PDA

View Full Version : காதல்....



Sridhar
19-06-2005, 06:20 AM
காதல்....
எவராலும் வரையறுக்க முடியாத
ஒரு உலக மகா நாவல்....
செய்முறை விளக்கம் இல்லா
ஒரு வாழ்க்கை பரிட்சை..

இதயங்களை கட்டிபோடும்
ஒரு மந்திர கயிறு..
ரத்த ஓட்டங்களின்
ஒரு ரகசிய சங்கமம்..

கண்களால் பேசப்படும்
ஒரு மின்னல் அஞ்சல்....
காவியங்களின்
ஒரு தொடர் கதை..

உருவங்கள் மாய்ந்து
உணர்வுகளின் உரசல்கள்..
ஊமைகளின்
வானொலி நிலையம்.....

இதயங்களால் ஏற்படும்
வழி தடங்கல்கள்..
கவிஞனாகும்
கலை கூடம்..

பார்வைகளின் மோதல்களால்
நொறுக்கப்படும் ஞாயிறுகள்..
முள்ளில்லா கடிகாரம்......
ரத்தமின்றி நடக்கும்

ஒரு இதய
அறுவை சிகிச்சை...
பாலைவனத்தில் தென்படும்
ஒரு பசும்பொன் சோலை

Sridhar
19-06-2005, 02:38 PM
இந்த காதல் தான்.. ..
மானிட உலகின் வாழ்கை சக்கரம்...
இந்த பூமியின் புவியீற்பு சக்தி...

காதலின் பார்வை தான் எத்தனை வகை..

மழலையின் சிரிப்பிலே காதல்....
பூக்களின் மலற்ச்சியில் காதல்...
பனி துளியின் சிலிற்பிலே காதல்...
ஞாயிறு ஒளியிலே காதல்..
நிலவின் குளிரிலே காதல்..

kavitha
20-06-2005, 06:18 AM
ஸ்ரீதர் உங்களின் கவிதை நன்றாக உள்ளது.
ஆரம்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன
எழுத்துப்பிழைகள் விரைவில் சரிசெய்யப்படும்
என்று நம்புகிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து பதியுங்கள். நன்றி.

"பார்வைகளின் மோதல்களால் நொறுக்க படும் ஞயிறுகள்.."
இங்கே குறிப்பிடப்படும் 'ஞயிறு' என்றால் என்ன?


மலற்ச்சியில் = மலர்ச்சியில்
சிலிற்பிலே = சிலிர்ப்பிலே

Sridhar
20-06-2005, 06:29 AM
கவிதா ...

ஞயிறு அல்ல.. அது ஞாயிறு.... . .

ஞாயிறு.... = சூரியன்...

நன்றி தங்களின் பாராட்டு மற்றும் அறிவுரைக்கு...

kavitha
20-06-2005, 06:46 AM
இது அறிவுரை இல்லை ஸ்ரீதர். (இப்படி விளிப்பதில் உங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லையே!)
துணை எழுத்துக்களை விட்டாலும் போட்டாலும்
அர்த்தங்கள் மாறிவிடும் அல்லவா? எனக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே
கேட்டேன். விளக்கத்திற்கு நன்றி.

Sridhar
20-06-2005, 03:05 PM
நீங்கள் என்னை எப்படி வேண்டுமானலும் விளிகலாம்.. ..
ஏனென்றல்.. உங்கள் பெயரிலும்... " கவி "... "தா..."... எனற் விளிப்பாடு உள்ளதால்.. நீங்கள் நிறைய "கவி" "தா" ....ருங்கள்....

அறிஞர்
21-06-2005, 02:07 AM
அருமையாய் எழுதுகிறீர்கள்.. ஸ்ரீதர்.... வாழ்த்துக்கள்.. இன்னும் தொடருங்கள்...

gragavan
21-06-2005, 04:12 AM
காதல் ஊமைகளின் வானொலி நிலையம்......நல்ல கற்பனை....

பாராட்டுகள் ஸ்ரீதர். தொடருங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

அருணகிரி கண்டு பிடித்த Two-In-One
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=108651#post108651

pradeepkt
21-06-2005, 05:43 AM
காதல் வயப்படாதோரும் மயங்கும் கவிதை.
வாழ்த்துகள் ஸ்ரீதர்

Sridhar
21-06-2005, 06:41 AM
என்னை பாராட்டிய அனைத்துள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...

மன்மதன்
21-06-2005, 07:02 AM
உருவங்கள் மாய்ந்து
உணர்வுகளின் உரசல்கள்..
ஊமைகளின்
வானொலி நிலையம்.....


நன்றாக எழுதுகிறீர்கள்.. பாராட்டுக்கள்..
அன்புடன்
மன்மதன்