PDA

View Full Version : காதல் டைரி



மன்மதன்
27-06-2005, 05:39 AM
காதலின்
ஆழத்தை அளவிட
முடியாது என்றாய்..

அன்று
விழுந்தவன்..
இன்னும்
எழவில்லை..

அளந்து
கொண்டேயிருக்கிறேன்..

-
முன்னுக்கு
வர கடின உழைப்பு
தேவை என்று
யார் சொன்னது..

நீ
உழைக்காமலே
என் கண் முன்
எப்பொழுதுமாய்..

-

காதலின்
நீளம், அகலம்
வரையறுக...

அன்று
விளையாட்டை
நீ
கேட்ட கேள்விக்கு
பதில்..

நீளம்...
நம் இருவருக்கும்
இடையில் இருக்கும்
மௌனம்..

அகலம்..
நம் இருவருக்கும்
இடையில் இருக்கும்
தூரம்..

-

என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு....

-

நிலவிலிருந்து
பார்த்தால்
சீனப்பெருஞ்சுவர்
தெரிகிறதாமே

நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது என்பேன்..

gragavan
27-06-2005, 06:14 AM
மன்மதக் கவிஞரே கவிதைகள் சிறப்போ சிறப்பு. காதல் கவிதைகள் எழுதுவது லேசென்று சொல்வார்கள். ஆனால் அது எல்லாக் காதல் கவிதைகளுக்கும் பொருந்தாது.

gragavan
27-06-2005, 06:17 AM
நீளம்...
நம் இருவருக்கும்
இடையில் இருக்கும்
மௌனம்..

அகலம்..
நம் இருவருக்கும்
இடையில் இருக்கும்
தூரம்..
இதுதான் முத்தாய்ப்பு.....

மன்மதன்
27-06-2005, 06:18 AM
நன்றி மாம்ஸ்.. உங்க கவிதை ஒன்று கொடுங்களேன்..
அன்புடன்
மன்மதன்

சுவேதா
27-06-2005, 12:10 PM
கவிப்புயல் மன்மதன் அவர்களே உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்!

pradeepkt
27-06-2005, 12:20 PM
கலக்கிட்டீங்கப்பு.
இன்னும் நிறைய எழுதுங்க.

gragavan
27-06-2005, 12:31 PM
நன்றி மாம்ஸ்.. உங்க கவிதை ஒன்று கொடுங்களேன்..
அன்புடன்
மன்மதன்நான் எழுதுறத விட நீங்கள்ளாம் எழுதுறதே நல்லாயிருக்கு....நாங் கவித எழுதுறேன்னா....பிரதீப் சண்டைக்கு வருவாரு!

Sridhar
27-06-2005, 12:49 PM
நன்று.... நன்று.... நன்று.... நன்று
தொடருங்கள்.. மன்மதரே

karikaalan
27-06-2005, 01:24 PM
மன்மதன்ஜி

வாழ்த்துக்கள், டைரி பகுதி தொடங்கியதற்காக! காதலில் Geometry கூட உண்டு என்பது புலனாகியது!!

===கரிகாலன்

மன்மதன்
27-06-2005, 01:27 PM
நன்றி சுவேதா, பிரதீப், ஸ்ரீதர், கரிகாலன்ஜி ..
கண்டிப்பா தொடர்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
27-06-2005, 01:38 PM
[
நிலவிலிருந்து
பார்த்தால்
சீனப்பெருஞ்சுவர்
தெரிகிறதாமே

நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது என்பேன்..

-


மன்மதன்
இது அழகான துள்ளல் கவிதை மன்மதன்

மழை, நிலா என இயற்கையாக நெஞ்சை வருட வைக்கிற கவிதைகள் உங்களுக்குள் இன்னும் கொட்டிக் கிடக்கிறது. வாழ்த்துக்கள் .....

thempavani
27-06-2005, 02:42 PM
யப்பு இது யாரு..நம்ம மன்மதனா..ஆளே அடையாளம் தெரியலையே...

எப்பா உனக்கு இன்னும் எத்தனை முகம்தான் உண்டு...
"கவிஞன்" முகம் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...இன்னும் எழுது...

மன்மதன்
28-06-2005, 03:59 AM
இது அழகான துள்ளல் கவிதை மன்மதன்

மழை, நிலா என இயற்கையாக நெஞ்சை வருட வைக்கிற கவிதைகள் உங்களுக்குள் இன்னும் கொட்டிக் கிடக்கிறது. வாழ்த்துக்கள் .....

நன்றி பிரியன்... எல்லாம் உங்க தீபம் பண்ணிய வேலைதான்..

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
28-06-2005, 04:04 AM
யப்பு இது யாரு..நம்ம மன்மதனா..ஆளே அடையாளம் தெரியலையே...

எப்பா உனக்கு இன்னும் எத்தனை முகம்தான் உண்டு...
"கவிஞன்" முகம் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள்...இன்னும் எழுது...

நன்றி தேம்பா......;) ;)
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
28-06-2005, 06:51 AM
குற்றம்
புரிந்தவர்
வாழ்க்கையில்
நிம்மதி...??

காதல்
புரிந்தவர் ???

-

மொழி
முக்கியமா.
காதல்
முக்கியமா..

என் வீட்டில்
நீ பேசப்போவது
எம் மொழி
என்றாய்...

நான்
நம்
காதல் மொழி
என்றேன்..

கடைசியில்
என் மொழியை
நீ
ஏற்றுக்கொண்டது

என்
காதலை
ஏற்றுக்கொண்டதை
விட மேல்

-

வெறும்
சௌக்கியமாவில்
ஆரம்பித்த
நம் நட்பு..

இன்று
ஒருவருக்குள்
மற்றவர்
ஐக்கியமாகி

-

தட்டுச்சு
செய்யும்போது
உன்
பெயரில் உள்ள
எழுத்துக்களை
மட்டும்
என் விரல்கள்
தட்டுகின்றன...

படிக்கும்போது
என்
விரல்கள்
உன் பெயரில்
உள்ள
எழுத்துக்களை
சுற்றி வட்டமிடுகின்றன

ஆனாலும்
உன்
முகம் நோக்கி
பேசுகையில்
வார்த்தைகளை
தேடிப்பிடிக்க
கஷ்டப்படுவது
ஏனடி..

-

எனக்கு
பிடித்த
கவிதை
நீ



உனக்கு
பிடித்த
கவிதை
நான்.......


நமக்கு
பிடித்த
ஹைக்கூ
காதல்......

பிரியன்
28-06-2005, 07:21 AM
அடப்பாவி மனுசா இவ்வளவு நாளா கவிதை எழுத வராதுன்னு எப்படி உன்னால பொய் சொல்ல முடிஞ்சது - தபூ சங்கர் தோத்தார் போங்கள்...

karikaalan
28-06-2005, 07:40 AM
காதல் புரிந்த நுமது வாழ்வில் நிம்மதி இருப்பது போல்தானே இருக்கிறது கவிதைத்தொடரின் மற்ற வரிகள்!

===கரிகாலன்

மன்மதன்
28-06-2005, 11:08 AM
நன்றி பிரியன்.. தபு சங்கரை என்னுடனா.. ?? ஹிஹி..
நன்றி கரிகாலன்ஜி..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
28-06-2005, 11:16 AM
பயப்படாதீங்க மன்மதன் ... யானைக்கு அதன் பலம் தெரியாதும்பாங்க :) :) :) :) :) .....

kavitha
28-06-2005, 11:23 AM
"என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு...."


சபாஷ் மன்மதா! தொடரட்டும் தொகுப்பு!

மன்மதன்
28-06-2005, 11:39 AM
கட்டுப்பாடு
இல்லாமல்
திரிந்த
என்னை

கட்டுபடுத்தி
அழகு பார்த்தது
உன்
அன்பு

கட்டுங்கடங்காமல்
செல்லும்
என் காதலை

கொட்ட
முடியாமல்
தடுப்பதும்
உன்
அன்பு...

-

எதிரெதிரே
கடந்து
செல்கையில்

புன்னகையை
மட்டுமே
பரிமாறிக்கொண்டு

கடந்து
வந்த காலங்கள்..

சட்டென
ஒரு தடவை
நான்
நின்று விட..

ஒண்ணுமே புரியாமல்
நீயும்
நிற்க..

கண்கள்
பேசிக்கொண்ட
அந்த வினாடிகள்..

காதலின்
அஸ்திவார
துளிகள்...

-

ஒரு
தேர்வு
நாளில்

எதேச்சையாக
அருகருகே
நாம்.

நீ
பிள்ளையார்
சுழி போட்டு
தேர்வை
ஆரம்பித்தாய் ...

சுழிக்குள்
மாட்டுக்கொண்டு
தவிக்கிறேன்..
நான்.

-

கல்லூரி
விழாக்களில்
நடனம் ஆட
அழைத்த போது..

பல தடவை
மறுத்திருக்கிறாய்..
என்னிடம்
கோபம் கொண்டாய்.

அனைவரின்
முன்பு ஆட
நடிகை உண்டு.

நான் உன்
முன்பு மட்டும்தான்
ஆடுவேன் என்றாய்..

எங்கே ஆடிக்காட்டு
என்றேன்...

அன்று
ஆடினாய்..

ஆடிப்போனவன்
நான்..

-

மன்மதன்

மன்மதன்
28-06-2005, 11:43 AM
"என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு...."


சபாஷ் மன்மதா! தொடரட்டும் தொகுப்பு!

இது மட்டும் பெண் எழுதின மாதிரி கவிதை ;) ;) .. நன்றி கவி..
அன்புடன்
மன்மதன்

ஜீவா
28-06-2005, 11:44 AM
அருமை.. அருமை.. எத்தனை தடவை வேண்டுமானாலும் படித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு...

அறிஞர்
29-06-2005, 01:48 PM
அருமை அன்பரே... வேலைப்பளுவால் இங்கு வர இயலவில்லை.. ஒவ்வொன்றும்... முத்தான கவிகள்.. அனைத்திற்கும் பதில் எழுதினால்.. பக்கங்கள் நிரம்பிவிடும்... சிலவற்றிற்கு... சில வரிகள்...

அறிஞர்
29-06-2005, 01:52 PM
கட்டுங்கடங்காமல்
செல்லும்
என் காதலை

கொட்ட
முடியாமல்
தடுப்பதும்
உன்
அன்பு...
காதலை
கொட்டிவிடு.
இல்லாவிட்டால்
மனைவியிடும்
சொல்லும்
துரதிருஷ்டசாலி
ஆகிவிடுவாய்.....

அறிஞர்
29-06-2005, 01:55 PM
நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது என்பேன்..வாவ்.. அருமையான வரிகள்...

எவ்விடத்திலும்
கண்டுபிடிக்கும்
காதலனின்
கண்ணுக்கு...
காதலி...
நிலவே.....

அறிஞர்
29-06-2005, 02:03 PM
கண்கள்
பேசிக்கொண்ட
அந்த வினாடிகள்..

காதலின்
அஸ்திவார
துளிகள்...வாயின்
வார்த்தைகளால்
புரிய வைக்க
இயலாததை...
எளிதில்
புரிய வைக்கும்
கண்களின்
வார்த்தைகளுக்கு...
எத்தனைதான்...
வலிமை....

கண்கள்தான்..
காதலின்
அஸ்திவாரத்திற்கு
வலிமையான
உறுப்போ...

அறிஞர்
29-06-2005, 02:09 PM
வீடு
திரும்பியதும்
தருவாயே

ஒரு
ஃபில்டர் காபி..
காதல் நுரை
பொங்கி வழிய..இதை காட்டிலும்
வேறெந்த காபி
அதிக
புத்துணர்வு தரும்
அன்பரே....

புத்துணர்வு வேண்டுமா...
கேளுங்கள்...
காதல் நுரை
பொங்கி வழியும்
காபியை....

வாழ்த்துக்கள் மன்மதா.. இன்னும் எழுதுங்கள்...

மன்மதன்
30-06-2005, 04:06 AM
நன்றி ஜீவா...

நன்றி அறிஞரே.. மிக்க நன்றி.. உங்க எழுத்துக்கள் இன்னும் என்னை எழுத தூண்டுகின்றன..

அன்புடன்
மன்மதன்

pradeepkt
30-06-2005, 05:04 AM
காதல் ரசம் சொட்டவில்லை, கொட்டுகிறது மன்மதானந்தா!
வடியுங்கள் இந்தக் காதல் நாட்குறிப்பேட்டை வருடம்தோறும்!

மன்மதன்
30-06-2005, 05:10 AM
நன்றி பிரதீப்.
அன்புடன்
மன்மதன்

gragavan
30-06-2005, 05:17 AM
அன்று

ஆடினாய்..

ஆடிப்போனவன்
நான்..
மன்மதன்மன்மதா பேருக்கேற்ற கவிதைகள் எழுதியிருக்கிறாய். ம்ம்ம்ம். யாரந்த கொடுத்து வைத்தவர்?

மன்மதன்
02-07-2005, 05:36 AM
நிறைய அன்பு கொடுத்து வைத்தவர்.. வைத்தவர்கள்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
02-07-2005, 05:48 AM
எதற்கெடுத்தாலும்
உதட்டை
சுழிக்கிறாய்...

உதட்டை
பிதுக்குகிறாய்..

உதட்டை
கடிக்கிறாய்..

நீ
இப்படி எல்லாவற்றிற்குமாய்
உதட்டால் பேசுகிறாய்..

நான்..
மட்டும் அமைதியாய்
அனைத்தையும் ரசித்தபடி...

-

கல்லூரி
முடிந்து கடைசி
நாளில் கண்ணீரோட
பிரிய பட்டோம்..

அதற்கு முன்
ஒன்றாய்
சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொள்ள
பிரியப்பட்டோம்..

என்னிடம்
இருக்கும்
புகைப்படத்தை

பார்ப்பவர்கள்
எல்லாம்
உன்னை காட்டியே
யாரிவள்
என்று கேட்கின்றனர்..

பல
பேருக்கு மத்தியில்
இருக்கும் உன்
முகம் மட்டும்
பிரகாசமாய் ஏன்.

காரணம்
கேட்டவர்களிடம்
சொன்னேன்..

அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..

பிரியன்
02-07-2005, 06:18 AM
[font=Latha]பேருக்கு மத்தியில்
இருக்கும் உன்
முகம் மட்டும்
பிரகாசமாய் ஏன்.

காரணம்
கேட்டவர்களிடம்
சொன்னேன்..

அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..

-
மன்மதன்

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் அழகு உச்சத்தில் இருப்பது காதல் தருணங்களில்தான். கவிஞர் மேத்தா ஒரு கவிதையில் அழகில்லாத எங்கள் ஏழைப் பெண்களை அழகு செய்யவே வருகிறது காதல் என்று அழகாக சொல்லியிருந்தார். காதலியின் கண்களில் காலங்கள் தாண்டியும் பிரகாசித்துக் கொண்டிருப்பது அவளுடைய காதலல்லவா...

காதலில் என்னை நனைத்துக் கொள்ள உங்கள் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

மன்மதன்
02-07-2005, 07:12 AM
நன்றி பிரியன். தீபங்களை கவனியுங்களேன்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
02-07-2005, 07:19 AM
கவனிக்க வேண்டும். தொகுப்பை எப்படி வெளியிடுவது என்பது அடுத்து வரும் நான்கைந்து கவிதைகளைப் பொறுத்தது என்பதாலே இந்த தாமதம். உளறல்களாக வெளிவந்ததை அதே தொனியில் வெளியிடுவது விரும்பதாகத நிகழ்வுகளை ஏற்படுத்திவிடக்கூடுமென்ற எண்ணம்தான் தாமதத்திற்கு காரணம்.விடுமுறைக்கு செல்வதற்கு முன் முதல்பாகம் முடிந்துவிடும். இரண்டாம்பாகம் விடுமுறைக்குபின்பே பதிக்க திட்டமிட்டுள்ளேன்.

kavitha
02-07-2005, 09:37 AM
அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..

காதலிப்பவர்களை காதலித்தவர்கள் விரைவில் இனம் கண்டு விடுவர்.
இயல்பான ஆனால் அழுத்தமான நடை மன்மதன். அருமை!

pradeepkt
05-07-2005, 06:11 AM
அருமையாக எழுதுகிறீர்கள் மன்மதன்.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.

மன்மதன்
05-07-2005, 08:17 AM
நன்றி கவி, பிரதீப்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
05-07-2005, 08:33 AM
சொட்ட
சொட்ட
நனைந்த
ஒரு
மழைநாளில்..

திட்டு
திட்டாய்..
மனதில்
ஆசைகள்
எழும்பும்..

இன்று
நினைத்து
பார்க்கையில்
இனிமையாய்..

நல்லவேளை
பொழுதை
கெடுத்து
விடவில்லை....

-

எனக்கு
அன்று தெரிந்திருக்க
வாய்ப்பில்லை

இன்று
உன்னை பற்றி
கவிதையாய்

தீட்டும்
போதுதான்
தெரிகிறது.

உன்னை
பற்றி
எழுதி எழுதியே

என்
காலமெல்லாம்
கழிந்துவிடும் என்பது...

---


மன்மதன்

karikaalan
05-07-2005, 11:56 AM
மழை நாளில், மனதினிய காதலியுடன்..... கேட்கவே இனிக்கிறது மன்மதன்ஜி
அவ்வாறிருந்துமா எழுதி எழுதியே வாழ்நாள் கழிப்பது? நியாயமில்லைதான்!

மன்மதன்
05-07-2005, 11:58 AM
மழை நாளில், மனதினிய காதலியுடன்..... கேட்கவே இனிக்கிறது மன்மதன்ஜி
அவ்வாறிருந்துமா எழுதி எழுதியே வாழ்நாள் கழிப்பது? நியாயமில்லைதான்!

ஆஹா.. எதையோ எதனுடையோ முடிச்சி போடறீங்க ஜீ.. நான் விளையாட்டுக்கு வரலை..:D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
07-07-2005, 07:01 AM
நான்..
பதிலளிக்க
தெரியாமல்..
பல்லிளித்து
மௌனமே பதிலாய்........

-


அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..

-
மன்மதன் அருமையான வரிகள்... மன்மதா... காதலித்த காலங்களை நினைவூட்டும் வரிகள்...

அறிஞர்
07-07-2005, 07:04 AM
உன்னை
பற்றி
எழுதி எழுதியே

என்
காலமெல்லாம்
கழிந்துவிடும் என்பது...

---


மன்மதன்
அழகாய் தீட்டியுள்ளீர்கள்..

இன்னும் தொடருங்கள்.. அன்பரே...

poo
16-07-2005, 10:58 AM
மன்மதன்..
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்வரே..
இன்னும் காதலியுங்கள்.. நிறைய கவிதைகள் படிக்கவேண்டும் நாங்கள்!!

(ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.. )
தொடருங்கள்..

sumathi
16-07-2005, 11:51 AM
மன்மதன் காதலில் விழுந்துட்டாராஅ?

சுவேதா
16-07-2005, 01:47 PM
ஆகா யாரு ரதி அக்காவா?? :):)

மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்!

pradeepkt
16-07-2005, 01:49 PM
மன்மதன் காதலில் விழுந்துட்டாராஅ?
சுமதி வணக்கம்,
நல்வரவு
தங்களைப் பற்றிய அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் கொடுங்களேன்.

மன்மதன்
29-08-2005, 07:54 AM
மன்மதன்..
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்வரே..
இன்னும் காதலியுங்கள்.. நிறைய கவிதைகள் படிக்கவேண்டும் நாங்கள்!!

(ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.. )
தொடருங்கள்..

பூவை கவர்ந்து விட்டதா என் டைரிப்பூக்கள்.. (நானே சொல்லிகிட்டதான் உண்டு..;) ;) ) நன்றி பூ.. இதை தொடரத்தான் வேண்டுமோ..

pradeepkt
29-08-2005, 08:22 AM
ஏம்ப்பா திடீருன்னு மொளைச்சி வந்து அதென்ன கேள்வி வேற???
நல்லாத் தொடரு தொடருன்னு தொடரு.

மன்மதன்
30-08-2005, 09:11 AM
இன்று டைரியை
திறந்து பார்த்தேன்..
நனைந்திருந்தது..

அது படிக்க முடியாத
மொழியில்தான்
எழுதியிருக்க வேண்டுமோ..

-
மன்மதன்

pradeepkt
30-08-2005, 09:14 AM
ஆகா, என்னமா ஒரு ஏழாயிரமாவது பதிவு.
நச்சுனு கொடுத்திருக்கப்பா.
இதே மாதிரி இன்னும் நிறைய நிறைய எழுது.

பிரியன்
30-08-2005, 09:16 AM
இன்று டைரியை
திறந்து பார்த்தேன்..
நனைந்திருந்தது..

அது படிக்க முடியாத
மொழியில்தான்
எழுதியிருக்க வேண்டுமோ..

-
மன்மதன்


மிக மிக அழகான கவிதை மன்மதன்,

நீ கவிஞனென்று உலகம் ஒத்துக் கொள்ள மிகச் சரியான முகவரி இந்தக் கவிதை.....

மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள்

gragavan
30-08-2005, 09:22 AM
இன்று டைரியை
திறந்து பார்த்தேன்..
நனைந்திருந்தது..

அது படிக்க முடியாத
மொழியில்தான்
எழுதியிருக்க வேண்டுமோ..

-
மன்மதன்
படிக்க முடியாத மொழியில்
அந்தக் கண்கள் எழுதியதை
உனது இந்தக் கண்கள் படித்தனவே!
அது எப்படி?
கண்ணீர்தான் காதல் மையா?

மன்மதன்
30-08-2005, 09:51 AM
ஆகா, என்னமா ஒரு ஏழாயிரமாவது பதிவு.
நச்சுனு கொடுத்திருக்கப்பா.
இதே மாதிரி இன்னும் நிறைய நிறைய எழுது.

நன்றி நண்பா.. உன்னால்தான் இந்த பதிவு இப்படி வந்தது.. கிரெடிட் கோஸ் டூ யூ..;) ;)

மன்மதன்
30-08-2005, 09:53 AM
மிக மிக அழகான கவிதை மன்மதன்,

நீ கவிஞனென்று உலகம் ஒத்துக் கொள்ள மிகச் சரியான முகவரி இந்தக் கவிதை.....

மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள்

நன்றி பிரியமானவரே... 7000 பதிவில் ஒரு நல்ல கவிதை கொடுத்த திருப்தி இப்பத்தான் கிடைத்திருக்கிறது..

மன்மதன்
30-08-2005, 09:56 AM
படிக்க முடியாத மொழியில்
அந்தக் கண்கள் எழுதியதை
உனது இந்தக் கண்கள் படித்தனவே!
அது எப்படி?
கண்ணீர்தான் காதல் மையா?

இது எனக்கான கேள்வியா இல்லை கவிதையா என்று சில நேரம் சிந்தித்தேன்.. ராகவன் கவிதை பக்கம் கவனம் செலுத்தினால் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்......என்னையும் சேர்த்து.....;) ;)

kavitha
31-08-2005, 06:43 AM
படிக்க முடியாத மொழியில்
அந்தக் கண்கள் எழுதியதை
உனது இந்தக் கண்கள் படித்தனவே!
அது எப்படி?
கண்ணீர்தான் காதல் மையா?
இது கண்ணீராகத்தான் இருக்கவேண்டுமா.. மன்மதனோட இமேஜை ஸ்பாயில் பாண்ணாதீரும். :cool: :p :)

மன்மதன்
31-08-2005, 12:01 PM
இது கண்ணீராகத்தான் இருக்கவேண்டுமா.. மன்மதனோட இமேஜை ஸ்பாயில் பாண்ணாதீரும். :cool: :p :)

நன்றி கவி :cool: :cool: .

mukilan
31-08-2005, 03:28 PM
அடடா! இந்தப் பக்கம் இவர் இப்படி தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டு இருக்கிறார் என இப்பொழுது தானே பார்க்கிறேன். எந்த வரிகளைச் சொல்வது, எவற்றை விடுவது.... எழுதிக் கொண்டே இருங்கள்!!!

kalvettu
02-09-2005, 10:27 AM
நிலவிலிருந்து
பார்த்தால்
சீனப்பெருஞ்சுவர்
தெரிகிறதாமே

நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது என்பேன்..


அருமை நண்பரே

மன்மதன்
03-09-2005, 04:34 AM
நன்றி முகிலன்..நண்பர் கல்வெட்டு உங்களை பற்றிய அறிமுகம் கொடுங்களேன்..

மன்மதன்
07-09-2005, 02:33 PM
நான்
உன் மேல் கொண்ட
காதல் கரும்பலகையில்
எழுதிய எழுத்து போலானது..

பலகை விட்டு
அழிந்தாலும்
படித்த படிப்பு
கடைசி வரை வருகிறதே..


http://img.photobucket.com/albums/v372/manmathan/Board1.jpg


ஒருநாள்
என்னை ஆசிரியர்
கரும்பலகையில்
பாடத்தை எழுத சொல்ல..

எழுதி கொண்டிருக்கும்
இடையே கேட்ட உன்
முணுமுணுப்பு குரலில்
எழுதுவதை நிறுத்தினேன்..

கரைந்த
கொண்டிருந்த சாக்பீஸ்
நின்று விட்டது.
கரைய தொடங்கியது
என் மனசு..

பிரியன்
07-09-2005, 07:21 PM
மன்மதன் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க இவ்வளவு அழகான மனதை....

காதல் மழையில் நனைத்து விட்டது உங்கள் கவிதை......

உண்மையில் காதல் கவிதையில் நானெல்லாம் உங்களுக்கு காததூரம் பின்னாடியே நிற்கிறேன்.

வாழ்த்துகள்.

மன்மதன்
08-09-2005, 04:18 AM
நன்றி பிரியன்.. என்னை எழுத தூண்டியதே உங்கள் கவிதைகள்தானே..

பிரியன்
08-09-2005, 05:39 AM
தூண்டியது வேண்டுமானால் நானாக இருக்கலாம். ஆனால் சிறப்புகள் உங்கள் எழுத்துகளுக்குத்தான்

gragavan
08-09-2005, 05:40 AM
மன்மதன் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க இவ்வளவு அழகான மனதை....

காதல் மழையில் நனைத்து விட்டது உங்கள் கவிதை......

உண்மையில் காதல் கவிதையில் நானெல்லாம் உங்களுக்கு காததூரம் பின்னாடியே நிற்கிறேன்.

வாழ்த்துகள்.நீங்க வேற பிரியன். நான் இன்னும் ஒன்னாப்பே தாண்டல....மன்மதன் டிகிரி வாங்கீட்டான். வாழ்த்துகள் மன்மதன். அந்தக் கரும்பலகைப் பாடத்தை உண்மையிலேயே ரசித்தேன். அருமை.

ஜீவா
08-09-2005, 07:29 AM
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. என்ன சொல்ல..
செழிக்க பேசுறது தமிழ்.. எனக்குன்னு ஒரு வார்த்தை பாராட்ட கிடைக்க மாட்டிங்குது..

ஆ.... கிடைச்சிடுச்சு..
..
சூப்பர் மன்மதா.. :D :D :D

மன்மதன்
08-09-2005, 07:37 AM
நன்றி மாம்ஸ்.. மற்றும் ஜீவா மாம்ஸ்..

kavitha
08-09-2005, 08:58 AM
கரைந்துக்
கொண்டிருந்த சாக்பீஸ்
நின்று விட்டது.
கரையத் தொடங்கியது
என் மனசு..


அருமை மன்மதன். :)

(அப்பால ஒரு கேள்வி... ஏமெய்யா? பள்ளிக்கூடத்திலேயே ஆரம்பிச்சுட்டீரா?...:D)

pradeepkt
08-09-2005, 08:59 AM
பிரிச்சு மேயிறயேப்பா...
ஹ்ம்ம்.. பாலைவனத்தில இருந்தாலும் கவிதை ஊற்றெல்லாம் பொங்கத்தானே செய்யுது...
அருமை அருமை.

மன்மதன்
08-09-2005, 09:17 AM
அருமை மன்மதன். :)

(அப்பால ஒரு கேள்வி... ஏமெய்யா? பள்ளிக்கூடத்திலேயே ஆரம்பிச்சுட்டீரா?...:D)

PreKGல ஆரம்பிச்சது..;) ;)

மன்மதன்
08-09-2005, 09:18 AM
பிரிச்சு மேயிறயேப்பா...
ஹ்ம்ம்.. பாலைவனத்தில இருந்தாலும் கவிதை ஊற்றெல்லாம் பொங்கத்தானே செய்யுது...
அருமை அருமை.

நன்றி பிரதீப்.. :)

gragavan
08-09-2005, 10:06 AM
பிரிச்சு மேயிறயேப்பா...
ஹ்ம்ம்.. பாலைவனத்தில இருந்தாலும் கவிதை ஊற்றெல்லாம் பொங்கத்தானே செய்யுது...
அருமை அருமை.
நிலம் தானே பாலை
அவன் உளம் என்றும் சோலை
காதலுக்குத்தான் அங்கே முதல் வேலை

பிரசன்னா
09-09-2005, 05:17 PM
நன்று.... நன்று.... நன்று.... நன்று
தொடருங்கள்.. மன்மதரே

மன்மதன்
10-09-2005, 05:27 AM
நன்றி பிரசன்னா.. அறிமுகம் பகுதியிலே உங்களை பற்றி கொடுங்களேன்..

மன்மதன்
18-10-2005, 09:26 AM
கனவில் கண்ட பெண்களும்
வருவதாய் கூறினேன்..
நினைவில் யார்
இருப்பதாய் கேட்டாய்..

கனவில் கூட
உன்னை காண வேண்டும்
என்று எப்பொழுதும்
உன் நினைவாக
இருக்கிறது என்றேன்..

'கள்ளா' என்ற
பட்டம் சூட்டி மகிழ்ந்தாய்..

-


திருவல்லிக்கேணி
அண்ணாசாலையில்
மழை ஓய்ந்த ஒரு
சாரல் நேரத்தில்
மெதுவாக சாம்பார் ஊற்றிய
வடையை இருவரும்
ஊதித்தின்ற அந்த
மழையுதிர்க்காலத்தை
மறக்க முடியாமல்
இன்றும் டைரியில்
குறித்தேன்.......

பிரியன்
18-10-2005, 09:31 AM
திருவல்லிக்கேணி
அண்ணாசாலையில்
மழை ஓய்ந்த ஒரு
சாரல் நேரத்தில்
மெதுவாக சாம்பார் ஊற்றிய
வடையை இருவரும்
ஊதித்தின்ற அந்த
மழையுதிர்க்காலத்தை
மறக்க முடியாமல்
இன்றும் டைரியில்
குறித்தேன்.......

எப்படி மறக்க முடியும். காதலின் கதகதப்பில்....

thempavani
18-10-2005, 09:33 AM
எப்பு சூப்பரு...பலருக்கு மெரினா கடற்கரைதானே உறவுகளை வளர்த்துக் கொடுக்கிறது...

மன்மதன்
04-09-2007, 11:55 AM
நீண்ட நாட்கள் (வருடங்கள் :D ) கழித்து ... மீண்டும் திறக்கிறேன்.. காதல் டைரி....:music-smiley-010:

நண்பர்களுடனான
அரட்டையிலும்
நம் மொழியில்
நாம்
பேசிக்கொள்ள
என்றுமே
தவறியதில்லை..
கால்கள் உரச...


மழைக்காலத்தில்
...தேனீர்
வெயில்காலத்தில்
...இளநீர்
காதல் காலத்தில்
...முத்தம்.

பென்ஸ்
04-09-2007, 12:16 PM
அடடா... மன்மதன் தொடங்கியாச்சா....

கண்களோ, கால்களோ உரசும் போது
மனது பத்திக்கொண்டாலும்
சொல்லாமலே....!!!!!


மழைக்காலத்தில்
...தேனீர்
வெயில்காலத்தில்
...இளநீர்
காதல் காலத்தில்
...முத்தம்.


அப்போ க*ண்ணீர் கால*த்தில்..???

மன்மதன்
04-09-2007, 12:27 PM
அடடா... மன்மதன் தொடங்கியாச்சா....

கண்களோ, கால்களோ உரசும் போது
மனது பத்திக்கொண்டாலும்
சொல்லாமலே....!!!!!



அப்போ க*ண்ணீர் கால*த்தில்..???

காதல்.....!!!

reader
04-09-2007, 01:00 PM
நீங்கள் ரொம்ப பண்பட்டவர் போல இவ்வளவு அழகா எழுதி இருக்கிறீர்கள்

மன்மதன்
06-09-2007, 12:05 PM
நீங்கள் ரொம்ப பண்பட்டவர் போல இவ்வளவு அழகா எழுதி இருக்கிறீர்கள்

நன்றி..

ஆதவா
06-09-2007, 12:28 PM
அய்யோ அய்யோ!! சூப்பர் அப்பூ!!!

பின்ன எதுக்குங்க இப்போல்லாம் எழுதறதே இல்லை.?? வீட்ல கோவிச்சுக்குவாங்களா?

ஆதவா
06-09-2007, 12:35 PM
நீண்ட நாட்கள் (வருடங்கள் :D ) கழித்து ... மீண்டும் திறக்கிறேன்.. காதல் டைரி....:music-smiley-010:

நண்பர்களுடனான
அரட்டையிலும்
நம் மொழியில்
நாம்
பேசிக்கொள்ள
என்றுமே
தவறியதில்லை..
கால்கள் உரச...


மழைக்காலத்தில்
...தேனீர்
வெயில்காலத்தில்
...இளநீர்
காதல் காலத்தில்
...முத்தம்.


வாங்க சார்.. (மீனு வலையில சிக்கிடுச்சுனு நினைக்கிறேன்)
பென்ஸ்..... என்ன கொடுமை மன்மதன்னு கேட்கறமாதிரி இருக்கு....

கவிதைகள் அழகு+அருமை.....

சுகந்தப்ரீதன்
08-09-2007, 11:17 AM
என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு....

மிக அருமை... மன்மதரே....
அழகாகவும் நளினமாகவும் இருக்கிறது உங்கள் கவி வரிகள்..!
வாழ்த்துக்கள்...!