PDA

View Full Version : எங்கே உங்கள் கவிதை????பரஞ்சோதி
26-06-2005, 07:59 AM
நண்பர்களே!

இது ஒரு புது முயற்சி.

நான் இங்கே படம் கொடுக்கிறேன், அதற்கு தகுந்த கவிதைகளை உங்கள் கற்பனையால் எழுதுங்கள். அனைவரும் ரசிக்கலாம்.

ஒருவர் தான் கவிதை சொல்ல வேண்டும் என்பது இல்லை, அனைவரும் சொல்லலாம். புதிய கவிஞர்களை ஊக்குவிக்கும் பகுதியாக மாற்ற உங்கள் உதவி தேவை.

ஏதோ என்னால் கவிதை பகுதிக்கு செய்யும் சிறுத்தொண்டு.


- சிறுத்தொண்டர் பரம்ஸ்

kavitha
28-06-2005, 11:19 AM
படம் தெரியவில்லை சகோதரரே! :-(

பாரதி
28-06-2005, 03:03 PM
அடம்பிடிக்கும்
குழந்தையின்
அழுக்கு நீக்க...

அம்மாவின்
அன்பான வார்த்தைகள்
பலனின்றி போனது.

தொடர்ந்த வார்த்தையில்
மிரண்ட சேய்
அழுகையுடன்
குளித்தது

அம்மா சொன்னது
- "மனிதப்பள்ளியில்
சேர்த்து விடுவேன். "

சுவேதா
28-06-2005, 05:26 PM
மிகவும் அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

Iniyan
28-06-2005, 06:40 PM
மனிதப் பள்ளிக்கு இந்த
மலங்கலான தண்ணீரே தேவலாம்.

குளிக்கவா... இல்லை
குடிக்கவா அம்மா???

பரஞ்சோதி
29-06-2005, 04:19 AM
பாரதி அண்ணா அருமையான கவிதை, கருத்து.

மற்றவர்களும் கவிதைகள் சொல்லலாமே, சகோதரிக்கு படம் தெரியவில்லையாம் என்ன செய்வது?

சுவேதா சகோதரி ஒரு கவிதைக்கு முயற்சி செய்யுங்கள்.

மன்மதன்
29-06-2005, 04:37 AM
உள்ளே
பூட்டி வச்சி
ரசிக்கிறாங்க..

கரணம்
போட்டாத்தான்
சாப்பாடாம்..

கோடைக்கு
இதமா
தண்ணில
குளித்தாலும்..

நமக்கு
வாழ்வில்
இனி வருமா
குற்றாலம்...

பரஞ்சோதி
29-06-2005, 04:49 AM
மன்மதா!

குற்றாலம் சென்றால் நம் மூதோரை அதிகமாக அங்கே காணலாம்.

மன்மதன்
29-06-2005, 04:55 AM
:rolleyes: அப்ப போட்டோவில் உள்ளது ??? :rolleyes: :rolleyes: :rolleyes:

thempavani
29-06-2005, 05:01 AM
உங்க தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தாவுக்கு..தாத்தா:D:D:D:D:D:D

மன்மதன்
29-06-2005, 05:04 AM
இங்கே பாருங்கய்யா.. படத்தை பார்த்ததும் உற்சாகமாய் தாவி, தாவி, தாத்தாவி ;) ;) குதிக்கிறதை.. இருக்காதா பின்னே..?? ;) ;)
அன்புடன்
மன்மதன்

mania
29-06-2005, 05:24 AM
ஆழம் அதிகம்
கையை பிடிடா........

ஏம்மா பயமாயிருக்கா.....???

அன்புடன்
மணியா....:D

மன்மதன்
29-06-2005, 05:48 AM
ஆஹா...

அருமையான ஹைக்கூ தலையிடமிருந்து.. சூப்பர் தலை..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
30-06-2005, 02:51 AM
நாம் இருக்கும்
இடத்தை...
ஊட்டி, குற்றாலம்
ஆக்குவது
உன் கையில்....

pradeepkt
30-06-2005, 05:02 AM
கோடைக் குதூகலம் குற்றாலக் குரங்குகளுக்கு மட்டுமா?
கூடைக்குள்ளே கோழிக்குஞ்சாய் உடலைத்தான் அடைக்கலாம்
பாடையிலே போடும்வரை உள்ளத்தால் பறக்கலாம் - இப்போ
ஓடைக்குள்ளே கூத்தடிக்கலாம் வா!

gragavan
30-06-2005, 05:06 AM
தாய் சேய்க்குச் சொன்னது....

அச்சம் தவிர்
குரங்கமை தவறேல்

பரஞ்சோதி
30-06-2005, 05:34 AM
அருமையான கவிதைகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

gragavan
30-06-2005, 05:35 AM
அருமையான கவிதைகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.அப்படிச் சொன்ன போதுமா? நீயும் ஒரு கவிதை கொடு.

பரஞ்சோதி
30-06-2005, 05:38 AM
அடுத்த கவிதை கொடுங்களேன்.

பரஞ்சோதி
30-06-2005, 05:41 AM
அப்படிச் சொன்ன போதுமா? நீயும் ஒரு கவிதை கொடு.

அண்ணா, அதற்கு தான் படமாக கொடுக்கிறேனே, சரி நீங்க கேட்டாச்சு, ஏதாவது சொல்கிறேன், அடிக்க மட்டும் வர வேண்டாம்.

அறிஞர்
30-06-2005, 05:57 AM
கார் மேகம்
கண்டு
நீ ஆட...
என் காதலி
கண்டு
நான் ஆட
நமக்குள்
எத்தனை
பொருத்தம்...

gragavan
30-06-2005, 06:17 AM
மேகத்துக்குள்
காதலியா ஒளிந்திருக்கிறாள்?
இப்படியொரு ஆவேச ஆட்டம்!

gragavan
30-06-2005, 06:18 AM
அண்ணா, அதற்கு தான் படமாக கொடுக்கிறேனே, சரி நீங்க கேட்டாச்சு, ஏதாவது சொல்கிறேன், அடிக்க மட்டும் வர வேண்டாம்.சின்னஞ்சிறு சொல்லடிகளில் நீ கவிதை கொடுத்தால் அன்படிதான் தம்பி கிடைக்கும். கீழ்படிந்து கவிதை தருவாய்!

பரஞ்சோதி
30-06-2005, 08:42 AM
அறிஞரே!

கவிதை மிக அருமையாக சொல்லியிருக்கீங்க.

பரஞ்சோதி
30-06-2005, 08:44 AM
சின்னஞ்சிறு சொல்லடிகளில் நீ கவிதை கொடுத்தால் அன்படிதான் தம்பி கிடைக்கும். கீழ்படிந்து கவிதை தருவாய்!

இதோ என்னுடைய கவிதை.

நீந்தி மகிழ்கிறது சேய் உள்ளம்
கண்டு மகிழ்கிறது தாய் உள்ளம்

gragavan
30-06-2005, 11:37 AM
அடடா! நல்ல முயற்சி. தொடர்வாய். நிறையவே கவிதைகள் படர்வாய்.

pradeepkt
30-06-2005, 11:59 AM
ஒயில்கொண்டு நானாட பார்த்திருக்கும் மானிடர்காள்!
மயிலொன்று மரித்தாலும் இறகுகள் வாழும்!
துயில்நீங்கி உலகிற்கோர் நன்மை செய்திடப்
பயில்வீர் மாநிலமே உங்கள்முன் தாழும்!

பிரியன்
02-07-2005, 04:45 AM
உன்னைப் போல்
நானாட முடியவில்லை.
மழையைக் காணாது

மன்மதன்
02-07-2005, 05:21 AM
என்னவள்
வருகிறாள்
போலிருக்கு..

மேகத்தை
பார்த்த
பிரமிப்பில்
மயில்.......

-
மன்மதன்

kavitha
02-07-2005, 11:03 AM
ஆழம் அதிகம்
கையை பிடிடா........

ஏம்மா பயமாயிருக்கா.....???

அன்புடன்
மணியா....

நையாண்டி செய்த வாலின் சாதுர்யம் அழகு!
இதைப்படித்ததும் இன்று காலையில் 'இந்த நாள் இனிய நாள்' -ல் சுகிசிவத்தின் பேச்சும் நினைவுக்கு வருகிறது.

அப்பா: கையப்பிடிச்சுக்காட்டி காணாம போயிடுவ... அப்புறம் அப்பாவ காணோம்னு அழுவ!
சிறுவன்: உன் கை முரட்டு கைப்பா, உன் கைப்பிடிச்சா எனக்கு வலிக்குது. நீ என் கையப்புடிச்சிக்க..
இல்லாட்டி குட்டிப்பா வ தொலைச்சிட்டோம்னு நீ அழுவ!

இந்த சின்ன கதையைச் சொல்லி அவர் மதவாதிகளையும், போதனைகளையும் பற்றி ஒப்பிட்டது அருமையாக இருந்தது.

kavitha
02-07-2005, 11:05 AM
அழகழகா கவிதை எழுதறீங்க.. எனக்கு மட்டும் படமே தெரியமாட்டேங்குது :(

பரஞ்சோதி
02-07-2005, 11:36 AM
அழகழகா கவிதை எழுதறீங்க.. எனக்கு மட்டும் படமே தெரியமாட்டேங்குது :(

சகோதரி, படங்களை தனிமடலில் அனுப்பி வைக்கவா?

சுவேதா
02-07-2005, 10:22 PM
மழை வருவதாக
எண்ணி நீ
உன்னை மறந்து
ஆட உன் அழகையும்
உன் நடனத்தையும்
உன்னையும் பார்த்து
மெய்மறந்து நான்
போக மழை
பெய்வது கூட
தெரியாமல் உன்னை
பார்த்த வண்ணம்
மழையில்
நனைந்தேன் அன்று!

kavitha
04-07-2005, 04:36 AM
"சகோதரி, படங்களை தனிமடலில் அனுப்பி வைக்கவா?"

இரண்டு படங்களும் தெரிகின்றன. நன்றி அண்ணா.

kavitha
04-07-2005, 05:45 AM
படம் 1.

"கட்டோடு குழலாட ஆட..."

"அம்மா, ஷேம்பூ கொடும்மா"


படம் 2.

வெண்தோகை விரித்தாள்
என்
கண்சோகை போச்சு

அறிஞர்
04-07-2005, 05:58 AM
அருமையான வரிகள்.. கவி...

kavitha
04-07-2005, 06:10 AM
அறிஞருக்கு எனது நன்றிகள்.

பரஞ்சோதி
04-07-2005, 07:17 AM
"சகோதரி, படங்களை தனிமடலில் அனுப்பி வைக்கவா?"

இரண்டு படங்களும் தெரிகின்றன. நன்றி அண்ணா.

சகோதரி, உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியலையே ஏன்?

kavitha
04-07-2005, 07:48 AM
எடிட் ஆப்ஷனில் சரி செய்து விட்டேன். இப்போது அனுப்புங்கள் அண்ணா.

சுவேதா
04-07-2005, 07:52 PM
கவி அக்கா உங்கள் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

Birundan
04-08-2005, 03:07 AM
குளிக்குது குட்டி குரங்கு
குளிபாட்டுது பெரிய குரங்கு
இத படிக்குது வெட்டி குரங்கு

mukilan
04-08-2005, 04:25 AM
கவிதை எழுதியது "கெட்டி" குரங்கு! கவிதை நல்லா எழுதுகிறீர் பிருந்தன். ஆனாலும் உமக்கு சேட்டை அதிகம் தான் ஓய்!

pradeepkt
04-08-2005, 07:05 AM
குளிக்குது குட்டி குரங்கு
குளிபாட்டுது பெரிய குரங்கு
இத படிக்குது வெட்டி குரங்கு
என்ன ஒரு சிந்தனை :D :D
படித்தேன் ரசித்தேன்

Birundan
07-08-2005, 12:29 AM
நண்றிகள் முகிலன்,பிரதீப்
அன்புடன் பிருந்தன்

மன்மதன்
10-08-2005, 09:49 AM
அடுத்த படம் போடுங்க பரம்ஸ்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-08-2005, 09:54 AM
குளிக்குது குட்டி குரங்கு
குளிபாட்டுது பெரிய குரங்கு
இத படிக்குது வெட்டி குரங்கு

கலக்குறீங்க, அப்படியே எஸ்.எம்.எஸ் குறும்பு மாதிரி இருக்குது.

பாராட்டுது மனித குரங்கு என்று சொல்லுவீங்க என்று பயப்படுகிறேன்.

pradeepkt
10-08-2005, 01:28 PM
அடடா.. குரங்குகள் எத்தனை குரங்குகளடா...

மன்மதன்
30-08-2005, 06:30 AM
இதற்கு உங்கள் கவிதை கொடுங்க நண்பர்களே..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Seruppu.jpg

மன்மதன்
03-09-2005, 02:56 PM
படத்தை மாற்றிவிடலாமா?

பிரசன்னா
10-09-2005, 02:28 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே
அதிட்டகார குரங்குகளை எண்ணி....
பார்க்கும்போது வந்தபொறாமை
பார்வையை மூடும்போது பார்த்தது
அட கண்ணீர்... இல்லை இல்லை
தண்ணீர்..............

பென்ஸ்
03-08-2006, 07:54 PM
http://www.bildwissenschaft.org/VIB/journal/img/upload/51aba40221e5660228d4e46091aada26.jpg


இந்த புகைபடம் 1972-இல் வியட்னாம் போரில்
நோப்பம் குண்டு வீச்சில் பின்புறம் பாதிக்கபட்டு
நிர்வானமாக ஓடிவரும் சிறுமியின் (கிம் ப்புயுக்) புகைப்படம்....

நான் பல்கலைகழக நாடக குழுவில் இருந்த போது
இந்த சம்பவத்தை அரங்கேற்றும் அளவுக்கு இந்த
புகழ் பெற்ற புகைபடம் என்னை பாதித்திருந்தது...
எண்ணம் எழுத்துகள் ஆக மறுத்தாலும் மன்ற
நண்பர்களின் கவிதையாக காணவிரும்புகிறேன்...

பரஞ்சோதி
05-08-2006, 10:46 AM
பென்ஸ்

இந்த புகைப்படம் உலகையே உலுக்கியது.

இப்புகைப்படம் தான் ஒரு அரக்கனின் ஆணவத்திற்கு ஆப்பு அடித்தது. இதைக் கண்ட பின்னரே அமெரிக்கர்கள் கூட போர் நிறுத்தச் சொல்லி போராடினார்கள். அதன் பின்னரே அமெரிக்கா தன் தாக்குதலை நிறுத்தியது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு இப்பெண்ணின் பேட்டியினை ஒளிபரப்பினார்கள், இவர் இப்போ அமெரிக்காவில் இருக்கிறார்.

கவிதை வராததால் தகவல் மட்டுமே கொடுத்து விட்டேன் :)

vckannan
08-08-2006, 10:57 AM
http://www.bildwissenschaft.org/VIB/journal/img/upload/51aba40221e5660228d4e46091aada26.jpg


இந்த புகைபடம் 1972-இல் வியட்னாம் போரில்
நோப்பம் குண்டு வீச்சில் பின்புறம் பாதிக்கபட்டு
நிர்வானமாக ஓடிவரும் சிறுமியின் (கிம் ப்புயுக்) புகைப்படம்....

நான் பல்கலைகழக நாடக குழுவில் இருந்த போது
இந்த சம்பவத்தை அரங்கேற்றும் அளவுக்கு இந்த
புகழ் பெற்ற புகைபடம் என்னை பாதித்திருந்தது...
எண்ணம் எழுத்துகள் ஆக மறுத்தாலும் மன்ற
நண்பர்களின் கவிதையாக காணவிரும்புகிறேன்...
ஆதிக்க வெறியை தோலுரித்துக்காட்டிய புகைப்படம்
என்னையும் ரொம்பவே பாதித்தது

இந்த படத்தை முன்பு பார்த்தப் போது அப்போது என்னாலும் சிந்திக்க இயலவில்லை

இரண்டாம் முறையாக இங்கு பார்த்ததில் விளைந்தது
இந்த சுட்டியில் காணவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6757

ஓவியா
28-04-2007, 11:04 PM
மேலே உள்ள புகைப்படதிற்க்கு விசிகண்ணன் அவர்கள் கவிதையை வடித்து விட்டார்.

சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6757

.............................................................................................................................

திரி ஆரம்பித்த பரம்ஸ் அண்ணவிற்க்கு நன்றி

இனி இந்த சுட்டியை தொடருவோம்.

இன்று நான் ஒரு படம் பதிக்கிறேன். கவிஞர்கள் கவிதை கொடுங்கள், பின் தாங்கள் ஒரு படத்தை பதியுங்கள்

http://www.babyswimming.com/images/index.1.jpg