PDA

View Full Version : விடிவை தேடி.....



Sridhar
16-06-2005, 09:55 AM
அன்பு நண்பர்களே .. ..
நான் யார்..?
ஏனிந்த அறிமுகம்...
என் முகத்தை நான் தேடிகொண்டிருகிறென்..
மாமிச மேடை தான் என் முகவரியா...?
இல்லை என்னில் இரைச்சலிடும் உள் ஆத்மா தான் என் முகவரியா...? கால காலமாய் தேடி கொண்டிருகிறென்...

அந்த தேடலின் இடையில் தான் இந்த வழி பாதை..

விடிவை தேடி.....Sridhar ....

pradeepkt
16-06-2005, 10:01 AM
முதற்கண் உங்களுக்கு நல்வரவு.
இந்த மன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
உங்களிடம் இருந்து தரமான படைப்புகளையும், கருத்துகளையும் எதிர் நோக்குகிறது.
உங்கள் முகவரியின் தேடல் உங்களின் விடியலை நோக்கி உங்களைச் செலுத்தட்டும்.

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
16-06-2005, 10:57 AM
நான் என்பது என்னவென்று அறிந்துவிட நானைத் தொலைக்க வேண்டும் முதலில் . அன்புடன் மன்றத்திற்கு வரவேற்கிறேன்.

gragavan
16-06-2005, 10:58 AM
வாங்க ஸ்ரீதர் வாங்க ஸ்ரீதர் உங்கள் வரவு நல்வரவாகுக.......

உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துகள்.

பரஞ்சோதி
16-06-2005, 11:02 AM
வருக வருக நண்பரே!

உங்கள் அறிமுகம் போல் ஒரு அறிமுகத்தை இதுவரை பார்க்கவில்லை.

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆர்வம் கூடுகிறது.

நிறைய விசயங்களை உங்களிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை கூடுகிறது.

அறிஞர்
16-06-2005, 12:45 PM
தேடி அலைவோர் பலர்..
கண்டுபிடிப்போர் சிலர்....

வாருங்கள்.. ஸ்ரீதர்.... தங்களை இம்மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி....

சுவேதா
17-06-2005, 01:02 AM
வாருங்கள் ஸ்ரீதர் தங்கள் அறிமுகம் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்திக்கள் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களளயும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Mano.G.
17-06-2005, 10:14 AM
முதலில் உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் அறிமுகத்திலிருந்து
உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்
என்று நினைக்கிரேன்


மனோ.ஜி

மன்மதன்
17-06-2005, 11:27 AM
ஸ்ரீதரை அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

Sridhar
18-06-2005, 07:23 AM
என்னை வரவேற்ற அனைத்துள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..