PDA

View Full Version : கடை



kavitha
23-06-2005, 11:06 AM
கடை

காலையில்
நகை, புடவை
பெண் பார்த்தாள்!
மாலையில்
பெண் பார்க்கப்பட்டது!




-கவிதா

karikaalan
23-06-2005, 11:57 AM
நகை புடவையைப் பார்க்காமலா
பெண் பார்த்தார்கள்

Nanban
23-06-2005, 02:59 PM
ஒரு புடவை எடுப்பதற்குள்
அந்தப் பெண்
அந்தப் புடவை கடையைவே
புரட்டி எடுத்திருப்பாள்.

அதேபோல
மாலையில் அவளைப் பார்க்க வரும்
அவன் எத்தனை எத்தனை பெண்களைப்
புரட்டிப் பார்த்திருப்பானோ கண்களால்.....

ஒப்பீட்டுக்குள்
ஒளிந்திருருக்கும் ஆற்றாமை....
அழகு தான் கவிதா....

அறிஞர்
24-06-2005, 03:58 AM
கடைகளை
கண்டவள்..
கடையாய்
மாறியதை...
என்ன
சொல்ல...

pradeepkt
24-06-2005, 06:11 AM
கடை

காலையில்
நகை, புடவை
பெண் பார்த்தாள்!
மாலையில்
பெண் பார்க்கப்பட்டது!

-கவிதா
இந்த அஃறிணையிலேயே சுட்டு விட்டீர்கள் சகோதரி!

gragavan
24-06-2005, 06:19 AM
கவிதாவின் கவிதையில் சிறப்பு என்றால், அதைப் பாராட்டிய கரிகாலன், நண்பன், அறிஞர், பிரதீப் ஆகியோரின் கவிதைக் கருத்துகளும் நெருப்பு.

kavitha
24-06-2005, 10:59 AM
நகை புடவையைப் பார்க்காமலா
பெண் பார்த்தார்கள்
- கரிகாலன்

"அலைகள் ஓய்வதில்லை" -ல் இப்படியொரு வசனம் வரும்

மேரி கதாபாத்திர ராதா (அண்ணியைப் பார்த்து ) : எங்க அண்ணன் உங்களுக்கு என்ன போடுவார்னு தான் நீங்க பார்த்திருப்பீங்க! நீங்க என்ன கொண்டு வருவீங்கன்னு தான் எங்க அண்ணன் பார்த்திருப்பார்.

அவனுக்கு என்ன மனசுருக்குனு தான் நான் பார்த்தேன்
எனக்கென்ன மனசுருக்குனு தான் அவன் பார்த்தான்

அது கல்யாணம்! இது காதல்!

வியாபாரத்திற்கு முதலீடு தேவை தான்!
வாழ்க்கைக்கு ஒத்த மனமும், தன்னம்பிக்கையும் போதாதா?


ஒப்பீட்டுக்குள்
ஒளிந்திருக்கும் ஆற்றாமை....
அழகு தான் கவிதா....
- நண்பன்


நன்றி நண்பன்.
பெண்களையும் லேசு பட்டவர்களாக நினைத்து விடாதீர்கள்.

"அவன் உயரம் குறைச்சல், இவன் என் நிறம் இல்லை;
நல்ல சம்பளம் தான்; ஆனா... என் அளவு படிக்கலையே!
குடும்பம் நல்ல மாதிரி தெரியுது; ஆனால் பையன் சம்பளத்தை வீட்டிலேயே தருவதில்லையாம்" இப்படி ஒவ்வொரு முறையும் அடுக்கிக்கொண்டே போகிறாள்..
ஒரு நாளில் ஒரு அரைமணி நேரத்தில் இவர்கள் எதைக்கணித்து விடுவார்கள்? ஜாதகத்தைப்போல!

கடைகளை
கண்டவள்..
கடையாய்
மாறியதை...
என்ன
சொல்ல...
- அறிஞர்

பவுடர் பூசி பவுடர் பூசி கூச்சம் போச்சே!னு
ஒரு பாட்டு வரும்!

எதிர்பார்ப்புகளோடு நின்றவள்
இப்போது
எதிர்த்து நிற்கிறாள்
"அவன் மட்டும் மாட்டட்டும்....னு "




"இந்த அஃறிணையிலேயே சுட்டு விட்டீர்கள் சகோதரி!
- பிரதீப் "
துல்லியமாக பார்த்ததற்கு நன்றி பிரதீப் :)
அதைத்தான் சுட்ட விரும்பினேன்.


"கவிதாவின் கவிதையில் சிறப்பு என்றால், அதைப் பாராட்டிய கரிகாலன், நண்பன், அறிஞர், பிரதீப் ஆகியோரின் கவிதைக் கருத்துகளும் நெருப்பு.
- இராகவன்"

நன்றி அண்ணாச்சி! :)

தீ நன்றே!
சுடும் தீ நன்றே!
தீதைச் சுடும் தீ நன்றே!
தொடும் தீதைச் சுடும் தீ நன்றே! - அதனினும்
கடும் தீதைச் சுட்டெ ரிக்கும் தீ நன்றே!

மன்மதன்
25-06-2005, 04:47 AM
நாலு வரியில் கவிதை கொடுத்து நாற்பது வரிகளில் கருத்து சொல்லவைக்கும் திறமைசாலி கவிதா என்பதை இன்னொரு முறை நிரூபித்து விட்டாய் கவி..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
25-06-2005, 05:33 AM
நாலு வரியில் கவிதை கொடுத்து நாற்பது வரிகளில் கருத்து சொல்லவைக்கும் திறமைசாலி கவிதா என்பதை இன்னொரு முறை நிரூபித்து விட்டாய் கவி..
அன்புடன்
மன்மதன்உம் பங்குங்கு எதுவும் சொல்லுங்கள் அன்பரே....

மன்மதன்
25-06-2005, 06:33 AM
கடை
கடையாய் ஏறி..
புடவையை
புரட்டி புரட்டி
போட்டவள்..

வீடு வந்து
சேர்ந்ததும்..
நின்றாள் சிலையாய்..

ஒரு புடவை
கலைந்து
கிடந்ததை
பார்த்து...


------

புடவை
விளம்பரத்திற்கு
மாடலாய்
மணிக்கணக்கில்
நின்று...

வீடு
திரும்பியவள்
கலைத்து போட்டாள்.
தன்
நினைவுகளை....

---

மன்மதன்

Nanban
25-06-2005, 05:17 PM
சும்ம பின்னி எடுங்க மன்மதன்....

தனித்தனி தலைப்புகளில் நீங்களும் கவிதைச் சரம் தொடுக்கலாமே...

மன்மதன்
26-06-2005, 06:04 AM
கண்டிப்பா கொடுக்கிறேன் நண்பன்.
அன்புடன்
மன்மதன்

பிரசன்னா
10-09-2005, 03:02 PM
கவிதை எழுதியவரை பாராட்டுவதா?

கவிதையை விமர்சித்தவர்களை பாராட்டுவதா?

எல்லாமே அருமை

பென்ஸ்
18-02-2006, 07:16 PM
எல்லா திரிகளையும் படித்த பிறகு எனக்கு எழுத ஒன்னும் இல்லையப்பா ....

சரி என் பங்குக்கு...
கவிதை அருமை..
விமர்சனக்கள் அருமையோ அருமை...

gans5001
21-02-2006, 11:06 AM
அவள் பார்த்ததை வாங்குவதற்கு அவள் விலை கொடுப்பாள்...
அவளை பார்த்தவனுக்கும் அவளல்லவா விலை கொடுக்க வேண்டியுள்ளது

sarcharan
21-02-2006, 11:15 AM
ஒன்ணும் புரியவில்லை கான்ஸ்

򾨾 šž Ţ ...
Ũ š Ţ

தாமரை
21-02-2006, 11:29 AM
வரதட்சணை.!
அவள் பார்த்ததை வாங்குவதற்கு
அவள் விலை கொடுப்பாள்...
அவளை பார்த்தவனுக்கும்
அவளல்லவா
விலை கொடுக்க வேண்டியுள்ளது!!!

இப்ப புரியறதா?

தாமரை
21-02-2006, 11:31 AM
வரதட்சணை.!
அவள் பார்த்ததை வாங்குவதற்கு
அவள் விலை கொடுப்பாள்...
அவளை பார்த்தவனுக்கும்
அவளல்லவா
விலை கொடுக்க வேண்டியுள்ளது!!!

இப்ப புரியறதா?
இதற்கு ஒரு தவறான அர்த்தம் வருகிறது கண்ஸ் அவர்களே..

அவளைப் பார்ப்பவன்
அவளுக்கு விலை கொடுத்தால்?:angry: :angry: :angry:

sarcharan
21-02-2006, 11:46 AM
ஹி ஹி செல்வன் என்ன சொல்ல வர்றீங்க....

இதற்கு ஒரு தவறான அர்த்தம் வருகிறது கண்ஸ் அவர்களே..

அவளைப் பார்ப்பவன்
அவளுக்கு விலை கொடுத்தால்?:angry: :angry: :angry:

ஓவியா
29-04-2007, 12:15 AM
நல்ல திரிபா,

கவியின் நாலு வரியை வைத்து எத்தனை நாலு வரி வடித்தாகிவிட்டது!!!!!!!!! அடேங்கப்பா

கவியின் கவிதையும் அதர்க்கு இடப்பட்ட பின்னூட்ட கவிதைகளும் அருமையே அருமை.

கவி உங்கள் விமர்சனம் சூப்பர்.

மன்மதன் உங்கள் கவிதை தூள்.

அனைவருக்கும் நன்றி.

ஆதவா
24-05-2007, 04:47 PM
கவி அவர்களின் கவிக்கு அர்த்தக் கவிகளைக் கண்டால் மெய் சிலிர்க்கிறது.... நாங்கள் கொடுத்து வைக்காதவர்கள்....

நானும் நாலுமுறை படித்து பொருள் விளங்கவில்லை.. பின்னூட்டங்களே எனக்கு பலம்....

மீண்டுமொரு காலம் மீண்டு வருமா?

அக்னி
24-05-2007, 11:22 PM
கவிதை அழகு... பின்னூட்டங்கள் அழகழகு... எல்லாம் சேர்ந்து அழகழகழ...கழகு...

ஷீ-நிசி
25-05-2007, 03:49 AM
கவிதையை... விமர்சனங்கள் தூக்கி சாப்பிட்டது என்றால் தொடர்ந்து வந்த கவிதைகள் அத்தனையுமே தூள்... கவிதா எழுதியது அழகென்றால், மன்மதன் எழுதியது இன்னும் சிறப்பாக இருந்தது... ப்லரின் விமர்சனங்களே இங்கே கவிதையாய் இருக்கின்றது... கவிதா மீண்டும் வாருங்கள்....

வெற்றி
25-05-2007, 12:42 PM
பாடல் கேட்டாயிற்று..
பஜ்ஜி சொஜ்ஜி முடிந்து
சிரித்து கொண்டே சொன்னார்கள்,
போய் லெட்டர்போடுறோம்..