PDA

View Full Version : குபம்கபீம் - அந்நியன் ஸ்பெசல்ஜீவா
27-06-2005, 11:19 AM
அந்நியன் : 5 இ-மெயில் பார்வர்ட்(Forward) பண்ணினா தப்பா??

IT GUY : ஒன்னும் தப்பே இல்லிங்க

அந்நியன் : 5 லட்சம் பேரு 5 இ-மெயில் பார்வர்ட்(Forward) பண்ணினா தப்பா??

IT GUY : தப்பு மாதிரிதாங்க தெரியுது..

அந்நியன் :5 லட்சம் பேரு 5 லட்சம் தடவ 5 இ-மெயில் பார்வர்ட்(Forward) பண்ணினா தப்பா??

IT GUY : பெரிய தப்புதாங்க..

அந்நியன் : அத தானடா நீங்க எல்லாம் பண்ணிகிட்டு இருக்கிங்க...வெட்டிபசங்களா.. போயி வேலையை பாருங்கடா..

pradeepkt
27-06-2005, 11:24 AM
ஹா ஹா ஹா.
இதை என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் அந்நியன் போல் சொல்லி மகிழ்ந்தேன்.

மன்மதன்
27-06-2005, 11:26 AM
ஹாஹ்ஹா.. சிரிப்பை அடக்க முடியலை...
அன்புடன்
மன்மதன்

gragavan
27-06-2005, 11:55 AM
கடவுளே! என்னால சிரிப்பு தாங்க முடியல......இதுக்கெல்லாம் என்ன தண்டனையாம்? அன்னியன் கிட்ட கேட்டேன். அவரு சொல்றாரு.......ஈ-மெயில் அனுப்புவாராம். அதாவது உண்மையான "ஈ" மெயில். சொல்லீட்டு யடிச்ஈயான் மானிட்டர்ல எழுதீட்டாரு.

பரஞ்சோதி
27-06-2005, 12:22 PM
அதிகமாக இமெயில் பார்வோர்ட் செய்த பணியாளனும், அதிகமான பீமெயில் கூட சுத்தியவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.

ஹாஹா இது எப்படி இருக்குதுப்பு.

pradeepkt
27-06-2005, 12:28 PM
பரஞ்சோதப்பா வாழ்க. :)

அறிஞர்
27-06-2005, 01:35 PM
ம்ம் சூப்பரப்பு.... ஜீவாதான் நிறைய ஈமெயில் அனுப்புகிறார்... போல.. அன்னியன் அலுவலகம் தேடி வரப்போறார்.

பரம்ஸும் சேர்ந்து சொல்வது நன்றாக உள்ளது..

மன்மதன்
27-06-2005, 01:40 PM
அதிகமாக இமெயில் பார்வோர்ட் செய்த பணியாளனும், அதிகமான பீமெயில் கூட சுத்தியவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.

ஹாஹா இது எப்படி இருக்குதுப்பு.

பீமெயில்ன்னா :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன்

gragavan
27-06-2005, 01:44 PM
பீமெயில்ன்னா :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன்
இராகவன் : அப்ப நீ அப்பாவியா? அடப்பாவியா?
மன்மதநாயகன் : தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏ

மன்மதன்
27-06-2005, 01:52 PM
பரம்ஸ் : நாலு பேர்க்கு நாலெட்ஜ் வளர்க்கணும்னா , நாலாயிரம் மெயில்கள் கூட ஃபார்வேர்ட் பண்ணலாம்..
(அந்நியன் கவனத்திற்கு..:D :D )
போ.கு
மன்மதன்

gragavan
27-06-2005, 01:55 PM
பரம்ஸ் : நாலு பேர்க்கு நாலெட்ஜ் வளர்க்கணும்னா , நாலாயிரம் மெயில்கள் கூட ஃபார்வேர்ட் பண்ணலாம்..
(அந்நியன் கவனத்திற்கு..:D :D )
போ.கு
மன்மதன்சூப்பரப்பு!!!!!!!!!!!! கலக்கீட்ட போ!

ஜீவா
27-06-2005, 02:03 PM
நாலு சேதியை தெரிஞ்சிக்கிறதுதான் பார்வேர்டு மெயிலு
பீகார்ல மோதிக்கிடுது சரக்கு ரயிலு..
சென்னையிலே பயங்கரமான வெயிலு..
இது தாண்டா இந்த தாடியோட ஸ்டைலு..

:D :D :D :D

மன்மதன்
27-06-2005, 02:13 PM
ஆஹா. இன்னொரு டி.ஆர். :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
27-06-2005, 02:17 PM
இந்தியன் வைரஸ் தாத்தா : இரண்டு பேரும் உயிரோட இருக்கணும்னு வேண்டிக்காதே.. ஒண்ணு மெஷின். இல்லை நான். ( ஆண்டி வைரஸ் இல்லேன்னா ) :D :D


-
மன்மதன்

aren
28-06-2005, 01:30 AM
சிரிப்பைவிட அதற்கு வந்த விமர்சனங்கள் மேலும் சிரிக்க வைக்கின்றன.

தொடருங்கள்.

மன்மதன்
28-06-2005, 05:02 AM
ஆண்டி வைரஸ் : அந்த மெஷினை என்ன பண்ணினே..

ஜெண்டில்மேன் வைரஸ் : தீர்த்து கட்டிட்டேன். முழ்தும் தீர்த்து கட்டிட்டேன்.

ஆண்டி வைரஸ் : என்னது முழுதுமா?? பல ஆயிரம் வைரஸ்ல வேணும் அதுக்கு..

ஜெண்டில்மேன் வைரஸ் : அதெல்லாம் அட்மின் சங்கரிடம் கேட்டு தெரிஞ்சுக்க..

-
மன்மதன்

gragavan
28-06-2005, 06:19 AM
அடடா! இங்க பார்ரா! கோடு போட்டா ரோடு போடுற கூட்டம் நம்ம கூட்டம். பிரமாதம் மன்மதன். பிரமாதம்.

அன்புடன்,
கோ.இராகவன்

தலைக்கு மேல் வைத்துக் கொண்டு
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=109528#post109528

pradeepkt
28-06-2005, 06:30 AM
பிரிச்சு மேய்றீங்களேய்யா.
கலக்கல் கலக்கல்

மன்மதன்
28-06-2005, 07:06 AM
லேப்டாப் நக்மா : உனக்கு வொயர்லஸ்ன்ன என்னான்னு தெரியுமா? ப்ளூடூத் ?? இன்ஃராரெட் ?? போர்ட்டபிலிட்டி..

காதலன் டெஸ்க்டாப்தேவா : இங்கே பார், என்கிட்டேயும் வயர்லெஸ் கீபோர்ட் இருக்கு, வயர்லெஸ் மௌஸ வந்திருச்சி, என் சிபியூல ப்ளூடூத் சொருகியிருக்கு.. பாட்டு கூட பாடுவேன். டான்ஸ் கூட போடுவேன்.(வேலை செய்யாதப்ப யாராவது ஓங்கி தட்டினா )

லேப்டாப் : ஸ்டாப் இட்..

காதலன் டெக்ஸ்டாப் நண்பன் வடிமௌஸ் : எவ அவ ?????

ஹிஹி
மன்மதன்

gragavan
28-06-2005, 07:47 AM
கெளம்பீட்டான்யா! கெளம்பீட்டான்...இனி மம்முதன நிப்பாட்ட முடியாது.

ஜீவா
28-06-2005, 08:42 AM
கலக்குறிங்க மன்மதா.. இதோ என்னோட பங்கு.. என்ன செய்ய நம்ம எல்லாம் தமிழ் சினிமா பாத்து கெட்டுபோனவங்கதானே.. :D :D

கம்யூட்டர் உனக்காக விஜய் : காதல்ங்கிறது , சில பேருக்கு கார்ட் டிஸ்க்ல எழுதுன டெக்ஸ்ட் பைல் மாதிரி.. ஒன்னு அழிஞ்சு போச்சுனா, இன்னொரு உருவாக்கிகலாம்.. சில பேருக்கு, சிடியில பதிஞ்ச மாதிரி.. ஒரு தடவை எழுதியாச்சினா.. அவ்வளவுதான்....


(யாருப்பா அது.. என்னது .... இன்னொரு சிடியில எழுதிக்கலாமா... )

gragavan
28-06-2005, 08:46 AM
கலக்குறிங்க மன்மதா.. இதோ என்னோட பங்கு.. என்ன செய்ய நம்ம எல்லாம் தமிழ் சினிமா பாத்து கெட்டுபோனவங்கதானே.. :D :D

கம்யூட்டர் உனக்காக விஜய் : காதல்ங்கிறது , சில பேருக்கு கார்ட் டிஸ்க்ல எழுதுன டெக்ஸ்ட் பைல் மாதிரி.. ஒன்னு அழிஞ்சு போச்சுனா, இன்னொரு உருவாக்கிகலாம்.. சில பேருக்கு, சிடியில பதிஞ்ச மாதிரி.. ஒரு தடவை எழுதியாச்சினா.. அவ்வளவுதான்....


(யாருப்பா அது.. என்னது .... இன்னொரு சிடியில எழுதிக்கலாமா... )இப்பல்லாம் டிவீடியில் எழுதிக்கிறாங்க............

மன்மதன்
28-06-2005, 09:19 AM
என்னிடம் ரீரைட்டபிள் சிடி இருக்கே.. ;) ;) ;)
அன்புடன்
மன்மதன்

mania
28-06-2005, 09:26 AM
அந்நியாயத்துக்கு கலக்கலா இருக்கே........பாராட்டுக்கள் அனைவருக்கும்...
அன்புடன்
மணியா....:D :D

மன்மதன்
28-06-2005, 09:41 AM
குணா (சாப்ஃட்வேர் ஆசாமி.) : ப்ரொகிராம் எழுதணும்னு நினைக்கையிலே லாஜிக் அருவி மாதிரி கொட்டுது. ஆனா அதை எழுதும் போதுதான் அந்த கோடிங்..கோடிங்...

EndUser : இது மனிதர் உணர்ந்து கொள்ள தரமான சாஃப்ட்வேர் அல்ல.. அல்ல..அல்ல..

குணா : அபிராமி.. அபிராமி...அவ கிட்ட கேளு.. அவதான் டீம் லீடர்..

-
மன்மதன்

pradeepkt
28-06-2005, 09:42 AM
டீம் லீடர் கிட்ட கேட்டா என்ன நடந்திரும்??
லட்டு குடுப்பா அபிராமி.

மன்மதன்
28-06-2005, 09:47 AM
அம்பி : ஏன் இங்கே யாருக்கும் பொறுப்பில்லே.. சாட் பண்றா, சொந்த வெப்சைட் கிரியேட் பண்றா.. போன்ல அரட்டை அடிக்கிறா.. யாரும் வேலை பார்க்கிறா மாதிரி தெரியலையே..

ரெமோ: நோ மாம்ஸ்.. லவ் கிரிட்டிங்ஸ் விட்டுட்டியே. 1 ஹவர் பர்மிசன் போட் ஜால்யா ஃபிகர் கூட பைக்ல ரவுண்ட் அடி மச்சி. காஃபி ஷாப் போயிட்டு வா..

அந்நியன் : இதற்கு எந்த மாதிரி தண்டனைன்னு தெரியலையே..:rolleyes: :rolleyes: சாஃப்ட்வேர்பியம்னு ஒண்ணு புதுசா கிரியேட் பண்ணிட வேண்டியதுதான்.. இவங்களையெல்லாம் வைரஸ் அனுப்பித்தான் கொல்லணும்...


ஹிஹி..

சுவேதா
19-07-2005, 12:09 AM
சூப்பர்... கலக்குங்க கலக்குங்க.

ஜீவா
19-07-2005, 06:38 AM
மன்னிக்கனும்..தமிழ்ல கிடைக்கலை.. கொஞ்சம் வேலை இருப்பதால் அப்படியே போடுகிறேன்.. முடிந்தால் தமிழில் மாற்றி விடுகிறேன்..

Ambi: Mr. ganguly y r u shouting at the umpire, after u have been declared out ??? athu satapadi thapu

Ganguly: dey kudumi, naa yaar theriyuma bengal tiger appidithan kathuven.

Ambi: kenya,bangaldesh kooda century adikirale australia,pakistan na 1 bathroom poralae y?

Ganguly: naan dhadha da , thevayana apo matum than aaduven.

Ambi: mr ganguly captains like ponting, inzy, smith ellarum century adichu team jeyika vaikara ,aana neengo aadave maatiringale?

Ganguly: dey kudumi,athan sachin, dravid, sehwag ellam century adikiraanungala apuram naan yethuku adikanum

Ambi: alatchiyama pesathingo Mr ganguly, aduthava talentla fame gain pandrathu thapu!!

Ganguly: poda kudumi, yenake advice pandriya

Anniyan :DEY ******(Bad words)

Ganguly: yaaruga neenga gillespie maathiri hair style vachurikinga???

Anniyan: naan avan ila da yema , yenda run adika ve maatingara,

Ganguly: batting form appo appo vanthutu pogum, cricketla ithellam sagajam thanaga.....

Anniyan: ippidi soli thapichidalaamnu paakiriya.....

Anniyan: 5 run edutha thapa?????????

Ganguly: onum thapu ilinga......

Anniyan: 5 matchla 5 run edutha thapa?????????

Ganguly: thapu maari thanga theriyuthu..........

Anniyan: 5 varushama 5 5 match 5 run edutha thapa?????????

Ganguly: periya thapu thaanga...........

Anniyan: kamunati athathanda oruoru matchalayum nee panikitu iruka

Anniyan: unakellam ballbojanam thanda, nee than stump akthar,sami,lee,mcgrath ellarum una vachuthan bowling practice panaporaanga!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

gragavan
19-07-2005, 06:48 AM
ஜீவா. சூப்பர். கிரிக்கட் டீம் கங்குலிய விட்டுட்டாலும் நம்ம மக்கள் கங்குலிய விடுற மாதிரி இல்லை.

ஆறும் ஆறும் முப்பத்தாறு
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=112843#post112843

pradeepkt
19-07-2005, 08:26 AM
பின்னிட்டீங்க... அப்படியே நேரம் கிடைக்கும்போது இதைத் தமிழ்ப் படுத்துங்க...

சுவேதா
19-07-2005, 11:56 AM
சூப்பர்.. அண்ணா தொடருங்கள்!

kiruba_priya
24-11-2005, 10:11 AM
கங்கூலி ஜோக் ஏற்கனவே தமிழில் உள்ளது ....

-'சிரிப்புகள் விடுகதைக'ளில் 'நெட்டில் சுட்டது' தலைப்பில் 'முகிலன்' பதித்துள்ளார்.

Shanmuhi
02-12-2005, 07:58 AM
ஹாஹா... அருமை