PDA

View Full Version : நான் யார்...? புதிய தொடர்....Sridhar
16-06-2005, 08:48 AM
அன்பு நண்பர்களே..
நான் என்னுள் தேங்கி கிடக்கும் சில நினைவுகளை உஙகளுடன் பகிற்ந்து கொள்ள விரும்புகிறென்

நான் யார்..? கேள்விகணைகள் என்னுள் மீண்டும் மீண்டும் ரிஙகாரம் இட்டுகொண்ட்ருந்தன

ஒவொவ்ரு நாளும் வழ்கை ஓடம் ஓடிகொண்டு இருகும்போதும் நாம் வந்த பாதையை சில நிமிடங்கள் திரும்பி பார்காமல் இருபதில்லை. கடந்து வந்த காலங்கள் வெகு தூரம் நம்மை நோக்கி கை அசைத்து வழி அனுப்பி கொண்டுருகிறது. ஓவ்வொரு நிமிடமும் நம் கையில் இருந்து நழுவி கொண்டு நேற்றய நினைவுகளில் கரைந்து பொகின்றன

Sridhar
16-06-2005, 09:00 AM
கடந்து போன ஒவ்வரு வசந்த காலங்களும் நம் வழ்கையின் ஒவ்வொர் மைல் கல். இளமை என்பது முதுமைக்கு நாம் இடும் ஒரு துவக்க கொடு. நேற்று என்பது நாளையின் அடிவேர்..

நான் இன்று என்ன நன்மை செய்தேன்... கடந்து போன நொடிகள் என்னால் யார் பயன் பெற்றார்.. நான் எதேனும் தீமைகள் செய்தேனா ? கேள்விகணைகளை நமக்குள் கேட்டு பாருங்கள்...

மீண்டும் தொடரும்... ... by Sridhar

pradeepkt
16-06-2005, 09:22 AM
அடேயப்பா.. ஆரம்பமே அமர்க்களமாயிருக்கிறதே.
ஸ்ரீதர், உங்களுக்கு நல்வரவு.
உங்கள் அறிமுகத்தை "அறிமுகம்" பகுதியில் போடுங்களேன்.

அன்புடன்,
பிரதீப்

Sridhar
16-06-2005, 09:41 AM
நம்மில் பலர் காலத்தின் வேகத்தில் ஓடும்போது சுற்றமும் சூழலும் சுக்கு நூறக்கபடுகிறது.. நான் என்ற அகங்காரம் நம் கண்ணை வண்டி குதிரை போல் ஒட வைக்கிறது...

ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால்.... சற்று சிந்தித்து பாருங்கள்...
நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு எழுதி முடிக்கபட்ட புத்தகம்.. இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில்... நாளை என்பது ஏற்கனவே நிற்ணயிக்கபட்ட நிமிடம்.... " நான்" என்று நம்மை ஆட்கொள்ளும் நம் மனது நம்மால் தான் எல்லாம் நடந்தது என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

இங்கே "இந்து" இல்லை "கிருத்துவன்" இல்லை "முசல்மான்" இல்லை.... எல்லம் நமக்கு அப்பற்பட்ட ஒரு அற்புத ஸக்தி... ..

எனக்கு கறுப்பு வண்ணம் பிடிக்கும்,
எனக்கு சிவப்பு வண்ணம் பிடிக்கும்,
எனக்கு மஞ்ஜள் வண்ணம் பிடிக்கும்,

என்பது அவரவர் இஷ்டம்.. அதுபோல தான்.. நமக்குள் நாம் ஏற்படுத்திகொள்ளும் விருப்பு வெறுப்புகள்... விஸ்வாசங்கள்

இயற்கை என்பது நமக்கு எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை... நான் பணக்காரன் என்பதால் என் அருகே வெயில் சுடுவதில்லையா..? மழை தான் என் சொல் பேச்சு கேட்டு நிற்கின்றதா... பரந்து கிடக்கும் இயற்கை நம்மை பாரபட்ச்சமின்றி பார்க்கும்பொது.. நம்ம் பார்வையில் மட்டும் ஏன் எதானை பாரபட்ச்சம் ????

pradeepkt
16-06-2005, 09:51 AM
ஸ்ரீதர்,
நீங்கள் சொல்லும் கருத்துகள், கேள்விகள் எல்லோர் மனதிலும் உதித்துவிட்டால், அக்கேள்விகளுக்கு பதில் தேடும் உத்வேகம் எல்லாருக்கும் வந்துவிட்டால், உலகத்தில் சுபிட்சத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது.
நம் விருப்புகள் நம்மைச் சுற்றி மட்டும் இருந்து விட்டால் பரவாயில்லை. ஆனால், மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவைகளைச் சார்ந்திருக்கவே பழகியிருக்கிறான். எனவே அவனது விருப்புகள், வெறுப்புகள் அவனைச் சுற்றி இருப்பவற்றையும் சேர்த்துதான்.

இன்னும் இத்தலைப்பில் நிறைய பேசலாம்.

karikaalan
16-06-2005, 10:30 AM
ஸ்ரீதர்ஜி

நல்ல எண்ணங்கள். தெளிவாக எழுதுகிறீர்கள். எழுத்துப்பிழைகளைக் களைந்துவிடுங்களேன்.

மழையைப் பற்றிப் பேசும்போது, வள்ளுவர் சொன்னதை நினைவுகூர்கிறேன்:

"தெய்வம் தொழாஅள் கொழுநர் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை".

===கரிகாலன்

பரஞ்சோதி
16-06-2005, 10:58 AM
வாங்க நண்பரே!.

உங்கள் பெயரை தட்டச்சு செய்ய சிரமாக இருக்கிறது.

உங்கள் பதிவு மேலும் மேலும் படிக்க ஆவல் கூடுகிறது.

pradeepkt
16-06-2005, 11:02 AM
அண்ணா SR அப்படின்னு எகலப்பைல அடிச்சாலே ஸ்ரீ வந்திரும்.

பரஞ்சோதி
16-06-2005, 11:23 AM
தம்பி வருகிறது, ஆனால் பார்க்க சரியானதாக இல்லை.

gragavan
16-06-2005, 02:33 PM
ஸ்ரீதர், நல்ல பதிவு. நல்ல கேள்விகள். உங்கள் கேள்விகளுக்கு தமிழறிஞர்கள் பல்லாண்டுகள் பாடுபட்டு விடை சொல்லியிருக்கின்றார்கள். நீங்கள் தமிழிலுள்ள அற நூல்களைப் படிப்பது மிக அவசியம். தமிழில் சொல்லப்படாத பொருட்களே இல்லை. நிறைய இருக்கின்றன. வள்ளலார் சொன்னார். "கடை விரித்தேன். கொள்வாரில்லை." அப்படித்தான் தமிழும் கடை விரித்திருக்கிறது. கொள்வாரில்லை. விளைவு? கடையைப் பூட்ட வேண்டியதுதான்.

இயற்கை பாகுபாடின்றி பார்க்கையில் நம் பார்வையில் ஏன் பாகுபாடு என்பது கேள்வி.

நீங்கள் இயற்கை என்பதை வள்ளுவர் இறைவன் என்கிறார். வேண்டுவார் வேண்டாதார் இலான் என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்.

இறைவன் யார்? அனைத்தையும் கடந்து...அனைத்திற்கும் உள்ளிற்பவன். அதனால் அவன் கடவுள். பாருங்கள் கடவுளுக்குப் பெயர் வைக்கும் பொழுது கூட தமிழ் சிந்தித்தே வைத்திருக்கிறது.

இறைவன் கடவுள்ளாக இருப்பதால்தான் அவரால் பாகுபாடு இல்லாமல் இருக்க முடிகிறது.

நாம் அப்படியா? இருப்பது ஆறறிவுகள்தான். விலங்குகளுக்கு ஐந்தறிவு. நமக்கு அதிமாக இருப்பது பகுத்தறிவு. அது இருப்பதால்தான் நம்மால் விலங்களை விட மேலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆறு அறிவுகளோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதற்கு மேலான ஒன்று மெய்யறிவு. அது அடியவர்களுக்கும் நல்லன்பர்களுக்கும் மட்டுமே ஆண்டவன் வழங்குவது. இந்த விஷயத்தில் ஆண்டவன் பாத்திரம் அறிந்துதான் பிச்சை போடுகிறான்.

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் உணர்வித்ததுதான்...அவ்வாறு ஒருவர் அறிகின்றதலால்" என்கிறார் அருணகிரி. முருகனே மெய்யறிவை உணர்வித்தான். அப்படி அவனாக வந்து தந்திராவிட்டால் அதை அடைய முடியாது என்பது இதன் பொருள். மெய்ப்பொருளைத் தேடிச் சென்று புத்தர் பெற்றார். மோசசுக்கு பத்து கட்டளைகளை ஆண்டவர் தந்தார். மெய்யறிவு என்பதை நாம் தேடலாம். ஆனால் தருவது என்பது ஆண்டவன் கைகளில் மட்டுமே இருக்கிறது.

அப்படி மெய்யறிவு பெற்ற அன்பர்கள் எந்தப் பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். "உலகம் உவப்ப" என்கிறார் நக்கீரர். "உலகம் உய்ய" என்கிறார் கச்சியப்பர். ஒரு மொழியினருக்காக கேட்கவில்லை. ஒரு நாட்டுக்காரர்களுக்குக் கேட்கவில்லை. உலகத்திற்காக கேட்கிறார்கள். காரணம் இவர்கள் பெற்ற மெய்யறிவு.

மெய்யறிவு என்ற ஒன்று இல்லாத வரையில் எல்லாம் பொய்யறிவுதான். அந்தப் பொய்யறிவு கொண்டு நான் பார்த்தால் பாகுபாடு தவிர்க்க இயலாது.

பகுத்தறிவையும் பொய்யறிவு என்று எப்படிச் சொல்கிறோம் தெரியுமா? அணுவின் உட்பொருட்களை முதலில் ஒருவர் கண்டு சொன்னார். ஆகா என்று உலகம் பாராட்டியது. பின்னால் வந்தவர் அதைத் தவரென்று நிருபித்து இன்னொரு வடிவம் காட்டினார். ஆக முன்னால் உண்மையாக இருந்தது பின்னால் பொய்யானது. இருவரும் அணுவைப் பகுத்துதான் அறிந்தார்கள். ஆனால் மூன்றாமவர் வந்து அதையும் பொய்யென்றார்.

மெய்யறிவு பெற்று உய்வதே வாழ்க்கை. புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

pradeepkt
17-06-2005, 10:33 AM
அடேயப்பா, இந்தச் சிங்கங்களின் விவாதத்தில் நான் ஓரமாக நின்று பார்ப்பதே நல்லது. அருமை ராகவன், நன்றாகச் சொன்னீர்கள்.
ஸ்ரீதர், ராகவன் சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற தலைப்பில் அருணகிரிநாதரின் கந்த புராணத்திற்கு விளக்கம் எழுதி வருகிறார். அதில் இது போல் இன்னும் ஆயிரம் சொல்லி இருக்கிறார்.

உங்கள் தேடலுக்கு என் வாழ்த்துகள்.

Sridhar
18-06-2005, 05:26 AM
நண்பரே... நான் என்னுள் கேள்விகள் கேட்டுகொண்டு.. ..அதற்கு என்னல் ஆன விடைகளையும் அறிந்து கொன்டதன் விளைவு தான் இந்த வரைஓவியம்...

Sridhar
18-06-2005, 05:43 AM
அத்துடன்.. ஒரு முக்கியமான தகவலையும் யாவருக்ம் நல்க நினைகிறேன்...

" நான் தமிழன் அல்ல..." தமிழை நேசிக்கும் ஒரு கேரள மைந்தன்..." ஆதனால் நான் வரையும் இவோவியும் சில வண்ண பிசகுகள் இடை வரலாம்... .. தயவு செய்து பொறுத்து கொள்ளவும்....

Sridhar
18-06-2005, 06:53 AM
மீண்டும் தொடர்கிறேன்...

நாம் நமக்குள் ஒரு சிறிய சோதனை செய்து கொள்வோம்... சற்று இமைகளை மூடி கொள்ளுங்கள் ஒரு நிமிடத்திற்க்கு... இப்பொது உங்கள் நினைவுகளை என்னொடு விடுங்கள்...
ஒரு பரந்த பச்சை பசேல் பட்டாடை உடுத்த புல் வெளியில் .. பனி துளிகளின்... போர்வையில்...வண்ண ..வண்ண கிளிகளும், குருவிகளும் ராக உலகில் புதிய தாளங்களையும் ராகங்களையும் பாடி கொண்டுருக்க... அதன் நடுவே... நீங்கள் மெல்ல நடந்து கொண்டுருகிறிர்கள்...... உங்கள் முகத்தில் மென்மையான குளிர்ந்த காற்று பனி துளியின் வாடையுடன் தழுவி தாலாடுகிறது.... ( நிச்சயமாய் உங்கள் உடல் சிலிற்திருக்கும்... கண் மூடி அன்பவித்திருந்தால் )

இப்போது நீங்கள் கற்பனை உலகை விட்டு உஙகளின் நிஜ உலகினை சுற்றி பாருங்கள்....

நீங்கள் கண்ட கற்பனை ஓவியம் உஙகள் மனதினை எத்தனை மகிழ்வித்தது... .. இதே போல் மோசமான நினைவுகளால் உங்கள் மனம் அளவிலா சன்சலம் கொள்கிறது.... ..

இங்கே உங்கள் உடல் அல்ல மனது தான் மனதின் போக்கை தீற்மானிக்கிறது..

பரஞ்சோதி
18-06-2005, 11:44 AM
அத்துடன்.. ஒரு முக்கியமான தகவலையும் யாவருக்ம் நல்க நினைகிறேன்...

" நான் தமிழன் அல்ல..." தமிழை நேசிக்கும் ஒரு கேரள மைந்தன்..." ஆதனால் நான் வரையும் இவோவியும் சில வண்ண பிசகுகள் இடை வரலாம்... .. தயவு செய்து பொறுத்து கொள்ளவும்....

ஆகா, அருமை,

அடுத்தவர் மொழியை நேசிக்கும் உங்களின் உயர்ந்த பண்புகளை நாங்களும் கண்டிப்பாக நேசிப்போம்.

பரஞ்சோதி
18-06-2005, 11:47 AM
மீண்டும் தொடர்கிறேன்...


இங்கே உங்கள் உடல் அல்ல மனது தான் மனதின் போக்கை தீற்மானிக்கிறது..

அருமையான செயல்முறை விளக்கம்.

நான் இதை பலமுறை அனுபவத்திருக்கிறேன், வேறு விதங்களில்.

எதிரே யாருமே வராத கானகத்தில் அமைதியாக, மெதுவாக, பறவைகளின் சப்தத்தையும், காற்றில் எழும் இசையையும் கேட்டுக் கொண்டே, நடந்து, நம்முடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தை திட்டமிட்டே நடக்கும் போது கிடைக்கும் இன்பம் இருக்கிறதே, ஆகா அற்புதமானது.

இங்கே தான் தனிமை இனிமை கொள்ளும்.

karikaalan
18-06-2005, 12:14 PM
ஸ்ரீதர்ஜி

இப்போத்தான் 45 டிகிரி வெய்யில்ல இரண்டு மணி நேரம் அலைந்து விட்டு வந்தேன். உங்க பதிப்பைப் பார்த்து கண்களை மூடி ரசித்தேன். தங்களுக்கு வந்தனம். மேலும் எழுதுங்கள்.

===கரிகாலன்

Sridhar
18-06-2005, 01:00 PM
நாம் ஒவ்வருவரும் நமக்குள் கலந்து ஒளிந்து இருக்கும் ஒரு ஆன்மீக சக்தியை உணர வெண்டும்... ஆம்... அந்த சக்தி தான் நம் மானுஷ இயந்திரத்தின் மின்சாரம்.

இந்த மானுஷ இயந்திரத்தின் கால கலவை தான் என்ன...?
உங்கள் வாழ்கையில் மிக அதிகம் மகிழ்ச்சி குடிகொண்ட காலம் எது...?

நம்முள் ஒவொருவரும் ஒரு நிமிடம் சிறிது கடந்து போன காலத்தை சிந்தித்து பாருங்கள்...

நிசயமாய்... 90% பதில்...
நமது பள்ளி பருவம் முதல் கல்லுரி காலம் வரை...
அது தானே உண்மையும் கூட..!!. அந்த பருவதில் என்ன சுமைகளை கண்டோம்.... ஆடிதிருந்த அந்த காலம் திரும்ப கிடைக்குமா என்று நாம் ஒவ்வருவரும் ஏஙகாத நாளிருக்காது.....

Sridhar
18-06-2005, 02:12 PM
நாளை என்ற கனவும் இல்லை.. நேற்று என்ற நினைவும் இல்லை... ..
சின்ன சின்ன சண்டைகள்....
சின்ன சின்ன உரசல்கள்...
சின்ன சின்ன உறவுகள்...
சின்ன சின்ன அரும்பு காதல்கள்...
சின்ன சின்ன குறும்புகள்..
சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது தவிகும் ஒரு நென்ஞின் போராட்டம்..

அங்கே... ஒவ்வொரு நண்பனுக்க்ம் நண்பிக்கும் சொல்லாமல் மனதில் கொண்டு நடந்த எந்தனை அரும்பு காதல் ஒவியம் வரையப்படாமலே வாழ்க்கை ஓடத்தில் கரைந்து போயின..... ஒவ்வொருவருக்கம் அந்த "வலி" சிறிதேனும் காணமல் இராது...

அங்கே ... அரும்பும் அந்த இதயத்தின் படபடப்பு.... "காதல் தானா...?" அல்லது அந்த இளமைக்கே உரித்தான ஒரு இளங்கால மாற்றமா..?... ஏன் அந்த இதய படபடப்பு.. அந்த பருவம் போன பின் வராமல் போனது... ..

அந்த வாழ்கையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மை மேண்டும் சந்திகும் போது.. நெஞ்ஜில் நம்மை அறியாமல் ஒரு வலி மறைந்து போவதை நாம் மறுக்க முடியாது.... நாம் பேரூந்தில் பயணிகும் போதும், நடை பாதையில் போகும் போதும் .. நம் முன்னே காணும் அந்த பள்ளி மற்றும் கல்லுரி விடலை பருவங்கள் நம்மை நம் பழைய கால நினைவுகளை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கிறது

Sridhar
19-06-2005, 06:16 AM
காதல்....
எவராலும் வரையறுக்க முடியாத்த ஒரு உலக மகா நாவல்....
செய்முறை விளக்கம் இல்லா ஒரு வழ்கை பரிக்க்ஷை..
இதயங்களை கட்டிபோடும் ஒரு மந்திர கயிறு
ரத்த ஓட்டங்களின் ஒரு ரகசிய சங்கமம்..
கண்களால் பேசப்படும் ஒரு மின்னல் அஞ்ஞல்..
காவியஙகளின் ஒரு தொடர் கதை..
உருவங்கள் மாய்ந்து... உணர்வுகளின் உரசல்கள்..
ஊமைகளின் வானொலி நிலயம்.....
இதயங்களால் ஏற்படும் வழி தடங்கல்கள்..
கவிஞ்ஞனாகும் கலை கூடம்..
பார்வைகளின் மோதல்களால் நொறுக்க படும் ஞயிறுகள்..
முள்ளில்லா கடிகாரம்......
ரத்தமின்றி நடக்கும் ஒரு இதய அறுவை சிகிச்சை...
பாலைவனத்தில் தென்படும் ஒரு பசும்பொன் சோலை

Sridhar
19-06-2005, 01:51 PM
இந்த காதல் தான்.. ..
மானிட உலகின் வாழ்கை சக்கரம்...
இந்த பூமியின் புவியீற்பு சக்தி...

காதலின் பார்வை தான் எத்தனை வகை..

மழலையின் சிரிப்பிலே காதல்....
பூக்களின் மலற்ச்சியில் காதல்...
பனி துளியின் சிலிற்பிலே காதல்...
ஞாயிறு ஒளியிலே காதல்..
நிலவின் குளிரிலே காதல்..

பரஞ்சோதி
20-06-2005, 04:34 AM
இத்தொடரில் தனியாட்சி நடத்துறீங்க நண்பரே!.

படிக்க படிக்க இனிமையாக இருக்கிறது.

gragavan
20-06-2005, 05:18 AM
ஸ்ரீதர் அருமையான பதிவுகள். உங்கள் அரசாட்சிதான் இங்கே நடக்கின்றது.

மலையாளம் உங்கள் தாய்மொழி என்று கூறியிருந்தீர்கள். தமிழ் மீதுள்ள அன்பிற்கு வந்தனங்கள். தமிழும் மலையாளமும் ஒன்றுதான் நண்பரே. சேரநாடுதானே.

அன்புடன்,
கோ.இராகவன்

Sridhar
20-06-2005, 05:51 AM
நன்றி நண்பர்களே....
உங்கள் ஒவ்வுருவரின் வரிகளும் என்னுள் செலுத்தப்படும் புது ரத்த ஊற்று....

Sridhar
20-06-2005, 06:23 AM
காதல் என்பது நம் வழ்வில் ஒன்றி போன ஒன்று...

நாம் வழ்வின் ஒவ்வோர் அசைவையும் காதலிக்கிறோம்..
விந்துக்களின் கைகலப்பில் புது ஜென்மத்தை காதலிகிறோம்..
உருவாகும் உலகத்தில் கர்பலோகத்தை காதலிகிறோம்...
உண்ர்ச்சிகளுக்காக பொக்கிள் கொடியை காதலிகிறோம்...
பத்து மாதம் கர்ப உலகை காதலிக்கிறோம்...
நிஜ உலகில் முதலில் அழுகையை காதலிக்கிறோம்...
அன்னையின் அரவணைபை காதலிக்கிறோம்...
முதல் உணவான முலை பாலை காதலிக்கிறோம்...
நாட்களின் பாய்சலில் மழலை சிரிப்பை காதலிக்கிறோம்...
மெதுவாய் சொந்தங்களை காதலிக்கிறோம்...
கால ஓட்டத்தில் நடை பழகும்போது பூமியை காதலிக்கிறோம்...
எழுத்துகளை காதலிக்கிறோம்...
பள்ளியை காதலிக்கிறோம்...
படிப்பை காதலிக்கிறோம்...
விடலை பருவத்தை காதலிக்கிறோம்...
திருமண வயதை காதலிக்கிறோம்...
திருமதியை காதலிக்கிறோம்...
பிள்ளைகளை காதலிக்கிறோம்...
வழ்வின் முடிவில் முதுமையை காதலிக்கிறோம்...
முதுமையின் முடிவின் மரணத்தை காதலிக்கிறோம்...

ஒரு வாழ்க்கை சக்கரம் இப்படியே காதல் என்ற அச்சில் சுழன்று கொண்டே இருக்கிறது.

Sridhar
20-06-2005, 09:01 AM
வாழ்க்கை சக்கரம் என்று சொன்ன போது தான் நினைவு வருகிறது....ஒரு சிறு கதை..

ஓரு நாள் துறவி ஒருவரிடம் .. அவரின் சீடர்களில் ஒருவர்...

பெருமானே... மனிதனின் வழ்கையின் நீளம் ஏன் இத்தனை ஆண்டுகள்... அதனால் தானே அவன் பல துன்பங்களை அனுபவிக்கிறான்......?

துறவி .. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்...

அன்பா...இறைவன் சகல ஜீவ ராசிகளையும் படைகும் போது ..

முதலில் மனிதனை படைத்தான்..
பின்.. குதிரையை படைத்தான்..
அதன் பின் கழுதையை படைத்தான்..
பின் நாயை படைத்தான்..

அனைத்திற்கும் சமமாக 20 ஆண்டுகள் கால அளவை நிற்ணயித்தான்..
அப்போது மனிதன் மட்டும் இறைவனிடம்...

இறைவா நான் 20 ஆண்டுகால அளவில் என் வாழ் நாளை அனுபவிக்க முடியாது.. அதனால் எனக்கு கூடுதல் காலம் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினான்..

அப்போது இறைவன்.. .. மனிதா.. உனக்கு அளித்து இருக்கும் இந்த 20 ஆண்டு கால அளவு நீ சந்தோஷமாக வாழ்ந்து கழிக்கத்தான்.. என்றார்..

அப்பொது மனிதன்... மீண்டும் அவரிடம் மன்றாடினான்.. .

அதனால் இறைவன் .. எனக்கு உன்வாழ் நாளின் கால அளவை அதிகரிக்க மற்ற் ஜீவ ராசிகளின் கால அளவிலிருந்து சிறிது கால அளவை உன் வழ்வில் கூட்டுகிறேன்.. .. அதன்படி.. முதல் 20 வருடம்.. உன் சொந்த கால அளவிலும்.. அடுத்த கால அளவு 20 வருடம் குதிரையிடம் இருந்தும்.. மேலும் வேண்டும் என்றால்.. கழுதையிடம் இருந்தும் .. மேலும் வெண்டும் என்றால்.. நாயிடம் இருந்தும் தருகிறேன் ஏன்றார்..

மனிதன் மிக்க மகிழ்ச்சியுடன் சம்மதிதான்..

அதனால் தான் இன்று மனிதன்.. முதல் 20 வருடம்.. கவலைகளை மறந்து .. தன் வாழ்வை அனுபவிக்கிறன்.. அதன் பின்.. வாழ்கை ஓடத்தில் பணம் என்ற புல்லை தேடி 40 வயது வரை குதிரையை போல் ஓடி கொண்டிருகிறன்.. 40 முதல் 60 வயது வரை.. கழுதையை போல் குடும்பம் , பிள்ளைகள் என்று சுமை தாங்கியாய்.. வாழ்க்கையை தள்ளி விடுகிறான்.. 60 வயதிற்க்கு மேல்.. வீடு நாயை போல் .. முதுமையின் வயிலில் வீட்டிலே முடங்கி கிடக்கிறான்..

அந்த துறவியின் இந்த.. இந்த வியக்கியானம்.. நாம் .. நம்முள் கண்டு கொண்டிருக்கும் நாம் தான்...

thempavani
20-06-2005, 09:53 AM
அருமையான தத்துவம் நண்பரே..

Sridhar
20-06-2005, 02:51 PM
பெண்....... ஜீவ நாடிகளின் உயிர் துடிப்பு.......

தாயாய்.... தமக்கையாய்......தாரமாய்.... தளிற் மகளாய்...

உலகின் ஒட்டுமொத்த சக்தியாய் வலம் வருகிறாள்.....

அவள்தான்....
உன் வாழ்கையின் வழிவிளக்கு
உன் இதய துடிப்பின் நுண்னோசை...
உன் ஸ்பரிஸத்தின் முதல் சொந்தம்..
உன் கண்ணொளியின் வெளிச்சகீற்று....

அவள்தான்....
நீ அழ கற்று தந்தவள்
நீ சிரிக்க கற்று தந்தவள்..
நீ நடக்க கற்று தந்தவள்
நீ பேச கற்று தந்தவள்

அவளின் உணர்வுகளால் தான் உன் பார்வை உலகை நோக்குகிறது..
அவள்....உன் முன்னேற்ற பதையின் வழித்துணைவி.....

ஜீவா
21-06-2005, 03:56 AM
ரொம்ப அருமையாக இருக்கிறது ஸ்ரீதர்..

gragavan
21-06-2005, 04:23 AM
ஸ்ரீதர்...இதுவே ஒரு அருமையான கவிதை போல இருக்கிறது. தொடருங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

அருணகிரி கண்டு பிடித்த Two-In-One
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=108651#post108651

pradeepkt
21-06-2005, 05:47 AM
பெண்ணே உலகின் சக்தி - சந்தேகமில்லை.
பெண்ணில்லாத ஆண் வாழ்க்கைக்கு உதாரணம் சொல்ல உலகில் ஏதுமில்லை.
பெண்ணுக்கு ஆண் சார்பும், ஆணுக்குப் பெண் சார்பும் மிக அவசியம்.
அருமையாகப் பதிகிறீர்கள் ஸ்ரீதர்.
எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

Sridhar
21-06-2005, 01:41 PM
நமக்குள்ளே நாம் கேள்விகணைகளை தொடுக்கும் போதுதான் எத்தனை கேள்விகள் கேள்விகளாகவே பொகின்றன...

நாம் விழித்திருக்கும் ஒரு நொடி பொழுதுகூட நம் மனம் அலைபாயமல் இருந்தில்லை... நினைவுகள் ஒரு நிலையிலாமல் ஓடிகொண்டே இருகின்றன..
இந்த மனம் ஒரு நிமிடம் .. அல்ல.. ஒரு வினாடி.... அல்ல.. ஒரு குறும் வினாடி..எதும் சிந்திக்காமல் இருந்தால்.. நாம் ஞானி ஆகிவிடுவோம்..

நான் பெண்ணை பற்றி முன்பே பல கருத்துகளை பரிமாறி உள்ளேன்.. அவள் ஒரு பளிங்கு பாத்திரம்... அவளின் மனது ஒரு கண்ணாடி மாளிகை... அங்கே ஒரு சிறு கீறல் ஏற்பட்டாலும் அதன் மதிப்பு குறைந்துவிடுகிறது.... பாதுகாக்க படவெண்டிய ஒரு பொக்கிஷம்..

உதாரணமாக..... நீங்கள்.. உங்கள் நண்பியிடமோ, மனைவியிடமோ ... ஒரு பொய்யை சொல்லி பாருங்கள்.. அந்த பொய் அவர்களால் அறியபடும்போது.... அந்த ஒரு பொய்யினால் உஙகளின் உண்மைகள் அனைத்தும் கண்ணாடி பிம்பம் போல் அவர்களின் பார்வையில் பொய்களாகவே பிரதிபலிகின்றன...

இந்த உண்மையை நீங்கள் ஒவ்வருவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்திருபீர்கள்..

இது பெண்மையின் அறியப்படாத்த ரகசியம்...

ஆண் எப்படி உடலால் பலவானாக திகழ்கிறானோ... அதே அளவு பெண் மனதால் ஆணை விட மிக்க பலசாலியாக திகழ்கிறாள்

Sridhar
22-06-2005, 09:50 AM
இவ்வுலகில் நண்பர்கள்.. அல்லது நண்பிகள் ... என்பது.. ஒவ்வொரு தனி மனிதனின் இதய பிரதிபலிப்பு.... அவனின் முகக்கண்ணாடி....

நீ உன் நண்பனை காட்டு.. .. நான் உன் மனதை வாசிக்கிறேன்...

நீ வாழும் இவ்வுலகில் வசந்தங்களும் ... முகாரிகளும் வந்து போகலாம்...

வசந்தம் வரும்போது உன்னை சுற்றி ஆயிரம் நட்சத்திர கண்களுமாய் உன் சொந்தங்கள் கூடி நிற்கும்..

வாழ்வின் ராகம் முகாரி ஆகும்போது ... அந்த கூட்டம் எங்கே..? அங்கே நிலைக்கும் சில நட்சத்திரங்கள் மட்டும் தான் உன் வழ்கை பாதையின் நெடுனாள் துணை..


உன் தாய் உன் உணர்வை புரிந்துகொள்பவள்...
உன் மனைவி உன் உள்ளதை புரிந்து கொள்பவள்..
உன் நண்பன் உன்னையே புரிந்துகொள்பவன்..

உணர்ச்சிபூர்வமான உள்ளங்களின் ஒரு கலந்தோடல் தான் ... நட்பு..

அது
உன் அழகை பார்த்து வருவதில்லை..
உன் அறிவை பார்த்து வருவதில்லை..
உன் பணத்தை பார்த்து வருவதில்லை..
உன் உள்ளத்தை மட்டும் பார்த்து வரும் ஒன்று

gragavan
23-06-2005, 04:51 AM
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பதே நட்பு - இந்தக் குறளுக்கு விளக்கமாக உள்ளது உங்கள் பதிப்பு.