PDA

View Full Version : பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கெதிராக தமிழகத&



இளையவன்
17-06-2005, 12:05 AM
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகலாம் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த உத்தேச திட்டத்திற்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் எதிர்வரும் 28ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இந்தப் போராட்டம் குறித்து தமிழோசைக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், 25 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் கடும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிக்கொண்டு இருக்கும் சூழலில் இந்திய அரசு அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வராமல், சிங்கள அரசுக்கு உதவ முன்வந்திருப்பதை துரோகம் என்று வர்ணித்தார்.

சுனாமி பொதுக்கட்டமைப்பை அமைக்க சந்திரிகா, அரசியல் எதிர்ப்புக்கிடையேயும், முன் வந்திருப்பது குறித்து கேட்டபோது, திருமாவளவன், அது கொடையாளி நாடுகளின் அழுத்தம் காரணமாகவே இதைச்செய்ய சந்திரிகா முன்வந்திருக்கிறார் என்றார்.

சுனாமி பொதுக்கட்டமைப்பு என்பது பன்னாட்டு உதவிகளைப் பெறவே சந்திரிகாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமே தவிர உளப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டம் அல்ல என்றார்.

www.bbc.com/tamil

அறிஞர்
17-06-2005, 04:00 AM
தாங்கள் சொல்வது சரியே.... பன்னாடுகளின் நிர்பந்தத்தினால்... சந்திரிகா செய்கிறார். எப்படியாவது.. தமிழர்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்பதே.. அனைத்து தமிழர்களின் விருப்பம்