PDA

View Full Version : ஜூன் 20, 2005 : நோபல் பரிசுக்கு தமிழ்ப் பெண் பெயர்



vinmeenj
20-06-2005, 04:54 AM
நாகப்பட்டனம்:

அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள 92 பேரில் தமிழகக்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.


இந்த ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து 92 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கிருஷ்ணம்மாள்.

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள கூத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள், அப் பகுதி நில உரிமை இயக்கச் செயலாளராகவும், அகில இந்திய சர்வோதய தலைவராகவும் உள்ளார்.

கடந்த 1981ம் ஆண்டு நில உரிமை இயக்கத்தை அவர் தொடங்கினார். கூத்தூர் பகுதியில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயப் பெண்களை தேர்வு செய்து இதுவரை 10,000 பெண்களுக்கு தலா 1 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்துள்ளார் கிருஷ்ணம்மாள்.

கிராமங்களில் நிலவும் கள்ளச்சாராயப் பிரச்சினையை ஒழிப்பதிலும், இறால் பண்ணைகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்த சாதனைப் பெண்மணியான கிருஷ்ணம்மாளுக்கு விருதுகள் புதிதல்ல. காந்தி அமைதி விருதை 1987ம் ஆண்டு பெற்றுள்ளார். 1988ம் ஆண்டு ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றுள்ளார். 1989ல் பத்மஸ்ரீ விருதும், 96ல் மகாவீர் விருதும், 98ல் காந்தி கிராம விருதும், 2004ம் ஆண்டு சிறந்த பெண்மணிக்கான இந்திரா ரத்னா விருதும் பெற்றுள்ளார்.

இவரது கணவர் ஜெகன்னாதன். இவர் வினோபாபவேயின் தீவிர சீடராவார். கடந்த 1999ம் ஆண்டு இவருக்கு பத்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் இறால் பண்ணைகளை ஒழிக்கும் வரை எந்த விருதும் எனக்குத் தேவையில்லை என்று கூறி பத்மஸ்ரீயை நிராகரித்தவர் ஜெகன்னாதன்.

அன்புடன்
விண்மீன்


நன்றி - தாட்ஸ்தமிழ்

பரஞ்சோதி
20-06-2005, 05:08 AM
வருக வருக விண்மீன் அவர்களே!

உங்களைப் பற்றிய அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் கொடுங்களேன்.

பிரியன்
20-06-2005, 06:52 AM
உண்மையாகவே சிறந்த பெண்மணி திருமதி கிருஷ்ணாம்பாள் ஜெகநாதன். சில மாதங்களுக்கு முன் குமுதம் இதழில் அவர்கலைப் பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். நில முதலாளிடமிருந்த நிலங்களை வாங்கி அதை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். கடுமையான மிரட்டல்கள் எதிரப்புகள் என அத்தனையையும் அமைதியான முறையில் எதிர் கொண்ட அவரின் சாதனைகள் நிறையவே. இவர்களைப் போன்றவர்கள் மீது காலம் தாழ்த்தியே வெளிச்சம் விழுகிறது. நோபல் பரிசு கிடைக்க எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
20-06-2005, 09:10 AM
இந்தியருக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். சென்ற முறை கென்யாவின் மாத்தாயுக்கு கிடைத்தது... அவரும் இதுபோல தான் தொண்டு செய்தார்,

தமிழருக்கு கிடைக்க வாழ்த்துக்கள்....
--------------
வாருங்கள் அன்பரே.... நல்ல தகவலோடு... வந்துள்ளீர்... தங்களை பற்றி அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்...
-------------------