PDA

View Full Version : சிங்கப்பூர் போலாமா - ஜுலை (2004) மாதநிழற்படம் 17அறிஞர்
16-08-2004, 03:39 AM
ஜீலை மாத சிங்கப்பூர் பயணம்-1கடந்த சில மாதங்களாக ஒவ்வொருவரும் பிரமிக்க வகையில் நிழற்படத்தை அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டீர்கள்....தினமும் தளத்தில் ஜாலியாய் எட்டி பார்த்த விளையாடிய எனக்கு... இன்று சிறிய பொறுப்பு... அதாங்க.... நிழற்படம் தயாரிக்கும் பணி.. நேரம் குறைவு, ஆராய்ச்சி வேறு...... இவைகளின் மத்தியில்... பிரமாண்டமாக இல்லாவிட்டாலும்... ஏதோ என்னால் இயன்ற பங்களிப்பு.... சரி நம் பயணத்தை ஆரம்பிக்கலாம்....ஜுலை பயணம்... எங்கே போகலாம் என யோசித்தபோது...பரம்ஸ்: சிங்கப்பூர் சென்றால் என்ன?

மணியா : சூப்பர்.... நானும் பார்த்து ரொம்ப நாளாச்சே... அவசியம் செல்லலாம்....

மன்மதன் : ரொம்ப செலவாகுமே.....

அறிஞர் : இது இலவச பயணம் நண்பா.....

மன்மதன்: அப்படின்னா சரி.. சாப்பாடு ஒழுங்கா கிடைக்குமா....

மைதிலி : எப்ப பாரு உனக்கு சாப்பாடுதான்......

பூ : அவனை கிண்டல் பண்ணாட்டி உனக்கு தூக்கம் வராதே... சரி சிங்கப்பூர் செல்ல உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா...

கவி : யாரை பார்த்து என்ன கேள்வி கேட்ட.... நாங்க எல்லாம்.. அந்த காலத்துலேயே எடுத்து.. உபயோகிக்காமல் வைத்துள்ளோம்...

அறிஞர் : சரி சரி... உங்க கதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். பயணத்திற்கு அனைவரும் ரெடியாகுங்க.... நாளை இரவு குடும்பத்துடன் அனைவரும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துவிடுங்கள்.... இந்த செய்தியை அனைத்து நண்பர்களுக்கும் தெரிவித்துவிடுங்கள்.. என்ன சரியா.....

தேம்பா : சரி அண்ணா.....

-----------------------------------------------------------------

முதல் ஆளா ஹேமா மாமியுடன், மணியா அறிஞர்

கவிதா, இக்பால், தேம்பாவணி, மைதிலி, சேரன், மன்மதன், பூ, ப்ரம்ஸ், இளசு, மனோ, பாரதி, நண்பன், திருவருள், அன்பு, இளந்தமிழ்ச்செல்வன், நிதன், நட்சத்திரன், தாமரை, லாவண்யா, அசன்பசர், ஒவ்வொருவராக வந்தனர்...........முல்லை மன்றம்

அறிமுகம், கிறுக்கல்கள்


பழையவர்கள்.. ஒவ்வொரு சுருக்கமாக தங்களை பற்றி அறிமுகப்படுத்தியவுடன்.. புதியவர்கள்... அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர்... முதலில்.... AJeevan சொன்னார்.... தனது கலையுலக.... பணி பற்றித்தளங்களை கொடுத்து அனைவரையும் அசரவைத்தவர்.... தன் கலையுலக சேவையை தொடர அனைவரும் வாழ்த்தினோம்....

அடுத்தது.. நண்பர் சாகரன்தன்னை அறிமுகப்படுத்தினார்

தமிழ் நெஞ்சங்களுக்கு!..... . தங்கள் எண்ணங்களை நம்முடன் இன்னும் பரிமாற வாழ்த்தினோம்.... பிறகு பணிவான வணக்கம் செலுத்தி நிதன் தன்னை அறிமுகமாக்கி கொண்டார்... அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

அறிவிப்புகள், தகவல்கள்


விமான நிலையத்தில் அனைவரும் கூடினவுடன்...... அனைவருக்கும்... சில அறிவிப்புகள்.. என்றார் இளசு.

இளசு : விமானத்தில் அனைவரும் சேர்ந்து செல்வதால், நாம் கட்டுப்பாடுடன் செல்லவேண்டும். அதுதான் மன்றத்திற்கு பெருமை சேர்க்கும்.

மன்மதன் : கட்டுப்பாடா... என்ன அண்ணா... மிலிட்டரி ரேஞ்சுல சொல்லுறீங்க.

இளசு : நான் சொல்வது.. நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடு.... தம்பி..

கவி : புரியலையே அண்ணா...

இளசு : நான் குறிப்பாக சொல்வது விமான பயணத்தில் அளவோடு உற்சாகபானம் அருந்துவது... சந்தோஷத்தின் மிகுதியில் அளவுக்கு அதிக சத்தமாக பேசாமல் இருப்பது....

மணியா : ஜாலியா இருக்கலாமுன்னா உடமாட்டேங்கிறீங்களேப்பா...

ஹேமா மணியா : என்னது இங்க ஒரு ஆளு குத்துக்கல்லாட்டாம் இருக்கேன்.... ஜாலி கேட்குதாக்கும்.....

மணியா : ஜாலியா.. அப்படி ஒன்னும் சொல்லலையே.... ஜாடி என்று சொன்னது.. உனக்கு மாறி காதில் விழுந்திருக்கும்...

(மைதிலி... ஹேமா அண்ணிக்காதில் ஏதோ கூற)

மணியா : ஏய் மைதிலி குடும்பத்துல குழப்பத்தை உண்டுப்பண்ணாதே......தலைவர் இராசகுமாரன் பற்றி கூறி.. தளத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்..... உடனே நம் நண்பர்.. சிலர் ஆசான்களாகவும், மாணக்கராகவும்.... விருப்பம் தெரிவிக்கின்றனர்.இளசு முன்பாக வந்து....

மே மாதச் சிறந்த பங்காளர் -- பரஞ்சோதி என்ற அறிவிப்பை வழங்க.... தொடர்ந்து சிறப்பானவர் என்ற பரிசை பெற்ற பரம்ஸை அனைவரும் வாழ்த்தினர்......திடீரென சேரன் கயல் ஒரே மகிழ்ச்சி......இளசு "யார் வெளியிட்டா என்ன சேரன்...... வாழ்த்துக்கள் இருவருக்கும்" என்றார்.....பின் நண்பர் திருவருள் முன்பாக வந்து........ நண்பர்களே...உழைப்புக்கு தக்க வகையில்

ஆனி (ஜூன்) மாத சிறந்த படைப்பாளி யாக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கிறார்...... கவிக்கு இரட்டை மகிழ்ச்சி...... அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.....இராசகுமாரன்... "நண்பர்களே சிங்கப்பூர் நம் ஊர் மாதிரி இல்லை, வீதியில் குப்பை போடக்கூடாது..... கூட்டமாக நின்று.. இரைச்சல் எழுப்பக்கூடாது. வரிசையில் நின்று பஸ் ஏறவேண்டும்....." என பல அறிவிப்புக்களைக்கொடுக்கிறார்.........உங்கள் சந்தேகங்கள், நமது தளம்


இன்னும் விமானநிலைய ஆய்வுக்கு செல்ல 20 நிமிடம் உள்ளது..... சந்தேகம் உள்ளவர்கள்..... கேட்கலாம்... என்றார்... திருவருள்...

மணியா : எத்தனை இருக்கைக்கொண்ட விமானம் ??

அறிஞர் : இது 120 இருக்கைகள்.. கொண்ட சிறிய விமான... நமக்காக தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளது ..


எடை, பரிசோதனை, சுங்க, குடியுரிமை ஆய்வு எல்லாம் நல்லபடியாக முடிய.... அனைவரும் விமானத்தினுள்... நுழைந்தனர்...ஜுஸ், சைவ, அசைவ உணவு, காபி, டீ மற்றும் உற்சாகபானம் பரிமாறப்பட்டது....... அனைவரும்.. அருந்தி.. மகிழ்ந்தனர்....பிறகு பரஞ்சோதி முன்வந்து.....

ஓட்டெடுப்பு ஜுன் மாத சிறந்த பங்களிப்பாளர் போட்டி பகுதிகளை அறிவித்தார்...... இது மிகபயனுள்ள பகுதி என்று அவரை பாராட்டினர்....... பரம்ஸ் கொடுத்த பயனுள்ள தகவல்களின் அடிப்படையில்.... சென்ற மாத நடவடிக்கை அழகாக சித்தரித்து வழங்க.... மைதிலி அழைக்கப்பட்டார்..... ஜொலிக்கும் பட்டுபுடவையுடன்..... முன்வந்தார் மைதிலி வர... மன்மதனாக்கு எஸ்கேப்பாவதை தவிர.. வேறு வழி தெரியவில்லை.......


இதைக்கண்டு அனைவரும் சிரிக்க..... ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.. என்ற அறிவிப்புடன்.. பிரகாசமான விளக்குகள்.. அணைக்கப்பட்டன.. சிலர் உறங்கினர்.... மணியாவின் குறட்டை சத்தத்தால்.... உறக்கத்தை துறந்தோர்...சிலர்....

மற்ற சிலரோ... இருக்கைக்கு முன் உள்ள சின்னத்திரையில்.. சினிமாப்பாடல், சினிமா, காமெடி என இரசித்தனர்.......

அதிகாலை வேளையில்.... விமானம் பத்திரமா சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையத்தை வந்தடந்தது.... அனைவரும் சிங்கப்பூர் பத்திரமாக வந்திறங்க..... முதல் முறை.. சிங்கப்பூர் வரும்.... , வைத்த கண் வாங்காமல்.. சிங்கப்பூர்.... விமான நிலைய உள் அலங்காரத்தை கண்டு வியந்தனர். செம்மொழியாம்.. தமிழில அறிவிப்பு பலகைகளை கண்டு.... அனைவரும் பெருமிதம் கொண்டனர்.....

http://img.photobucket.com/albums/v452/paransothi/airport.jpg
எல்லா சோதனைகளும் முடிந்து.... தங்கள்.. பெட்டிகளுடன்.. அனைவரும் வெளிவர.... காத்திருந்த விசேஷ பஸ்கள்.. அனைவரையும் சுமந்த..... விருந்தினர் மாளிகை சென்றது. அனைவரும் சில மணிநேர ஓய்வு எடுத்து.... காலை உணவுக்காக.... சாப்பிடும் அறைக்கு வந்தனர்....

சுமா : எங்கே சேரனையும், மன்மதனையும் காணோம்.....

பரம்ஸ் : நேற்று வெள்ளிக்கிழமை.. எனவே அவர்கள் ரொம்ப பிஸி

தேம்பா : என்ன புல்லா......... பிஸியா...

பூ : எங்களை நிம்மதியா இருக்க விடமாட்டிங்களே.....

நாரதர் : நான் போய் எழுப்பி வருகிறேன்...

லாவண்யா : ஆஹா... கும்பகரண்களை எழுப்ப கிளம்பிட்டாங்கய்யா......


மல்லி மன்றம்

செய்திச் சோலை


காலை உணவருந்திக்கொண்டே....தொலைக்காட்சியை நோக்கினர்.. இராசகுமாரன் திரையில் தோன்றி.. பக்கத்து நாட்டு செய்திகளை....

மலேசிய செய்திகள் என்று தொகுத்து வழங்கினார்... தினமும் சிறப்பாக பணிபுரியும் அவரை அனைவரும் வாழ்த்தினர்.....பிறகு திருவருள் என்று அளிக்க... அனைவரின் கணகளும் குளமாயின....சேரனும், மன்மதனும் சாப்பிடும் அறையில் நுழைய...நிலா : என்ன புல்லா...... சேரன்..... அண்ணி போன் பண்ணட்டா...

சேரன் : வேறு பொழப்பில்லை.... பேசாம இருக்கியா கொஞ்சம்... எனக்கே தலை வழுக்குது என.....

தாமரை : என்ன தலை வழுக்குதா....

மணியா : அது நாக்கு ஸ்லிப்பாகிடுத்து........

மைதிலி : அப்படின்னா.....

தேம்பா : என்னப்பா இது கூட தெரியலையா.... ஐயாவுக்கு தலை வலிக்குதாம்...

(ஹேமா அண்ணி.. தைலம் கொடுக்க.. அமைதியாகிறார்கள் இருவரும்)கவிதைகள், பாடல்கள்


தொலைக்காட்சியில்.. நண்பன் என கவிதைகள்.. பொழிய.... காலை நேரம்... அருமையாய் கடந்தது......அனைவரும் தயாராகி நிற்கஇக்பால் : இப்ப எங்க போறோம்..

அறிஞர் : சிங்கப்பூரில் பிரசித்தமான மிருக காட்சி காலை செல்லப்போகிறோம்...

மன்றத்தில் இத்தனை மிருகங்களை பார்க்கிறோம்... அப்புறம் எதுக்கு அங்க....

மன்மதன் : என்னத்த அப்படி பார்த்த....

மைதிலி : உங்களணியை தினமும் பார்க்கிறதைதான் சொல்லுறாங்க.....

பூ : இது கொஞ்சம் ஓவர்..........

அறிஞர் : போதும்.. நிறுத்துங்க..... சிங்கப்பூர் மிருக காட்சி சாலை அற்புதமானது.... உலகில் சிறந்த மிருக காட்சிச்சாலைகளில் ஒன்று... இது திறந்தவெளி மிருக காட்சிசாலை....

தேம்பா : அப்படின்னா.

பிஜிகே : அது வந்து.. மிருகங்களை அடைத்துவைக்காமல் பிரியா உலாவ விட்டிருப்பார்கள்.....

சாகரன் : அப்படின்னா... நம்மை வந்து கடிக்காதா.....

அறிஞர் : அது ஏற்ற பாதுகாப்பு வேலிகள் உண்டு...... கங்காரு போன்ற மிருகங்கள்... ரோடுகளில் நடமாடும்.. நீங்கள்.. தொட்டு விளையாடலாம்....

ராம்பால் : மன்மதா... கங்காருவை பிடித்து வருவல் பண்ண நினைக்காதே.....அனைவரும் பஸ்ஸில் செல்லலாம்...... அனைவரும் zooவை அடைந்தனர்......

சிரிப்புகள், விடுகதைகள்


மன்மதன் மிருகங்கள்.. உங்கள் கைவசம் வரும் முன்.....

மோனலிசா - உங்கள் வசம்.. வரவைக்கிறேன் என்றார்.... எப்படி என்று.. ஆவலுடன் பார்க்க.. ஆஹா உண்மையிலே மோனலிசா... பல முகச்சாயலில்....... அருமை என்றனர்....

மன்மதன் : இதுக்கே இப்படின்னா...

புஷ் - உங்கள் வசம்) என்றார். இது என்ன... இப்படி புஷ்ஷை பாடுபடுத்துகிறீர்கள்.. என அனைவரும் சொல்ல.... இது மட்டுமா என்று... இன்னும் சில சிரிப்புக்களை... மேக்ரோ மீடியா பிளாஷ் - சிரிப்புகள்.. ,

டைட்டானிக் கப்பல் இன்று மூழ்கியிருந்தால் - உலக நாடுகளின் பார்வையில்.. எடுத்துவிடுகிறார் மன்மதன்... அனைவரும் சிரிப்பில் மூழ்க..... மிருக காட்சி சாலையில் உட்புறம் பயணம் தொடர்கிறது.....

இராசகுமாரன் : யாரும் விலங்குகளும் உணவு கொடுக்காதீர்கள். கொடுத்தால்... அபராத பணம் கட்ட வேண்டி வரும்....

ஆஹா எத்தனை அழகான விலங்குகள்... ஆஸ்திரேலியா லாமா, கங்காரு, நெருப்புக்கோழி..... அருமையோ அருமை...

நெருப்புக்கோழி முன்.... அறிஞர்... மெல்கியுடன் படம் எடுத்துக்கொள்கிறார்.....


சிங்கம், புலி... எல்லாம் அழகாக குகையில் படுத்து இருக்கின்றன....

அறிஞர்: அதோ பாருங்க, வெள்ளைப் புலி, ரொம்பவும் அபூர்வமானது.

http://img.photobucket.com/albums/v452/paransothi/whitetiger.jpg


அன்பு : என்ன தலை ஆடு, மாடெல்லாம் இங்கு இருக்கு....

மணியா : இந்த ஊருல குழந்தைகளுக்கு இதையெல்லாம் zooவுல பார்த்துதான் தெரிந்துக்கொள்ளனும்லே....

பனிக்கரடி... தண்ணீரில்... விளையாடுவது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது..... பெங்குவின் பறவைகளின் அணிவகுப்பு நடை அனைவரையும் கவர்ந்தது...........


சாகரன் : சிங்கப்பூர் என்னை வியக்கவைக்கிறது..... எத்தனை வளர்ச்சி.... பொறியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்கு.....

இளந்தமிழ்செல்வன் : பொறியாளர் இல்லாத உலகம் எவ்வாறு இருக்கும்....

மன்மதன் : அதெப்படியிருக்கும் என நான் சொல்லவா.......

அறிஞர் ஆராய்ச்சி கூடத்தில் ஐவரணி(2) - பொறியாளர் இல்லாத உலகம்

அறிஞர் : இது கொஞ்சம் ஓவரலே....

அனைவரும் சிரிக்க.........

மனோஜி : இங்கு இவ்வளவு வளர்ச்சிக்கு நல்ல அரசியல் சூழல்தான் காரணம்...

நிதன் : அரசியல்னா என்னா....

மது என்றால் என்ன என்பதை சுருக்கமாய் விளக்க... அனைவரும் வியக்கின்றனர்...

குடும்பத்தை பத்தி உமக்குதான் பேச தெரியுமா எனக்கும் தெரியும் என்று கவிதா... எனச்சொல்ல.... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது...


என்னது ஆளா.. ஆளுக்கு என்னமோ பண்ணுறாங்க.. என மைதிலி...

விடுகதைகள் :-), புதிர் பயணம் என கேள்விகணைகளை போட்டுத்தாக்க அவைரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்...... இது மட்டுமா.. இன்னும் என்னிடம் சரக்கு இருக்கு.. என மைதிலி

போன மச்சினி திரும்ப வந்தாங்க.......... , தஞ்சம்மா.....மஞ்சம்மா என எளிய நடையில் பயனுள்ள தகவல்களை அள்ளி தெளிக்க.... அனைவரும்.. வியந்து வாழ்த்தினர்..

மந்திரவித்தை கற்று தருகிறேன் என மைதிலி சூ........மந்திரக்காளி காட்ட.... வியந்தனர்...

zooவை விட்டு வெளியே வர.....

மன்மதன் : ஆஹா சூப்பர் மிருககாட்சி சாலை... மைதிலியின் நண்பர்களை சந்தித்த திருப்தி....

மணியா : இதுக்கே இப்படின்னா.. இங்கப்பாரு... அனைத்து மிருகங்களையும் கையில் வரவழைகிறேன் பார்......

கைகளில் வர்ணஜாலங்கள் - மணியா என கைவிளையாட்டுக்களை காண்பிக்க.....


அனைவரும் தலையை பாராட்டினர்......

மன்மதன் : எனக்கு ரொம்ப பசிக்குதே...

நாரதர் : தேம்பாதான் நொறுக்கு தீனி நிறைய எடுத்து வந்தது.. அதைக்கேள்.....

தேம்பா : அவனுக்கெல்லாம் கொடுக்க இது பத்தாது.

அறிஞர் : ஓகே ஓகே...அனைவரும் சாப்பிட்டு... அருகில் பூங்காவுக்கு செல்லலாம்...


நீதிக்கதைகள், சுவையான சம்பவங்கள்

சாப்பாடு முடிந்து.. அனைவரும் பூங்காவில் ஓய்வெடுக்கும்போது....

பரம்ஸ் அழைத்து செல்ல....

ஆஹா அருமையோ அருமை என வியந்தனர்....

அறிஞர் : பரம்ஸ் கலக்கிட்டிங்க... உண்மையிலே அனுபவித்து மகிழ்ந்தோம்...

மணியா : வாழ்த்துக்கள்.. பரம்ஸ்.. நல்ல ஓய்வு.... நல்ல பயணம்...

கவிதா அளிக்க.... அனைவரும் வாழ்த்தினர்...

இக்பால் என்று கொடுக்க......

சாகரன் : அருமையான் கற்பனை.. அழகோ அழகு...

பிஜிகே வை கொடுக்க... அனைவரும் வாழ்த்த...

இளசு தருகிறேன் என அள்ளிவிட... அனைவரும் போற்ற.... ஓய்வு நேரம் இனிமையாய் கழிந்தது..

சுமா : அடுத்து எங்க....

அறிஞர் : கவியும், மைதிலியும் ஷாப்பிங் செல்லவேண்டும் என நச்சரிப்பதால்..... இப்போது ஷாப்பிங்.....

தாமரை : எங்க போக போகிறோம்..

மணியா : லிட்டில் இந்தியாவுக்கு.. அங்கு செல்லும்போது.. நம்மூர் போன்ற உணர்வு.. தெருவோர டீக்கடைகள்... இருக்கும்...

நிலா : என்னது டீக்கடை ஓரத்தில் ஷாப்பிங்கா...

அறிஞர் : இல்லை மணியா.... இடத்தை பற்றி சொன்னேன்... ஒரே இடத்தில் எல்லாப்பொருட்களும்.. வாங்கலாம்...

அஜீவன் : எங்கே????..

அறிஞர் : அனைவரும் அறிந்த.... 1971ல் ஆரம்பிக்கப்பட்ட முஸ்தபா ஷாப்பிங் சென்டர் செல்லலாம்... அங்கு... சாரி, நகைகள், எலக்டாரானிக்ஸ், எலக்டிரிக், விளையாட்டு பொருட்கள்... என எல்லாம் பொருட்களும்... வாங்கலாம்... என்ன சரியா.....

http://www.ijm.com/images/arc_cp_int_mustafa.jpg

அனைவரும் பொருட்கள்... வாங்கி திரும்பும்போது.. புத்தக பிரியர்களுக்காக... புக் ஸ்டோர் சென்று புத்தகங்களை.. வாங்கி இருப்பிடம் திரும்பினர்...


திடிரென்று, மைதிலி "டேய் மன்மதா, உன் புகைப்படம் எப்படி சிங்கப்பூர் வந்தது" என்று சொல்ல,


http://img.photobucket.com/albums/v452/paransothi/singapore-manmathan.jpg

எல்லோரும் ஆவலோடு பார்க்க, மன்மதனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.

இக்பால்: போதும் போதும் உங்கள் கிண்டல், நேரமாகி விட்டது, கிளம்பலாம்.

இரவு... உணவு வேளை..... தொலைக்காட்சியில் சில ஒளிபரப்பு...


இலக்கியங்கள், புத்தகங்கள்

தொலைக்காட்சியில் இளசு தோன்றி.....

பாலகுமாரன் கவிதைகள்.. என வழங்க... அனைவரும் இரசித்தனர்... அடுத்து...... நண்பர் ராம்பால் என வழங்க... அனைவரும் மெய்சிலிர்த்தனர்...

உணவு அருந்தி.... அனைவரும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு சென்றனர்....

மணியா : நண்பர்களே.. உறக்கத்திற்கு முன்.. சிறிது நேரம்... தொலைக்காட்சியில் செலவிடுங்கள்.... இன்னும் சில நேரம் ஒளிபரப்பு தொடரும்...


புதிய சிறுகதைகள், தொடர்கதைகள்

இளசு திரையில் தோன்றி.. நம் நண்பர் ராம்பால் என்ற கருத்துமிக்க கதையை அளிக்க... அனைவரும் ரசித்து.. பின் உறங்கினர்....

-----------------------------------------------------------

குறிப்பு : வேலைப்பளுவின் மத்தியில் விளையாட்டை எழுதப்போய்... நிழற்பட்த்தின் முதல் பாகம் இவ்வாறு உருவாகிவிட்டது..... இரண்டாம் பாகம் உருவாக சற்று நாளாகிவிட்டது....

------------------------------------------------------------

mania
16-08-2004, 05:09 AM
:D :D :D அடடா....அமர்க்களம்....... :D :Dமிகவும் இயல்பாக வந்திருக்கிறது........பாராட்டுக்கள் அறிஞரே....... :D :Dஇன்னும் இரண்டு நாட்கள் வேறு ஆராய்ச்சியில் இறங்காமல் முதலில் மீதி பாகத்தையும் கொடுத்துவிடுங்கள்...... :D :D. மிகவும் அனுபவித்து படித்து ரசித்தேன்...... :D :D

அன்புடன்

மணியா

பரஞ்சோதி
16-08-2004, 05:29 AM
அறிஞர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.வித்தியசமான நிழற்படம், வித்தியாசமான நடை.மாதாமாதம் நிழற்படத்தின் மூலம் புது புது பயணங்கள், அடுத்த பயணம் நிலாவுக்கு தான்.விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன், மேலும் சிங்கப்பூர் பற்றிய அனைத்து விபரங்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.

மன்மதன்
16-08-2004, 06:20 AM
அருமையான சிங்கப்பூர் பயணம் மூலம் கலகலப்பாக நிழற்படம் தொகுத்த அறிஞருக்கு பாராட்டுக்கள்.. அதிலும் குறிப்பாக சிங்கப்பூரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கொடுத்தது சூப்பர்ப்... அடுத்த பாகம் உண்டா. கலக்குங்க அறிஞரே..அன்புடன்

மன்மதன்

அறிஞர்
16-08-2004, 07:16 AM
வாழ்த்திய மணியா, பரம்ஸ் மற்றும் மன்மதனுக்கு நன்றி......அடுத்த பாகத்தில்.. சிங்கப்பூரின் முக்கியமான செந்தோசாவும், பறவைகள் பூங்காவும்... வரும்.......

அறிஞர்
16-08-2004, 07:17 AM
அடடா....அமர்க்களம்.......மிகவும் இயல்பாக வந்திருக்கிறது........பாராட்டுக்கள் அறிஞரே....... இன்னும் இரண்டு நாட்கள் வேறு ஆராய்ச்சியில் இறங்காமல் முதலில் மீதி பாகத்தையும் கொடுத்துவிடுங்கள்...... . மிகவும் அனுபவித்து படித்து ரசித்தேன்......அன்புடன் மணியாநன்றி மணியா.. முடிக்க ஆசைதான்.. இன்னும் இரண்டு நாளில்.. ஒரு பிரசண்டேசன்.. உள்ளது... அது முடிந்தவுடன்.. இந்த வேலைதான்....

mythili
16-08-2004, 07:18 AM
கலக்கிட்டீங்க அறிஞரே:-)சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?அன்புடன்,

மைதிலி

அறிஞர்
16-08-2004, 07:20 AM
கலக்கிட்டீங்க அறிஞரே:-)சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?அன்புடன், மைதிலிஏதோ என்னால முடிஞ்சா அளவு... உப்புமா கிண்டி கொடுத்தேன்...அடுத்த பாகத்தில்... இன்னும் சில படங்கள் அவசியம் தொடரும்.... :wink: :wink: :wink: :wink:

mania
16-08-2004, 07:29 AM
கலக்கிட்டீங்க அறிஞரே:-)சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?அன்புடன்,

மைதிலிஜூலை மாத சிங்கப்பூர் பயணம்...நிழற்படம்]"சேப்பு கலரு சிங்குசா.....பச்சை கலரு சிங்குசா....."..... :D :D

(ஜாலரா ஒலியை பின்னனியில் கொள்க......)...... :D :D

அன்புடன்

மணியா..... :lol:

பரஞ்சோதி
16-08-2004, 07:32 AM
வாழ்த்திய மணியா, பரம்ஸ் மற்றும் மன்மதனுக்கு நன்றி......

அடுத்த பாகத்தில்.. சிங்கப்பூரின் முக்கியமான செந்தோசாவும்

அறிஞர் அவர்களே!

நீங்க பாட்டுக்கு செந்தோசா என்று சொல்லிட்டீங்க,

இங்கே மன்மதன் அது எனன் தோசா, எனக்கு உடனே ஒரு செட் தோசா வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். :D :D

சின்னபுள்ளையை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வேலையா போச்சுது.

kavitha
16-08-2004, 07:42 AM
அறிஞரே... சும்மா சொல்லக்கூடாது.. ஐவர் அணியில் கூட நீங்க இப்படி கலாய்க்கல..சூப்பரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் சிங்கப்பூர் கூட்டிட்டு போய் ஜமாய்ச்சிட்டீங்க.

அடுத்து எங்கே போகப்போகிறோம்??

ஆவலுடன் - கவிதா

அறிஞர்
16-08-2004, 07:44 AM
" ̺..... ̺.....".....
(á Ģ ɢ¢ ......)......
Ҽ ¡.....

â.. ¡.. Ţ... ... :D :D

அறிஞர்
16-08-2004, 07:46 AM
[quote]வாழ்த்திய மணியா, பரம்ஸ் மற்றும் மன்மதனுக்கு நன்றி......

அடுத்த பாகத்தில்.. சிங்கப்பூரின் முக்கியமான செந்தோசாவும்

அறிஞர் அவர்களே!

நீங்க பாட்டுக்கு செந்தோசா என்று சொல்லிட்டீங்க,

இங்கே மன்மதன் அது எனன் தோசா, எனக்கு உடனே ஒரு செட் தோசா வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.
சின்னபுள்ளையை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வேலையா போச்சுது.அதுக்கென்ன... தோசைக்கு சிங்கப்பூர் ஸ்பெஷல் தலைகறி.. (குறிப்பு : தலை என்பது மணியா இல்லை) வைத்து கொடுத்துடுவோம்...

அறிஞர்
16-08-2004, 07:48 AM
அறிஞரே... சும்மா சொல்லக்கூடாது.. ஐவர் அணியில் கூட நீங்க இப்படி கலாய்க்கல..சூப்பரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் சிங்கப்பூர் கூட்டிட்டு போய் ஜமாய்ச்சிட்டீங்க.

அடுத்து எங்கே போகப்போகிறோம்??

ஆவலுடன் - கவிதா

அவசியம்.. மன்மதனை... செட்தோசை கடைக்கு கூட்டிப்போய்.. தலைகறி விருந்து கொடுத்துடுவோம்....:D :D

அப்புறம் செந்தோசாவில்.. அண்டர் வாட்டர் வேர்ல்ட், மெர்லையன் தலைக்குமேல், லேசர் விளையாட்டு.. என கலக்கிடுவோம்.... :D :D:wink:

பரஞ்சோதி
16-08-2004, 07:50 AM
நாங்க உஷாரா காதில் பஞ்சு வைத்துக் கொண்டோம், அதனாலே ஐவர் அணியினர் குறட்டையில் இருந்து தப்பி விட்டோம்.குறிப்பு கொடுத்த தலைக்கு நன்றி..

அறிஞர்
16-08-2004, 07:54 AM
நாங்க உஷாரா காதில் பஞ்சு வைத்துக் கொண்டோம், அதனாலே ஐவர் அணியினர் குறட்டையில் இருந்து தப்பி விட்டோம்.

குறிப்பு கொடுத்த தலைக்கு நன்றி..

ஆஹா விவரமான... அணிதான் போங்க.....:D :D

மன்மதன்
16-08-2004, 08:24 AM
அறிஞரே... சும்மா சொல்லக்கூடாது.. ஐவர் அணியில் கூட நீங்க இப்படி கலாய்க்கல..சூப்பரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் சிங்கப்பூர் கூட்டிட்டு போய் ஜமாய்ச்சிட்டீங்க.

அடுத்து எங்கே போகப்போகிறோம்??

ஆவலுடன் - கவிதா

சாப்பிட போறோம்.. செந்தோசா சாப்பிட போறோம்.. :D :D

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
16-08-2004, 08:30 AM
அறிஞரே... சும்மா சொல்லக்கூடாது.. ஐவர் அணியில் கூட நீங்க இப்படி கலாய்க்கல..சூப்பரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் சிங்கப்பூர் கூட்டிட்டு போய் ஜமாய்ச்சிட்டீங்க.

அடுத்து எங்கே போகப்போகிறோம்??

ஆவலுடன் - கவிதா

சாப்பிட போறோம்.. செந்தோசா சாப்பிட போறோம்..

அன்புடன் மன்மதன்

ஏலே மன்மதா.. அது உண்மைதான்.. செந்தோசை... தலைக்கறியுடன்... :D :D

பாரதி
16-08-2004, 02:36 PM
தமிழ்மன்றக்குடும்பத்தினருடன் சிங்கப்பூரை நீங்கள் சுற்றிக் காட்ட ஆரம்பித்திருக்கும் அழகே தனிதான். ஒவ்வொரு நிழல்படமும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் நினைவுப்படமாய் மாறி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. பாராட்டுக்கள் அறிஞரே.

Mathu
16-08-2004, 06:05 PM
சுகமான சுற்றுப்பயணம் தொடங்கி சிங்கையை சுற்றிக் காட்டி அனைவரையும்

சுட்டு சுட்டி இடை இடையே குட்டியும் காட்டிய அறிஞருக்கு பாராட்டுக்கள்.

அமர்க்களமான சூறாவளி சுற்றுப்பயணம்.

இளசு
17-08-2004, 12:11 AM
கையைக்கொடுங்கள் அறிஞரே..

செய்வன திருந்தச் செய் என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டு இப்பதிவு..

உயரங்கள் மெல்ல மெல்ல கூடினாலும்

மேலும் உயரச் சிகரங்களைத் தொடுவது

எம் சொந்தங்களுக்கு சாத்தியமே..

தோள்தட்டி பூரித்து பாராட்டி மகிழ்கிறேன்...

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

Mano.G.
17-08-2004, 01:09 AM
இயல்பான உரைநடையில்

(கிண்டல், நக்கலுடன் )

எழுதி அசத்தி விட்டீர்கள்

அறிஞரே வாழ்த்துக்கள்

அருமை வாழ்த்துக்கள்

மனோ.ஜி

அறிஞர்
17-08-2004, 03:15 AM
பாரதி, மது, இளசு மற்றும் மனோஜியின் பாராட்டுக்களுக்கு நன்றி...

விளையாட்டாய் எழுதப்போய் வந்தது இந்த நிழற்படம்....

இன்னும் சுவையை கூட்டி அடுத்த பாகம் தயாராகிறது...

இன்னும் சில தினங்களில்.... வெளியாகும் என எண்ணுகிறேன்...

poo
18-08-2004, 06:44 AM
மீண்டுமொரு வித்தியாச நடை....சிரிக்க ....ரசிக்க... சிங்கப்பூர் பயணம்...பாராட்டுக்கள் அறிஞரே...

அறிஞர்
20-08-2004, 07:16 AM
நன்றி பூ.... இன்னும் ரசிக்கலாம்....

அறிஞர்
24-08-2004, 04:49 AM
நண்பர்களே.... இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டது....

காலதாமதத்திற்கு மன்னிக்கவும்......

அனைவரும் இரசிப்பீர்கள் என எண்ணுகிறேன்....... தங்கள் கருத்துக்களையும், தவறுகளையும் தெரிவிக்கவும்....

-----------------------------------------------------------

ஜீலை மாத சிங்கப்பூர் பயணம்-2

-----------------------------------------------------------

காலை எழுந்து.. காலை வேளைகளை.. முடிந்து... சாப்பிடும் அறையில் எல்லாரும்.. ஆஜர்...

மணியா : என்ன அறிஞரே...இன்று எங்கு செல்லப்போகிறோம்...

அறிஞர் : சிங்கப்பூரின் அழகை சிறப்பிக்கும் செந்தோசா.....

மன்மதன் : என்ன செந்தோசையா? எனக்கு செட் தோசா தான் தெரியும், ஆமாம் அது ரொம்ப ருசியாக இருக்குமா?

நிலா : எப்ப பாரு சாப்பாடுதான்.....

அறிஞர் : மன்மதனே... உமக்கு செந்தோசை அவசியம் உண்டு... செந்தோசா ஒரு குட்டித்தீவு... மீனவர்கள்.. முதலில் ஆக்கிரமித்து இருந்தனர்... பின்னர் ஆங்கிலேயரின் இராணுவ வீரர்கள் இருந்தனர்... பின்... சிங்கப்பூர் அரசாங்கம்... அதை பண்படுத்தி... அழகுபடுத்தி சுற்றுலா தளமாக்கியுள்ளது...

பரம்ஸ் : என்ன அறிஞரே... செந்தோசை எப்ப.....

அறிஞர் : செந்தோசை தலைக்கறியுடன்... இப்ப உண்டு..

பூ : என்ன தலைக்கறியா... , என்று கூறி வேகவேகமாக மணியாவை பார்க்க, அனைவரும் சிரித்தார்கள்.

அறிஞர் : இல்லை பூ... மீன் தலையால் ஆனது இந்த தலைகறி... புதுவையை சேர்ந்த தமிழர் சிங்கப்பூர் வந்து... செய்யும் பிரதான ஹோட்டல் தொழில் இது..... இங்கு அதற்கு நல்ல மவுசு...

இளசு : இப்ப... காலை உணவு.. செந்தோசையுடன்... தலைக்கறி. பொங்கல், இட்லி, கேசரி மற்றும் வடை சாப்பிட்டுக்கொண்டே இப்பொழுது.... கலந்துரையாடல் நடைபெறும்..

ரோஜா மன்றம்


முதலில் விஜயேந்திரா அவர்கள் " முரசு தம்பி அண்ணன் விண்டோசுக்கு தான் கொட்டுவார்" என்றார்.

தாமதமாக தந்தாலும் சுட்டியுடன் மென்பொருள் "ஒயின்" பற்றி விரிவாக தர்'பாரில்' விளக்கமளிக்கிறார் பாலா. க(ண் )னி ரசமாச்சே!


விஜயேந்திரா இதை உபயோகித்து அமெரிக்கா, கனடாவிற்கு மட்டும் கணினியிலிருந்து தொலைபேசிக்கு பேசமுடியும் என்கிறார்.

உடனே மன்மதன் எழுந்து 'சிங்கப்பூரிலிருந்து பேசமுடியுமா? நான் இப்பவே பேசணும்' என்று அடம்பிடிக்க

அறிஞர் தனது மடிக்கம்யூட்டரை அளிக்கிறார். கம்யூட்டர் மட்டும் தந்தால் மடி யார் தருவார் என்று கேட்க ' நங்' என்று அவருக்கு

தலையில் குட்டு விழுகிறது. திரும்பிப் பார்த்தால்... மடிசாரில் ஹேமா மாமி!

மைதிலி உடனே 'சூப்பர்..... நல்லா வேணும்...இந்த "நங்" கு போதுமா இன்னும் கொஞ்ச வேணுமா...' என்று பாட...

மன்மதன் : :eek: :eek: :eek: :eek:

சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் சோபாவில் அமர... டிவியில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட பழைய செய்தி வெளியாகிறது. உடனே மணியா கூறுகிறார். அவரின் ஆர்வத்தைப்பாராட்டி இங்கேயும்

விசயம் இருக்குங்க என்று இளசுவும், பாரதியும் மேலும் பல சுட்டிகளைத்தட்டி தகவல் தருகிறார்கள்.காலைப்பொழுது கணினியோடு கனிவாகச்செல்கிறது.


மடிக்கம்யூட்டரில் போட்டோ ஷாப்பில் மேஜிக் காட்டிக்கொண்டிருந்த மன்மதனை கண்ட

நிதன் நிழற்படங்களில் பின்புலத்தை மாற்றுவது எப்படி?

அதற்கு மன்மதன் 'போட்டோ ஷாப்பில் இதெல்லாம் ஜீஜ்ஜீப்பி... உங்க மெயில் ஐடி தாங்க.. அனுப்பி வைக்கிறேன்' என்று கூறி அல்வா கொடுத்தார்.

பரஞ்சோதி, விஜயேந்திரா, சிவா, பூ (கோராஸாக ): எங்களுக்கும் அதை இயக்குவது எப்படி என்று சொல்லித்தா மன்மதா.

நிதன் "எல்லோரும் கேட்கிறாங்க தானே தனியா ஒரு பாடம் ஆரம்பிச்சா என்னவாம்" என்று தொண்டையில் இடிக்கிறார்.

தேம்பா: இதற்குத்தான் ஹேமா அண்ணி... காலையில வெண்பொங்கல் மன்மதனுக்கு தர வேண்டாம்னு சொன்னேன் :rolleyes:

மைதிலி, கவிதா,ஹேமா மாமி ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர்.

மைதிலி, பகல்ல தூங்காம இருக்க 'கை'வைத்தியம் இருக்கு.......... என்று சொல்லிட்டு அப்பளக்கட்டை எடுக்கப்போகிறாள்.

போட்டோ ஷாப் பின்புலம் பற்றி தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த பாரதி பற்றிக் கூறுகிறார். விண்டோஸ் ஆரம்பிக்கும்போது தேவையில்லாம பின்புலத்தில் ஓடக்கூடிய மென்பொருள்களை இது களையும் என்றதும் அனைவரும் ஆவலோடு தத்தம் கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டி குறித்துக்கொள்கிறார்கள்.

சுமா : அக்கவுண்ட் சாப்ட்வேர் பற்றியும் சொல்லுங்களேன்

பாரதி : தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்" என்கிறார்.

அறிஞர் : சரி நண்பர்களே... காலை கலந்துரையாடல் முடிவடைகிறது.. இப்ப நாம் செந்தோசாவுக்கு செல்லலாம்....


சினிமா விமர்சனங்கள், பாடல்கள்

அனைவரும் பஸ்ஸில் செல்லும்போது... உங்களுக்கு ஒரு திரைவிமர்சனம் என மைதிலி செய்ய.... அனைவரும் துஷ்யந்தனின் நடிப்பை பாராட்டினர்....

திரையுலக செய்திகள், கிசுகிசுக்கள்

இன்னும் சுவையான செய்திகள் என்று..... மைதிலி

இயக்குனர் பாலாவின் திருமணம் பற்றி கூறி போட்டோ காட்டினார்... மணப்பெண் எனக்கு தெரியும் என்ற தேம்பாவை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க,

நாரதர் லைலா.. வரலையா.. என கேள்வி எழுப்ப... அனைவரும் முறைக்க...

நாரதர் எனக்கூற... கமலை மனதார வாழ்த்தினர்.......


அனைவரும்.... உலக வர்த்தக தளம் அருகில் வந்தனர்...

தேம்பா : என்ன அறிஞரே... செந்தோசா... எனச்சொல்லி விட்டு இங்கு அழைத்து வந்துவிட்டீர்...

அறிஞர் : நான் செய்தால்.. காரணம் இல்லாமலா.. பண்ணுவேன்... இப்போது..... இங்கிருந்து... பறக்கும் இரயிலில்... செல்ல போகிறோம்...

மன்மதன் : பறக்கும் இரயிலை காட்டவா இங்கு கூட்டி வந்தீர்...

மணியா : அறிஞர் லொள்ளு தாங்கலப்பா...

அறிஞர் : நான் சொல்ல வந்தது... கேபிள் காரில் செல்லப்போறோம்... இது கடல் மேல் செல்லும் கேபிள் கார்... நாலு அல்லது ஆறு பேர் ஒரு கேபின் காரில் உட்கார்ந்து கொள்ளலாம்... அதில் செல்லும்போது... கப்பல்களை...பார்க்கலாம்... சிங்கப்பூர் அழகு.. செந்தோசா அழகை ரசிக்கலாம்.....
மைதிலி : ஓ அப்படியா... இதுவரை நான் சென்றதில்லை.... ஜாலிதான்..

கவி : நானும், மைதிலியும்.... ஒரு கேபினில் உட்கார்ந்துக்கொள்கிறோம்.. ஓகேயா......

மன்மதன் : தேம்பா எங்க கேபின் பக்க வந்துடுதா... ஒரேடியா சாய்ந்து..... கடலில் விழுந்து விடுவேன்.....

தேம்பா : அது நீ சொல்லுறியாக்கும்..... வேண்டாம் விட்டுவிடு....

பரம்ஸ் : சரி.. சரி.. விட்டுடுங்க...... வாங்க... செந்தோசாவை இரசிக்கலாம்....

http://photobucket.com/albums/v320/drrobin/tm-cable1.jpg

அனைவரும் கேபிள் காரில்.. சென்று..... கப்பல்களை, சிங்கப்பூர் அழகை பார்த்து.. ரசித்து செந்தோசாவை அடைந்தனர்....

http://photobucket.com/albums/v320/drrobin/tm-sentosa.jpg

சின்னத்திரை, வானொலி விசயங்கள்


செந்தோசா அடைந்தவுடன்...

நாரதர் : இங்கு கேட்கமுடியுமா... அறிஞரே....

அஜீவன் : நான் சுவிஸில் கேட்கிறேன்...

பரம்ஸ் : இருங்க நானும் ட்ரை பண்ணி சொல்லுகிறேன்...

மைதிலி கேட்கிறீர்களா...

தேம்பா : அப்படியா.. சொல்லு மைதிலி

மைதிலி : உனக்கு டாக்டர் பட்டம் வேண்டுமா... தேம்பா.... அமெரிக்காவுல வாங்கலாம்.....

தேம்பா : என்னது பட்டமா... படிக்காமலா....

மன்மதன் : அறிஞர் இப்படிதான் பெற்றாரா.....

அறிஞர் : அடமக்கா.... என் பொலப்புள.....மண்ணை அள்ளிப்போட்டுடுவீங்க.. போல..... சரி.. சரி.. இப்ப தண்ணீருக்குள் மீன்களை பார்க்க செல்லப்போறோம்....

சேரன் : என்ன அறிஞரே.. இப்படி கவுக்கிறீர்.. முன்பே சொன்னால்... மாற்றுத்துணி எடுத்து வந்திருப்போமில்ல....

அறிஞர் : என்ன மக்கா.. எப்ப பார்த்தாலும் தப்பா புரிஞ்சுக்கிடுறீங்க...

பூ : நீர்தான் குழப்புகிறீர்.. அறிஞரே...

அறிஞர் : சரி.. சரி... தண்ணீருக்குள் போவதில்லை... தண்ணீர் சூழ்ந்துள்ள.. கண்ணாடிக்குகைக்குள்... சென்று மிகப்பெரிய... மீன்களை பார்க்கப்போறோம்...

கவி : சூப்பர்... இதுக்கு பேர்தான்... underwater world என்பார்களா...

அறிஞர் : சரியாக சொன்னாய்.... வாருங்கள் போய் கண்டு அனுபவிக்கலாம்...

எல்லாரும் சென்று... அழகு, அழகான...மீன்களை இரசித்தனர்..

மன்மதன் : ஆஹா.. பெரிய பெரிய மீன்கள்....

மைதிலி : என்ன தலை... உங்க சைஸ்ஸல கூட... மீன் இருக்கு..

மணியா : அதுக்கு தீனிபோடும் அழகைப்பாரேன்....

அனைவரும் ரசித்து... மேலும் ஜெல்லி மீன்... கடல்குதிரை.. பலவற்றை.. இரசித்து.. வெளிவந்தனர்.......

பரம்ஸ் : நான் உங்களுக்கு கடல் குதிரைப் பற்றி ஒரு சின்ன தகவல் சொல்கிறேன். கடல் குதிரையினத்தில் ஆண் குதிரைதான் முட்டைகளை தன்னுடைய பையில் சேகரித்து, குஞ்சுகள் பொறிக்கும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

http://photobucket.com/albums/v320/drrobin/tm-underwater.jpgதாமரை மன்றம்

பொது விவாதங்கள், அலசல்கள்


இக்பால் : அனைவரும்... பீச்.. செல்லலாம்... அங்கு சில நேரம் ஓய்வு... அங்கு... சில காரியங்களை அலசலாம்...

கவிதா .... சிலர்.. பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் எனக்கூற... இதை முன்னரே... வேறு தலைப்பில்... விவாதித்து என அறிஞர் கேட்க.... சாகரன் தவிர யாரும்.. அக்கறை காட்டவில்லை.....


அறிஞர் : சரி.. சரி... விவாதம் போதும்.. சிறிது நேரம்... பீச் வாலிபால் விளையாடுங்கள்..

மைதிலி... நக்கலாக..சிரிக்க... :D :D

மன்மதன் : என்ன மைதிலி.. நக்கல்...??

மைதிலி : மணியா இந்த வயதான காலத்தில் எப்படி விளையாடுவார் என எண்ணி பார்த்தேன்....

சிலர் பீச் வாலிபால் விளையாட... சிலர்... கடற்மண்ணில்... கோயில் கட்டி விளையாட நேரம் கடந்தது.. தான் கட்டிய வீட்டை விட மைதிலியின் கோயில் அழகாக வர, அதை பொறுக்காத மன்மதன் தெரியாதது போல் உடைக்க, உடனே,

மைதிலி : அடுத்த பிறவியில் நீ ஆண் கடற்குதிரையாக பிறக்கக்கடவது என்று வரம் கொடுக்க, அனைவரும் சிரித்தார்கள்.


பரம்ஸ் : அடுத்து.... எங்க அறிஞரே...

அறிஞர் : டால்பின் காட்சி நண்பரே...

தேம்பா : எப்படி இருக்கும் அண்ணா...

அறிஞர் : இது சுமாரான காட்சிதான்.. முதல் தடவை பார்ப்பவர்களுக்கு நன்றாக இருக்கும்...

கவி : எனக்கு முதல் தடவைதான்.....

இளசு.. : நல்ல இடமா பார்த்து உட்கார்ந்துக்கோங்க....

மணியா : ஏலே.... பரம்ஸ்... நம்ம.. போர்வையை விரித்து இடம் பிடிலே...

பாரதி : எங்கே போனாலும் நம்ம ஆளுங்க துண்டை போட்டு இடம் பிடிப்பதை விட மாட்டாங்க போல...

மைதிலி : அட இந்த போர்வையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே.... இது பிளைட்டுல் கொடுக்கிறது மாதிரி இருக்கு....

மன்மதன் : ஆமா... அதைதான் எடுத்துவந்தோம்..

கவி : ஆங்.... முன்னே தெரிஞ்சா.. நானும் எடுத்து வந்திருப்பேனே..

அறிஞர் : அட மக்கா... அது பிளைட்டுக்குள் உபயோகிக்க மட்டும்தான்... வெளியில எடுத்து வரக்கூடாது...

பரம்ஸ் : சரி சரி.. விடுங்க..... இப்ப உபயோகப்படுதில்ல.....

அறிஞர் : பேரைக்கெடுக்கவே... வந்திருக்கிங்களே.. (என செல்லமாய் முறைக்க )

வெள்ளை டால்பின்கள்.. தண்ணீரில் வலம் வந்தது.... பிறகு பால் விளையாண்டது.....கணக்கு போட்டது டால்பின் மீது ஏறி சிலர் வலம் வர.. சீல்களின் விளையாட்டு காட்சியும் நடைபெற்றது...

http://photobucket.com/albums/v320/drrobin/tm-dolphin.jpg

தேம்பா : என்ன சேரன்... நம்மூருல.. டால்பின் செத்துபோச்சாமே... இங்க எப்படி நல்லா இருக்கு...

சேரன் : நீ.... ஊருல... இருந்தில்ல... உன்னை பார்த்து மண்டைப்போட்டிருக்கும்.....

தேம்பா : சீரியஸா நான் கேக்குறேன்.. நீ விளையாடுற....

அறிஞர் : டால்பின்களை கிட்டத்தட்ட 2 - 4 Cயில் பாரமரிக்கணும்.. நம்மூரில் சீதோஸ்ன நிலை... குளிர்சாதன வசதிக்குறைவு... டால்பின்களுக்கு ஒத்துவராது தேம்பா...

பரம்ஸ் : சரி சரி... டால்பினை தொட்டுப்பார்க்க கூப்பிருங்கா... யாரு போறது...

சிலர் சென்று தொட்டுப்பார்த்து திரும்ப..

கவி : ஆஹா என்ன ஷாப்ட்.. தோல்.... குழந்தை தோல் போல் உள்ளது.....

மைதிலி :ஆமாம்... இது குழந்தைமாதிரிதான்...பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்


அடுத்து...மெர்லைன் பார்க்க செல்லப்போறோம்.. அதுக்குமுன் சிறிய ஓய்வு....

மணியா : எனக்கு கொஞ்சம் தலைவலிக்குது... காபி கிடைக்குமா.

கவிதா என பயனுள்ள தகவலை தர.. காபி ஷாப் வந்தது... மணியா காபி ஆர்டர் பண்ண..

மன்மதன் : எனக்கு ஒன்னு கொடுங்க..

கடைக்காரர் : என்ன காபி..

மன்மதன் : காபிதான் வேணும்.. என்ன காப்பின்னா...

அன்பு : அதுவா... உனக்கு.. கப்போசினா, லாட்டே, எக்ஸ்பரசோ, அரபி தர்கிஸ் என பல வகை உள்ளது....

மன்மதன் : எனக்கு தெரிந்தது.... எல்லாம்.. பில்டர் காபியும், ப்ரூ காப்பியும்தான். பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கும்.. என்று கூறி ஹேமா மாமியை பார்க்க

மணியா : சரி... உமக்கு ஸ்டாராங்கா.. வேணுமா.... இல்லை.. பூஸ்ட் கலந்த டேஸ்ட் வேணுமா....

மன்மதன் : ஸ்டாராங்குதான்...

மணியா : அப்படியா.. அவருக்கு... எக்ஸ்பரசோ கொடுங்க....

காபி கடைகாரர் : 5 டாலர் (ரூ 125) கொடுங்க..

மன்மதன் : என்னது... ஒரு காபி.. எங்க ஊருல ஒரு டசன் காப்பி குடிக்கலாமே, இவ்வளவா... காபி கேன்சல்.

மணியா : ஏலே.. வா.. நான் வாங்கித்தரேன்... வெளியூருல வந்து காசு பார்க்கிறதா....

காபி வருகிறது.... இருவரும் சுவைக்க...

மன்மதன் : தலை என்ன வாங்கி கொடுத்திங்க... இந்த கச கசக்குது...

மணியா : நீதானுல்லே ஸ்டாராங்க கேட்ட...

மன்மதன் : அதுக்குனு இப்படியா......

அறிஞர் : என்ன மக்கா... முடிந்ததா... வாங்க அடுத்த இடம் செல்லலாம்....

சாகரன் : எங்க அறிஞரே...

அறிஞர் : சிங்கத்திடம்...

அன்பு : அதை மிருககாட்சிசாலையில் அல்லவா பார்க்கனும்...

அறிஞர் : நான் சொல்ல வந்தது.. சிங்கத்தின் சிலை... (மெர்லைன் ) சிங்கப்பூரின் முக்கிய அடையாளம்...

கவி : அங்க பாருங்க அதுவா...

http://photobucket.com/albums/v320/drrobin/tm-merlion.jpg

அறிஞர் : அதுதான்.. கீழிருந்து பாருங்கள்.. பிறகு மேல் செல்லலாம்.. வாய் பகுதி.. தலையிலிருந்து பார்த்தால் செந்தோசா அழகு, சிங்க்ப்பூர் அழகு நன்றாக இருக்கும்.... நன்கு அனுபவியுங்கள்....

அனைவரும் சென்று வாய் பகுதி, தலைப்பகுதியில்... காட்சிகளை கண்டு அனுபவித்தனர்....

தலையிலிருந்து.. பார்க்கும்போது.. வெகு அருமை.....

http://photobucket.com/albums/v320/drrobin/tm-merlion_view.jpgகீழ் இறங்கி... வரும் வழியில்.. தண்ணீர் தொட்டி.. பவுண்டன்... கண்டு மகிழ்ந்தனர்...அறிஞர் என சுவையான தகவல்கள்.. தர அனைவரும் வாழ்த்தினர்...

நாரதர் : ரொம்ப சூடா இருக்கு.... குடிக்க..நீர் கிடைக்குமா

இளசு : இளநீர் உள்ளது வாங்கிவரவா......

உடனே... பிஜிகே.. பற்றி விளக்க அனைவரும் வாழ்த்தினர்.....


அறிஞர் : அனைவருக்கும் நன்றி.. இனி லேசர் காட்சி காணலாம்.. இது நல்ல காட்சி அனைவரும் இரசியுங்கள்.. நன்றாக பாருங்கள்... மன்மதனின் நண்பர்... வருவார்....

தேம்பா : என்னது.. மன்மதன் நண்பர்... லேசர் ஷோவிலா...

அறிஞர் : ஆமாம்.. எங்க.. கவி என்னன்னு.. சரியா கண்டுபிடி..

கவி : இதுக்கூட தெரியாதா... குரங்குதானே....

அறிஞர் : எப்படி இவ்வளவு சரியாக சொன்னாய்... செந்தோசா குரங்கு வரும்... மேலும்.. தண்ணீர், நெருப்பு விளையாட்டுக்கள்.... என பல தொடரும்.....அனைவரும் ஆவலுடன் காத்திருக்க.... இனிய இசையோடு நீர் விளையாட்டு ஆரம்பமானது.. லேசர் ஷோவில்.. அழகான பெண்கள்.... மீன்கள், செந்தோசா குரங்கின் அட்டகாசம் தொடர... அருமையாய் அமைந்தது....

http://photobucket.com/albums/v320/drrobin/tm-laser2.jpg


http://photobucket.com/albums/v320/drrobin/tm-laser.jpg

கல்வி, மருத்துவம், ஆன்மீகம்


பிறகு... அனைவரும் ஹோட்டல் திரும்ப... உணவருந்தி.... தொலைக்காட்சியை நோக்க...

திருவருள் என்று.. வாரியாரின் கருத்துக்களை கொடுக்க... அனைவரும் வாழ்த்தி, அன்றைய பொழுது இனிதாக கழிந்த மகிழ்ச்சியில் உறங்கினர்...சமையல் கலை, அழகுக் குறிப்புகள்


அடுத்த நாள்.... காலை உணவு அறையில் அனைவரும் கூட.... இராசகுமாரன் ஸ்பெஷல்

மன்மதன் : அதுக்கு என்ன தொட்டுக்க...

இராசகுமாரன் ரெடி...


அனைவரும் சாப்பிட்டு..மைதிலியை வாழ்த்த.... அடுத்த பயணம் ஆரம்பமாகியது...


பூ : இப்ப எங்க அறிஞரே...

அறிஞர் : இப்போழுது... மற்றொரு முக்கிய இடமான... ஜுரோங்க் பறவை சரணாலயம்...

தேம்பா : அப்படி என்ன இருக்கு

அறிஞர் : அரை நாள் பொழுதைக்கழிக்கலாம் நிறைய... பறவை வகைகள்.... முக்கியமாக பல வர்ண கிளிகள், கொக்குகள்.. இன்னும் பல..வாழ்த்துக்கள், இதர தலைப்புகள்


அனைவரும் பயணத்தை தொடர..... பஸ்ஸில்.... பூ

ஆசிய கோப்பை - இந்திய அணி பற்றிக்கூற அனைவரும் இந்திய அணி வெற்றிக்காண வாழ்த்தினர்... மீண்டும் திருவருள் வாழ்த்த அனைவரும் வாழ்த்தினர்...

ஜுரோங்.. பறவைகள் சரணாலயம் வர.. அனைவரும் இரசித்தனர்...

அறிஞர் : அங்க பாருங்க... பல வர்ண கிளிகளை கையில் வைத்து புகைப்படும் எடுத்துக்கொள்ளலாம்..

தேம்பா : அது நம்மை கொத்தாதா அண்ணா..

மன்மதன் : இருக்க.. எடையில் கொஞ்சம் குறைந்தா என்ன?

தேம்பா : ஏலே வார்த்தையை அளந்து பேசு...

கவி : அவுங்க.. கிடக்கிறாங்க.. வா நாம் புகைப்படும் எடுத்துக்கொள்ளலாம்.....

குடும்பமாய்.. நண்பர்களுடன் ஒவ்வொருவரும் படம் எடுத்தனர்...


பின்.... கொக்குகளின், பெங்குவின்களின் அணிவகுப்பை கண்டு.. மகிழ்ந்தனர்.... வெவ்வேறு இடங்களில்.. வெவ்வேறு காட்சிகள்... பிறகு குட்டி இரயிலில் ஊர்வலம் சென்று நீர்வீழ்ச்சி, வாத்து இன்னும் பல பறவைகள் கண்டு மகிழ்ந்தனர்......

http://photobucket.com/albums/v320/drrobin/tm-jurbird2.jpg


குறிஞ்சி மன்றம்


ஓட்டெடுப்புகள், போட்டிகள்


பறவைகள்.. சரணாலாயம் பயணம் முடிந்து..... அனைவரும் உணவருந்தி திரும்ப...... பாரதி ஜுன் மாதம் இரசித்தவை - வாக்கெடுப்பு., ஜுன் மாதப்போட்டி - உரையாடல்கள். எனக்கொடுக்க.... அனைவரும் சிறந்த பங்களிப்பாளருக்கு தங்கள் ஓட்டுக்களை அளித்தனர்....... நாரதர்.. தன் நிலைமையை... ஜுன் போட்டி உரையாடல்கள். தெரிவித்தார்....அரசியல், ஆன்மீக அலசல்கள்


பயணம் தொடந்தது... அரசியல், ஆன்மிகப்பற்றி.. அலச யாரும் வருகிறீர்களா.. என இளசுகூற.....

http://photobucket.com/albums/v320/drrobin/tm-suntec.jpg

பண்பட்டவர்களுக்கான பதிப்புகள்


அனைவரும் கண்டு களித்து... ஹோட்டலில் பேக் பண்ணி.. விமான நிலையத்தை அடைந்தனர்....பாரதி : நண்பர்களே.... மீண்டும் அறிவுரை கூற விரும்பவில்லை.... நம் பெயரை காப்பற்றும் படி விமான பயணத்தில் நடந்துக்கொள்ளுங்கள்

கவி : மன்மதா உனக்கு தான் சொல்லுகிறார்.. போகும்போது.. பிளைட் டவலை சுட்டுராதே....

மன்மதன் முறைக்க.... அனைவரும் விமானத்தினுள் சென்று இருக்கையில் அமர.....

அறிஞர் : உங்கள் பயணம் இனிதாய் அமைய... நம் நண்பர் நட்சத்ரன் குறுநாவலை தொகுத்து வழங்குவா...எல்லாரின் முன்வந்து.... நட்சத்ரன் நதிமூலம் (குறுநாவல் )-நட்சத்ரன் (அத்தியாயம்-14) , நதிமூலம் (குறுநாவல் )-நட்சத்ரன் (அத்தியாயம்-15) , நதிமூலம் (குறுநாவல் )-நட்சத்ரன் (அத்தியாயம்-16) , நதிமூலம் (குறுநாவல் )-நட்சத்ரன் (அத்தியாயம்-17) , நதிமூலம் (குறுநாவல் ) -நட்சத்ரன் (அத்தியாயம்-18 ) , நதிமூலம் (குறுநாவல் ) -நட்சத்ரன் (அத்தியாயம்-19) , நதிமூலம் (குறுநாவல் ) -நட்சத்ரன் (அத்தியாயம்-20) என எட்டு பாகங்களாக வழங்க... அனைவரும் வாழ்த்தினர்.....விமானம் சென்னை வந்தடைந்தது......-
உங்கள் அறிஞர்

பரஞ்சோதி
24-08-2004, 05:10 AM
வாவ் அருமையான நிழற்படம்.

நெஞ்சில் நிலையாக நிற்கும் நிழற்படம்

கொடுத்த படங்கள் அனைத்தும் அற்புதம்,

அதனாலே உண்மையான பயணம் போல் தோற்றம்.வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் அறிஞரே!கூடுதலாக உங்கள் குடும்பத்தார் அனைவரையும் ஒன்று சேர பார்த்த கூடுதல் மகிழ்ச்சி.

mania
24-08-2004, 05:21 AM
நல்ல சுவாரஸ்யமான பயணம் அறிஞரே. மிகவும் நன்றாக கொடுக்கப்பட்டுள்லது. வாழ்த்துக்களும் , பாராட்டுகளும்

அன்புடன்

மணியா

இளசு
24-08-2004, 08:25 AM
டாக்டர் பட்டம் "வாங்குவது " பற்றிய அலம்பலில்

உங்களைச் சேர்த்து வம்படிப்பதும்...

மன்மதனின் பகல் தூக்கம் போக்கும் மைதிலியின் "கை" வைத்தியமும்..

கணினி இங்கே, மடி எங்கே என்ற மணியாவின் கேள்வியும் அதற்கான பதிலும்..

உங்கள் அறிவும், நகைச்சுவை உணர்வும் சரிசமமாய் போட்டி போட

செம்ம டேஸ்ட்டான விருந்து எங்களுக்கு..

படங்கள், கடற்குதிரை, டால்பின் பற்றிய அறிவியல் சேதிகள் என கொறிக்க சிப்ஸ் அவ்வப்போது..

பரஞ்சோதி சொன்னதை வழிமொழிகிறேன்.._

நிழற்படம் ஒரே வார்த்தையில் - அற்புதம்..!பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றி அன்பு நண்பர் அறிஞருக்கு..

பாரதி
24-08-2004, 12:06 PM
மிகவும் துல்லியமான மனதைக் கவரும் படங்கள்....!

கிளிகளுடனும் குடும்பத்தினருடனும் வீற்றிருக்கும் படத்தைக் கொடுத்ததற்கும் நன்றி.

நிழற்படங்களின் தரம் ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே போகிறது. அருமையாய் கொடுத்த உங்களுக்கும் உதவியவர்களுக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

kavitha
24-08-2004, 12:23 PM
எல்லா இடங்களும் சூப்பர். நேரில் சென்று வந்தது போலவே உள்ளது.

புகைப்படங்களுடன் அருமையாக விளக்கி உள்ளீர்கள்.

மன்ற நிகழ்ச்சிகளை அதனுடன் இணைத்து வழங்கியது "டிவி பார்த்துக்கொண்டே கொறிப்பது போல்" சுவையாக இருந்தது. மனமார்ந்த பாராட்டுகள் அறிஞரே!செந்தோசா ஒரு குரங்கின் சர்க்கஸ் என்பதை இன்று தான் அறிந்தேன். நன்றி!

(டூர் போகனும்னா இனி கைடு நம்ம அறிஞர் தான் )

மன்மதன்
24-08-2004, 01:11 PM
அருமையான நிழற்படம்..

அழகான வர்ணனை..

மன்ற உறவுகளுடன் டூர் போன பிரமை..

பிரமாண்ட நிழற்படத்திற்கு பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
25-08-2004, 01:03 PM
தங்களின்... பாராட்டுக்களில் நனைந்தேன்.... அனைவருக்கும் நன்றி.....

ஆனால்.. அனைவரும் இதை படிப்பதில்லையே என்று ஏக்கம்...

அறிஞர்
25-08-2004, 01:05 PM
(டூர் போகனும்னா இனி கைடு நம்ம அறிஞர் தான்)

நான் சென்று வந்த நாடுகள் எனில்.. தெளிவாய்.... விளக்கம் தருவேன் கவி.... :D :D

டூர் செல்லும் முன் தெரிவிக்கவும்...

சேரன்கயல்
28-08-2004, 05:25 AM
இந்த மாத நிழற்படம்...அறிஞரின் உபயத்தில் சிங்கப்பூர் சுற்றுப்பயணமாக களைக்கட்டியிருக்கிறது...

சூப்பர் முல்லாஜி...சின்ன சின்ன விடயங்களைக்கூட கவனமாக குறிப்பிட்டமை பாராட்டுக்குரியது...

(சிங்கப்பூருக்கு முதலில் டூர் அடிக்கணும் )

அறிஞர்
28-08-2004, 05:34 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி சேரன்...

ஆசியாவில்.... ஒரு நல்ல நகரம்...

4 நாட்கள்.. தங்கினால் நன்றாக சுற்றிப்பார்த்துவிடலாம்....

மணிலா வந்து... மணிலா கதைக்கூட கொடுக்கலாம்...

சேரன்கயல்
28-08-2004, 05:36 AM
வாங்க...அறிஞரே...

மகிழ்ச்சியோடு காத்திருப்பேன்...

இளந்தமிழ்ச்செல்வன்
29-08-2004, 10:36 AM
அறிஞரே அற்புதம்.

உங்கள் பதிவை பார்த்தபின் சில பகுதியை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

உங்கள் பதிவை பார்த்த பிறகு சிங்கை செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் வந்துள்ளது. படங்களும் விஷயங்களும் அழகாய் செய்துள்ளீர்கள்.

ஒவ்வொரு மாதமும் அடுத்து வருபவர் எப்படி கலக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் வேலை பளுக்கிடையிலும் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.

அறிஞர்
30-08-2004, 04:35 AM
இளந்தமிழ்... தங்கள் வாழ்த்துக்கு நன்றி.....

அடுத்து வருபவர் இன்னும் கலக்குவார்...

அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது........

kavitha
30-08-2004, 07:12 AM
நான் சென்று வந்த நாடுகள் எனில்.. தெளிவாய்.... விளக்கம் தருவேன் கவி....

டூர் செல்லும் முன் தெரிவிக்கவும்...

நன்றி அறிஞரே. (சென்றால் )கண்டிப்பாக சொல்கிறேன்.
4 நாட்கள்.. தங்கினால் நன்றாக சுற்றிப்பார்த்துவிடலாம்....

மணிலா வந்து... மணிலா கதைக்கூட கொடுக்கலாம்...நீங்கள் சென்று வந்த நாடுகளைப்பற்றி ஏன் ஒரு தொடர் கொடுக்கக்கூடாது அறிஞரே? நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா?
இளந்தமிழ்... தங்கள் வாழ்த்துக்கு நன்றி.....

அடுத்து வருபவர் இன்னும் கலக்குவார்...

அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது........

_________________அப்படி போட்டு வாங்குங்க! பலே! பலே!!

அறிஞர்
30-08-2004, 08:02 AM
அடுத்து வருபவர் இன்னும் கலக்குவார்...

அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது........

_________________

அப்படி போட்டு வாங்குங்க! பலே! பலே!!

என்னுடைய சாய்ஸை சொல்லிவிட்டேன்...... என்ன சரியா...

அறிஞர்
30-08-2004, 08:03 AM
4 நாட்கள்.. தங்கினால் நன்றாக சுற்றிப்பார்த்துவிடலாம்....

மணிலா வந்து... மணிலா கதைக்கூட கொடுக்கலாம்...நீங்கள் சென்று வந்த நாடுகளைப்பற்றி ஏன் ஒரு தொடர் கொடுக்கக்கூடாது அறிஞரே? நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா?

நேரம்தான் கவி.... நமக்கு.... ஏதாவது எழுதினால் இரசிக்கும்படி இருக்கனும்....

எதிர்காலத்தில் யோசிக்கிறேன்...

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 08:41 AM
4 நாட்கள்.. தங்கினால் நன்றாக சுற்றிப்பார்த்துவிடலாம்....

மணிலா வந்து... மணிலா கதைக்கூட கொடுக்கலாம்...நீங்கள் சென்று வந்த நாடுகளைப்பற்றி ஏன் ஒரு தொடர் கொடுக்கக்கூடாது அறிஞரே? நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா?

நேரம்தான் கவி.... நமக்கு.... ஏதாவது எழுதினால் இரசிக்கும்படி இருக்கனும்....

எதிர்காலத்தில் யோசிக்கிறேன்...

இன்று காலைதான் இது குறித்து சிந்தனை வந்தது நண்பரே. சுற்றுலா என்று ஒரு தனி பகுதி திறந்து அனைவரும் அவரவர் அனுபவங்களை பதிந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும். என் போன்ற வெட்டியாய் உள்ளூரில் சுற்றும் மனிதர்களுக்கு வெளியூரில் சுற்றமுடியாவிட்டாலும் சுற்றிய திருப்தியாவது கிடைக்கும்

ஆரம்பியுங்கள் நமது உறவுகள் கலக்கிபுடுவாங்கல்ல கலக்கி..

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 08:44 AM
இளந்தமிழ்... தங்கள் வாழ்த்துக்கு நன்றி.....

அடுத்து வருபவர் இன்னும் கலக்குவார்...

அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது........

தங்கள் நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அறிஞரே. கண்டிப்பாய் ஒரு மாதம் நான் வழங்கத்தான் போகிறேன் உங்கள் உதவியுடனும் ஆசியுடனும். தற்போது இயலாத சூழலில் உள்ளேன். மன்னிக்கவும்.

kavitha
30-08-2004, 08:48 AM
நமது உறவுகள் கலக்கிபுடுவாங்கல்ல கலக்கி..கவிதா: எலே மைதிலி... நீ சென்னையில ஐஸ்கிரீம் வாங்கித்தின்னத எழுதுல்ல

மைதிலி: நீ என்ன காய்கறி வாங்கியதை எழுதப்போறீயாக்கும்?

மணியா: நான் பல'சரக்கு' வாங்கியதை எழுதுவேனாக்கும்.

அறிஞர்: ஐயோ! இது சுற்றுலா பத்தியதாக்கும்...

அறிஞர்
30-08-2004, 09:15 AM
இன்று காலைதான் இது குறித்து சிந்தனை வந்தது நண்பரே. சுற்றுலா என்று ஒரு தனி பகுதி திறந்து அனைவரும் அவரவர் அனுபவங்களை பதிந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும். என் போன்ற வெட்டியாய் உள்ளூரில் சுற்றும் மனிதர்களுக்கு வெளியூரில் சுற்றமுடியாவிட்டாலும் சுற்றிய திருப்தியாவது கிடைக்கும்

ஆரம்பியுங்கள் நமது உறவுகள் கலக்கிபுடுவாங்கல்ல கலக்கி..

நல்ல சிந்தனைதான்... துபாய், அபுதாபி..கட்டுரைகள்.. வெளிவரட்டும்... முதலில்.... பிறகு மணிலா கட்டுரை... சேரன் தருவார்.... மனோஜி.. மலேசியா பற்றி தருவார்...

சிலர் ஜப்பான் பற்றியும் தருவர்.....

நீங்கள்.. உள்ளூர் ராசா... உள்ளூர் கட்டுரைக்கூட நீங்கள் தரலாம்....

இது எல்லாவற்றிற்கு பிறகு தைவான் பற்றி நானே தருகிறேன்

என்ன சரியா.....

என்ன உள்ளூரில் மற்றுமே சுற்றுகிறீர்.. வெளியே செல்ல முயலுங்கள்....

அறிஞர்
30-08-2004, 09:17 AM
தங்கள் நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அறிஞரே. கண்டிப்பாய் ஒரு மாதம் நான் வழங்கத்தான் போகிறேன் உங்கள் உதவியுடனும் ஆசியுடனும். தற்போது இயலாத சூழலில் உள்ளேன். மன்னிக்கவும்.

நான் உங்களை வற்புறுத்தவில்லை... யோசியுங்கள்.. மற்றவர்கள்.. கொடுக்கமுடியாவிட்டால்.. நீங்கள்.. எளிமையாக கொடுக்கலாம்.. உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 09:29 AM
இன்று காலைதான் இது குறித்து சிந்தனை வந்தது நண்பரே. சுற்றுலா என்று ஒரு தனி பகுதி திறந்து அனைவரும் அவரவர் அனுபவங்களை பதிந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும். என் போன்ற வெட்டியாய் உள்ளூரில் சுற்றும் மனிதர்களுக்கு வெளியூரில் சுற்றமுடியாவிட்டாலும் சுற்றிய திருப்தியாவது கிடைக்கும்

ஆரம்பியுங்கள் நமது உறவுகள் கலக்கிபுடுவாங்கல்ல கலக்கி..

நல்ல சிந்தனைதான்... துபாய், அமுதாபி..கட்டுரைகள்.. வெளிவரட்டும்... முதலில்.... பிறகு மணிலா கட்டுரை... சேரன் தருவார்.... மனோஜி.. மலேசியா பற்றி தருவார்...

சிலர் ஜப்பான் பற்றியும் தருவர்.....

[b]நீங்கள்.. உள்ளூர் ராசா... உள்ளூர் கட்டுரைக்கூட நீங்கள் தரலாம்....

இது எல்லாவற்றிற்கு பிறகு தைவான் பற்றி நானே தருகிறேன்

என்ன சரியா.....

என்ன உள்ளூரில் மற்றுமே சுற்றுகிறீர்.. வெளியே செல்ல முயலுங்கள்....

மூன்று வாரங்களுக்கு முன்பே பெங்களூர் பற்றி எழுத நினைத்து நேரமின்மையால் விட்டுவிட்டேன். இனி மீண்டும் எழுத ஆவல் வந்துள்ளது. ஆனால் அது சுற்றுலா செல்பருக்கு ஏற்றவகையில் இருக்காது. நான் சில வருடங்களுக்கு முன் பார்த்ததும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிதான்.

kavitha
30-08-2004, 10:55 AM
நான் உங்களை வற்புறுத்தவில்லை... யோசியுங்கள்.. மற்றவர்கள்.. கொடுக்கமுடியாவிட்டால்.. நீங்கள்.. எளிமையாக கொடுக்கலாம்.. உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்நீங்க கிலுக்கி ( நன்றி: இளசு அண்ணா ) பிடி போட்டாலும்

அவர் கழுவுற மீன் ல நழுவுற மீனா இருக்கார்.

இக்பால்
30-08-2004, 12:02 PM
அன்புத் தம்பி அறிஞர் அவர்களுக்கு,

நிழற்படம் கொடுத்த அருமையான விதம் கண்டு பிரமித்து நன்றியுடன்

பாராட்டுகள்...வாழ்த்துகள்.

விடுமுறையில் போன சமயம் கொடுத்து விட்டீர்கள். அதனால்

அண்ணாவின் பாராட்டுகள் தாமதமாக வந்து இருக்கிறது.

மன்மதன் தம்பி நேரில் பார்த்தபொழுது உங்கள் நிழற்படம்

அருமையாக வந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

மீண்டும் பாராட்டி....

-அன்புடன் அண்ணா.

அறிஞர்
30-08-2004, 12:06 PM
நன்றி இக்பால அண்ணா.....

நண்பர்கள் கொடுக்க சொன்னார்கள்.. விளையாட்டாய் கொடுக்க போய் இரண்டு பெரும்பாகங்களாக நீண்டுவிட்டது...

இரண்டாம் பாகத்தையும் படித்திருப்பீர்கள்.. என நம்புகிறேன்

இக்பால்
30-08-2004, 12:13 PM
இரண்டும் படித்தேன் அறிஞர் தம்பி அவர்களே...

நான் கொடுக்காமல் விட்டதை(இரண்டாம் பாகம்தான் ) நீங்கள்

குறைவில்லாமல் கொடுத்து விட்டீர்கள்.

அருமையாக இருக்கிறது. குடும்பத்தைச் சந்தித்த மகிழ்ச்சி கூட

மிஞ்சுகிறது. மறுபடியும் படிக்கிறேன்.

-அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
30-08-2004, 03:35 PM
நன்றி இக்பால அண்ணா.....

நண்பர்கள் கொடுக்க சொன்னார்கள்.. விளையாட்டாய் கொடுக்க போய் இரண்டு பெரும்பாகங்களாக நீண்டுவிட்டது...

இரண்டாம் பாகத்தையும் படித்திருப்பீர்கள்.. என நம்புகிறேன்

விளையாட்டா கொடுத்ததே இப்படி கலக்குது என்றால்,

ஆராய்ச்சி செய்து கொடுத்திருந்தால் என்ன கலக்கு கலக்கும்?

(ஏலே மன்மதா, இப்போ ஏம்லே பூவை நினைவுப்படுத்துகிறாய் )

அறிஞர்
31-08-2004, 02:27 AM
மீண்டும்... நன்றி இக்பால் அண்ணா
ஆராய்ச்சி செய்து கொடுத்திருந்தால் என்ன கலக்கு கலக்கும்?

(ஏலே மன்மதா, இப்போ ஏம்லே பூவை நினைவுப்படுத்துகிறாய் )
ஹி ஹி இன்னும் பக்கங்கள் நீண்டிருக்கும்.... அது என்னலே.. பூ... அவர்தான் இந்த பக்கம் வரதில்லையே...

இக்பால்
31-08-2004, 06:28 PM
அது என்ன அறிஞர் தம்பி ... அப்படி கேட்டு விட்டீர்கள்?

வருவார்... -அன்புடன் அண்ணா.

அறிஞர்
01-09-2004, 04:15 AM
அது என்ன அறிஞர் தம்பி ... அப்படி கேட்டு விட்டீர்கள்? வருவார்... -அன்புடன் அண்ணா.

அவர் வேலைப்பளுவின் மத்தியில்.. வருவது சில நிமிடங்களே... அவர் வருவார் என காத்திருப்போம்..

Narathar
02-09-2004, 08:40 AM
அட! நீண்ட நாட்களுக்குப்பிறகு நானும் சென்றிருக்கின்றேன் சந்தோசா ஐலண்டுக்கு!

சந்தோஷமாக இருக்கிறது. மறக்காமல் அழைத்து சென்றமைக்கு..........

அறிஞர்
02-09-2004, 10:01 AM
என்ன நாரதரே.. கொஞ்ச நாளா ஆள காணோம்.... செந்தோசாவுக்கு திரும்ப சென்று செட்டிலாகி விட்டீரோ

Narathar
03-09-2004, 08:10 AM
என்ன நாரதரே.. கொஞ்ச நாளா ஆள காணோம்.... செந்தோசாவுக்கு திரும்ப சென்று செட்டிலாகி விட்டீரோ

இல்லையன்பரே..........................

நான் இப்போது செட்டிலாகியிருப்பது லண்டனில்.

இப்போதுதான் கொஞ்சம் மன்றப்பக்கம் வர நேரம் கிடைக்கிறது.

சீக்கிரமே முன்புபோல் பங்குபற்றுவேன்.....................

இளசு
03-09-2004, 08:29 AM
இந்த சுற்று இனிதே நீடிக்க வாழ்த்துகள் நாரதரே..

நீங்கள் எல்லாம் இல்லாமல் பலநாள் ஏங்கிவிட்டோம்..

Narathar
03-09-2004, 08:38 AM
இந்த சுற்று இனிதே நீடிக்க வாழ்த்துகள் நாரதரே....

லண்டன் வாழ்வு நீடிக்கவே வேண்டாம்

இலங்கைபோகும் வாய்ப்பை எதிர்பார்த்து

காத்திருக்கின்றேன்..............


நீங்கள் எல்லாம் இல்லாமல் பலநாள் ஏங்கிவிட்டோம்..

உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி.................

என்னால் முடிந்தவரை இங்கு தடம் பதிப்பேன்!

இளசு
03-09-2004, 08:42 AM
சுற்று என்பது மன்றத்தைச் சுற்றுவது நாரதரே..

எண்ணம்போல் எல்லாம் அமைய பிரார்த்தனைகள்... வாழ்த்துகள்..

அறிஞர்
03-09-2004, 08:45 AM
அன்பர் இளசு சொல்வது போல்.. மன்றத்தில் உங்கள் சுற்று.. இன்னும் பெருக வாழ்த்துக்கள்... .

Narathar
03-09-2004, 08:49 AM
மன்றச்சுற்று இலங்கை போனாலும் நீடிக்கும்......................

மன்மதன்
20-06-2005, 11:54 AM
வேற என்ன என்ன நாடுகளுக்கு சென்று இருக்கிறீர்கள் அறிஞரே..
இது மாதிரி தனி கட்டுரை கொடுக்கும் எண்ணம் உள்ளதா ..??
அன்புடன்
மன்மதன்

rajasi13
24-10-2005, 12:53 PM
அடுத்த முறை என்ன விட்ராதீங்கவே!. எங்கே போனாலும் வரேன், உங்கள மாதிரியே.

அறிஞர்
27-10-2005, 05:26 AM
அடுத்த முறை என்ன விட்ராதீங்கவே!. எங்கே போனாலும் வரேன், உங்கள மாதிரியே. இப்பவே வெளிநாட்டில் தானே இருக்கிறீர்கள்... தங்கள் முதல் பயணம் பற்றி கட்டுரை தரலாமே

இளசு
29-10-2005, 11:19 PM
மீண்டும் படிக்க, சுவை இன்னும் கூடி ரசிக்க வைத்த பதிவு.

அசத்திட்டீங்க அறிஞரே..

இதைப் படித்து
இன்னும் புது நிழற்படம் படிக்க ஆசை - பசி!
இதைத்தான்'
பசி தூண்டும் அமுதம்
என்று
முரண்பாவாய் சொல்வதா?

என்ன நண்பர்களே
மீண்டும் நிழற்படங்கள் தொடங்கலாமா?
அதற்கான காலம் கனிந்துவிட்டதா?
தீபாவளி முடிந்து எல்லாரும் வரட்டும்.

சுவேதா
31-10-2005, 12:01 PM
சூப்பர் நிழல் படம் அண்ணா வாழ்த்துக்கள்!
நாங்களும் சென்றது போலவே
உள்ளது உங்கள் பயணம் சூப்பர்..
வாழ்த்துக்கள் அண்ணா!

பென்ஸ்
31-10-2005, 12:10 PM
என்ன நண்பர்களே
மீண்டும் நிழற்படங்கள் தொடங்கலாமா?
அதற்கான காலம் கனிந்துவிட்டதா?
தீபாவளி முடிந்து எல்லாரும் வரட்டும்.

என்னை விட்டுரமாட்டிர்களே????:D :D :D

இளசு
31-10-2005, 09:42 PM
என்னை விட்டுரமாட்டிர்களே????:D :D :D

நீங்க இல்லாமலா பெஞ்சமின்...?!

சுவேதா
01-11-2005, 05:52 PM
அப்ப நான்:rolleyes: :D :p ;)

பென்ஸ்
22-11-2005, 04:31 AM
அறிஞரே... இளசு... அடுத்த பயணம் எப்போது????

இளசு
25-11-2005, 06:43 AM
அன்பு பெஞ்சமின்
நேரமும் விருப்பமும் இருந்தால்
நீங்கள் செய்யவேண்டுகிறேன்.

பென்ஸ்
25-11-2005, 02:17 PM
நன்றி இளசு...
நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை....
விருப்பம்... அது இல்லாமலா...
ம்ம்ம் ... முயற்சி செய்கிறேன்...

இதுதான் வாய வசிக்கிட்டு சும்மா இருக்கனும்ன்னு சொல்லுறது... :rolleyes: :rolleyes:
இத சொல்லியிருக்க வேண்டாமோ??? ஒரு 2 பதிவுதான் போட்டேன்.. அதுக்குள்ள எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்களோ.. நமக்கு வேலை இல்லைனு... ம்ம்ம்ம் :D :D :D :D

ஆமா சுவேதா நீ எப்பிடிட தப்புச்சா??? :angry: :angry:

இளசு
29-11-2005, 08:04 AM
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ!


பெஞ்சமின்.. சிரிச்சு சிரிச்சு வரும் என் வயித்து வலிக்கு
நீங்கதான் பொறுப்பு..


எப்படி கமெண்ட் அடிச்சா ஆடியன்ஸ் சிரிப்பாங்கன்னு
நம்ம ஆளுக எப்படித்தான் கண்டுபிடிக்கிறாகளோ....( நீங்கள் நிழற்படம் தந்தால்.. அது சூப்பராய் இருக்கும் நண்பரே..)

aren
29-11-2005, 08:38 AM
ஆமா சுவேதா நீ எப்பிடிட தப்புச்சா??? :angry: :angry:

சுவேதாவையும் இழுத்துவிடுவோம். நம்ம யாரையும் தப்பவிட்டதுகிடையாது.

பென்ஸ்
29-11-2005, 08:47 AM
ஆமா ஆமா.. பின்ன அது இல்லாம...:D :D

அவர் படம் வைத்து பிலிம் காட்டுவதில் பெரிய ஆள்... "சுவேதாவின் கிறுக்கல்" பார்த்தால் புரியும்....:rolleyes: :rolleyes: :D :D

அனுராகவன்
23-03-2008, 12:59 AM
மிக அருமையான பயணம்..
என் நன்றி அறிஞருக்கு...
தொடர்ந்து மற்ற நாட்டிற்கு அழைத்து செல்லுங்கள்..