PDA

View Full Version : 100 ரூபாய்க்கு பென்ஸ் கார்

Iniyan
15-06-2005, 02:52 PM
ஒரு 16 வயதுப் பையன் ஒரு நாள் அவன் வீட்டிற்கு புத்தம் புதிய பென்ஸ் காரை ஓட்டிக் கொண்டு வந்து இறங்கினான். பார்த்த பெற்றோர்களுக்கோ கோபமான கோபம்.

"உனக்கேதுடா இந்த காரு? "

"இத நான் இப்பத் தான் வாங்கினேன்"

"என்னது. இந்த கார நீ வாங்கினியா? "

"ஆமாம்மா"

"டேய் பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு இருக்கு. பென்ஸ் காரு என்ன வெலைன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நெனச்சியா? உனக்கேது அவ்ளோ காசு?"

"சத்தியமாம்மா. 100 ரூபாய்க்கு இந்த பென்ஸ் கார அடுத்த தெருவில இருக்க ஆண்ட்டிதான் எனக்கு வித்தாங்க"

100 ரூபாய்க்கு ஒரு பெண் பென்ஸ் காரை இவனிடம் விற்றிருக்கிறாள் என்றால் ஏதோ வில்லங்கம் தான் என முடிவெ செய்து உடனே அப்பா அம்மா இருவரும் அவசரம் அவசரமாக அடுத்த தெருவில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க போனார்கள். அந்த வீட்டில் இருந்த பெண் அமைதியாக தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி செய்தாய் என இருவரும் கேட்டார்கள்.

"அது என் புருசன் காரு தான். ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் சரியாதான் இருக்கும். செக் பண்ணி பாத்துக்கங்க. ஏன் வித்தேன்னா கேட்டீங்க. என் புருசன் போன வாரம் ஆபீஸ் வேலையா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு போனார். ஆனா நேத்து தான் அவரு அவங்க ஆபீசுல வேலை பாக்குற வேற ஒடு பொண்ணோட ஓடிப் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதுக்கப்பறம் இன்னைக்கு காலைல அவர் எனக்கு போன் பண்ணி ஆபீஸ் வேலையா போன இடத்துல அவரோட சூட்கேஸ், பர்ஸ் எல்லாம் திருடு போய்ட்டதால அங்கேர்ந்து இங்க வர தேவையான பணத்துக்காக அவரோட கார வித்து அவருக்கு பணம் அனுப்பச் சொன்னார். அதனால தான் வித்தேன்".

சுவேதா
15-06-2005, 10:50 PM

:D :D

பரஞ்சோதி
16-06-2005, 05:15 AM
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

gragavan
16-06-2005, 05:22 AM
பழிக்குப் பழி. பழி வாங்கிய புலி.......

மன்மதன்
16-06-2005, 05:31 AM
பழிக்குப்பழி வாங்கின மாதிரி தெரியலை.. அம்மாஞ்சி ஆண்ட்டி மாதிரிதான் தெரியுது..:D :D
அன்புடன்
மன்மதன்
(இனியன் - ஃபாண்ட் செக் பண்ணுங்க. Times New Romanல இருக்கு. )

அறிஞர்
16-06-2005, 05:38 AM
அருமை.. இது மாதிரி நல்ல பொருத்தம் அமைவதெல்லாம்....

raj144
01-10-2005, 01:32 PM
பென்ஸ் கார் இருக்கும் தைரியத்தில்தான் பெண்ணேடு போய்விட்டார் நல்ல வேலை அதன் முழு விளையில் விற்று பணம் கிடைத்திருந்தால் திரும்பியே வரமாட்டார்.நல்ல காரியம் செய்தாள் அவர் மனைவி.நல்ல வேளை, காரும் காணமல் போய்விட்டது என்று சொல்லமல் விட்டாளே!நல்ல ஜோக் நன்றி வாழ்த்துக்கள்.

பிரசன்னா
01-10-2005, 02:07 PM
அதிட்டகார பையன்

Narathar
02-10-2005, 02:18 AM
அட இப்படியாவது நமக்கொறு பெண்ஸ் கிடைக்குமா?

ஓவியன்
26-10-2007, 01:32 PM
அடடே அடடே!

இப்படி ஒரு அதிஸ்டம் அடித்தால் பென்ஸ் கார் என்னா பிளைட்டே வாங்கிப் போடலாம் போலிருக்கே...??? :D:D:D

ஜெயாஸ்தா
26-10-2007, 02:18 PM
நல்ல நகைச்சுவை நன்றி...! நான் முதலில் தலைப்பை படித்ததும் நம்ம 'பென்ஸ்' காரோன்னு நினைச்சேன்....!

சூரியன்
26-10-2007, 03:29 PM
அந்த மாதிரி இருந்தா சொல்லுங்க வாங்கிடலாம்.

ஓவியன்
26-10-2007, 03:55 PM
நல்ல நகைச்சுவை நன்றி...! நான் முதலில் தலைப்பை படித்ததும் நம்ம 'பென்ஸ்' காரோன்னு நினைச்சேன்....!

ஹீ,ஹீ!!!

நானும் அப்படித்தான் நினைத்து எங்கேயோ தூங்கிக் கொண்டிருந்த திரியைத் தட்டி எழுப்பி வந்தேன்...!!! :D:D:D

praveen
26-10-2007, 03:59 PM
நல்ல நகைச்சுவை நன்றி...! நான் முதலில் தலைப்பை படித்ததும் நம்ம 'பென்ஸ்' காரோன்னு நினைச்சேன்....!

"பென்ஸ்" நம்ம பென்ஸ் தாங்க, அப்படிபட்டவரில்லை, ரொம்ப நல்லவரு, போகும் போது காரையும் ஓட்டிகிட்டு தான் போவாரு.:lachen001:

மனோஜ்
26-10-2007, 04:14 PM
அடடா நாகூட லோன்ல எடுத்துட்டு வரானு நினைத்தேன் இப்பதான் 100 கொடுத்து கார எடத்து லைபுல்லா காசு கட்டவைக்கிறாங்களே அதான்

நல்ல சுவை நன்றி