PDA

View Full Version : கூகுள் உலகம்



இராசகுமாரன்
29-06-2005, 07:45 AM
கூகுள் நிறுவனம் புதிதாக கூகுள் உலகம் (Google Earth) என்றொரு புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது. இது ஒரு Broadband + 3D application. அதனால் புதிய கணணிகளிலும், windows 2000/XP, Apple Mac கணணிகளிலும் BroadBand இணையத் தொடர்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே இயங்கும்.

நான் இரண்டு நாட்களாக சோதித்துப் பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக உள்ளது.

உலகத்தின் எந்த நகரத்தையும் நொடிப் பொழுதில் Satellite மூலமாக நம் கணணித் திரையில் நொடிப் பொழுதில் காட்டுகிறது.

மேலும் விவரங்கள் இங்கே:

http://earth.google.com/products.html

http://desktop.google.com/download/earth/index.html

உங்களிடம் BroadBand தொடர்பு இருந்தால், நீங்களும் பார்த்துவிட்டு இன்னும் என்னென்ன புதிதாக உள்ளன என என்னுடன்/மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,

மன்மதன்
29-06-2005, 08:31 AM
கலக்கலா இருக்கே.. சும்மா சென்னையிலிருந்து பாண்டி ட்ரிப் அடிச்சி பார்த்தேன். அருமையா இருக்கு..

அதை முறைப்படி கற்றுக்கொண்டு உபயோகிக்கணும் போல.

துபாய் தேடிப்பார்த்தேன்.. கிடைக்கவில்லை..

இந்த சாஃட்வேர் முக்கியமாக புது இடத்திற்கு பயணப்படுபவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். அங்கே இருக்கிற ஹோட்டல், மற்றும் இதர பொழுது போக்கு இடங்களையும் கவர் பண்ணுகிறார்கள். அமெரிக்க அளவில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி உலகம் நம்ம கையில் என்று சொல்லி கொள்ளலாம்..

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
29-06-2005, 08:53 AM
கொஞ்சம் ஜூம் அவுட் பண்ணினால் உலக உருண்டை தெரிகிறது. அதை திருப்பி எங்கே வேணும்னாலும் ஜூம் பண்ணிக்கொள்ளலாம்.
அன்புடன்
மன்மதன்

pradeepkt
29-06-2005, 09:23 AM
என்னால் பிராட்பேண்ட் இருந்தும் என் கணினியில் ஓட்ட முடியவில்லையே

மன்மதன்
29-06-2005, 09:24 AM
நான் அதில்தான் இருக்கிறேன்.. ரொம்ப அருமையாக இருக்கிறது...
அன்புடன்
மன்மதன்

pradeepkt
29-06-2005, 09:27 AM
எப்போ பார்த்தாலும் "Finishing Google Earth Server Login" அப்படின்னு ஒரே எடத்தில உட்கார்ந்திருக்கு.
என்ன கூகிளோ என்ன உலகமோ?

அறிஞர்
29-06-2005, 12:14 PM
பிரதீப் போலதான் எனக்கும் பிரச்சனை.. வேறு கணினியில் முயன்று விட்டு சொல்லுகிறேன்...

poo
01-07-2005, 10:25 AM
மன்மதன் பாண்டி மட்டும்தானே தெரிந்தது??!!

(இல்லை அந்த பார்ட்டி தெரியலயேன்னு சேரன் கேக்க சொன்னாரு!!)

மன்மதன்
02-07-2005, 04:25 AM
உலகமே தெரியுது பூ..................
அன்புடன்
மன்மதன்

(இது வரை ட்ரை பண்ணாதவர் சீக்கிரம் இந்த உலகத்தை பாருங்க.. அசத்தலா இருக்கு..)

rethinavelu
03-07-2005, 01:14 AM
அது registration key கேட்கிறதே என்ன செய்ய

என்னார்

vinmeenj
11-07-2005, 05:36 AM
தமிழகத்தில் உள்ள சிறு நகரங்கள் கூட சூம் செய்யும்போது ஆங்காகே தோன்றுவது அற்புதம். மிகவும் நன்றாக உள்ளது. அதில் "மைபிளேஸ்" செய்து கொண்டால் உலகத்தில் எந்த மூலையில் உள்ள நகரத்திற்கும் தொலைவை கண்டரிய உதவுகிற வசதியும் உள்ளது. பயனுள்ள மென்பொருள் மேலும் நல்ல தயாரிப்பும் கூட...

gthinah
14-01-2006, 12:29 PM
இது http://www.netcolic.com/earth.htm முலமாக கிடைக்கிறது

aren
14-01-2006, 12:45 PM
நான் கணடாவில் வசித்த பழைய வீட்டின் முகவரியைப் போட்டு கிளிக் செய்தேன். அது அழகாக என்னுடைய பழைய வீட்டை அப்படியே காட்டியது. அதில் என்னுடைய பழைய காரை வெளியே நிறித்தியிருந்ததும் அப்படியே தெரிந்தது கண்டு மிகிழ்சியாக இருந்தது.

அழகன்
15-01-2006, 03:54 AM
சவுதி அரேபியா லொல்லு தாங்கமுடியல ஒரு சைட்டகூட விட்டுவைக்காம எல்லாத்தை மூடிவிடுகிறானுங்க இங்கே இருக்குற எந்த லிங்கிற்கும் போகமுடியலைங்கோ ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணுறது..........

aren
15-01-2006, 05:56 AM
மாற்றங்கள் வரும் கவலை படவேண்டாம் அழகன் அவர்களே. இப்படி எல்லாவற்றையும் மூடி வைக்க முடியாது. இல்லையென்றால் டெக்னாலிஜி முன்னேறாது. அவர்கள் கூடிய விரைவில் புரிந்துகொண்டு சில விஷயங்களை திறந்துவிடுவார்கள். அதுவரை பொருத்திருக்கலாம்.

வட்டா
15-01-2006, 07:37 AM
சவுதி அரேபியா லொல்லு தாங்கமுடியல ஒரு சைட்டகூட விட்டுவைக்காம எல்லாத்தை மூடிவிடுகிறானுங்க இங்கே இருக்குற எந்த லிங்கிற்கும் போகமுடியலைங்கோ ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணுறது..........



துபாய்ல மட்டும் என்னாத்த வாழுது.மேல குற்ப்பிட்ட (http://www.netcolic.com/earth.htm) தளத்தைக்கூட மூடிட்டானுங்க.

senthilkumarsb
30-01-2006, 10:42 AM
கூகுள் என்றால் என்ன அர்த்தம் என்று என்றாவது யோசித்து பார்ததுண்டா கூறுகிறேன் கேளுங்கள்.

GOOGLE என்துவும் ஒரு எண்(NUMBER) தான்.
நாம் எப்படி லட்சம்(LAKHS - 1,00,000),
கோடி(CRORE - 1,00,00,000) என்று சொல்லுகிறோமோ
அதுபோன்று கூகுள் என்பது 1 மற்றும் அதைதொடர்ந்து 100 பூஜ்யங்கள் (ZEROS 1000......) என்பதே ஆகும். மேலும் கூகுள் 1995 வருடம் முதல் இயங்கி வருகிறது. மேலும் தகவலுக்கு இந்த லிங்க்கை பார்க்கவும்.

http://www.google.com/intl/en/corporate/history.html

இளந்தமிழ்ச்செல்வன்
31-01-2006, 03:56 PM
ஆஹா எனது ஊரையும் கண்டேன். இன்னும் ஆரென் அவர்கள் கூறியதைப்போல விலாசம் போட்டு ஊடு பார்க்க ஆசை.

pradeepkt
01-02-2006, 05:51 AM
பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் எங்கள் வீட்டை அழகாகப் பார்த்தேன். மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்த என் அம்மாவைத்தான் பார்க்க முடியவில்லை.

அத்தோடு சமீபத்தில் கட்டப்பட்ட எங்கள் அலுவலகத்தையும் பார்க்க முடியவில்லை. இந்த தகவல்கள் ஓரிரண்டு வருடத்திற்கு முந்தையவை என்று அறிகிறேன்.

அத்தோடு வீடு பார்க்கும் அளவு தமிழக நகரங்களின் தகவல்கள் அங்கே இல்லை. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஏன் சென்னை பற்றிய தகவல்கள் கூட அவ்வளவாக இல்லை.

pradeepkt
01-02-2006, 05:52 AM
வெகு சீக்கிரம் அவற்றையும் அப்டேட் செய்வார்கள் என நம்புவோம்.

வாழ்க கூகுள்

மதி
01-02-2006, 12:21 PM
நண்பர்களே..!
இதன் மூலம் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன்..

இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரியுமா?

சுபன்
10-02-2006, 07:33 PM
பாதுகாப்பு பிரச்சினையா?? இந்த மென்பொருளை பாவிப்பவர்களுக்கா?? அல்லது??

aren
10-02-2006, 10:53 PM
நண்பர்களே..!
இதன் மூலம் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன்..

இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரியுமா?

ஆமாம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் நமக்கு துல்லியமாக ஒரு இடத்தின் "பறவை பார்வை" அருமையாக கிடைக்கிறது. இதனால், தீவரவாதிகள் பிளான் செய்ய வசதியாக இருக்கும்.

pradeepkt
11-02-2006, 03:23 AM
போதாக்குறைக்கு இப்போது நாம் கூகிள் டெஸ்க்டாப் தேடலை உபயோகித்தால் அந்தத் தேடலுக்குரிய விவரங்களை அவர்களது சர்வரில் தேக்கி வைத்துக் கொள்கிறார்களாம்.

நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

sarcharan
21-02-2006, 12:14 PM
கூகிளின் "கூகிள் டெஸ்க்டாப்" பாதுகாப்புத் தேவையை பற்றி....
http://news.com.com/2100-1002_3-6041338.html?part=rss&tag=6041338&subj=news


போதாக்குறைக்கு இப்போது நாம் கூகிள் டெஸ்க்டாப் தேடலை உபயோகித்தால் அந்தத் தேடலுக்குரிய விவரங்களை அவர்களது சர்வரில் தேக்கி வைத்துக் கொள்கிறார்களாம்.

நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

paarthiban
22-02-2006, 04:27 PM
தெரியவேண்டிய தகவல்கள். நன்றி நண்பர்களே