ம்ஹூம்!)

கன்னி ராசி மக்களே!ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி மக்களே!அந்நியன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ஆத்திரத்துல சனி பாதத்துக்குப் பாதம் 'பங்கி ஜம்ப்' ஆடிக்கிட்டு இருக்கறதால, இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பாக்கக்கூடாது. அஸின் ஆகவே ஆகாது. நீங்க 'ஐஸ்'ஸை நைஸாப் பாத்தா சனியோட கோபம் பல மடங்கு, 'raise' ஆக வாய்ப்பிருக்கு. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!
பரிகாரம்: 'லகலகலகலகலகா'ன்னு சொல்லிட்டே, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரை டெய்லி பத்து மு
றை சுத்தணும்.

விருச்சிக ராசி மக்களே!யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!
பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி மக்களே!நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. 'நான்'-ஐ இங்கிலீசுல எப்படி சொல்லணும்னு யாராவது கேட்டாக் கூட 'You'னு உளறுவது நல்லது.
பரிகாரம்: 'i'யை எங்கப் பாத்தாலும் தார் பூசி அழிச்சிடுங்க!

மகர ராசி மக்களே!வாஸ்துப்படி சனி உங்களுக்கு பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.
பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி மக்களே!இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற சனிப் பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எ
லெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல
வர்ற 'கரண்ட்' நியூசைக்கூட படிக்கக்கூடாது.
பரிகாரம்: ஏதாவது ஆதிவாசி கிராமத்துக்குப் போயி தலைமறைவா வாழுங்கோ!

மீன ராசி மக்களே!சனி நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ புடிச்சு சனிக் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.
பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

(மேலும் பலன்களை அறிந்துகொள்ள iamnothere@sani.com-க்கு மெயிலுங்க!)

இவை அனைத்தும் சுடப்பட்டவை.. :D

pradeepkt
30-06-2005, 01:59 PM
அது சரி...
நல்ல பலன்கள் ஜீவா இது.
போற போக்குல இதெல்லாம் நடந்தா ஒண்ணும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
:D

gragavan
30-06-2005, 04:07 PM
பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

:D :D :D

ஜீவா கலக்கீட்டீங்க. சிரிச்சி சிரிச்சி வந்த வயித்த வலி டோய்...டொடன் டொண்டொண்ட டொய்.......டொடன் டொண்டொண்ட டொய்..............

mania
01-07-2005, 12:12 PM
சான்ஸே இல்லை ......சூப்பர் ஜீவா.....
அன்புடன்
மணியா...

karikaalan
01-07-2005, 01:35 PM
சனிப் பெயர்ச்சியினாலே என்னெல்லாமோ நடக்கும்னாங்க.... இது மாதிரிப் பதிவைப் படிக்கும்படி இருக்கும்னு சொல்லலையே!!

வாழ்த்துக்கள் ஜீவா.

===கரிகாலன்

மன்மதன்
02-07-2005, 05:22 AM
ஹாஹ்ஹா.. சனியான சினிப்பு... ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
02-07-2005, 05:45 AM
அய்யோ ஜீவா,

நீங்க சனி பெயர்ச்சியால் மக்கள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, இடம் பெயர்ந்து மருத்துவமனைகளில் சேர்ந்திருக்கிறார்களாம், உண்மையான பெயர்ச்சி தான்.

அடுத்த பெயர்ச்சியை நீங்களே கொடுங்கள்.

சுவேதா
02-07-2005, 10:56 PM
ஹாஹ்ஹா.. சனியான சினிப்பு... ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

மன்மதன் எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன சினிப்பு.

சுவேதா
02-07-2005, 10:58 PM
:D:D அய்யோ ஜீவா அண்ணா உங்க ஜோதிடத்தால சிரித்து சிரித்து களைத்துவிட்டோம். போங்க நல்லா கலக்கிட்டிங்க.

suma
24-07-2005, 12:14 AM
:D :D super payarchi:D

poo
25-07-2005, 07:47 AM
இதையும் வழக்கமா படிக்கிறாப்போல என்னோட ராசியை மட்டும் சீரியசா தேடி படிச்சேன்..

அருமை ஜீவா.. கலக்கல்!

(இதை அப்படியே டி.வியில படிப்பாரே.. அவரோட வாய்ஸ்ல படிச்சிப் பார்த்தேன் சிரிப்போ சிரிப்பு!!)

நண்பரே.. என்னோடது கன்னி ராசிதான்!

பரஞ்சோதி
25-07-2005, 08:01 AM
பூ, கன்னி ராசி சேரனுடையதும் கூட...

அறிஞர்
25-07-2005, 08:03 AM
வாழ்த்துக்கள்.... அன்பரே...... வித்தியாசமாக சிந்தித்து... அனைவரையும் மகிழ்விக்கிறீர்கள். இன்னும் தொடருங்கள்....

beats
16-12-2005, 12:20 PM
அன்பிற்குரிய ஜீவா ..
சுட்டுப் போட்டீங்க ஓ.கே!
எங்கேயிருந்து சுட்டுப்போட்டீங்கன்னு 'லிங்க்' கொடுத்து இருக்கலாம். அதுதான் முறை! இந்த விஷயத்தில் இந்தக் கட்டுரையின் சொந்தக்காரனான எனக்கு மிகவும் வருத்தமே! - முகில்(thudippugal.blogspot.com)

அறிஞர்
16-12-2005, 03:25 PM
அன்பிற்குரிய ஜீவா ..
சுட்டுப் போட்டீங்க ஓ.கே!
எங்கேயிருந்து சுட்டுப்போட்டீங்கன்னு 'லிங்க்' கொடுத்து இருக்கலாம். அதுதான் முறை! இந்த விஷயத்தில் இந்தக் கட்டுரையின் சொந்தக்காரனான எனக்கு மிகவும் வருத்தமே! - முகில்(thudippugal.blogspot.com) அன்பர் முகிலுக்கு,

தவறுக்கு மன்னிக்கவும். இனி அன்பர்கள் சரியாக சுட்டி கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.... தங்களில் தளம் அருமையாக உள்ளது. துப்பாக்கி மொழி நூல் அருமை... தங்களின் படைப்புக்களை இங்கு கொடுங்களேன்.

தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுங்கள்...

ஜீவா
16-12-2005, 04:41 PM
அன்பிற்குரிய ஜீவா ..
சுட்டுப் போட்டீங்க ஓ.கே!
எங்கேயிருந்து சுட்டுப்போட்டீங்கன்னு 'லிங்க்' கொடுத்து இருக்கலாம். அதுதான் முறை! இந்த விஷயத்தில் இந்தக் கட்டுரையின் சொந்தக்காரனான எனக்கு மிகவும் வருத்தமே! - முகில்(thudippugal.blogspot.com)

நண்பர் முகில் என்னை மன்னிக்கவும்.. இது எனக்கு பார்வேர்ட் மெயிலில்தான் வந்தது.. அதை அப்படியே இங்கு மன்ற நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன்.. உங்கள் வருத்ததிற்கு என்னை மன்னிக்கவும்..

என்னதான் நான் சுட்டாலும், தோசை மாவு அரைச்ச நீங்கதான் சொந்தக்காரன்.. :D :D :D

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 10:29 AM
சனிப் பெயர்ச்சியினாலே என்னெல்லாமோ நடக்கும்னாங்க.... இது மாதிரிப் பதிவைப் படிக்கும்படி இருக்கும்னு சொல்லலையே!!

வாழ்த்துக்கள் ஜீவா.

===கரிகாலன்

சரியாக சொன்னீங்க நண்பரே.

கலக்கல் பதிவு ஜீவா. மாவுக்கு சொந்தக்கார முகிலுக்கும் நன்றி.
முகில் உங்கள் பதிவுகலை பகிர்ந்துகொள்ளலாம் தானே? இதுவே இப்ப்படி என்றால் மற்ற உங்கள் ஆக்கங்களை நினைத்தால் ஆர்வ்வமாக உள்ளது.

இளசு
18-12-2005, 09:09 PM
சனிப் பெயர்ச்சியினாலே என்னெல்லாமோ நடக்கும்னாங்க.... இது மாதிரிப் பதிவைப் படிக்கும்படி இருக்கும்னு சொல்லலையே!!

வாழ்த்துக்கள் ஜீவா.

===கரிகாலன்

சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணலே.. (நலமா தாங்கள்?)

சுட்ட ஜீவாவுக்கும், அரைத்த முகில் அவர்களுக்கும் ( அப்புறம் எங்கே உங்களைக் காணும்?), மேலுழுப்பிய இனிய இதசெவிற்கும் பாராட்டுகள்..நன்றிகள்...

mania
19-12-2005, 04:43 AM
சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணலே.. (நலமா தாங்கள்?)

சுட்ட ஜீவாவுக்கும், அரைத்த முகில் அவர்களுக்கும் ( அப்புறம் எங்கே உங்களைக் காணும்?), மேலுழுப்பிய இனிய இதசெவிற்கும் பாராட்டுகள்..நன்றிகள்...

:rolleyes: எங்கே கரிகாலன்ஜி....?? அவருடைய ஜூலை மாத பதிவை படித்துவிட்டு என்னை குழப்பிவிட்டீர்களே...???:confused: இன்னும் இதசெ ஒரு முயற்சியும் எடுத்தாக தெரியலையே.....???:mad:
குழப்பத்துடன்
மணியா...:confused:

aren
19-12-2005, 04:58 AM
எப்போவோ கரிகாலன் அவர்கள் பதிவு செய்ததை இப்பொழுது பதிவுசெய்தது என்று இளசு நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

கரிகாலன் அவர்களே, எங்கேயிருக்கிறீர்கள். உடனே மன்றம் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

அக்னி
31-05-2007, 12:14 AM
இது இன்றைய காலத்துக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.

இதுவல்லோ ஜோதிடம்...

இதயம்
31-05-2007, 05:50 AM
மாவுக்கு சொந்தக்காரரான முகிலும், அதில் தோசை சுட்டு நமக்கு கொடுத்த ஜீவாவும் இரு வகைகளில் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
1. மற்றவர்களை சிரிக்க வைத்தது.
2. மூடநம்பிக்கைக்கு எதிராக சிந்திக்கவைத்தது.

நகைச்சுவை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தால் அதன் தரம் உயர்ந்துவிடுகிறது. சிரிக்க வைத்தும் சீர்திருத்தம் செய்யலாம் என்பதை நிரூபித்த இருவருக்கும் பாராட்டுக்கள்.

சிவா.ஜி
31-05-2007, 06:12 AM
மத்த எதப்பத்தியும் யோசிக்கக்கூட முடியலீங்கோ.சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்னி வந்து வயிற்றுல வலி வந்து... ரொம்ப அருமையா இருக்கு. பாராட்டுக்கள் ஜீவா.

விகடன்
31-07-2007, 06:53 AM
என் இராசிக்கு பலன் சொல்லவே இல்லையே.