PDA

View Full Version : இலங்கை முத்தரப்பு போட்டி-இந்தியன் ஆயில் Ĩ



அறிஞர்
15-06-2005, 08:43 AM
இலங்கையில் நடைபெற உள்ள கிரிக்கெட் முத்தரப்பு போட்டிகள் விவரம்.
பகல்-இரவு போட்டி.....

ஜூலை 30 - தம்புலா-இந்தியா-இலங்கை
ஜூலை 31 - தம்புலா-இந்தியா-மேற்கிந்திய் தீவு
ஆகஸ்ட் 2 - தம்புலா-இலங்கை-மேற்கிந்திய் தீவு
ஆகஸ்ட் 3 - தம்புலா-இந்தியா-இலங்கை
ஆகஸ்ட் 6 - கொழும்பு-இலங்கை-மேற்கிந்திய் தீவு
ஆகஸ்ட் 7 - கொழும்பு-இந்தியா-மேற்கிந்திய் தீவு
ஆகஸ்ட் 9 - கொழும்பு-இறுதி போட்டி

பரஞ்சோதி
15-06-2005, 08:48 AM
நன்றி அறிஞரே!

மூன்று அணிகளும் ஒரே தரத்தில் இருக்கின்றன, எனவே போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும்.

நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் இடம் பிடிக்கமாட்டார் என்பது கவலைத் தரும் செய்தி.

டிராவிட் திறமையான கேப்டன் என்பதை நிறுபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

மன்மதன்
15-06-2005, 09:41 AM
திராவிட்டின் தலைமையில் செல்கிறதா.. கங்குலிக்கு என்ன ஆச்சு..:rolleyes: சமீபத்தில் சென்சுரி எல்லாம் போட்டாராமே.. :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன்

அறிஞர்
15-06-2005, 09:43 AM
உலக லெவன், எம்,சி.சி லெவன் போட்டியில் இருவரும் சொதப்பியுள்ளனர்.

இளையவன்
16-06-2005, 02:39 AM
திராவிட்டின் தலைமையில் செல்கிறதா.. கங்குலிக்கு என்ன ஆச்சு..:rolleyes: சமீபத்தில் சென்சுரி எல்லாம் போட்டாராமே.. :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன்
பாகிஸ்தானுக்கெதிரானபோட்டியில் அணி மெதுவாக பந்துவீசியதன் காரணமாக அணித்தலைவர் என்ற முறையில் கங்குலி 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடக்கூடாது என்று ஐ.சி.சி தடைசெய்துள்ளது.

அறிஞர்
26-07-2005, 10:33 AM
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது..
-------
இந்த போட்டி எல்லாம் இரவு-பகல் ஆட்டம். கடற்கரை ஒட்டிய பகுதிய் என்பதால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இரண்டாவது பேட்டிங்க் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு.

இலங்கைக்கு வாய்ப்புக்கள் அதிகம் எனக்கூறப்படுகிறது.

இந்தியாவுடன் முதல் போட்டியில் வாஸ் விளையாடவில்லை
---------
தங்களின் கருத்துக்களை இங்கு அலசலாமே....

அறிஞர்
30-07-2005, 07:43 AM
என்ன அன்பர்களே இன்று முதல் பந்தயம் இந்தியா ஜெயிக்குமா....
---
சொந்த நாடு என்பதால் முதலை பலத்தோடு இருக்கின்றனர் இலங்கை அணியினர்...... முரளிதரன் மிகுந்த பலத்தோடு... பார்மில் இருக்கிறார்...

இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் எனப்பார்ப்போம். டோனி, டிராவிட்டின் பங்கு முக்கியமானது

பரஞ்சோதி
30-07-2005, 07:50 AM
நன்றி அறிஞரே!

இன்றைய போட்டி நல்ல விறுவிறுப்பாக இருக்கும்.

முரளிதரன் ஒரு பிரச்சனையே இல்லை, மேலும் வாஸ் அணியில் இல்லை.

நம்மவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ரன்கள் எடுத்துக் கொடுத்தால் போதும்.

பரஞ்சோதி
30-07-2005, 10:56 AM
இந்தியா விளையாடுகிறது, டிராவிட் 50 அடித்து ஓய்ந்து விட்டார், மற்றவர் ஒற்றை, இரட்டை இலக்கோடு வந்து போயிருக்கிறார்கள். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் வெற்றி கிடைக்கும்.

aren
30-07-2005, 12:36 PM
அதிசயம் எதுவும் நடக்கும் என்று தெரியவில்லை.

பரஞ்சோதி
31-07-2005, 05:17 AM
முதல் ஆட்டம் தோத்தாற்று, அடுத்தது மேற்கு இந்திய அணிகளுடன், அவர்களையாவது வீழ்த்துவார்களா?

aren
31-07-2005, 12:25 PM
நிச்சயம் இன்று வென்று விடுவார்கள் போல் தான் தெரிகிறது. 178 ரன்களிலேயே மேற்கு இந்தியர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்துவிட்டார்கள் நம் இந்திய வீரர்கள். நிச்சயம் இந்தியா வென்று விடும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆட்டத்தில் தோற்றால் அவ்வளவுதான், வெட்கக்கேடு.

அடுத்த ஆட்டத்தில் கங்குலி, லஷ்மன், கும்ளே போன்றவர்கள் களம் இறங்கக்கூடும். யாரை நீக்குவார்கள் என்பது இன்றைய ஆட்டத்தைப் பொறுத்து நிச்சயம் செய்வார்கள்.