PDA

View Full Version : சிநேகிதியே!kavitha
24-06-2005, 10:19 AM
சிநேகிதியே!
-----------

நீயும் நானும்
அன்று யாரோ!

பள்ளியில் இருவரும்
சண்டை போடும்வரை

வேறு வேறு பிரிவில்
இருந்த நாம்
ஒரே வகுப்பில் இணையும்வரை

யாருக்கும் தராத
என் பேனா
உன் தாளில் எழுதும் வரை

என் எச்சில் உணவை
நீ உண்ணும் வரை

உன் உடையை
நான் உடுத்தும் வரை

என் இணையைப்பற்றி நீயும்
உன் இணையைப்பற்றி நானும்
விவாதிக்கும் வரை

சிநேகிதியே......

இன்று
நீ இல்லத்தரசி!

நீயும் நானும்
யாரோ!என்றும் நட்புடன்,
கவிதா

மன்மதன்
25-06-2005, 04:42 AM
அருமையான கவிதை..
இல்லத்தரசியானால் நட்பு முடிந்துவிடுமோ... ??
அன்புடன்
மன்மதன்

Nanban
25-06-2005, 05:22 PM
அதென்ன, கல்யானம் முடிஞ்சா, நட்பும் முடிந்து விடுமா?

ஒரு வேளை, கவிதையைச் சொன்னவன், ஆணாக இருக்க வேன்டும் - நட்பு முறிய.

ஆனால், எப்படி ஒருவர் உடையை மற்றவர் அணிந்திருக்க முடியும்?

அல்லது இல்லத்தரசியானதும், கணவன் குறுக்கே வந்து விட்டானா?

இருக்கலாம் - பெண்களைக் கூட சந்தேகப்படும் ஆண்கள் உண்டு தானே?

cஇக்கல் நிறைந்த கவிதை - ரொம்ப சிந்தித்தால்....

Nanban
25-06-2005, 05:31 PM
இல்லாத உறவை
நமக்குள் நட்டு
காதலுக்கும்
நட்புக்குமான
எல்லைகளை
ஆக்ரமித்தான்
மிகை கண்டிப்புகளால்

பூதாகரமாய்
பூத்து சொறியும்
மலர்களின் கீழே
நட்பு கிடக்கிறது -
காதலின் மணத்துடன்.

பகிர்வதற்கியலா
நேர் துருவமாய்
பிறந்து தொலைத்தோம் -
வெந்து வெந்து
மடிந்து கொண்டிருக்கும்
ஊனை
உண்டு கொண்டிருக்கிறான்
அவன்....

சுவேதா
26-06-2005, 12:11 AM
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

Nanban
26-06-2005, 05:44 PM
சுவேதா, யாருக்கும்மா வாழ்த்துகள் சொன்னாய்?

சுவேதா
27-06-2005, 12:19 AM
இருவருடைய கவிதைகளும் மிகவும் நன்றாக உள்ளது இருவரையும் தான் கூறினேன்.
நன்பா!:):)

kavitha
28-06-2005, 11:18 AM
நண்பனின் கவிதைக்கு விளக்கத்தை சொன்னால், சில சொட்டுக்கள் ரத்தமும் வரலாம்.

பதில் கவிதை அருமை நண்பன். மன்மதனுக்கும் சுவேதாவிற்கும் எனது நன்றிகள்.

அறிஞர்
30-06-2005, 02:49 AM
அருமையான கவிதைகள்.. வாழ்த்துக்கள்.. கவிதா, நண்பன் அவர்களே....

கள்ள கபடமற்று
ஒரே திசையில்
திரிந்த நமக்கு
இல்லாத உறவுகளை
உருவாக்கி விட்டு
குளிர் காய்ந்த
மக்கள்
இன்று...
நம் எதிரெதிர்
திசை கண்டு
வெது வெதுப்பில்
சிரிக்கின்றனரோ.

pradeepkt
30-06-2005, 04:46 AM
அருமையான கவிதா (தை ) விவாதங்கள்.

gragavan
30-06-2005, 05:20 AM
கவிதாவின் கவிதை இயல்பு உண்மையென்றால் நண்பனின் கவிதை ஆவேச ஆசை. ஆவேசம் சிறப்பு. இயல்பு வலிக்கிறது.

Nanban
30-06-2005, 02:51 PM
எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டு கவிதையைப் பற்றி பேசுகிறீர்கள் என்றே புரியவில்லை. கவிதாவின் கவிதையைத் தொட்டுத் தான் என் கவிதையும் அமைந்தது. அது புரிந்ததா இல்லையா?

கவிதாவின் வரிகளைக் காணுங்கள் -

உன் உடையை
நான் உடுத்தும் வரை -

என்று சொல்கிறார். அதாவது, கவிதை பேசிய இருவருமே - சொல்லியவரும், சொல்லப்பட்ட இருவருமே ஒரே இனம். ஒர் ஆண் பையன் பெண் பிள்ளையின் உடைகளை உடுத்த இயலாது. அல்லது அதற்கு எதிர்மாறாகவும்.

அப்படியானால், கவிதையை பேசுவது, கவிதையில் பேசப்படுவது இருவருமே யார்? கடைசி வரிகளில் சொல்கிறார் -

சிநேகிதியே......

இன்று
நீ இல்லத்தரசி!

- ஆக, கவிதை எழுதப்பட்டது - இரு சிநேகிதளுக்கிடையேயுள்ள அன்பு...

அதை சின்னச் சின்ன நிகழ்வுகளாக பள்ளி காலத்து அனுபவமாக சொல்லி இன்று இருவரும் பிரிந்து போன சம்பவத்தை நினைவு கூர்ந்து கவிதை வடித்துத் தருகிறார். அவர் சொன்ன அன்பு சிறுவயதுப் பிள்ளைகளிடையேயானது. அதை நான் வளர்ந்து விட்ட இரு பெண்களிடையே தோன்றக்கூடிய அன்பை மீண்டும் வடித்து வைத்தேன். சிநேகிதியின் அன்பு பிடியில் மற்ற எல்லாவற்றையும் கொஞ்சம் கவனப்பிசகாக அணுகும் பொழுது, இணையிடமிருந்து எப்பொழுதுமே அதை ஏற்காத எதிர்மறை வினைகள் எழத்தான் செய்யும். எத்தனயோ இடங்களில் கேட்டிருக்கிலாம் - 'நான் உங்களுக்குப் பெண்டாட்டியா, இல்லை அவன் உங்களுக்குப் பெண்டாட்டியா?' என்று. இது ஆண் நண்பர்கள் குறித்த பொறாமை பெண்களிடம் தோன்றும் பொழுது எழும் கேள்வி. அதே போல பெண் தோழிகளின் நெருக்கத்தை கேள்வி கேட்கும் பொழுது ஆண் கேட்பது - 'நீ எனக்குப் பெண்டாட்டியா இல்லை அவளுக்குப் பெண்டாட்டியா?' என்று. அப்பொழுது என்ன்வாகிறது என்றால், சிநேகிதியின் மீதான அன்பை மறைத்துக் கொண்டு தான் அவனுடன் வாழ வேண்டியதாகிறது. மனதினுள் அலைபாயும் தோழியின் மீதான அன்பில் உருகி உருகி வழியும் அவளுடைய உடலைத்தான் அவனால் அனுபவிக்க முடிகிறது - அவளையே அல்ல என்று தான் எழுதினேன்.

இப்பொழுது உலகெங்கும் உள்ள மனிதர்களிடத்தில் எதிர் துருவங்களிடையே தோன்றும் காதலை விட, தன் இனத்தின் மீதே தோன்றும் காதல் அதிகமாகி வருகிறது. பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கம் தான் என்றாலும், இப்பொழுது அதிகமாகவே மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டனர் இத்தகைய ஓரினக் காதலை. அது தனி மனித சுதந்திரத்தில் சேர்ந்து விட்டது. தங்களுடைய உரிமையாக இதைக் கோருகின்றனர் இப்பொழுது உள்ளவர்கள். ஆண் பெண் உறவில் எப்பொழுதுமே ஒரு அடிமைத் தனம் கலந்திருக்கிறது. ஆனால், இந்த ஓரினக் காதலில், காதலர்கள் இருவருமே சமம். அதனால் உண்மையான விடுதலையும், உரிமையும் காதலுடன் கிடைப்பது இந்த வகைக் காதலில் தான்.

அந்த மாதிரி ஒரு எண்ணமும் அந்தப் பெண்ணுக்கு உண்டு - உரிமையும், சமத்துவமும் உள்ள ஒரு உறவிற்கு ஏங்கும் வெப்பத்தில் தகிக்கும் அவளது உருகும் ஊனைத் தான் அவனுக்கு அவளால் கொடுக்க முடிகிறது - மற்றபடி அவளது காதல் வேறிடத்தில் என்பது தான் உண்மையில் நான் எடுத்துக் கொண்ட பொருள்....

(நாசுக்கா சொன்ன பிடிபடலைன்னா எப்படிங்க நண்பர்களே.... இன்றைய பெண் கவிஞர்களின் கவிதையில் பாடு பொருளாக சுய இன்பம் வரைக்கும் வந்து விட்டது - நீங்கள் என்னவென்றால் - இன்னமும் தத்தக்கா பித்தக்காவென்று காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.....கொஞ்சம் முன்னேறுங்கள் தோழர்களே...)

gragavan
30-06-2005, 03:27 PM
எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டு கவிதையைப் பற்றி பேசுகிறீர்கள் என்றே புரியவில்லை. கவிதாவின் கவிதையைத் தொட்டுத் தான் என் கவிதையும் அமைந்தது. அது புரிந்ததா இல்லையா?

கவிதாவின் வரிகளைக் காணுங்கள் -

உன் உடையை
நான் உடுத்தும் வரை -

என்று சொல்கிறார். அதாவது, கவிதை பேசிய இருவருமே - சொல்லியவரும், சொல்லப்பட்ட இருவருமே ஒரே இனம். ஒர் ஆண் பையன் பெண் பிள்ளையின் உடைகளை உடுத்த இயலாது. அல்லது அதற்கு எதிர்மாறாகவும்.

அப்படியானால், கவிதையை பேசுவது, கவிதையில் பேசப்படுவது இருவருமே யார்? கடைசி வரிகளில் சொல்கிறார் -

சிநேகிதியே......

இன்று
நீ இல்லத்தரசி!

- ஆக, கவிதை எழுதப்பட்டது - இரு சிநேகிதளுக்கிடையேயுள்ள அன்பு...

அதை சின்னச் சின்ன நிகழ்வுகளாக பள்ளி காலத்து அனுபவமாக சொல்லி இன்று இருவரும் பிரிந்து போன சம்பவத்தை நினைவு கூர்ந்து கவிதை வடித்துத் தருகிறார். அவர் சொன்ன அன்பு சிறுவயதுப் பிள்ளைகளிடையேயானது. அதை நான் வளர்ந்து விட்ட இரு பெண்களிடையே தோன்றக்கூடிய அன்பை மீண்டும் வடித்து வைத்தேன். சிநேகிதியின் அன்பு பிடியில் மற்ற எல்லாவற்றையும் கொஞ்சம் கவனப்பிசகாக அணுகும் பொழுது, இணையிடமிருந்து எப்பொழுதுமே அதை ஏற்காத எதிர்மறை வினைகள் எழத்தான் செய்யும். எத்தனயோ இடங்களில் கேட்டிருக்கிலாம் - 'நான் உங்களுக்குப் பெண்டாட்டியா, இல்லை அவன் உங்களுக்குப் பெண்டாட்டியா?' என்று. இது ஆண் நண்பர்கள் குறித்த பொறாமை பெண்களிடம் தோன்றும் பொழுது எழும் கேள்வி. அதே போல பெண் தோழிகளின் நெருக்கத்தை கேள்வி கேட்கும் பொழுது ஆண் கேட்பது - 'நீ எனக்குப் பெண்டாட்டியா இல்லை அவளுக்குப் பெண்டாட்டியா?' என்று. அப்பொழுது என்ன்வாகிறது என்றால், சிநேகிதியின் மீதான அன்பை மறைத்துக் கொண்டு தான் அவனுடன் வாழ வேண்டியதாகிறது. மனதினுள் அலைபாயும் தோழியின் மீதான அன்பில் உருகி உருகி வழியும் அவளுடைய உடலைத்தான் அவனால் அனுபவிக்க முடிகிறது - அவளையே அல்ல என்று தான் எழுதினேன்.

இப்பொழுது உலகெங்கும் உள்ள மனிதர்களிடத்தில் எதிர் துருவங்களிடையே தோன்றும் காதலை விட, தன் இனத்தின் மீதே தோன்றும் காதல் அதிகமாகி வருகிறது. பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கம் தான் என்றாலும், இப்பொழுது அதிகமாகவே மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டனர் இத்தகைய ஓரினக் காதலை. அது தனி மனித சுதந்திரத்தில் சேர்ந்து விட்டது. தங்களுடைய உரிமையாக இதைக் கோருகின்றனர் இப்பொழுது உள்ளவர்கள். ஆண் பெண் உறவில் எப்பொழுதுமே ஒரு அடிமைத் தனம் கலந்திருக்கிறது. ஆனால், இந்த ஓரினக் காதலில், காதலர்கள் இருவருமே சமம். அதனால் உண்மையான விடுதலையும், உரிமையும் காதலுடன் கிடைப்பது இந்த வகைக் காதலில் தான்.

அந்த மாதிரி ஒரு எண்ணமும் அந்தப் பெண்ணுக்கு உண்டு - உரிமையும், சம்த்துவமும் உள்ள ஒரு உறவிற்கு ஏங்கும் வெப்பத்தில் தகிக்கும் அவளது உருகும் ஊனைத் தான் அவனுக்கு அவளால் கொடுக்க முடிகிறது - மற்றபடி அவளது காதல் வேறிடத்தில் என்பது தான் உண்மையில் நான் எடுத்துக் கொண்ட பொருள்....

(நாசுக்கா சொன்ன பிடிபடலைன்னா எப்படிங்க நண்பர்களே.... இன்றைய பெண் கவிஞர்களின் கவிதையில் பாடு பொருளாக சுய இன்பம் வரைக்கும் வந்து விட்டது - நீங்கள் என்னவென்றால் - இன்னமும் தத்தக்கா பித்தக்காவென்று காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.....கொஞ்சம் முன்னேறுங்கள் தோழர்களே...)பிச்சு உதறீட்டீங்க நண்பரே..........ரொம்பவும் இயல்பாச் சொல்லீருக்கீங்க.....இப்ப ஒங்க கவிதையப் படிச்சுப் பாத்தேன். ரொம்பப் பிரமாதம். கை குடுங்க நண்பன். இத்தனை முற்போக்குவாதியான நீங்கள் எனது நண்பன் என அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
30-06-2005, 03:30 PM
நண்பன் மறுபடியும் உங்கள் கவிதையைப் படித்தேன். இது கவிதை. எனக்கு மறுபடியும் பாராட்ட வேண்டுமென்று தோன்றியது பாராட்டி விட்டேன். என்ன சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. ஆகையால் மிகவும் அன்போடு பாராட்டியதாக நினைத்துக் கொள்ளுங்கள். இது கவிதை. இவ்வளவு நாசூக்காக தமிழில் சொல்ல முடிகிறதே.

Nanban
30-06-2005, 04:26 PM
மிக்க நன்றி ராகவன்

நாம இப்போ பேசிக்கிட்டிருக்கிறது 2005ல்

1938ல் இது மாதிரி பொருளை ஒருவர் பேசியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா?

ஆணும் பெண்ணும் இணையாமலே குழந்தை பெறக் கூடிய சாத்தியதை வரும். அதனால், பெண்களே குழந்தை பெறுவதை மறுங்கள் என்று கூறினார். அதையே பொருளாக வைத்து மரத்தடி குழுமத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதை தமிழ் மன்றத்தில் பதிப்பிக்கவில்லை.

ஏனென்றால், இங்கு அது மன முதிர்ச்சியோடு அணுகப்படுமா என்ற தயக்கமிருப்பதால் அதை பதிப்பிக்கவில்லை. ஆனால், உங்கள் பாராட்டுரையைப் படித்ததும் இங்கேயும் மனமுதிர்ச்சியுடையவர்களுக்கான கவிதையை இங்கும் எழுதலாமே என்று தோன்றுகிறது.

நன்றி நண்பரே.

சரி மேலே சொன்ன சிந்தனையை 1938ல் வெளியிட்டவர் யார் தெரியுமா?

பெரியார்...!!!

gragavan
01-07-2005, 05:05 AM
நண்பனே, நீங்கள் சொல்வது இன்னமும் வியப்பளிக்கிறது. பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் இப்படியும் அவர் சொல்லியிருக்கிறார் என்று நினைத்து வியப்படைகிறேன். அவர் சொன்னதில் தவறே இல்லை. பிள்ளை பெறுவதிலும் சமையல் கூடங்களிலும் பெண்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது என் கருத்து. அதையே எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

முற்போக்குக் கவிதைகளை நமது மன்றத்தில் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எனக்கும் தெரியவில்லை. ஆனால் பண்பட்டவர்களுக்கான பகுதியில் போடலாமே!

அறிஞர்
01-07-2005, 06:11 AM
நல்லது.. இராகவன் சொல்வது போல் பண்பட்டவர்கள் பகுதியில்.. கவிதைக்கு ஒரு பகுதி ஆரம்பித்து போடலாம்...

kavitha
01-07-2005, 11:07 AM
முதலில் இவ்வளவு விரிவாக( தேவையோ, தேவையற்றதோ, பொருத்தமோ, பொருத்தமற்றதோ ) அலசிய அனைவருக்கும் நன்றி.

நண்பனின் கவிதைக்கு அவர் விளக்கம் கொடுத்த பின் தான் அதன் முழு அர்த்தம் எனக்கு விளங்கும். இப்போதும் அப்படியே!

நவீனத்துவம் என்று எதை எதையோ சொல்லி விட்டு அதற்கொரு முன்னோடியையும் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் நண்பன். அந்த மேட்டருக்கு அப்புறம் மீட்டர் போடுறேன். இப்போ...

எனது கவிதைக்கு நானே விளக்கத்தைக் கொடுத்தி ( தொலைச்சி )ருக்கலாம் ( என் தப்பு! ). எனது தோழியைப்பற்றி இங்கே கொடுத்து ஒருவேளை என்றாவது ஒரு நாள் இதுபற்றி அவளுக்குத் தெரியவந்து அதனால் அவள் மனம் வெம்பக்கூடாதே என்று மறைத்தேன். இப்ப இதைப்படிச்சானா எனக்கு செருப்படி விழும்!!

கவிதை என்னவோ எனது அனுபவப்பகிர்வு என்றாலும் வாசிப்பவர்களுக்கு
முதலில் ஒரு வேண்டுகோள்: கவிதையை தயவுசெய்து கவிதையாக மட்டும் பாருங்கள். எழுத்தை எழுதுபவரோடு ஒப்பிட்டால் குறுகிப்போய்விடும். படைப்பு மட்டுமல்ல. மனமும்...

திருமணத்திற்குப்பிறகு பெண் சினேகிதம் எப்படி இருக்கிறது என்பதையே சொல்ல விழைந்தது கவிதை!

சில வருடங்களுக்குப்பிறகு நான் அவளைப்பார்த்த போது,
அவள் இல்லத்தரசி: கணவனின் சம்பாத்யத்தில் ஆறு ஜீவன்களை வளர்க்கிறாள். ஆறு என்பது அவள், கணவன், மாமியார், மாமானார், இரண்டு குழந்தைகள். படிக்கும் காலத்தில் காலையில் பள்ளி சீருடை, மாலையில் வேறு உடை, வெளியே போனால் புத்தாடை என்று அணிபவள், இன்று ரவிக்கைக்கும், புடவைக்கும் சம்பந்தமில்லாத உடை; அதுவும் சுருங்கிப்போய்.. சரி வீட்டில் தான் இப்படி இருப்பாள்போலும் என்றிருந்தால்... ஒரு வைபவத்திற்கு சென்று விட்டு வந்த போதும் ஏனோ தானோ வென்று வந்தாள்.

இத்தனைக்கும் இவள் படிக்காதவள் அல்ல. முதுகலை பட்டம் பெற்றவள்; படிக்கும்போதே தெரு பிள்ளைகளுக்கு வகுப்பெடுத்து தனி சேமிப்பு வைத்திருந்தவள். திருமணத்திற்கு முன்பு வரையிலும் பணி புரிந்தவள்.

இப்போதோ பெயர் தான் இல்லத்து 'அரசி'. ஒரு ரூபாய் நாணயம் போட்டு தொலைவிருந்து பேசவோ, 25 பைசா கார்டு போட்டு கடிதம் எழுதுவோ அவளுக்கு வழியில்லை. அதைவிடவும் அவளை கவனிக்கவே அவளுக்கு நேரமில்லை.
இந்த நிலையிலும் நான் கிளம்பும்போது அவளது கைப்பையை துடைத்து அதில் இருபது ரூபாய்த்தாளையும் போட்டு பரிசாகக் கொடுத்தாள். இப்போது நினைத்தாலும் கண்ணீர் சொறிகிறது.

வாழ்க்கையில் ஒரு பெண் தனது வாழ் நாளின் பெரும்பங்கை எங்கே கழித்திருப்பாள் என்றால் அது சமையலறையில் தான். ஆதலினாலே நான் சமையலை வெறுக்கிறேன்.

இன்னொன்றும் சொல்லவேண்டும்; பெண்கள் சுகவாசியாக இருக்க விழைகிற வரையில் அடிமைகள் தான். ஆணாகட்டும், பெண்ணாகட்டும், எத்தனை வேலைகள் இருந்தாலும் தனிமனித முன்னேற்றத்தில் நிச்சயம் வேட்கை வேண்டும். இது வெறும் சுய நலமல்ல. பொது நலத்தினையும் சார்ந்ததுதான்.
பொருளாதாரம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகிவிடுகிறது. தன் வீடு சுகம் பெற இருந்தால் தான் பொது நலனில் அக்கறை கொண்டிருக்க முடியும். அதற்காக பொது நலவாதிகளை விடவும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டியது சம்சாரிக்கு அவசியமாகிவிடுகிறது. தன்னிறைவு என்பது வீட்டிற்கும் சரி, நாட்டிற்கும் சரி, தனிமனிதனுக்கும் சரி அத்தியாவசியத்தேவை தான். ஒரு நாளிற்கு 24 மணி நேரங்கள் இருந்த போதிலும் ஒரு குடும்பத்தில் தலைவியின் வேலைகளையும், தலைவனின் வேலைகளையும் பட்டியலிட்டால்
சுயத்தேவைகளுக்கென்றேனும் சில மணி நேரங்களை ஒதுக்கத்தான் வேண்டியிருக்கும்(2 மணி நேரம் ). ஓய்வு என்பது அதிக பட்சம் 8 மணி நேரம் என்றாலும் 14 மணி நேரமாவது மீதி இருக்கிறது. இதில் பணி புரிபவர்களுக்கு 8 மணி நேரமென்றால் மீதி 6 மணி நேரம். பணி புரிபவர்களுக்கே ஆறு மணி நேரமென்றால் இல்லத்தரசிகள் என்ன செய்கிறார்கள்?
இதற்காக அழும் குழந்தையையும், வயதானவர்களையும் கவனிக்காமல் வேலை பார்க்க சொல்லவில்லை. தொலைக்காட்சித்தொடர்களை மூட்டைக்கட்டி வைத்து விட்டு, ஏதேனும் ஒரு
கைத்தொழில் செய்தால் கூட போதும். மூட்டை கட்டும் அளவு சேமிக்காவிட்டாலும், பெருமூச்சு விட்டு புழுங்கும் நிலை இருக்காது.
இதற்காகத்தானே பெண்களுக்கு பள்ளிகளில் தையல், பாட்டு, ஓவியம் என்று வேறு கற்றுத்தருகிறார்கள். இது தான் என்றில்லை; ஏதேனும் ஒன்று. சூழலுக்கும் வசதிக்கும் ஏற்றபடி செய்யலாம். குறைந்த பட்சம் தனது தேவைகளையேனும் தானே பூர்த்தி செய்துகொள்ள முடியும். எல்லா சுமையையும் கணவனே சுமக்கவேண்டும் என்று அவனுக்கு மட்டும் விதியா என்ன?
'இளமையிலே கல்' மட்டும் போதாது; 'இளமையிலே உழைக்கவும் வேண்டும்'

தனது தேவைகளைக்கூட பூர்த்திசெய்துக்கொள்ள சொல்லித்தராத கல்வியும் நெறியும் எதற்கு??

ஆண்களின் நட்பு வட்டம் உற்று கவனித்தால் ஒருவிதத்தில் சுய நலமானதாகவே இருக்கும். பால்ய நட்பு, பணியிட நட்பு, தண்ணி... மற்றும் இதர நட்பு.

பிசிராந்தையார்-கோப்பெரும் சோழனாகவோ, கண்ணன் - குசேலானாகவோ பெரும்பாலும் வைத்திருக்க மாட்டார்கள். மாறாக தனது சமூகநிலை, அந்தஸ்து சார்ந்ததாகவே இருக்கும்.
அதாவது அவனால் காரியம் ஆகக்கூடும் என்றால் தான் அவன் நண்பனாக இருப்பான். ஆனாலும் ஒன்றைப்பாராட்டத்தான் வேண்டும். இவர்கள் நட்பு மட்டும் இறுதிவரை தொடரும்.

பெண்கள் தங்களின் சோப்பு சீப்பு மேட்டருக்கே வேறொருத்தர் வேண்டும் எனும்போது அவர்கள் எங்கே பிறருக்கு உதவ முடியும்??
கால்கள் இருந்தும் நகரும் அட்டைப்பூச்சிகள் போல இவர்கள்; எப்போதும் யாரையாவது உறிஞ்சிக்கொண்டு!!
அதாவது திருமணத்திற்கு முன் பெற்றோர்கள்; திருமணத்திற்கு பின் கணவன்.
முதுகெலும்பு என்பதையே உணராதவர்கள் இவர்கள்!
அதனால் தான் கணவன்களும் வரதட்சணை என்ற பெயரில் அதைப்பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சுதந்திரம் என்பது தனிமை அல்ல;
சார்பு என்பது ஒருமை அல்ல;

-------------------------------------------

இனி அடுத்த கவிதைக்கு....

" அதை நான் வளர்ந்து விட்ட இரு பெண்களிடையே தோன்றக்கூடிய அன்பை மீண்டும் வடித்து வைத்தேன். "

நீங்கள் சொல்வது போல் வளர்ந்துவிட்ட பெண்களிடையே தோன்றும் அன்பு ஓரினமாக அமைவது ஏதேனும் பிறழ்வுகளில் ஏற்படலாம்.
இப்போதைய கல்லூரிப்பெண்களிடம் தங்கள் ஆண் நட்பினையே வீட்டில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் அவரவர் இணையைப்பற்றி விவாதிப்பது தான் இயல்பானது. மாறாக அவர்களே இணையாக அல்ல.


எத்தனயோ இடங்களில் கேட்டிருக்கிலாம் - 'நான் உங்களுக்குப் பெண்டாட்டியா, இல்லை அவன் உங்களுக்குப் பெண்டாட்டியா?'

ஏன் இப்படி கேட்க மாட்டார்களோ?
"நீங்கள் எனக்கு கணவனா? இல்லை அவனுக்கா?"

ஒன்று மட்டும் புரிகிறது. நுகர்வோரும், நுகர்பொருளுக்குமான ஒப்பீடு உங்களது.

" சிநேகிதியின் மீதான அன்பை மறைத்துக் கொண்டு தான் அவனுடன் வாழ வேண்டியதாகிறது. "

ஏன் மறைக்கவேண்டும்? தோழியைப்பற்றி சொன்னால் என்னவாகப்போகிறது?
"நானா? அவளா?" என்று ஏன் போட்டியிட வேண்டும். ஆக்ரமிக்க முயலும்போதுதான் அடிமைத்தனம் தலைதூக்குகிறது.
கட்டுப்பாடுகள் இருக்கும் இடத்தில் தான் அத்துமீறல்கள் இருக்கும்.

வாழ் நாள் முழுக்க கூட இருப்பவள் ஒரு அரை மணி நேரம்
அவன்/அவளிடம் பேசுவதில் என்ன குறைந்துவிடக்கூடும்? இன்னும் சொன்னால் அவனுக்கு முன்பே வந்தவள் அவளல்லவா?
திருமணத்தில் பொருத்தம் பார்ப்பதில் தோழிகளும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் அவன் எனக்கு உகந்தவனா? என்று பரிசீலிப்பதால் பெற்றோர்கள் அடுத்து நண்பர்கள் தாம். ஏனெனில் பெற்றோரை விடவுமே புரிந்து வைத்திருப்பவர்கள் தோழமைகள். இதை மறுப்பதற்கில்லை.

"மனதினுள் அலைபாயும் தோழியின் மீதான அன்பில் உருகி உருகி வழியும் அவளுடைய உடலைத்தான் அவனால் அனுபவிக்க முடிகிறது - அவளையே அல்ல என்று தான் எழுதினேன்."

"பெண் தேவை எதுவென்று தெரிகின்ற ஆண் இல்லை" என்று ஒரு பாடல் வரி உண்டு- இது உண்மைதான் போலும்.
தோழி என்று மட்டுமல்ல; மனைவியின் உள்ளம் அறியாமல் இன்பம் காண்பதென்பது பொம்மையைக் குளிப்பாட்டி விளையாடும் குழந்தையின் செயல் தான். இது குறித்தும் கவிதை பதிக்கிறேன். அங்கே விவாதிப்போம். ஏனெனில் இந்த களம் திசை மாறிச்செல்வதில் எனக்கு விருப்பமில்லை. அது சம்பந்தமற்றதாக இருக்கிறது.

" இப்பொழுது உலகெங்கும் உள்ள மனிதர்களிடத்தில் எதிர் துருவங்களிடையே தோன்றும் காதலை விட, தன் இனத்தின் மீதே தோன்றும் காதல் அதிகமாகி வருகிறது. பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கம் தான் என்றாலும், இப்பொழுது அதிகமாகவே மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டனர் இத்தகைய ஓரினக் காதலை. அது தனி மனித சுதந்திரத்தில் சேர்ந்து விட்டது. தங்களுடைய உரிமையாக இதைக் கோருகின்றனர் இப்பொழுது உள்ளவர்கள். ஆண் பெண் உறவில் எப்பொழுதுமே ஒரு அடிமைத் தனம் கலந்திருக்கிறது. ஆனால், இந்த ஓரினக் காதலில், காதலர்கள் இருவருமே சமம். அதனால் உண்மையான விடுதலையும், உரிமையும் காதலுடன் கிடைப்பது இந்த வகைக் காதலில் தான். "

நண்பன், என்னவாயிற்று உங்களுக்கு? மன்றத்து மக்களெல்லாம் காதலின் பின்னே பாடிக்கொண்டு போகிறார்களே என்று சற்று வேறுபட்ட கருப்பொருளில் எழுதினால் இங்கேயும் காதலின் நாற்றமா? இது நட்பையே களங்கப்படுத்துவதாய் உள்ளது.

நீங்கள் பதித்த இதே கவிதையை தனித்தலைப்பாக்கிக் கொடுங்கள்; கடைசியாக நீங்கள் சொன்ன மனமுதிர்ச்சி கவிதைப்பற்றியும் தாருங்கள். விரிவாக அங்கே கண்டிப்பாக அலசுவோம்.


என்றும் நட்புடன்
கவிதா.

kavitha
01-07-2005, 11:17 AM
நல்லது.. இராகவன் சொல்வது போல் பண்பட்டவர்கள் பகுதியில்.. கவிதைக்கு ஒரு பகுதி ஆரம்பித்து போடலாம்...

நன்று . நன்றி அறிஞரே!

gragavan
01-07-2005, 11:33 AM
நல்லது.. இராகவன் சொல்வது போல் பண்பட்டவர்கள் பகுதியில்.. கவிதைக்கு ஒரு பகுதி ஆரம்பித்து போடலாம்...

நன்று . நன்றி அறிஞரே!உண்மைதான் சகோதரி. பண்பட்டவர் பகுதிக்கு மாற்றி விடலாம்.

நாம் செய்வதை மட்டும் கவிதையில் வடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எந்தக் கவிஞனுக்கும் இல்லை. தனக்கு விரும்பியதை, சரியெனப் பட்டதை, தவறெனப் பட்டதை, சொல்ல நினைப்பதை எழுத்தில் வடிக்கும் உரிமை எந்தக் கவிஞனுக்கும் உண்டு. நண்பனுடைய கவிதைக் கருவில் எவ்வளவு ஏற்புடமை என்பது விவாதத்திற்குரியது. இப்படி எழுதக் கூடாது என்று அவரைக் குறை சொல்வதும் முறையாகாது. அம்பிகையின் அங்கங்களை விவரித்து எழுதியதால் அபிராமிபட்டர் காமுகரில்லை. முருகனின் மேனி வனப்பை விவரித்ததால் அருணகிரிநாதரும் காமுகரில்லை. சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறார்கள். ஒரு புலவனாக கவிஞனான அது அவர்கள் கடமை. அதுதான் நண்பனுக்கும்.

ஆனாலும் இம்மாதிரி விவாதத்திற்குரிய விடயங்களைக் கொண்ட கவிதைகளை பண்பட்டவர் பகுதியில் இடுவது நன்று. நிர்வாக நடத்துனர்கள் நண்பனின் கவிதையையும், விளக்கத்தையும் அது குறித்த மன்ற அன்பர்களின் கருத்துகளையும் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றினால் நல்லது.

kavitha
02-07-2005, 09:51 AM
"இப்படி எழுதக் கூடாது என்று அவரைக் குறை சொல்வதும் முறையாகாது. "

அப்படி யாருமே சொல்ல மாட்டார்கள் சகோதரரே. எழுதுவது அவர் உரிமை. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவரைப்பொறுத்தது. விவாதத்தில் மேலும் கருத்துக்கள் கிடைக்கக்கூடும். அதனால் தான் வேறு பதிவாக போடச்சொன்னேனே தவிர எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அத்தகைய விவாதத்தை வரவேற்கிறேன். :)

நன்றி.

Nanban
03-07-2005, 08:00 PM
இதைப் பற்றி விவாதிக்க பண்பட்டவர்களுக்கான தளம் தான் சரியானதென்றால் அங்கேயே விவாதிக்கலாம்.

ஆனால் அதற்கும் முன்பாக சில விஷயங்கள் -

கவிதை என்னுடைய சொந்தக் கருத்து. சில விஷயங்களைப் படிக்கும் பொழுது அதை ஒட்டியும் வெட்டியும் எப்பொழுதுமே எனக்குள் சிந்தனைகளும் விவாதங்களும் எழும். ஒரு கவிதையைப் படிக்கும் பொழுது - அந்தக் கவிதை என்ன சொல்லவருகிறது என்று பலவிதங்களிலும் அலசிப் பார்ப்பேன். இந்தக் கவிதையின் வடிவம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் - இந்தக் கருவை மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்று.

அதை இங்கும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன் - கவிதாவின் கவிதை பள்ளிப் பிள்ளைகளிடையே எழும் சிறுவயது அன்பு என்று. அத்துடன் கவிதாவின் கவிதைக்கான விமர்சனமும் முடிந்து போய்விட்டது. மீண்டும் அதே வரிகளைத் தொடர்ந்து குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன் - இந்தக் கற்பனையை நான் நீட்டித்து ( என்னுடைய கற்பனையில் ) எழுதியிருக்கிறேன் என்று. தொடர்ந்து வந்த என் கவிதையின் கரு வடிவம் எல்லாம் என்னுடையது தான்.

இது ஏதோ இன்றோ நேற்றோ தோன்றிய கருத்தல்ல - மரத்தடி குழுமத்தில் எழுதிய 'அடிமையாய் ?' என்ற கவிதையைக் குறித்து கவிதாவிற்கு எழுதிய பதில் ஒன்றில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் - இந்த உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய சவால் - திருமணம் என்ற அமைப்பே எதிர்காலத்தில் இருக்காது. அதற்கு மாற்றாக ஓரின உறவுகளும், ஆணும் பெண்ணும் கூடாமலே குழந்தை பெற்றுக் கொள்வதும் அதிகமாக இருக்கும். மதவாதிகள் இதை கூடி நின்று எதிர்ப்பார்கள்.

கத்தார் நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ம்காநாடு நடைபெற்றது - ஏக இறைவனை வணங்கும் மதங்களில் மாநாடு. கலந்து கொண்டவர்களில் இஸ்லாமிய கிறித்துவ யூத மார்க்க அறிஞர்ள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கம் - இந்த உலகில் ஒருவர் மற்றவரின் மதங்களை மதிக்கவும், மாற்று மதங்களை மக்களிடம் எப்படி எடுத்துச் சொல்லுவது என்பதும் தான் முக்கிய விவாதங்கள். என்றாலும் மற்ற விஷயங்களையும் விவாதித்திருக்கிறார்கள். இறுதியாக அவர்களெல்லாம் இணைந்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த பொழுது குறிப்பிட்டவை - திருமண என்ற பந்தத்தை மேலை நாடுகள் ஓரினக் காதல் என்ற பண்பாட்டுச் சிதைவைக் கொண்டு அழித்து வருகின்றனர்.

இனி பண்பட்டவர்களுக்கான தளத்தில் இதைப்பற்றி விவாதிக்கலாம்....

பிரசன்னா
10-09-2005, 02:49 PM
அருமையான கவிதை..