PDA

View Full Version : வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்!vinmeenj
23-06-2005, 05:42 AM
வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்!

ஐதராபாத்: "வாஸ்து' என்பதை உண்மை என நிரூபித்தால் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அமைப்பு அறிவித்துள்ளது.
"வாஸ்து' சாஸ்திரம் உலகம் முழுக்க மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நன்றாக இருக்கும் வீட்டை இடித்து மாற்றிக் கட்டுவது, பொருட்களை மாற்றி வைப்பது என பல்வேறு மாற்றங்களை "வாஸ்து' என்ற பெயரில் பரிந்துரை செய்து வருகின்றனர். அதை நம்பி பணத்தை இறைக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆந்திராவில் அறிவியல் கருத்துக்களை பரப்பிவரும் ஜன விஞ்ஞான வேதிகா(ஜே.வி.வி.,) என்ற அமைப்பு வாஸ்துவை யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சார்ந்த வாஸ்து நிஜ நிர்தரண ஐக்கிய வேதிகா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் டி.வி.ராவ் கூறியதாவது:

மதத்தின் அடிப்படையிலும் பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். மீன் மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் சிகிச்சையும் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி செய்யப்படும் ஏமாற்று வேலை. வீடு கட்டுவது என்பது இடம் மற்றும் கட்டமைப்பை பொறுத்து அமைய வேண்டுமே தவிர வாஸ்து அடிப்படையில் கூடாது. வாஸ்துவுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. வாஸ்து இருப்பதை அறிவியல் பூர்வமாக யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். யாராவது நிரூபிக்க விரும்பினால் தங்களது விபரங்களை இமெயில் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு டி.வி.ராவ் அறிவித்துள்ளார்.

நன்றி : [URL=http://www.dinamalar.in/2005june20/imp7.asp]

pradeepkt
23-06-2005, 05:44 AM
ஹை...
இதெல்லாம் ஹைதராபாதிலதான் நடக்குதா?
அப்ப எங்க அம்மாவை அங்க கூட்டிட்டுப் போகணும்

மன்மதன்
23-06-2005, 05:49 AM
பிரதீப் ஒரு நடை அங்கிட்டு போயி யாரு 5 கோடி வாங்கினாங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க..
அன்புடன்
மன்மதன்

aren
23-06-2005, 06:10 AM
இதெல்லாம் ஒரு நம்பிக்கைத்தான். ஆனால் யாராவது ஒருவர் வாஸ்து சாஸ்திரபடி வீட்டை மாற்றி கட்டியிருப்பார். அப்படி கட்டியவுடனேயே அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிட்டால் அதுவும் நல்லதாக நடந்துவிட்டால் அவர்கள் நமக்கு இந்த நல்லது நடந்தது வாஸ்து சாஸ்திரத்தால்தான் என்று நம்பி அவர்கள் அதன்படியே நடக்க ஆரம்பித்துவிடுவர். இதைப் பார்த்த மற்றவர்களும் இதையே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவர். ஆகையால் இது ஒரு நம்பிக்கை மட்டுமே. விஞ்ஞானப்படி இதை நிரூபிக்கமுடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்கள் தங்களுக்காக எந்த ஆதாயத்தையும் தேடிக்கொள்வதில்லை. வீட்டை மாற்றி கட்டினால் கொத்தாணுருக்கத்தான் லாபமே ஒழியே வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்களுக்கு எந்த விதமான ஆதாயமுல் இதில் கிடையாது (அவர்களுக்கு கொடுக்கும் சன்மானத்தைத் தவிற). ஆகையால் இது வாஸ்து சாஸ்திரர்களின் நம்பிக்கையினாலும் இந்த மாதிரி நடக்கலாம்.

gragavan
23-06-2005, 07:48 AM
அருமை. மிகச் சரியான போட்டி. நானும் இந்த வாஸ்துகள் எல்லாம் பாக்குறதில்லை. வீட்டோட அமைப்புக்கு உள்ள நல்ல காத்தும் வெளிச்சமும் வருதான்னு பாக்கனும். வீட்டுல எல்லாம் நம்ம செய்கைக்கு தக்கபடி அமைஞ்சிருக்கான்னு பாக்கனும். அவ்வளவுதான். இதையெல்லாம் ஒழுங்காப் பாத்தாலே போதும். அத விட்டுட்டு வாஸ்து, ஜாதகம், ஜோசியம் அது இதுன்னுகிட்டு.

pradeepkt
23-06-2005, 08:46 AM
எனக்குத் தெரிந்த வரை வாஸ்து என்பது அந்தக் காலத்தில் வீடுகளைக் காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் திட்டமிடுதலும் கொண்டு கட்டுவதற்காக வரையறுக்கப் பட்ட அறிவியல் கூற்று. அதற்கு மதச்சாயமும், தெய்வ நம்பிக்கையும் காரணம் காட்டுவது தவறு.

முக்கியமாக அந்தக் காலத்தில் எல்லோரும் தனி வீடுகளில் சுற்றித் தோட்டம் போட்டு வாழ்ந்தார்கள். எனவே கிழக்கு, வடக்கு வாசல்கள் நேரடி சூரிய வெளிச்சத்திற்குத் தேவைப் பட்டன. அதை இப்போது தீப்பெட்டிக் குடியிருப்புகளில் தேடுவது அறிவீனம்.

நமக்கு எது வசதியோ அதைச் செய்து, அதற்குப்பின் அதைப் பற்றி யோசித்து வருந்தாமலிருப்பதே நல்லது.

vinmeenj
23-06-2005, 09:25 AM
வாஸ்து முறைப்படி முதன்முறையாக வீடு கட்டுவது என்பது அது அவருக்கும் அவர் மனதுக்கும் உள்ள சொந்தக் பிரட்ஷனை என்று எடுத்துக் கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டியபிறகு அவர் மனச்சாந்திக்காக அவர் குடும்பத்தையும் கஷ்டத்தில் ஆழ்த்துவதுதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.

சரி அது கிடக்கட்டும் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தமிழ் என்ஸைக்ளோபிடியா ஒன்று இப்படி சொல்லுது...

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே ஆக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.

+++

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலில்

"இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது."

எனக்குத் தெரிந்து இந்திய மக்கள் தொகையில் சொற்பத் தொகையினறே வேதத்தில் குறிப்பிட்டிருப்பதை வசன எண்களுடன் குறிப்பிட முடிகிறது ஆனால் பலரோ "கூறப்படுகிறது" என்றுதான் மறுமொழி சொல்லவேண்டிய நிலை...

வலையில் எழுதும்போதும்கூட வேதவசன எணகளை குறிப்பிட்டு தெளிவுபடுத்துவது கிருத்தவ மற்றும் இசுலாமிய தகவல்கள் மட்டும்தான்.

அறிஞர்
23-06-2005, 09:58 AM
வாஸ்து என்றால் என்ன என கேட்பவன் நான்..... இங்கு.... பேசியவை சற்று அதை பற்றி அறிய உதவுகிறது...

உதயா
21-11-2005, 08:10 AM
நண்பர்களே.. வாஸ்து பற்றி யாருக்கவது தெறிந்தால் தெறியப்படுத்துங்களே.. நம்புவோர் நம்பட்டும்.

பென்ஸ்
21-11-2005, 09:01 AM
வாஸ்த்து.... ஒரு அறிவியல் சமாச்சாரம் என்று தான் என்று நான் சொல்லுவேன்...
வாஸ்த்து, இன்றைய எர்கொனொமிக்ஸ் ( ergonomics), புவியியல், அக்குவாஸ்டிக்ஸ் (Acoustics), என்று நான் பிரித்து தனிதனியே படிக்கும் விஷயங்களை சேர்த்து கட்டிவைத்த சமாச்சாரம்...

உதாரனமாக...

கருத்து 1 : மாட்டு தொழுவம், குளியலறை போன்றவை விட்டின் வட - மேற்க்கு அல்லது தென் - கிழக்கு பகுதியில் இருக்க வேன்டும்

அறிவியல் காரணம் (காமன் சென்ஸ் :D ) :
காற்றின் திசை தென் - மேற்க்கு வட கிழக்கு ஆக இருப்பதால் இங்கு இருக்கும் துர்நாற்றம் விட்டினுள் வராமல் இருக்க வேண்டி இப்படி சொல்லுவதாக நான் கருதுகிறேன்...


கருத்து 1 : வீட்டின் முன் கிழக்கு பக்கம் பெரிய மரங்கள் இருக்க கூடாது...மேற்க்கு பக்கம் இருக்கலாம்

காரணம்: காலை வெள்ளிச்சம் விட்டில் வரவேன்டாமா??? மாலை சுரியன் மரங்களல் தடுக்கப்பட்டால், சூடான நம்மூரில் இரவில் குழுமையாக தூங்கலாம்...

நமது நாட்டில் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள், கடைபிடித்தால் நல்லது என்ற விஷயங்கள் எல்லாம் கடவுள் பெயராலும்.. மேலும் சில "நீ செய்யாவிட்டால் துன்பம் வரும்" என்று பயமுறுத்தியும் சொன்னதாலும், அதற்கான விளக்கங்களை யவரும் தர முன்வராமல், வாஸ்து சரியா.. தவற என்று மட்டுமே விவாதிப்பதாலும்... இன்று அது ஒரு மூடநம்பிக்கியான ஒரு விஷயம் ஆகிவிட்டது...

உதயா
22-11-2005, 11:59 AM
எனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்கள்.

பரஞ்சோதி
22-11-2005, 03:53 PM
பெஞ்சமின் அருமையாக சொன்னீங்க.

நம்ம மக்களிடம் மத்தியான நேரம் புளியமரத்தின் கீழ் நிற்காதே, உறங்காதே என்றால் கேட்க மாட்டான், அதற்கு பதில் அதில் பேய் வரும் என்றால் அங்கே போக மாட்டான்.

இப்படி தான் பல நல்ல விசயங்களை மக்களுக்கு சொல்ல இறைவனையும், பல அனுகூலங்களையும் காட்டி சொல்லியிருக்காங்க. அதில் நல்லதை ஏற்போம், கெட்டதை விட்டு விடுவோம்.

பென்ஸ்
23-11-2005, 02:23 AM
எனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்கள்.

வெற்றி,

நான் சொன்னது போல் தென் கிழக்கு அல்லது வட மேற்க்கு பக்கம் வைக்கலாம்....
தேர்க்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்பார்கள்... சாக்கடை, கழிவு நீர் தென்பக்கம் இருந்து வடபக்கம் செல்ல வேன்டும் என்பார்கள்...

அட பாவிகள என்னை ஒரு ஜோசியன் ஆக்கிவிடாதிர்கள்...:D :D :D

உதயா
08-12-2005, 08:48 AM
நான் சொன்னது போல் தென் கிழக்கு அல்லது வட மேற்க்கு பக்கம் வைக்கலாம்....தேர்க்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்பார்கள்... சாக்கடை, கழிவு நீர் தென்பக்கம் இருந்து வடபக்கம் செல்ல வேன்டும் என்பார்கள்...
வாங்க சார் வாங்க.. தென் கிழக்கு பக்கம் வைக்கலாம் என்று கூறுகிறீர்கள் அதே நேரம், தெற்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்றும் கூறுகிறீகள். கொஞ்சம் இடிக்குதே?

Narathar
09-12-2005, 02:34 PM
அட!!! நம் மன்றத்தில் வாஸ்த்து நிபுணர்களும் இருக்கின்றார்களே!!
பலே பலே

தாமரை
23-03-2006, 01:36 PM
எனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்கள்.
செப்டிக் டேங் வீட்டிலேயே தாழ்வான இடத்தில் கட்டப்பட வேண்டும்.. ஹி..ஹி...ஹி...

பொதுவாக.. செப்டிக் டேங்க் உங்களது சம்ப்பிற்கு தூரமாகவும், ஹால், படுக்கை அறை, சமையலறை, உணவருந்தும் அறை, மற்றும் ஸ்டோர் ரூமிலிருந்தும் விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் நலம்.

உங்கள் பகுதில் நீர் வாட்டம் தெரிந்தால் (ஆறு ஓடினால்) சம்ப் ----> செப்டிக் டேங்க் ஆற்றில் போக்கிற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளல் உசிதம்.

நான் ஒரு பிளாட் வாங்குகிறேன். எனவே இந்த வாஸ்து என்னும் வஸ்து என்னையும் படுத்த நினைத்தது..

எப்படியோ என் பிளானை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..

இது அபார்ட்மெண்ட் என்பதால் செப்டிக் டேங்கை பில்டர் பார்த்துக் கொள்கிறார்.

பென்ஸூ பெயர் ஒற்றுமைக் காரணமாய் நீங்கள் ஃபெங்சூயி கற்கலாமே.. பின்னர் கறக்கலாமே..

ஃபெங்சூயி பென்ஸூ - வாழ்க வாழ்க

mythili
28-03-2006, 06:40 AM
வீடு கட்டும் போது...வெளிச்சம் காற்று இதைப் பார்த்து..."Cross ventilation" என்று சொல்வார்களே...
அது போல கட்டினால் போதுமே....
அன்புடன்,
மைத்து

pradeepkt
28-03-2006, 07:21 AM
வணக்கம் மைத்து..
தமிழ் மன்றத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..
உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்... :D :D

mythili
28-03-2006, 07:27 AM
வணக்கம் ப்ரதீப்.
நானும் போடலாம்னு தான் நினைச்சேன்..இதுவரை நான் 4 முதல் 5 முறை காணாமல் போய்...அறிமுக பகிதியில் போட்டதால், திரும்பவும் போட்டால்..எங்கே என்னை போடுவார்களோ என்று பயந்து தான் போடலை :)

ஆமாம் எங்க மதனைக் காணும்?
அன்புடன்,
மைத்து

pradeepkt
28-03-2006, 07:35 AM
நல்ல முன்னெச்சரிக்கை... இந்த பயம் இருக்கட்டும், இனிமேலாச்சும் அடிக்கடிக் காணாம போறதை நிறுத்திக்கணும்,

மதனா, அவன் ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர குழந்தை மாதிரி ரொம்ப பிஸீஈஈஈஈஈஈஈஈ... தனிமடல், மெயில் ஏதாச்சும் அனுப்பி பாக்குறதுதானே...

sarcharan
29-03-2006, 05:01 AM
பென்ஸூ, சரியாய்ச் சொன்னீர் ஓய்:) :)

gragavan
29-03-2006, 05:38 AM
வணக்கம் ப்ரதீப்.
நானும் போடலாம்னு தான் நினைச்சேன்..இதுவரை நான் 4 முதல் 5 முறை காணாமல் போய்...அறிமுக பகிதியில் போட்டதால், திரும்பவும் போட்டால்..எங்கே என்னை போடுவார்களோ என்று பயந்து தான் போடலை :)

ஆமாம் எங்க மதனைக் காணும்?
அன்புடன்,
மைத்துமதனா மதனா மன்மதனா
அவனை எங்கே தேடுவதாம்.....

தாமரை
29-03-2006, 05:53 AM
வீடு கட்டும் போது...வெளிச்சம் காற்று இதைப் பார்த்து..."Cross ventilation" என்று சொல்வார்களே...
அது போல கட்டினால் போதுமே....
அன்புடன்,
மைத்து
செப்டிக் டேங்குக்கு ..."Cross ventilation" எப்படி வைப்பது மைத்து (இப்ப பறக்க போறது "மத்து" :rolleyes: :rolleyes: :rolleyes: )