PDA

View Full Version : இலங்கையில் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொ



thempavani
24-06-2005, 12:57 PM
இலங்கையில் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு வரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசுதரப்பும் இன்று கையெழுத்திட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பாக இப்பொதுக்கட்டமைப்பில் திட்டமிடல் செயலக பிரதிப் பணிப்பாளர் சண்முகலிங்கம் ரஞ்சன் கையெழுத்திட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு சார்பில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.ஜெயசிங்க இப்பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திட்டார்.

அரசுத் தரப்பினர் கையெழுத்திட்ட பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இன்று முற்பகல் கையளித்தார்.

உலங்கு வானூர்தி மூலமாக கிளிநொச்சி வந்தடைந்த ஹான்ஸ் பிறட்ஸ்ருடன் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே. பாலகுமாரன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், திட்டமிடல் செயலகப் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சன் ஆகியோருடன் ஹான்ஸ் பிறட்ஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பாக திட்டமிடல் செயலக பிரதி பணிப்பாளர் ரஞ்சன் பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திட்ட பிரதி, நோர்வே தரப்பிடம் கையளிக்கப்பட்டது.

மூன்று பிரதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பாக ரஞ்சன் கையெழுத்திட்டார். ஒரு பிரதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்கா அரசு மற்றும் நோர்வேத் தரப்பு ஆகியவற்றுக்கு 2 பிரதிகளும் கையளிக்கப்பட உள்ளன.

பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திடப்பட்டிருப்பினும் இது நடைமுறைப்படுத்தப்படுவதில் பாரிய சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்று தென்னிலங்கை பேரினவாதிகளின் வன்முறைகளைச் சுட்டிக்காட்டி அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்தனர்.

இன்று காலை பொதுக்கட்டமைப்பு ஆவணத்தின் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதாகவும் இந்த பிரதிகள் ஊடகவியலாளர்களிடமும் கையளிக்கப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு ஆகிய இருதரப்பினருக்கும் இடையே மட்டுமே இந்த பொதுக்கட்டமைப்பு கையெழுத்தாகியுள்ளது.

அறிஞர்
25-06-2005, 05:47 AM
இலங்கையில் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு வரைவில் கையெழுத்திட்டது நல்லதுதான்...

ஆனால் இதை தனக்கு சாதாகமாக இலங்கை அரசு ஆக்கிக்கொள்ளுமோ என வருத்தம் உள்ளது... காலம் பதில் சொல்லட்டும்.

தமிழர்களுக்கு பயன் கிடைக்கவேண்டும் என்பது நம் ஆவல்.....