PDA

View Full Version : இந்தியா முழுவதும் ஓரே கட்டணம்!!!அறிஞர்
15-06-2005, 08:13 AM
தொழில் நுட்ப மற்றும் தொலைத் தொடர்பு மந்திய மந்திரி தயாநிதிமாறன்.. புரட்சிகரமான செயல்களை செய்கிறார்.

முன்பு தமிழகம் முழுவதும் லோக்கல் காலாக மாற்றி.. மக்களை பெரிதும் கவர்ந்தார்...

அடுத்து ஒரே இந்தியா என்ற நோக்கில்.. எஸ். டி. டி. வசதியில்லாமல் ஒரே விதமான லோக்கல் கட்டணத்தில் பேச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

விரைவில் இது அமலுக்கு வரும் எனத்தெரிகிறது.......

இது போல் வேறு எந்த பெரிய நாடுகளில் அமல்படுத்தியிருக்கிறார்களா எனத்தெரியவில்லை....

gragavan
15-06-2005, 08:47 AM
இது போன்று எந்தப் பெரிய நாட்டிலும் இல்லை. ஆனாப்பட்ட அமெரிக்காவிலேயே ஊரு விட்டு ஊரே காசு அதிகம். இது மட்டும் நடந்தால்........இந்தியா உலகிற்கு ஒரு முன்னோடிதான்.

pradeepkt
15-06-2005, 08:49 AM
இதை மட்டும் தயாநிதி மாறன் வெற்றிகரமாகச் செயல்படுத்துவாரேயானால் தாத்தாவின் பெயர் கொண்டு அரசியலுக்கு வந்தவர், வாரிசு அரசியலின் அகராதி என்ற பெயர்களெல்லாம் புஸ்வாணமாகிவிடும்.
ஏற்கனவே இந்த முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. அதாவது அங்கே லோக்கல் மற்றும் லாங் டிஸ்டன்ஸ் எனப்படும் எஸ் டி டி அவ்வளவுதான். இது அதையும் மீறியது. இதனால் அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிறைய பலன் கிடைக்கும்.
ஆனால் மற்ற தொலைத்தொடர்பு முதலைகள் இதை இப்படியே விடுவார்களா என்பது சந்தேகமே. ரிலையன்ஸ் மற்றும் பாரதி தொலைத்தொடர்பு கம்பெனிகள் பி.எஸ்.என்.எல். தனது செல்பேசி சேவையைத் தொடங்குவதற்குக் கொடுத்த தொல்லைகள் அளவில்லாதவை. அந்த சமயத்திலும் அவர்களோடு போராடி அரசை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர், அப்போதைய தொலைத் தொடர்புத்துறை இணை அமைச்சர், தமிழர், திருநாவுக்கரசர்! வாழ்க!

அன்புடன்,
பிரதீப்

பரஞ்சோதி
15-06-2005, 09:25 AM
மிகவும் நல்ல செய்தி. பொதுமக்களுக்காகத் தானே அரசாங்கம், இதன் மூலம் தொழில்கள் பெருகும்.

இங்கே லோக்கல் கால் எல்லாமே இலவசம் தான். மக்கள் மணிக்கணக்கில் பேசுவாங்க.

அதிலும் மகளிர் அணியினரை சொல்லவே வேண்டாம், தொலைபேசியை எடுத்தால் வைக்க 2 அல்லது 3 மணி நேரம் ஆகும், அந்த நேரத்தில் வீட்டிற்கு அழைத்தால் மண்டை காய்ந்து விடும்.

இந்த நிலை இந்தியாவிலும் வரும் காலம் வருமா?

மன்மதன்
15-06-2005, 09:27 AM
ஐக்கிய அரபு நாடான இங்கு, STD, local என்று கிடையாது. ஒரே கால்தான் . உள்நாடு, வெளிநாடு என்று இரு கட்டணம்தான். எமிரேட்ஸ் இடையில் பேசிக்கொண்டால் அது இலவசம். உ.தா. துபாயில் லோக்கல் கால் அனைத்தும் இலவசம். 24 மணி நேரம் பேசிக்கொண்டேயிருக்கலாம். அதுபோல் ஷார்ஜா , அபுதாபி என்று உள்ளூர் இணைப்பு எல்லாம் இலவசம். மொபைலிலிருந்து பண்ணினால் அமீரகம் முழுக்க நிமிடத்திற்கு 30 ஃபில்ஸ் (4 ரூபாய் ) கணக்காகிறது. லேண்ட் லைனில் பண்ணினால் இதை விட கம்மி.

அது மாதிரி மொபைலிலிருந்து வெளிநாடு பண்ணினால் (இந்தியா 13 நிமிடம் 30 திர்ஹம்/ 360 ரூபாய் ) ஆகிறது. லேண்ட்லைனிலிருந்து பண்ணிலாம் பைசா கொஞ்சம் கம்மியாக வரும்..

இது சின்ன நாடு. ஆனால் இந்தியாவில் இது மாதிரி கொண்டுவந்தால் அது மிகப்பெரிய சாதனைதான்..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
15-06-2005, 09:42 AM
தகவலுக்கு நன்றி மன்மதன்... செல்போனில் பேச தைவானில் தான் அதிக கட்டணம் என எண்ணுகிறேன் (ஒரே கம்பெனி ரூ. 9/நிமிடம், வேறு கம்பெனி ரூ. 17/நிமிடம் )

பரஞ்சோதி
15-06-2005, 11:44 AM
அய்யோ அறிஞரே!

உங்களுக்கு எவ்வளவோ தேவலையே!

இங்கே இந்தியாவுக்கு பேச ஒரு நிமிடத்திற்கு 55ரூபாய்க்கும் மேலே வருகிறது, அதான் மக்கள் குறுக்கு வழியில் தொடர்பு கொள்ள முயல்கிறார்கள்.

gragavan
15-06-2005, 12:38 PM
இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்குப் பேச நிமிடத்திற்கு பதினேழு ரூபாய் ஆகிறது. அதே அமெரிக்கா சிங்கப்பூர் என்றால் நான்கு ரூபாயில் முடிந்து போகின்றது. SIFY அறிமுகப் படுத்தியிருக்கும் தொலைபேசித் தொடர்பில் இது சாத்தியமாகிறது. தரத்திலும் குறைவில்லை.

அறிஞர்
16-06-2005, 05:34 AM
அய்யோ அறிஞரே!

உங்களுக்கு எவ்வளவோ தேவலையே!

இங்கே இந்தியாவுக்கு பேச ஒரு நிமிடத்திற்கு 55ரூபாய்க்கும் மேலே வருகிறது, அதான் மக்கள் குறுக்கு வழியில் தொடர்பு கொள்ள முயல்கிறார்கள்.அதிகம் தான்.. இங்கிருந்து.. பேசவும் இந்தியாவுக்கு ரூ. 45 ஒரு நிமிடத்திற்கு. மற்ற கார்டுகளை வைத்து பேசினா ரூ.11 ஒரு நிமிடத்திற்கு...

அறிஞர்
16-06-2005, 05:35 AM
இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்குப் பேச நிமிடத்திற்கு பதினேழு ரூபாய் ஆகிறது. அதே அமெரிக்கா சிங்கப்பூர் என்றால் நான்கு ரூபாயில் முடிந்து போகின்றது. SIFY அறிமுகப் படுத்தியிருக்கும் தொலைபேசித் தொடர்பில் இது சாத்தியமாகிறது. தரத்திலும் குறைவில்லை.நல்ல செய்திதான்.. எல்லா ஊர்களிலும் இருந்து சாத்தியமா அன்பரே...