PDA

View Full Version : வாழ்க்கைச் சக்கரம்



pradeepkt
29-06-2005, 06:51 AM
மன்ற மக்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக ஒரு முயற்சி செய்திருக்கிறேன்.

என்னால் இயன்ற அளவு ஒரு வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு சக்கரமாக்கி இருக்கிறேன். காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது இதன் நோக்கமல்ல. என் வாழ்வில் கண்ட ஒரு உண்மை நிகழ்வு! இந்தக் கவிதை(?!)யை கடைசி வரியிலிருந்து மீண்டும் படித்தாலும் அதே உணர்வு வரும் என்று நினைக்கிறேன். நண்பர்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்

காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது

காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது

மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்

கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது

குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின

குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது

வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்

தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது

குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்

மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்

கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!

gragavan
29-06-2005, 07:01 AM
அடடே! பிரதீப்பா! என்னுடைய விரல் என்னுடைய மூக்கில்!

ஆடிப்போய்விட்டேன் போங்கள்.

எல்லாரும் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருப்பதால்தான் ஆடியில் பிரித்து வைக்கின்றார்கள் போலும்.

// மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான் //


பிரதீப், இதை ரெண்டு வரியில் நீங்கள் சொல்லி விட்டீர்கள். என்னுடைய ஒரு தோழியின் கதை இதுதான். இன்னும் கணவனை நினைத்துக் கொண்டு...குழந்தைக்காக வாழ்ந்து கொண்டு.....சில சமயங்களில் எனக்குத் தோன்றும். ஆண்கள் எப்பொழுதுமே சற்று வீரமான முடிவுகள் எடுப்போம். ஆனால் எந்த முடிவு எடுத்தாலும் அதை வீரமாக மேற்கொள்வது பெண்கள்தானோ என்று.

மன்மதன்
29-06-2005, 07:11 AM
இது எப்பவுமே
நிகழ் கால நிகழ்தகவு..

இரண்டு வரிகளில்
வாழ்க்கை பாடம்.

தொடர்ந்து எழுதுங்க பிரதீப்..

அன்புடன்
மன்மதன்

pradeepkt
29-06-2005, 07:27 AM
நன்றி ராகவன், மன்மதன்.
உங்கள் கருத்துகள் என்னைப் பலப்படுத்தி இருக்கின்றன.

ஆண்கள் வெகு வேகமாக முடிவு எடுப்பதென்னவோ உண்மைதான். ஆனால் செயல்படுத்துவது என்று வரும்போது பெண்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர். சந்தேகமில்லை.

karikaalan
29-06-2005, 12:39 PM
வாழ்க்கைச் சக்கரமோ, சங்கிலியோ
மிக நன்றாகச் சொல்லாடி இருக்கிறீர்கள் ப்ரதீப்ஜி
வாழ்த்துக்கள். மேலும் மேலும் படைப்பீர்களாக!

===கரிகாலன்

pradeepkt
29-06-2005, 12:48 PM
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கரிகாலன் அண்ணா.
சின்னவன் என்னை ஜீ எல்லாம் போட்டால் கூச்சமாக இருக்கிறது :)

அறிஞர்
29-06-2005, 02:37 PM
இருவரிகளின் அர்த்தங்கள் அதிகம் அன்பரே...

காதல், ஆட்டம், குழந்தை, கூத்தாட்டம், வழக்கு, ஓட்டம், கலவி.... என அழகாய் வடித்துள்ளீர்கள்... இன்னும் நிறைய எழுதுங்கள்....

pradeepkt
30-06-2005, 05:43 AM
மிக்க நன்றி அறிஞரே!

சுவேதா
28-07-2005, 04:26 AM
ஆகா பிரதீப் அண்ணாவின் கவிதை பார்த்தேன்
கண்கள் ஆடிப்போனது

கண்கள் ஆடிப்போக ஒவ்வொரு வரிகளும்
ஆணித்தனமாக விளக்கியது.

ஆனித்தனமாக உள்ள சொற்கள்
ஒரு வாழ்க்ககயை சுட்டிக் காட்டியது

சுட்டிக் காட்டிய வாழ்க்கை
பிரதீப் அண்ணாவின் கவிதை
ஆற்றலை காட்டியது :D:D:D

சூப்பர் அண்ணா நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

(இந்த கவிதை பகுதி விடுபட்டமையால் இத்தனை நாள் இதை நான் காணவில்லை அதனால் கருத்து கூறாமைக்கு மன்னிக்கவும் அண்ணா!)

pradeepkt
28-07-2005, 06:35 AM
ஆகா மிக்க நன்றி சுவேதா...
பதிலையும் கிட்டத்தட்டக் கவிதையாகவே வடித்து விட்டாயே...

சுவேதா
28-07-2005, 03:02 PM
:):):):)

ஆதவா
07-01-2007, 11:07 AM
காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்

காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது

காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது

மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்

கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது

குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின

குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது

வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்

தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது

குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்

மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்

கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!

இப்படியே ஆடிக்கிட்டே இருந்தாங்கன்னா என்னங்க ஆகுறது? ஆனா கவிதை சுழற்சியா இருக்கு.. அது ஆனந்தம். படிச்சுகிட்டே இருக்க வேண்டியது தான்..
வித்தியாசமான கவிதை.. எல்லாருக்கும் விளங்கவேண்டிய கவிதை.

ஓவியா
28-04-2007, 10:07 PM
மிகவும் அருமையான கரு.

கவிதை வடித்த விதம் பலே. பாராட்டுக்கள் பிரதீப்.

அதுவும் ஒரு வட்டத்தில் எத்தனை சுற்று வந்தாலும் முடியா வன்னம் அமைத்த கவிதை சூப்பர்மா சூப்பர்.

இதான் சிலரது வாழ்கையோ என்று எண்ணும் பொழுது,
???????? விடையாய் தெரிகிறது.