PDA

View Full Version : பேரினவாத அரசாங்கம் அமைப்பதற்கு ஜே.வி.பி அ



இளையவன்
16-06-2005, 02:06 AM
அரசாங்கத்தில் இருந்து விலகுவதென்ற தமது முடிவை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களின் முன்பு ஜே.வி.பி எனப்படும் பேரினவாதக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆற்றிய உரை.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது.


கண்டியில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிக இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் பேசியதாவது:

இன்னும் சில மணிநேரங்கள்தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு நாங்கள் உயிர்கொடுத்திருக்க முடியும். இன்னும் சில மணிநேரங்களில் புதிய கூட்டமைப்பை நாம் உருவாக்குவோம். நேற்றைய தவறுகளை திருத்திக் கொள்வதற்காக இன்னும் நேரமிருக்கிறது. ஆனால் புதிய சூரியன் உதயமாவது உறுதி.

புதிய கூட்டமைப்பானது சரி மற்றும் தவறுகளுடன் உருவாகலாம். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் உள்ள நாட்டை நேசிக்கும் சக்திகள் இப்போது முடிவெடுக்க வேண்டிய நேரம். நாட்டைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.

பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடுமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அறிவுரை வழங்குகிறார். புதன்கிழமை நள்ளிரவுக்குள் ஜனாதிபதி சாதகமான முடிவை மேற்கொண்டால் அடுத்த ஆண்டு அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் ஒரு தம்ளர் பால் இலவசமாக வழங்கப்படும்.

நோர்வே தூதுவர்கள், பொதுக்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவிடாது தடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக அஸ்கிரிய மகநாயக்கர் உடுகம சிறீ விபசி தேரரைச் சந்தித்த சோமவன்ச அமரசிங்க, பொதுக்கட்டமைப்பை ஏன் எதிர்க்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுமைக்குமே இந்தப் பொதுக்கட்டமைப்பு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் சோமவன்ச அமரசிங்க இச்சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும், பொதுக்கட்டமைப்புப் படி சிங்களர் பிரதிநிதியாகத்தான் அரசுத் தரப்பு உள்ளது. ஆனால் சிங்களவரின் பிரதிநிதி மட்டுமல்ல. பொதுக்கட்டமைப்பு பிரதேச குழுக்களில் விடுதலைப் புலிகளின் ஐந்து பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தப் பொதுக்கட்டமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுமே இடம்பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் சோமவன்ச அமரசிங்க கூறினார்.

அமரசிங்கவின் கருத்தை ஏற்பதாகக் கூறிய மகாநாயக்கர், இருந்தபோதும் பொறுப்புணர்வோடு ஜே.வி.பி. போராட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக ஜே.வி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன.

நன்றி: புதினம்

அறிஞர்
16-06-2005, 03:38 AM
ஒரு புதிய சூரியன் உதிக்கும் நாளை ஆவலுடன் நோக்குகிறோம்......

எல்லா முயற்சிகளும் தமிழருக்கு நன்மை பயக்க கடவுளை வேண்டுவோம்.

பிரியன்
16-06-2005, 04:46 AM
கண்டிப்பாக. எனது பிராத்தனையும் இணைத்துக் கொள்கிறேன். நிவாரணம் தமிகழ் மக்களுக்கு போய் சேர முட்டுக்கட்டை போடும் ஜேவிபியின் செயல் மனிதாபிமானமற்றது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்.