PDA

View Full Version : கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்



அறிஞர்
28-06-2005, 02:57 AM
தற்போது கிரிக்கெட்டில் அடுத்த மாதம் முதல் புதிய விதிமுறைகள் புகுத்த எண்ணியுள்ளனர்.

விளையாட்டு வீரர்களை.. அணித்தலைவர் வேண்டிய போது மாற்றிக்கொள்ளலாம். கால்பந்து, கூடைபந்து விளையாட்டுகளில் உள்ளது போல..

இதற்கு டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
----
அன்பர்களே தாங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல முடிவா. இதில் உள்ள குறைகள் என்ன.... என விவாதிக்கலாமே....

மன்மதன்
28-06-2005, 09:01 AM
புரியவில்லை நண்பரே..
யார் வேணாலும் வந்து பந்து வீசலாம்.. அல்லது பேட் பண்ணலாமா?? 12த் மேன், வெறும் ஃபீல்டிங் மற்றும் பை ரன்னர் ஆக மட்டும்தானே பயன் படுவார்கள்...

-
மன்மதன்

aren
28-06-2005, 10:03 AM
இது ஒரு சிறந்த முறையே. இதன் மூலம் ஆட்டம் பார்ப்பவர்களுக்கு நிறைய உற்சாகம் ஏற்படும். இப்பொழுது ஆட்டம் அனைத்தும் பார்வையாளர்களை வைத்தே ஏற்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஒரு நாள் ஆட்டத்திற்கு இவ்வளவு மவுசு இருக்கிறது. அதுபோல் இப்பொழுது 20Twenty என்று ஒன்றை கொண்டுவரப்போகிறார்கள். இரண்டு டீமும் தலா 20 ஓவர்கள் ஆடும். இதனால் கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால் போன்ற விளையாட்டுகள் மாதிரி இதுவும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆகையால் மக்கள் பெருமளவு ஆட்டத்தைப் பார்க்க வருவார்கள். அதனால் அவர்களுக்கு வருமானம் பெருகும். இது ஒரு நல்ல அறிகுறிதான்.

kavitha
04-07-2005, 07:57 AM
இதனால் ஆடுபவர்கள் எச்சரிக்கையோடு ஆடுவார்கள் என்றே தோன்றுகிறது. அணித்தலைவர் பாரபட்சமின்றி இருந்தால் நலன் பயக்கும்.

aren
17-07-2005, 02:14 PM
இப்பொழுது சமீபத்தில் நடந்தி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் இதை அறிமுகப்படுத்தினார்கள். இதில் முதலில் பந்து வீசுபவர்களுக்கு இது மிகவும் ஏதுவாக உள்ளது.
நன்றாக மட்டையாடுபவரை 12வது உறுப்பினராக வைத்துக்கொண்டு, நன்றாக பந்துவீசும், சுமாராக மட்டையடிக்கும் ஒருவரை பந்துவீசி முடித்தவுடன் அவரை வெளியே அனுப்பிவிட்டு நன்றாக மட்டையடிப்பவரை உள்ளே அறிமுகப்படுத்திவிடலாம். ஆனால் முதலில் ஆடுபவர்களுக்கு இதில் ஒரு பிரச்சனையிருக்கிறது. ஆடுபவரை முதலில் களத்தில் இறக்கினால் பந்து வீசுபவரால் பந்துவீசுவதில் சில சமயம் பிரச்சனை ஏற்படலாம். இது ஒரு பெரிய ரிஸ்க் இந்த புதிய விதிமுறையில்.

aren
17-07-2005, 02:16 PM
இந்த புதிய விதிமுறையால் காப்டன்கள் நன்றாக விளையாடினால் சிந்திக்க தெரிந்திருக்க வேண்டும்.
அது தவிற முதல் பதினைந்து ஓவர்களில் இருந்த விதிமுறைகள் இப்பொழுது முதல் பத்து ஓவர்களிலும், மேலும் இரண்டு ஐந்து ஓவர்களிலும் 20-ஓவர்களாக பிரித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் ஷேவாக் போன்றவர்கள் ஆடும் பொழுது பத்து ஓவர்களிலேயே விதிமுறைய பந்துவீசும் காப்டன் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.