PDA

View Full Version : சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை



இளசு
02-04-2003, 06:55 PM
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை



என் ஆருயிர் நண்பருக்கு சமர்ப்பணம்!

எரியும் கண்ணை சிமிட்டும் ஓசையிலே
என் சோர்வு அறிவாய்-
' மீதி நாளைக்கு பாத்துக்கலாம் '

இரையும் வயிறு போடும் இக்கட்டான இசையிலே
என் பசி அறிவாய் -
' உனக்கும் சேத்துதாண்டா கொண்டாந்திருக்கேன் '

தொலைபேசும் குரல் கம்மலிலே
காய்ச்சல் அறிவாய் -
' கஞ்சியும் மாத்திரையும் குடுத்து உட்டாங்க சார்"

உன் பேர் சொல்வதில் ஒருமாற்று குறைந்தால்
வருத்தமான மனசு அறிவாய் -
' என்ன, நேத்து வர்லன்னுதான அய்யா அப்செட்? '

ஊழல், லஞ்சம், ஜாதி, வறுமை - பேச என் நாசி துடிக்கையில்
ஊமைக்கோபம் அறிவாய் -
' உன்னால முடிஞ்ச வரைக்கும் இதை மாத்துவடா , பொறு '

சொல்லாமலே எல்லாமும் புரிந்தவள் நீ
அதையும் சொல்லாமலே இருந்திருக்கலாம் நான்!

Narathar
03-04-2003, 05:19 AM
சொல்லாமலே எல்லாமும் புரிந்தவள் நீ
அதையும் சொல்லாமலே இருந்திருக்கலாம் நான்!

எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறவளுக்கு
இதை மட்டும் புரிஞ்சுக்க முடியலையா???

gankrish
03-04-2003, 06:26 AM
என்றுமே சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.... அருமை இளசே

rambal
03-04-2003, 09:55 AM
பேசாத வார்த்தைகளை விட
பேசிய மௌனங்கள் என்றுமே
உசத்திதான்..

பாராட்டுக்கள் இளசுவிற்கு..

இளசு
08-04-2003, 09:59 PM
நண்பர் நாரதர்
இனிய கான்கிரீஷ்
இளவல் ராம்

நன்றிகள்...

poo
09-04-2003, 12:31 PM
மௌன மொழியில் கற்றுத் தேர்ந்தால் கன்னிகள் காலடியில்தான்..


பாராட்டுக்கள் அண்ணா

discreteplague
09-04-2003, 01:33 PM
சில விஷயங்கள் சொல்லாமல் இருப்பது நல்லது.

விஷ்ணு

குமரன்
10-04-2003, 12:14 AM
நட்பிற்கும் காதலுக்கும் இஇடைவெளி நூலிழைதான்
என்பதை அழகாக சொல்லியிருக்கும் கவிக்கு
மிக்க நன்றி

-குமரன்

அமரன்
24-09-2007, 05:33 PM
மௌன பரிபாசை காதலுக்கு வரமா..
காதலின் வரம் மௌன பரிபாசையா.
தூய்மையான காதலே நட்பு என்பது
எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..

அசைவை பொருத்தமாக அர்த்தப்படுத்தும் நட்பை அடைவது பெரும் பேறு..
நன்றி அண்ணா..

ஒருங்குறிக்கு மாற்றிய அன்புரசிகனுக்கு நன்றி.

பூமகள்
03-02-2008, 04:44 PM
என் முதல் வார்த்தை பதிலில்
குரல் கம்மி நிற்க..!

"ஏன் மழையில் நனைஞ்ச நேத்து?"

சிலரின் வார்த்தைகேட்டு
விழிநீர் மறைத்து தள்ளி நிற்க..!

"வா கேண்டின் போலாம்.. அவங்க அப்படித்தான்.."

மதிய உணவில் நீ டிபன்பாக்ஸைத் திறக்க..
என் விழியோர சுவையுணர்ந்து..

"உனக்கு ரொம்ப பிடிச்சது இல்ல..இந்தா.."


--------------------------


இப்படி பலப்பல இடங்களின் என் தோழியை நினைவூட்டியது உங்கள் கவிதை பெரியண்ணா..!!


அழகான கவிதைக்கு பாராட்டுகள்..! :)

இளசு
03-02-2008, 05:13 PM
முதலில் ஒருங்குறிக்கு இப்படைப்பை மாற்றிய அன்புவுக்கு என் அன்பு!

ஐந்தாண்டு தாமதமாய் என் அன்புத்தம்பி பூ, விஷ்ணு, அன்பு நண்பர் குமரனுக்கு நன்றி..

மீண்டும் உலவவைத்த அமரனுக்கும், இன்று கண்ணில் படவைத்த தங்கை பாமகளுக்கும் என் அன்பும் நன்றியும்...

மனக்கண்ணாடியில் பழைய முகம் காணவைக்கும் கணங்கள் இவை..
நினைவு - பாதி தேவதை; மீதி சாத்தான்..

இவ்வகை தேவகணங்களுக்கும் என் நன்றி!