PDA

View Full Version : என் வார காதலி....



Sridhar
18-06-2005, 09:03 AM
திங்கள் கன்னிகையே, திகட்டாத பொன்கனியே
செவ்வாய் சிவக்க சிரிப்பாய்,
புதன் உன் சிரிப்பில் மயங்கட்டும்
வியாழ மலையில் நீ
வெள்ளி சிறகை விரித்து வர
சனியின் ஏக்கத்தில் நீ
ஞாயிறொடு கலந்து விட்டாய்...

பரஞ்சோதி
18-06-2005, 10:51 AM
கவிதையிலும் புதுமை. வாழ்த்துகள் நண்பரே!

சுவேதா
18-06-2005, 01:38 PM
மிகவும் நன்றாக இருக்கிறது ஒரு புது வித கவிதை மேலும் தொடர்ந்து எழுதுங்கள் எழுத எனது வாழ்த்துக்கள்!

kavitha
20-06-2005, 06:41 AM
கவிதை நிலவைப்பற்றியதா?
சவுதி அரேபியாவில் வெள்ளிதானே விடுமுறை??

அறிஞர்
23-06-2005, 08:50 AM
"என் காதலியே....
என்னோடிருக்கும்
எல்லா நாளும்
ஞாயிறுவே....."
---
இன்னும் எழுதுங்கள்.. அன்பரே....

அறிஞர்
23-06-2005, 08:50 AM
கவிதை நிலவைப்பற்றியதா?
சவுதி அரேபியாவில் வெள்ளிதானே விடுமுறை??ஏன் கவி.. வெள்ளியை பற்றி காதல் கவி கொடுக்க போகிறீர்களா....

pradeepkt
23-06-2005, 08:54 AM
சனியின் ஏக்கத்தில் நீ
ஞாயிறொடு கலந்து விட்டாய்...
நல்ல கவிதை.
ஆமா, அந்த சனியும், ஞாயிறும் யாருங்க?

kavitha
23-06-2005, 11:00 AM
சனிக்கு என்ன ஏக்கம்?
ஞாயிறில் ஏன் ஒளிய வேண்டும்?
ஏதோ வார்த்தைகளைப்போட்டு விளையாடுகிறாரா?
அல்லது உள்ளர்த்தம் உள்ளதா?


"ஏன் கவி.. வெள்ளியை பற்றி காதல் கவி கொடுக்க போகிறீர்களா...."

காதலில்
விடி வெள்ளி
சனி தான்!

அறிஞர்
23-06-2005, 11:15 AM
"ஏன் கவி.. வெள்ளியை பற்றி காதல் கவி கொடுக்க போகிறீர்களா...."

காதலில்
விடி வெள்ளி
சனி தான்!நன்றி தோழியே..... இப்படியே தாங்களும் கிழமைகளை வைத்து கவி படிக்கலாம்..

karikaalan
23-06-2005, 12:02 PM
சனிப்பெயர்ச்சி ஞாயிறன்றா?!

pradeepkt
24-06-2005, 04:54 AM
சனிப்பெயர்ச்சி ஞாயிறன்றா?!
ஆமாம் கரிகாலன் அண்ணா