PDA

View Full Version : தோற்றுவிட்டேன்.. தோல்வியிடம்..



மன்மதன்
23-06-2005, 06:22 AM
தோற்றுவிட்டதை
ஒப்புக்கொள்ளத்தானே
வேண்டும்..

தோல்வியிடம்
சொன்னேன்..

நான்
தோற்றுவிட்டேன்.

தோல்வியிடம்
தோற்ற
நான்

வெற்றியை
வெல்லாதிருக்க
தடுக்க நினைக்கும்
அனைத்தையும்..
தோற்கடிக்க வேண்டும்...

நான்
தோற்று போகும்
காலத்தில்..

என் வெற்றியை
சொல்ல
விட்டு செல்வேன்..
சில குறிப்புகளோடு..

-
மன்மதன்

பரஞ்சோதி
23-06-2005, 07:13 AM
நம்பி(க் )கை வை நண்பா, வெற்றி உனக்கே.

அறிஞர்
23-06-2005, 08:17 AM
வெற்றியை
வெல்லாதிருக்க
தடுக்க நினைக்கும்
அனைத்தையும்..
தோற்கடிக்க வேண்டும்...

நான்
தோற்று போகும்
காலத்தில்..

என் வெற்றியை
சொல்ல
விட்டு செல்வேன்..
சில குறிப்புகளோடு..

-
மன்மதன்

தோல்வி எவருக்கும்
நிரந்தரமல்ல....
தோற்கடிக்கவேண்டும்
என்ற உந்துதல்...
தோல்வியை...
தோற்கடித்து....
வெற்றியை
சேர்க்கும்
நண்பா.......

gragavan
23-06-2005, 08:24 AM
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

pradeepkt
23-06-2005, 08:49 AM
என் வெற்றியை
சொல்ல
விட்டு செல்வேன்..
சில குறிப்புகளோடு..

--காத்திருக்கிறோம் அந்தக் குறிப்புகளுக்காக.
கலக்கல் அப்பு.

kavitha
23-06-2005, 11:04 AM
"தோல்வியை ரசிக்கத்தெரியாவிட்டாலும்
மதிக்க கத்துக்கணும்"
- நன்றி: சுஜாதா ( உள்ளம் கேட்குமே )

நீங்கள் மதிக்கத்தெரிந்தவர். வெற்றியை நீங்கள் சொல்லத்தேவையில்லை.
அதுவே பறை சாற்றும்! :)

karikaalan
23-06-2005, 12:01 PM
தோல்வியெல்லாம் தோல்வியல்ல
வெற்றியின் பாதையில் ஒவ்வோர் அடிக்கல் --- சொன்னது யாரோ.

மன்மதன்ஜி வெற்றிக்கொடி நாட்டுங்கள்.

===கரிகாலன்

Nanban
23-06-2005, 02:49 PM
நல்லது மன்மதன்

வடிவாக எழுதக் கற்று கொண்டு விட்டீர்கள்

பாராட்டுகள்.....

தீபங்கள் பேசும் திரியிலிருக்கும் கவிதைகளையும் வெளியே எடுத்து தனித் தலைப்பாக்கிக் கொடுங்கள் - எல்லோரும் படிக்கடும்... அதுவும் அந்த மழைக் கவிதை - ஏதோ மழையில் நனைந்து கொண்டு நாமே போவது போல பிரம்மை எழுகிறது,,,,,

மீண்டும் பாராட்டுகள்,,,,,,,,

மன்மதன்
25-06-2005, 04:39 AM
பாராட்டுக்கள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.. உங்கள் எல்லோருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்..



நல்லது மன்மதன்

வடிவாக எழுதக் கற்று கொண்டு விட்டீர்கள்

பாராட்டுகள்.....

தீபங்கள் பேசும் திரியிலிருக்கும் கவிதைகளையும் வெளியே எடுத்து தனித் தலைப்பாக்கிக் கொடுங்கள் - எல்லோரும் படிக்கடும்... அதுவும் அந்த மழைக் கவிதை - ஏதோ மழையில் நனைந்து கொண்டு நாமே போவது போல பிரம்மை எழுகிறது,,,,,

மீண்டும் பாராட்டுகள்,,,,,,,,

நன்றி நண்பன் ...ரொம்ப சந்தோசமா இருக்கு.. 'தீபங்களில் பிரியமுடன் பேசிய' என்ற தலைப்பில் தொகுக்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
18-08-2005, 02:27 PM
கண்டேன் வார்ப்புகள் மின்னிதழில் . கிளைவிரிக்கும் தங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துகள் மன்மதன்..

தொடர்ந்து எழுதுங்கள்.

இதோ சுட்டி

http://vaarppu.com/php/bodymaker.php?id=372

mukilan
18-08-2005, 04:43 PM
வெற்றியை
வெல்லாதிருக்க
தடுக்க நினைக்கும்
அனைத்தையும்..
தோற்கடிக்க வேண்டும்...

..

-
மன்மதன்

என்னே வெறி! மம்முத ராசா! "உலகத்து வெற்றிகளில் எல்லாம் மிகச்சிறந்த வெற்றி காதல் தோல்வின்னு" கவிஞர் அப்துல் ரகுமான் சொல்லியிருக்கார். அந்த வெற்றி மட்டும் உங்களுக்கு கிட்டாமல் போகக் கடவதாக.

மன்மதன்
19-08-2005, 09:51 AM
நன்றி பிரியன்.. எனக்கே ஆச்சரியம் தந்த விஷயம் அது. வார்ப்பு தளத்திற்கும் எனது நன்றிகள்.
நன்றி முகிலன்.

அன்புடன்
மன்மதன்

kavitha
19-08-2005, 11:17 AM
கண்டேன் வார்ப்புகள் மின்னிதழில் . கிளைவிரிக்கும் தங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துகள் மன்மதன்..

தொடர்ந்து எழுதுங்கள்.

இதோ சுட்டி

http://vaarppu.com/php/bodymaker.php?id=372

மனமார்ந்த பாராட்டுகள் மன்மதன் :)
இன்னும் நிறைய எழுதுங்கள்