PDA

View Full Version : மெல்ல நகும்...



rambal
03-04-2003, 10:32 AM
மெல்ல நகும்....

முதல் தேதி
சம்பளப் பணத்தை
எண்ணி முடித்ததும்
மெல்ல நகும்....


நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்
அலுவலக நேரப் பேருந்து
காலியாக வந்தால் சீட்டில் அமர்ந்ததும்
மெல்ல நகும்...

பண்டிகை காலத்தில்
அதிகமாக அறிவிக்கப் பட்ட
போனஸ் பணம் கைக்கு வந்ததும்
மெல்ல நகும்...

நீண்ட வரிசையில்
கடைசியாக நின்றும்
கெரோசின் கிடைத்தால்
மெல்ல நகும்...

தலீஈஈஈஈவர் படத்திற்கு
முதல் நாள் முதல் காட்சி
டிக்கட் கைக்கு வந்ததும்
மெல்ல நகும்...

இவ்வாறாக
ஒரு கவிதை எழுதி போஸ்ட் செய்த பின்பு
வரும் விமர்சணம் கண்டு
மெல்ல நகும்...

Narathar
03-04-2003, 10:40 AM
இப்படி ஒரு கவிதை கண்டு
நானும் மெல்ல நகும்.....

gankrish
03-04-2003, 10:46 AM
நகுமோ.. மோகனலே... இதெல்லாம் கிடைத்தால் யார் எதை பார்த்து நகுமோ..

இளசு
03-04-2003, 01:22 PM
தன்னைத் தானே நகும் நற்பண்பை போற்றுகிறேன்.நல்ல கவிதை அளித்த நண்பனை வாழ்த்துகிறேன்.

anushajasmin
03-04-2003, 01:24 PM
இயல்பான நடையில் தெளிக்கப்பட்ட உங்கள் கவிதை ரசித்து என் மனம் மெல்ல நகும்

M.Jagadeesan
12-08-2014, 03:50 PM
" மெல்ல நகும் " என்ற சொற்களில்தான் எத்தனை அழகு !

அந்தச் சொற்களை வைத்துக் கவிதை எழுதிய விதமும் அழகுதான் !