PDA

View Full Version : நாளை வருமோ?



gragavan
20-06-2005, 10:25 AM
இந்தக் கவிதைதான் பிரதீப் கவிதைத் திரியில் பிரதீப் குறிப்பிட்ட கவிதை. தினம் ஒரு கவிதைக்குழுவில் நடந்த போட்டிக்காக நான் எழுதியது.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5164&page=1&pp=10

நாளை வருமோ?

நாளை வருமோ?
நல்லதைத் தருமோ?
நாங்கள்
நிகழ்காலம் கூட இல்லையே!
இறப்பதற்கு முன்னமே
இறந்தகாலம் ஆகிவிட்டோமே!

பாலூட்டியும் சீராட்டியும்
வளர்த்ததால்
பாம்புக்குட்டியாய்ச் சீறும்
வாரிசுகள்!
அவர்களிடம்
அன்றாடம்
பழச்சாறா கேட்டோம்?
பழஞ்சோறே கிடைக்கைலையே!
இன்றைக்கே இந்தப்பாடு
நாளைக்கு?

நேற்று
கணக்குப் பார்க்காமல்
செய்த செலவு
இன்று
பிணக்கு பண்ணுகிறது
செலவு செய்ய!

மருந்துச் செலவைக் குறைக்க
வருத்தும் வலியை மறைத்தோம்.
உணவுச் சுமையைக் குறைக்க
உறுத்தும் பசியை மறுத்தோம்.
கம்பளித் தேவையைத் துரத்த
குளிரின் தண்மையில் மரத்தோம்.

இந்த வயதில் தனியறையா?
ஹாலுக்கு வந்தோம்.
எந்த வேளையும் டீவியா?
கோயிலுக்குச் சென்றோம்.
சொந்த வேலையே எப்பவும்!
கடைகளுக்கும் சென்றோம்.
அந்த வேளையே வராதா?
காத்திருக்கிறோம்
நாளைக்காவது வருமென்று!

ஆண்டவா
எங்கள் இருவருக்கும்
அந்த நாளை
எப்படியாவது ஒரே நாளாகட்டும்!

pradeepkt
20-06-2005, 11:00 AM
ஆமாய்யா, வயதான ஜீவன்களின் ஏக்கத்தை அப்படியே படம் பிடித்திருந்தீர்கள்.
அருமையான கவிதை.

மன்மதன்
20-06-2005, 11:14 AM
ரொம்ப டச் பண்ணிடுச்சு..

ராகவன், இவ்வளவு உணர்வுப்பூர்வமா எழுதுகிற நீங்கள் ஏன் இன்னும் கவிதைகள் எழுத கூடாது..



வயதான ஜீவன்களின் ஏக்கத்தை அப்படியே படம் பிடித்திருந்தீர்கள்


ரொம்ப சரி.. அருமை..மிக அருமை..

அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 11:17 AM
ரொம்ப டச் பண்ணிடுச்சு..

ராகவன், இவ்வளவு உணர்வுப்பூர்வமா எழுதுகிற நீங்கள் ஏன் இன்னும் கவிதைகள் எழுத கூடாது..



ரொம்ப சரி.. அருமை..மிக அருமை..

அன்புடன்
மன்மதன்பாராட்டுகளுக்கு நன்றி மம்முதா.....கவிதை படைக்கிற பக்குவம் இப்பக் கொறஞ்சி போச்சி.........பெருசா எழுதனுங்கறதுதான் இப்பக் கனவு......அதாங்.......

Sridhar
20-06-2005, 12:34 PM
முது மரங்களின் உயிர் வேரினை உறுஞ்ஞிகொண்டு இளம் தளிற்கள் பூக்கின்றன....

நாளை அதன் வேரின் அடியில் பூக்க போகும் இளம் தளிற்களை மறந்து......!!!

அறிஞர்
23-06-2005, 08:46 AM
பாலூட்டியும் சீராட்டியும்
வளர்த்ததால்
பாம்புக்குட்டியாய்ச் சீறும்
வாரிசுகள்!
அவர்களிடம்
அன்றாடம்
பழச்சாறா கேட்டோம்?
பழஞ்சோறே கிடைக்கைலையே!
இன்றைக்கே இந்தப்பாடு
நாளைக்கு?

நேற்று
கணக்குப் பார்க்காமல்
செய்த செலவு
இன்று
பிணக்கு பண்ணுகிறது
செலவு செய்ய!

மருந்துச் செலவைக் குறைக்க
வருத்தும் வலியை மறைத்தோம்.
உணவுச் சுமையைக் குறைக்க
உறுத்தும் பசியை மறுத்தோம்.
கம்பளித் தேவையைத் துரத்த
குளிரின் தண்மையில் மரத்தோம்.

இந்த வயதில் தனியறையா?
ஹாலுக்கு வந்தோம்.
எந்த வேளையும் டீவியா?
கோயிலுக்குச் சென்றோம்.
சொந்த வேலையே எப்பவும்!
கடைகளுக்கும் சென்றோம்.
அந்த வேளையே வராதா?
காத்திருக்கிறோம்
நாளைக்காவது வருமென்று!! "ஏக்கங்களுக்கு
ஒரு விடிவு
வரட்டும்...
நாளையாவது..."
-------------
சற்று வேளையால் உடனே.. படிக்க இயலவில்லை...... மன்னிக்கவும்...
-------
அழகாய் விவரித்துள்ளீர்கள் இராகவன்.. இன்னும் தொடருங்கள்....
------------

karikaalan
23-06-2005, 12:07 PM
ராகவன்ஜி, தினம் ஒரு கவிதைக் குழுவில் படித்த நினைவு இருக்கிறது.

ரிடையரான ஜீவன்களின் மனப்பசி
நன்றாகவே வெளியிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

gragavan
23-06-2005, 02:03 PM
அடடா! நமது அறிஞரும் கரிகாலரும் படித்துக் கருத்திட்டிருக்கிறார்கள். பார்க்காமல் விட்டேனே. நன்றிகள் பல அறிஞரே.

கரிகாலன், நீங்களும் தினம் ஒரு கவிதைக் குழுவில் இருந்தீர்களா? இப்பொழுது அது நிறுத்தப் பட்டு விட்டது. அதில் இருந்த பொழுதுதான் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பிறகு கவிதைகள் குறைந்து கதைகளும் கட்டுரைகளும் கூடின.

Nanban
23-06-2005, 02:44 PM
ராகவன் அருமை...

இறப்பு நாள் ஒரே தினமாகட்டும் என்ற ஆதங்கத்தில், ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பை அருமையாக உணர்த்திவிட்டது. ஒரே ஒரு வரியைக் கொண்டு ஒரு அருமையான காதல் கவிதையை எழுதி விட முடியும் என்பது உண்மை தான். அந்த ஒரு வரிக்கு அத்தனை சிறப்பான வலு கிடைத்தது - மேலே எழுதப்பட்ட வரிகளின் நேர்மை தான்...

மனங்கனிந்த பாராட்டுகள், ராகவன்....

gragavan
24-06-2005, 06:09 AM
நன்றிகள் பல நண்பன். இந்தக் கவிதையை எழுதி முடித்து விட்டு எனது கண்கள் கலங்கினேன். காரணம்? நாளை என்ற தலைப்பு கொடுத்து விட்டார்கள். ஏதோ சொற்களைக் கோர்த்து ரெண்டு கவிதைகள் எழுதினேன். பிரதீப்பிடமும் தலைப்புக் கொடுத்து எழுதச் சொன்னேன். அவர் எழுதியதையும் நமது மன்றத்தில் படித்திருப்பீர்கள்.

நான் எழுதியவற்றில் கொஞ்சமும் பிடித்தமில்லாமல் போய்விட்டது. சட்டென்று யோசித்தேன். நாளை வர வேண்டுமென்று யாரெல்லாம் கேட்பார்கள்? அப்படிக் கேட்கிறவர்களில் எத்தனை பேர் உணர்வுப் பூர்வமாக கேட்பார்கள் என்று நினைத்து எழுதியது. எழுதும் பொழுது ஒன்றும் தோன்றவில்லை. எழுதிய பிறகு வலித்தது. அதற்கான காரணத்தை உங்கள் அனைவரின் பாராட்டும் விளக்கி விட்டது. அந்தப் போட்டியில் கவிதைகளை யாரோ ஒரு பிரபல கவிஞர் தேர்வு செய்தார். யாரென்று மறந்து விட்டது. அப்பொழுது மூன்றாவது இடத்தை இது பிடித்தது.

kavitha
24-06-2005, 11:08 AM
கவிதை பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் :)
வெறும் எழுத்தாக படிக்கையில் பாராட்டத்தோணுது!
உணர்வுப்பூர்வமா பார்க்கும்போது பாராட்ட முடியலை அண்ணாச்சி! வலிக்குது!
பிள்ளைகளையே ( யாரையும் ) முழுதும் நம்பாமல் இருப்பது நல்லது என்று உணர்த்துகிறது.

"கவிதை படைக்கிற பக்குவம் இப்பக் கொறஞ்சி போச்சி.........பெருசா எழுதனுங்கறதுதான் இப்பக் கனவு......அதாங்......."

அப்போ மன்றத்தில் சீக்கிரம் பார்க்கலாம்னு சொல்லுங்க... :)

gragavan
24-06-2005, 03:27 PM
சீக்கிரம் என்பது எவ்வளவு என்று தெரியவில்லை கவிதா.....உள்ளே பல பெரிய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எழுதத்தான் நேரம் பிடிக்கும். பார்க்கலாம் இறைவன் திருவுளமெதுவென்று,

ஆதவா
07-01-2007, 09:40 AM
நாளை வருமோ?

நல்லதைத் தருமோ?
நாங்கள்
நிகழ்காலம் கூட இல்லையே!
இறப்பதற்கு முன்னமே
இறந்தகாலம் ஆகிவிட்டோமே!

பாலூட்டியும் சீராட்டியும்
வளர்த்ததால்
பாம்புக்குட்டியாய்ச் சீறும்
வாரிசுகள்!
அவர்களிடம்
அன்றாடம்
பழச்சாறா கேட்டோம்?
பழஞ்சோறே கிடைக்கைலையே!
இன்றைக்கே இந்தப்பாடு
நாளைக்கு?

நேற்று
கணக்குப் பார்க்காமல்
செய்த செலவு
இன்று
பிணக்கு பண்ணுகிறது
செலவு செய்ய!

மருந்துச் செலவைக் குறைக்க
வருத்தும் வலியை மறைத்தோம்.
உணவுச் சுமையைக் குறைக்க
உறுத்தும் பசியை மறுத்தோம்.
கம்பளித் தேவையைத் துரத்த
குளிரின் தண்மையில் மரத்தோம்.

இந்த வயதில் தனியறையா?
ஹாலுக்கு வந்தோம்.
எந்த வேளையும் டீவியா?
கோயிலுக்குச் சென்றோம்.
சொந்த வேலையே எப்பவும்!
கடைகளுக்கும் சென்றோம்.
அந்த வேளையே வராதா?
காத்திருக்கிறோம்
நாளைக்காவது வருமென்று!

ஆண்டவா
எங்கள் இருவருக்கும்
அந்த நாளை
எப்படியாவது ஒரே நாளாகட்டும்

முதியவர்களை காணாமல் விடும் அவர்களின் வாரிசுகளுக்கு சரியான சவுக்கடி.
அந்த நாளானாது என்று வரும்?
என்னைக் கேட்டால் இந்த முதியவர்கள் இப்படிப் போவதற்கு அவர்களே ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். பிள்ளைகளை வளர்த்துவதில்தானே இருக்கிறது. காலத்திற்கேற்ப அவர்களை மாற்றம் செய்யவேண்டுமல்லவா?
அதே காரணமாகிவிடாது. சிலர் சமூகத்தால் கெட்டுப் போகிறார்கள்.

எது எப்படியோ நம் பெற்றவர்களை நாம் அவர்கள் எதிர்பார்க்கும் நாளை தராமல் பார்த்துக்கொள்வோம்.

ஓவியா
28-04-2007, 11:39 PM
உணர்ச்சிப்பூர்வமான கவிதை. நன்று.

வீட்டு பெரியவர்களின் ஏகங்களை அழகாக படம் பிடித்து வரிகளில் பத்திதுள்ளீர்கள். பாராட்டுக்கள் ராகவன்.

பிள்ளைகளை வளர்த்து கரைச்சேர்க்க அன்றய பெற்றோர்கள் படும் பாடும், அதர்க்கு இன்றய சமுதாய இளசுகள் அளிக்கும் பரிசும், இப்படிதான் நினைக்க தூண்டுமோ, இறுதி நாளாவது 'ஒரே நாளாகட்டுமென்று'.


கவிதை பொய்யென்றாலும் அந்த பெற்றொரை நினைத்தால், மனம் வலிக்கின்றது.